Monday, December 30, 2013

உப்மாவும்! முஸ்கானும்!


எங்கள் மகளின் மழலைப் பருவ நாட்களை பற்றிய டைரி இது!

முதல் பகுதிஎம் ஃபார் மோங்க்கி!


பள்ளி செல்ல ஆரம்பித்ததிலிருந்தே உடன் படிக்கின்ற குழந்தைகளின் பெயர்களை அவள் மழலை மொழியில் கூறும் போது ஒன்றுமே புரியாது….:)) நான் [B]பாயா! [G]கேர்ளா! என்று விசாரிப்பேன்! தில்லியில் உள்ள எல்லா பெண் குழந்தைகளுமே தலைவிரி கோலமாக அல்லது பாய் கட் பண்ணியோ, தோடும் இல்லாமல், பொட்டு வைக்கும் பழக்கமே இல்லாதவர்கள் :) ஆதலால் அவளும் [B]பாய் என்று சொல்லி விடுவாள்….:))

பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும்…MUSKAAN, KASHISH RATHORE, BANU SONI, THULIKA, PALAK, YUMNAA, RONAK, KASHISH SONI இப்படி…. பெயர்களை வைத்து பையனா! பொண்ணா! என்று கண்டுபிடிப்பது கடினம்….:) வட இந்தியர்கள் தந்தையின் பெயரை இனிஷியலாக போட்டுக் கொள்ள மாட்டார்கள்தங்களது குடும்ப பெயர்களை தான் தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள்


வகுப்பில் குழந்தைகளை ஷேர் பண்ணிக் கொண்டு சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் - ஆனால் நீங்களோ! நானோ நினைப்பது போல் குழந்தைகளுடன் அல்ல! ஆசிரியருடன்…:) நாம் கொடுக்கின்ற உணவில் ஆசிரியர் ஒரு சிறுபகுதி எடுத்துக் கொள்வார். அது தென்னிந்திய உணவாக இருக்கும் பட்சத்தில் பெரும்பகுதி காலியாகி விடும். இது போக மாதா மாதம் வரும் இரண்டாவது சனிக்கிழமையில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் என்னிடம் தோசையுடன் சாம்பாரும் சட்னியும் ஒருநாள் கொடுத்து விடும்படி வேறு சொல்வார்! :)


இந்த பழக்கத்தால் தமிழகம் வந்த பின்னாலும் ஒவ்வொரு முறை அவளது ஆசிரியரை சந்திக்கும் போது ரோஷ்ணியை பற்றி அவள் ஆசிரியர்கள் கூறுவது என்னவென்றால் – லஞ்ச் பாக்ஸிலிருந்து எடுத்துக் கொள்ளும்படி எங்களைத் தொந்தரவு செய்கிறாள் என்று….:) நானும் இங்குள்ளோர் அப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள், என்று சொல்லியும், அவள் இன்றும் அப்படித் தான் செய்து கொண்டிருக்கிறாள்.. ஆசிரியர்களும் வட இந்திய உணவாக இருக்குமானால் சிறிதளவு எடுத்துக் கொள்வார்களாம்…..:))

எல்.கே.ஜி, யூகே.ஜி முடிந்ததும், எங்களுக்கும் மத்திய தில்லியில் உள்ள அரசு குடியிருப்பில் வீடு கிடைக்கவே வேறு பள்ளி மாற்ற வேண்டி வந்தது. அடுத்து என்ன! முன்பு போல் ஒரு சில பள்ளிகளில் அப்ளிகேஷன் வாங்கினோம், ஒரு பள்ளியில் எழுத்துத் தேர்வும் நடைபெற்றது.. என்ன ஆனது என்று, அந்த கதையைப் பற்றி இந்த பகுதியில் போய் பாருங்க…:) மத்திய தில்லி என்பதால் பள்ளிக் கட்டணங்களும் முன்பை விட அதிகமாகவே இருந்தது…:( அங்கும் ஒரு வருடம் படித்தாள்…..

தில்லியில் உள்ள ஆசிரியர்களின் மனப்பாங்கு எப்படி என்பதை பற்றி முன்பு நான் எழுதிய பதிவை போய் பார்த்தால் தெரியும்அது போல அதிலேயே டியூஷன் கலாச்சாரத்தை பற்றியும் எழுதியிருப்பேன்

பள்ளிகளில் உபயோகத்தில் உள்ள ஒரு சில வார்த்தைகள் நமக்கு வேறுவிதமான அர்த்தங்களை தரும்.. அவைகளில் ஒரு சில இங்கே..

COPY – NOTE BOOK
PAPER – EXAM


மூன்று வருட பள்ளிக் காலங்களை தில்லியில் கழித்து விட்டு திருவரங்கம் வந்து சேர்ந்தோம்… C.B.S.E பாடத்திட்டத்தில் இடம் கிடைக்காததால் MATRICULATIONல் சேர்த்தோம். அது தான் இப்போது சமச்சீர் ஆகி விட்டதே. அப்போது தமிழை நினைத்து தான் நான் மிகவும் பயந்தேன். காரணம் இரண்டாம் வகுப்பு என்கிற போது தமிழில் வாக்கியங்களே வந்திருப்பார்களே. இவளுக்கு அம்மா, அப்பா என்கிற இரண்டு வார்த்தையும் அதிலுள்ள எழுத்துக்களுமே அடையாளம் காட்டத் தெரியும் :)) எழுத்துத் தேர்வில் தமிழை சுமாராக செய்திருந்தாலும் இடம் கிடைக்கப்பட்டு, சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே நன்கு பிடித்து கொண்டு விட்டாள். அடுத்து வந்த காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் வகுப்பில் அவளே தமிழில் முதல் மதிப்பெண். புத்தகங்களும் படிக்க தொடங்கி விட்டதால், சுட்டி விகடன் வாங்கித் தந்து வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளோம்.

பள்ளிநாட்கள் என்றும் இனிமையானது. இனி வரும் நாட்களும் இனிமையாகவே அமைய அந்த கடவுள் அருள் புரியட்டும்

இதுவரை இந்த தொடரை ஆர்வத்துடன் வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்


சொல்ல மறந்துட்டேனே! உப்மா என்று தலைப்பில் கொடுத்து விட்டு அதைப் பற்றி ஒன்றுமே சொல்லா விட்டால் எப்படி? அவள் படித்த பள்ளி ஒன்றின் பிரின்சிபால் பெயர் தான் அது - UPMAA SAXSENA…..:)))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்..


48 comments:

 1. வட நாட்டின் பள்ளிச் சூழலை தங்களின்
  பதிவின் மூலமே மிகச் சரியாக அறிய முடிந்தது
  நாம் இடம் மாறுகையில் மனரீதியாக
  உடல்ரீதியாக எல்லாம் அனுபவத்தின் காரணமாக
  எளிதாக மாறிவிடுவோம்
  குழ்ந்தைகள் மாறுவது கடினமே
  அப்படியும் ரோஷ்ணி இயல்பாக மாறிக் கொண்டதும்
  தமிழில் முதன்மைபெற்றதும் ஆச்சர்யமான விஷயமே
  மனம் கவர்ந்த அருமையான பகிர்வு

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  குறிப்பாக ரோஷ்ணிக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் , வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

   Delete
 2. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 3. பள்ளிநாட்கள் என்றும் இனிமையானது. இனி வரும் நாட்களும் இனிமையாகவே அமைய அந்த கடவுள் அருள் புரியட்டும்…//
  வரும் நாட்களும் இனிமையாக இருக்கும், கடவுள் அருள்புரிவார்.
  வாழ்த்துக்கள் ரோஷ்ணிக்கு.

  என் மகள் இட்லி செய்தால் கொஞ்சம் அதிகமாக கொடுத்து விடுவாள், ஆசிரியருக்கு, பேத்தியின் வகுப்பு தோழிகளுக்கு.

  ReplyDelete
  Replies
  1. இதற்காகவே தான் என்னவர் அலுவலகத்துக்கு இட்லி, தோசை, உப்புமா, சாதம் என்று தென்னிந்திய உணவுகள் எதையுமே எடுத்துச் செல்ல மாட்டார்....:))) சப்பாத்தியும், சப்ஜியும் தான்...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 4. சுவாரஸ்யமான பகிர்வு...

  ரோஷ்ணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 5. http://roshnivenkat.blogspot.in --> இப்படி வருகிறது... கவனிக்கவும் :

  Blog has been removed

  Sorry, the blog at roshnivenkat.blogspot.com has been removed. This address is not available for new blogs.

  ReplyDelete
  Replies
  1. இன்று காலையில் நான் மெயில் ஓபன் செய்ய முயன்ற போது, சில தகவல்களை கூகிளிலிருந்து கேட்டிருந்தார்கள்.. அதில் பிறந்த வருடத்தை குறிப்பிட்டவுடன், 13 வயதுக்கு குறைவானவர்கள் பிளாக் வைத்திருக்கக்கூடாது என்று சொல்லி வலைப்பூவே நீக்கப்பட்டு விட்டதாக காட்டுகிறது...:(( மெயிலும் ஓபன் ஆகவில்லை....:(( இதுவரை பதிந்த அனைத்து ஓவியங்களும் காலி....:(((

   தங்களுக்கு ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் குறிப்பிடுங்களேன் சார்...

   Delete
  2. நீங்கள் கணினியை Ccleaner அல்லது மற்ற software கொண்டு clean செய்யாமல் இருந்தால் :

   1. முதலில் view History

   2. Search "http://roshnivenkat.blogspot.in/"

   3. அனைத்து பதிவுகளின் url-யை குறித்துக் வைத்துக் கொள்ளவும்... (Example : http://roshnivenkat.blogspot.in/2013/12/blog-post.html)

   4. பிறகு இன்னொரு tab-ல் cache:url (குறித்து வைத்துக் கொண்ட ஒவ்வொரு url-யையும் url எனும் இடத்தில் இடவும்... அந்தந்த பதிவு வரும்... அதை அப்படியே ஒன்றன் பின் ஒன்றாக word-ல் copy செய்து கொண்டு பிறகு புதிய தளத்தில் பகிரவும்...

   இனிமேல்... தங்களின் 3 தளத்திற்கும் : ஒவ்வொரு பதிவை வெளியிட்ட பின் அல்லது atleast வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டியது :

   Settings ---> Other ---> Export Blog

   இவ்வாறு செய்தால், அந்த தளத்தில் உள்ள எல்லா பதிவுகளும் சேமிப்பு ஆகும்... இது போல் பிரச்சனை ஏற்படும் போது, உருவாக்கிய புதிய தளத்தில் மீண்டும் Settings ---> Other ---> Import Blog எல்லா பதிவுகளும் வந்து விடும்...!

   மேலும் சந்தேகம் இருந்தால் dindiguldhanabalan@yahoo.com

   நன்றி...

   Delete
  3. தங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி..

   Delete
 6. வணக்கம்
  அம்மா.
  வித்தியாசமான முறையில் பதிவை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..

   Delete
 7. உப்மா என்றால் பெயரா? முஸ்கான் சாப்பிடுற பொருள் இல்லையா.. என்னக் கொடுமை இது..! :) பரவாயில்லை, பாப்பா தமிழில் தேர்ந்து விட்டாளே, சுட்டி விகடனுக்கும் பங்கு இருக்கு என்னும் போது மகிழ்ச்சியே. :) அருமையான பதிவு. தொடர்கின்றேன்..

  --- விவரணம்.  ---

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விவரணன் நீலவண்ணன்....

   Delete
 8. பள்ளிநாட்கள் என்றும் இனிமையானது. இனி வரும் நாட்களும்
  இனிமையாகவே அமைய கடவுள் அருள் புரியட்டும்...!…

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 9. ///மகளின் கைவண்ணம்
  வெளிச்சக் கீற்றுகள்
  நன்றி! நன்றி!
  2 hours ago //
  பதிவு ..
  Blog has been removed .. என்று வருகிறதே..!

  ReplyDelete
  Replies
  1. காலையில் நான் செய்த அறிவுப்பூர்வமான வேலையால் மகளின் வலைப்பூவே நீக்கப்பட்டதாக காண்பிக்கிறது...மெயிலும் திறக்கவில்லை....:(((

   மீட்டெடுக்க ஏதாவது வழி கிடைத்தால் நன்றாக இருக்கும்...

   Delete
 10. ஆசிரியருடன் உணவை ஷேர் பண்ணி சாப்பிடுவதெல்லாம் கொஞ்சமல்ல, அதி அதிகமாகத்தான் இருக்கிறது. பேசாம தோசை & சாம்பாருக்கான ரெஸிப்பிய பாப்பாவிடம் கொடுத்துவிட்டிருக்கலாம்.

  மலரும் நினைவுகள் இனிமையா இருக்குங்க. கவலைய விடுங்க, இனிவரும் நாட்களும் நல்லபடியாகவே அமைய இறைவன் அருள்புரிவான். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ரெசிபியெல்லாம் செல்லாது... செல்லாது.... தோசையே தான் வேணுமாம்..:)))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...

   Delete
 11. மிகவும் அழகான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். குழந்தை ரோஷ்ணிக்கு அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 12. ரோஷ்ணியின் ‘ப(B)ல்லே! ப(B)ல்லே!’ பலே! பலே! - வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்..

   Delete
 13. ஆஹா ! ஆதி டாபிக் வித்தியாசமாய்...பகிர்வு சுவாரசியம்.படங்கள் அருமை. நல்வாழ்த்துக்கள் சுட்டி ரோகிணிக்கு நல்வாழ்த்துக்கள். உப்மா நல்ல காமெடி..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்..

   Delete
 14. அழகான பள்ளி அனுபவப் பகிர்வு!
  சுட்டி ரோஷ்ணி அழகால் மயக்குகின்றாள் ஆதி!.. திருஷ்டி கழித்துவிடுங்கள்!!!

  இன்னும் இன்னும் பலகலையும் பயின்று மேலும் உயர்வடைந்து
  அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பேரும் புகழும்
  பெற்றுத்தந்திட உளமார வாழ்த்துகிறேன்!

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளமதி...

   Delete
 15. ரோஷினிக்கு வாழ்த்துக்குள். பள்ளியில் எடுக்கப்பட புகைப்படத்தை எத்தனை ஆண்டுகள் கழிந்து பார்த்தாலும் மிகவும் சுவராசியமாகவும், பால்ய நண்பர்களை நினைவுப்படுத்தும் விதமாக இருக்கும் என்று ரோஷினியிடம் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் சார்...

   Delete
 16. ரோஷ்னிக்கு வாழ்த்துகள். என்னுடைய கடைசி பிள்ளை காட்மாண்டு கேந்ரீய வித்யாலயாவில் படித்தான். டிபன் விஷயங்கள் இப்படித்தான் ஆகும்.. பிள்ளையே சொல்லுவான் அந்த ஸாருக்கு இது பிடிக்கும்,இந்த ஸாருக்கு இது பிடிக்கும். கூடவே ஒரு டப்பாவில் தனியாகப் போட்டு அனுப்புவேன்.
  இன்றும் யாவரும் என்னையும் மிகவும் விசாரிக்கிரார்கள். எல்லோரும் வட இந்தியர்கள்.. குடும்பத்துடன் இருப்பவர்கள்.
  உப்மா சௌத்ரி என்னுடைய மகனின் வேண்டப்பட்ட IAS ஆபீஸர் பெயருக்கிச் சொன்னேன்.
  ரோஷ்ணியின் புகைப்படங்கள் அருமை.
  இரண்டொருமாதத்தில் தாய்பாஷையாம் தமிழ் ஓடி வந்து விட்டது. சுட்டிப்பெண்.
  வடநாட்டு உடன் வேலை செய்யும் நண்பர்களும் இதே கதைதான்.
  அருமையான வித்தியாஸமான பதிவு. வாழ்த்துகள் அன்புடன்
  .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   Delete
 17. அருமையான நடையில் சுவாரஸ்யமாக விவரித்திருந்தீர்கள் .
  தமிழை வேகமாக கற்றுக்கொண்ட ரோஷினிக்கு இந்த அத்தையின் உம்மா
  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மைதிலி மேடம்...

   Delete
 18. இனியநினைவலைகள். ரோஷினிக்கு வாழ்த்துகள்.

  பிறக்கும்புத்தாண்டு சகலசெல்வங்களையும் அள்ளித்;தரட்டும். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி..

   Delete
 19. இனிய புத்தாண்டு வாழ்த்தக்கள் ஆதி!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 20. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கவிப்ரியன்..

   தங்களுக்கும் என் வாழ்த்துகள்.

   Delete
 21. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நிலாமகள்..
   தங்களுக்கும் என் வாழ்த்துகள்.

   Delete

 22. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கும் தங்களின் முதல் வருகைக்கும் மிக்க நன்றி கி.பாரதிதாசன் சார்...

   தங்களுக்கும் என் வாழ்த்துகள்.

   Delete
 23. உப்மா நல்லபெயர் தான். :))) தமிழிலே படிக்க ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துகள். விரைவில் அவளோட பதிவுகளைத் தமிழில் எதிர்பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…