Friday, December 6, 2013

எல்.கே.ஜி அட்மிஷன் என்றால் சும்மாவா!!!நண்பர்களே! எங்கள் மகளின் மழலைப் பருவ நாட்களை பற்றி ஒரு டைரி போல் இங்கு பதிவு செய்கிறேன்தில்லியின் வாழ்க்கை முறையும்அங்குள்ள பள்ளியின் செயல்பாடுகளும்தட்பவெப்ப நிலையால் ஏற்படும் மாற்றங்களும் என இந்த பதிவின் மூலம் சில விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.சென்ற பகுதியில் ப்ளே ஸ்கூல் கதையை பார்த்தோம் அல்லவா! அடுத்து என்ன! எல்.கே.ஜி அட்மிஷனுக்கான வேலைகள் டிசம்பரிலேயே எங்களுக்கு வந்துவிட்டதுநண்பர்கள் சிலரின் பரிந்துரையிலும்வீட்டிலிருந்து சென்று வர வசதியாகவும் என நான்கைந்து பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வாங்க தீர்மானித்தோம்… அரைநாள் விடுப்புஇரண்டு மணிநேர பர்மிஷன் போட்டு என ரோஷ்ணியின் அப்பா அவளுக்காக அலைந்து வரிசையில் நின்று விண்ணப்பப் படிவங்களை வாங்கி வந்தார்குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மட்டுமல்லாது பெற்றோரின் படிப்பு சான்றிதழ்களின் நகல்கள்பெற்றோரின் வருமானச் சான்றிதழ்புகைப்படங்கள் என அவர்கள் கேட்டிருந்த எல்லாவற்றையும் தந்து விண்ணப்பித்திருந்தோம்.

ஒரு வாரத்திற்குள் பள்ளிகளிலிருந்து வரிசையாக நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் வந்து கொண்டிருந்தனநல்லவேளை ஒவ்வொன்றும் வெவ்வேறு நாட்களில் தான் :) மூவரும் சென்று அங்கு சிறிதுநேரம் அமர்ந்து பேசிக்கொண்டும்குழந்தைகளை கவர்வதற்காக வைக்கப்படிருந்த விளையாட்டு பொருட்களில் விளையாட வைத்துக் கொண்டும் அமர்ந்திருப்போம்ஆசிரியைகள் குழந்தையை அழைத்துச் சென்று A B C D எழுதிக் காட்ட சொன்னார்கள்ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டுகடிதம் மூலமாக ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும் என்று சொன்னார்கள்.

விண்ணப்பத்திருந்த எல்லா பள்ளிகளிலுமே ரோஷ்ணிக்கு இடம் கிடைத்ததுஒவ்வொரு பள்ளியிலும் அவர்கள் நிர்ணயத்திருந்த CAPITAL FEES தான் பயமுறுத்துவதாக இருந்ததுஅதுவும் இரண்டு நாட்களுக்குள் செலுத்தினால் இடம்எல்லாம் பணம் பண்ணுகிற வேலை....:( நாங்கள் யோசித்து முடிவெடுத்து, ஒரு பள்ளியை தேர்வு செய்தோம். ஆனால் கிமீ பயணம் செய்ய வேண்டும்.. கொஞ்சம் யோசனை தான், ஆனாலும் நண்பர்கள் சிலரின் குழந்தைகளும் அங்கு படித்து வந்ததால் தைரியமாக சேர்த்து விட்டோம்.


இங்கே குழந்தைகளை எல்.கே.ஜியில் அனுமதிக்க வயது வரம்புக்கென வருடாவருடம் CUTOFF தேதி சொல்வார்கள். ஒரு வருடம் 3+ என்றும் மறுவருடம் 4+ என்றும் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பெரும்பாலும் 4+ தான். இங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள் 4வயது முடிந்த பிறகே எல்.கே.ஜியில் அனுமதிக்கப் படுகிறார்கள். தமிழகம் வந்த பிறகு பார்த்தால் ரோஷ்ணி மூன்றாம் வகுப்பில் படிக்க அவள் வயது உள்ள குழந்தைகள் நான்காம் வகுப்பில்…:))


அடுத்து சென்று வர வேன் ஏற்பாடு செய்ய வேண்டும். நண்பர்களின் குழந்தைகள் சென்ற அந்த வேனையே ஏற்பாடு செய்தோம்… நல்லவேளை! இடம் கிடைத்தது. எல்.கே.ஜியூ.கே.ஜிக்கு மட்டும் குழந்தைகள் சுமை தூக்க வேண்டாமென பள்ளியிலேயே புத்தகங்களையும்நோட்டுகளையும் ஆசிரியரே வாங்கி வைத்துக் கொள்வார். அதனால் அப்பா கொண்டு போய் ஆசிரியரிடம் கொடுத்து விடமுதல் நாளே மற்ற குழந்தைகளுடன் வேனில் சென்று வர ஆரம்பித்தாள். அழுகை இல்லை…:)) வேன் ஓட்டுநர் அமித் என்கிற பெங்காலி - ரோஸனி என்று அவர் கூப்பிடுவதே நாராசமாக இருக்கும்.

அங்கு பருவநிலைக்கு தகுந்தாற்போல் பள்ளிச் சீருடை அமையும். அதனால் கோடைக்காலத்திற்கு இரண்டு செட்குளிர்காலத்துக்கு இரண்டு செட். நடுவில் டெங்குஜுரங்கள் பரவும் காலங்களில் முழுக்கை சட்டையும்கறுப்பு பேண்ட்டும் அணிந்து வர சொல்வார்கள்… கோடை சீருடை பரவாயில்லை. குளிர்காலத்தில் முதலில் தெர்மல் என்று சொல்லப்படுகிற சூடு கொடுக்கும் முழுக்கை பனியன்அதன்மேல் பள்ளிச் சீருடை முழுக்கை சட்டைஅதன் மேல் பினோஃபார்ம்அடுத்து அரைக்கை ஸ்வெட்டர்பினோஃபார்ம்க்கு கீழே தெர்மலில் பேண்ட்ஸாக்ஸ்ஷூதலைக்கு ஸ்கார்ஃப்கைக்கு கிளவுஸ்… கடும்பனியில் அரைக்கை ஸ்வெட்டருக்கு மேல் ஜெர்கின் ஒன்று அணிந்து கொள்ள வேண்டும்
பள்ளி நேரங்களும் அங்கு வேறுபடும் - காலை மணியிலிருந்து 2 வரை தான்… சின்ன வகுப்புகளுக்கு 12.30 வரை தான்… கணவரையும்குழந்தைகளையும் அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளை முடிப்பதற்குள் அவர்கள் பள்ளியிலிருந்து வரும் நேரமாகி விடும்அம்மாக்கள் அல்லது கிரச்சில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்  ஆன்ட்டிகளும் நிறுத்தத்திற்கு சென்று காத்திருக்க வேண்டும்….:)) குளிர்காலத்தில் காலை மணிக்கு வேனுக்காக வீட்டிலிருந்து இறங்கியாக வேண்டும். பாவமாக இருக்கும்…. வட இந்தியர்கள் போலல்லாது எங்க வீட்டு செல்லம் எவ்வளவு குளிரானாலும் அவ்வளவு சீக்கிரத்திலும் தினமும் குளித்து விட்டே கிளம்புவாள்உணவு இடைவேளையும் காலை 10 மணிக்கு இருக்கும். ஏனென்றால் காலையில் மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு எங்கே கிளம்புவது. குழந்தைகள் சீக்கிரம் எழுந்து பால் குடித்து விட்டு கிளம்புவதே பெரிய விஷயம் அல்லவா! சரி! எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் விட்டது. இந்தப் பள்ளியில் விதவிதமான விழாக்கள்நாட்கள்குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் என ஏராளம் உள்ளது!

அவை அடுத்தடுத்த பகுதிகளில்…:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

31 comments:

 1. செல்லம் ரோஷ்னிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி சார்...

   Delete
 2. வணக்கம்
  பதிவும் அருமை படங்களும் அழகு..வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்...

   Delete
 3. வித்தியாசமான அனுபவங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 4. டெல்லி கல்விச் சூழல் அறியாத
  எங்களுக்கு தங்கள் பதிவு
  புரிந்து கொள்ள உதவுகிறது
  பீஸ் விவரம் குறித்திருந்தால் கூட
  ஒரு ஒப்பீடுக்கு அது அனைவருக்கும் உதவும்
  பயனுள்ள பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி..கட்டண விவரங்களை அடுத்த பகிர்வில் சொல்கிறேன் சார்...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

   Delete
 5. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்...

   Delete
 6. இங்கே சென்னைலே இருக்கிறது போல எல்.கே.ஜி.க்கு என்ட்ரன்ஸ் டெஸ்ட் உண்டா..பேரன்ட்ஸ் இன்டவ்யூ உண்டா !! பாஸ் ஆகிறவரை ஹார்ட் பாஸ்டா அடிச்சுருக்குமே !!

  செல்வி ரோஷனிக்கு வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.
  seekiram I.A.S. paass pannanum
  செல்வி ரோஷனிக்கு வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

   Delete
 7. செல்லத்திற்கு அன்பான வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...

   Delete
 8. என் பேத்தி(மூத்த மகள் குழந்தை) இதே நிலையை டெல்லியில் இருந்த போது நடந்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா...

   Delete
 9. இங்கே அமீரகத்திலும் இதே நிலைதான் - ஃபீஸ் தவிர!! காலை 6 மணிக்கே பஸ் வந்துவிடும். சிலருக்கோ 5.30க்கெல்லாம்!! குளிர்காலந்தான் ரொம்பக் கொடுமையானது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

   Delete
 10. வித்யாசமான அழகான அற்புதமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 11. குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்...
  தொடர்ந்து எழுதுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்..

   Delete
 12. பயனுள்ள பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்..

   Delete
 13. Roshini kulitthuvittu dhan pallikku kilambuval yenbadhai padippadharku sandhozhamaga irukku. Roshinikku yengal anbarndha vazhththukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...

   Delete
 14. நல்ல அனுபவம் . நினைவுகள் பின்னோக்கி சென்றன :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி...

   Delete
 15. எங்கள் ஊரிலும் 4+ வயதில் தான் எல்கேஜி. இங்கு வந்தபோது என் பிள்ளையை மறுபடி ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டி வந்தது, வயது குறைவாக இருந்ததால். தொடருங்கள் ஆதி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 16. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமானதிற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_14.html?showComment=1386988215252#c2283658728372207094

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…