Wednesday, December 4, 2013

பருப்புருண்டைக் குழம்பு!




இன்று நாம் பார்க்கப் போறது பருப்புருண்டைக் குழம்பு…. இது ஒரு பாரம்பரியக் குழம்பு வகையை சேர்ந்தது. எனக்கு மிகவும் பிடித்தது. எங்கம்மாவின் கைப்பக்குவத்தில் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒரு பெரிய இண்டாலியம் பாத்திரம் இருக்கும். அம்மா அதில் தான் எப்போதும் குழம்பு வைப்பார். மாலை வேளையில் கிண்ணத்தில் இரண்டு உருண்டைகளை போட்டுக் கொண்டு ஸ்பூனால் எடுத்து சாப்பிடுவேன்பலவருடங்களுக்கு பிறகு இன்று அதை முயற்சித்துப் பார்த்தேன். வாங்க! அதன் செய்முறையை பார்க்கலாமா!

தேவையான பொருட்கள்:-

துவரம்பருப்பு – ½ கப்
கடலைப்பருப்பு – ½ கப்
வரமிளகாய் – 2 () 3
சீரகம் – ½ தேக்கரண்டி
பெருங்காயம்சிறிதளவு
கறிவேப்பிலைசிறிதளவு
கொத்தமல்லிசிறிதளவு
உப்புதேவையான அளவு
தேங்காய்த் துருவல்சிறிதளவு
புளிஎலுமிச்சையளவு
தக்காளி – 1
சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
வெந்தயம்சிறிதளவு
எண்ணெய்தேவையான அளவு


செய்முறை:-

கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறப் போடவும். ஊறிய பருப்புகளை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் வரமிளகாய், சீரகம், பெருங்காயம், கொஞ்சமாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் இந்த விழுதுக்கு தேவையான உப்பையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிரட்டி அடுப்பை நிறுத்தவும். தண்ணீர் பசை அதிகமாக இருந்தால் உருண்டைகளை குழம்பில் போட்டவுடன் கரைந்து விடும். அதனால் தான் வாணலியில் இரண்டு நிமிடங்கள் பிரட்டுகிறோம். ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

அடிகனமான வாயகன்ற பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தக்காளியை நான்காக வெட்டிப் போட்டு வதக்கவும். இதில் புளியை கரைத்து விட்டு, உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்க்கவும். உருண்டைகள் வேகும் அளவுக்கு தண்ணீர் கொஞ்சம் கூடுதலாகவே விடவும். புளிக்கரைசல் கொதித்து பச்சை வாசனை போனதும் உருண்டைகளை ஒவ்வொன்றாக குழம்பில் போடவும். முதலில் ஒன்றைப் போட்டு கரைகிறதா எனப் பார்த்து விட்டு அடுத்தடுத்துப் போடவும். எல்லா உருண்டைகளையும் சேர்த்த பின் அதிகம் கிளறாமல் நன்கு வேக விடவும்

நன்கு கொதித்த பின் குழம்பை இறக்கவும். சுவையான பருப்புருண்டைக் குழம்பு தயார்..சூடான சாதத்துடன் உருண்டைகளைத் தொட்டுக் கொண்டு சாப்பிட ஜோராக இருக்கும்

என்ன! உங்க வீட்டிலும் செய்து பார்ப்பீங்க தானே….

டிஸ்கி:-
1) சிலர் வெங்காயமும், சோம்பும் சேர்த்தும் செய்வதுண்டு..
2) வெறும் துவரம்பருப்பும் சிலர் உபயோகிப்பாங்க...
3) உருண்டைகளை இட்லிப் பானையில் வைத்து வேகவைத்தும் குழம்பில் சேர்ப்பாங்க...


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

49 comments:

  1. உருண்டை குழம்பு செய்முறை, படம், எல்லாம் அருமை.
    அம்மாவின் நினைவுகளுடன் உருண்டை குழம்பு மணம் வீசுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      Delete
  2. எனக்கு மிகவும் பிடித்த குழம்பு
    மதியம் சாப்பாட்டுக்கும் மாலை
    காஃபிக்கு முன்னும் சாப்பிடும்படியாக
    கொஞ்சம் கூடுதலாகவே செய்கிற அன்று
    வீட்டில் செய்யச் சொல்லிவிடுவேன்
    செய்முறையை அழகாக விளக்கியமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

      Delete
  3. Replies
    1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  4. சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

      Delete
  5. பருப்பு உருண்டை குழம்பு சூப்பர்..கல்லூரி நாட்களில் என் தோழி வீட்டில் சுவைத்தது.
    செய்முறை இன்று தான் அறிந்தேன்.கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்க்கிறேன்..நன்றி ஆதி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகை? மகிழ்ச்சி...அவசியம் செய்து பாருங்கள்....

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷமீ....

      Delete
  6. குழம்பு செய்முறை நன்றாகவே உள்ளது. Photos too appealing!
    நான் கொஞ்சம் காஞ்ச திராட்சையை உருண்டை வேகவைக்கும்போது சேர்ப்பேன் . (வீட்டில் ஸ்டாக் இருந்தால் )

    ReplyDelete
    Replies
    1. திராட்சை! செய்து பார்க்கிறேன்..

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா மேடம்..

      Delete
  7. அடிக்கடி இதை சமைக்காவிட்டாலும் எனக்கு மிகவும் பிடித்த குழம்பு.இதை நெட்டில் பார்த்து ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாக சமைத்து ருசிப்பது வழக்கம்.அடுத்த முறை கண்டிப்பாக உங்கள் செய்முறைப்படிதான்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸாதிகா மேடம்..

      Delete
  8. எனக்கும் பிடிக்கும். ஆனாலும் பண்ண முடிகிறதில்லை. :)) ஒரே மாறுதல் என்னன்னா, எங்க அம்மா வீட்டிலும் சரி, மாமியார் வீட்டிலும் சரி இந்த உருண்டைக்கு அரைக்கும் பருப்புவகைகளில் சீரகம், தேங்காய் சேர்ப்பதில்லை. இது கொஞ்சம் புது மாதிரியா இருக்கு. அதோட பருப்பு வகைகளை உப்பு, காரம் சேர்த்து அரைத்ததும் கொஞ்சம் அரிசி மாவு கலப்போம். உருண்டை உதிராமல் வரும் என சொல்லுவாங்க. அல்லது பருப்புக்களோடு சேர்த்தே கொஞ்சம் அரிசியையும் ஊற வைத்தும் அரைச்சுப் பார்த்திருக்கேன்.

    இங்கே மாமியார் வீட்டில் அதிகமா மோர்க்குழம்பில் தான் பருப்புருண்டைகள் போடறாங்க. எங்க அம்மா வீட்டில் மோர்க்குழம்பு, நீங்க சொல்லி இருக்கும் முறையில் புளிக்குழம்பு இரண்டிலும் போடுவோம். ஒரு நாள் செய்யணும். :))))

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

      Delete
  9. செய்து பார்த்து விடுவோம்... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

      Delete
  10. Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காஞ்சனா மேடம்..

      Delete
  11. எங்கள் வீட்டில் எல்லோர்க்குமே பிடித்த குழம்பு இது. அரைத்த மாவுடன் இரண்டு ஸ்பூன் அரிசிமாவு கலந்து விட்டு கொதிக்கும் புளித்தண்ணீரில் போட்டுவிடுவேன், உருண்டை கரையாது. தக்காளி சேர்ப்பதில்லை. தேங்காயும் சேர்ப்பதில்லை.
    ஒரு ஞாயித்துக்கிழமை பருப்புசிலி என்றால், அடுத்த ஞாயிறு இந்த குழம்பு! பல வருடங்களாக எங்கள் வீட்டு மெனு இது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      Delete
    2. //அரைத்த மாவுடன் இரண்டு ஸ்பூன் அரிசிமாவு கலந்து விட்டு கொதிக்கும் புளித்தண்ணீரில் போட்டுவிடுவேன், உருண்டை கரையாது.//
      ரஞ்சனி அம்மா நீங்க சொல்றதும் நல்ல யோசனைதான்.
      இப்படியும் செய்து பார்க்க வேண்டும்!
      நன்றி!

      Delete
  12. படமும் பகிர்வும் சூப்பர்.செய்து பார்க்கிறேன் இப்பவே ருசிக்க வேண்டும் போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்..

      Delete
  13. Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி...

      Delete
  14. Paruppu urundaiyai verum sadhaththilum pisaindhu sappidalam. Naanum idhe murayil dhan pannuven. Seimurai vilakkamum, padangalum arumayaga ullana.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

      Delete
  15. ருசிமிக்க பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

      Delete
  16. கெட்டி தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன்.இப்பவும் வாரம் ஒரு முறை என் அம்மா செய்து கொடுத்துட்டே இருக்காங்க.வெங்காயம்,சோம்பு,தேங்காய் பல்லு,முருங்கை கீரை கொஞ்சம் சேர்த்து இட்லி தட்டில் வேகவைத்து செய்வாங்க..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா..

      Delete
  17. சாப்பிட்டதில்லை... சாப்பிட்டால் நல்ல ருசியாயிருக்கும் போல தெரிகிறது....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்...

      Delete
  18. ஹிஹிஹி... எங்க 'பாஸு'ம் இதை நல்லா சமைப்பாங்க!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்...

      Delete
  19. ஞாபகபடுத்திட்டீங்க...எனக்கு இட்லி,தோசையுடன் சாப்பிட ரொம்ப பிடிக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேனகா...

      Delete
  20. எனக்கு மிகவும் பிடிக்கும், ஆபிசுக்கு சாப்பாடு எடுத்துப் போவதென்றால் மூன்று உருண்டைகள் தனியாகக் கட்டித்தரப்படும்.... நண்பர்களுக்காக.... த.ம.7

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை...

      Delete
  21. கண்களைக் கவரும் அருமையான கலரில் பருப்புருண்டைக் குழம்பு
    அசத்தலாக இருக்கு ஆதி! சூப்பர்! ரொம்ப நாளாச்சு இது வைத்து.
    பார்த்ததும் செய்திட ஆவலாக இருக்கு.
    உங்க கூடிதல் ரிப்ஸ் சூப்பர். சில சமயம் உடைந்தோ கரைந்தோ போவதுண்டு.
    அதை தவிர்க்க நல்ல வழிதான்.

    அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. என் அம்மா வாணலியில் இரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு செய்வார்...உடையாமல் இருக்க...ரஞ்சனிம்மா சொல்வது போல் அரிசி மாவும் சேர்த்துக் கொள்ளலாம்...

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி...

      Delete
  22. செய்யும் வழக்கம் உண்டு என்றாலும் செய்து பல நாட்கள் ஆகிவிட்டன. நான் வேக வைத்தப்பின் புளித்தண்ணீரில் போடுவேன். உங்கள் முறையிலும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா...

      Delete
  23. ரெண்டு நாள் முன்னாலே வைச்ச பருப்புருண்டைக் குழம்பின் மணம் என்னையும் இன்னைக்கி இழுத்து வந்திருச்சு !செய்து சாப்பிடுவதற்கு முன்னாலேயே உண்ட திருப்தியை தந்த வெங்கட் ஜியின் போட்டோவிற்கும் நன்றி !
    த.ம 9

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்ஜி எடுத்த படங்கள் அல்ல...அது நான் எடுத்த புகைப்படங்கள் தான்...:))

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி...

      Delete
  24. ஆஹா... எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு ... எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்...

      Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…