Monday, December 23, 2013

திரும்பி பார்க்கிறேன் – தொடர்பதிவு!காணாமல்போன கனவுகள் ராஜி, ஒரு தொடர்பதிவு போட்டிருந்தாங்க! நானும் என்னுடைய பின்னூட்டத்தை எழுதி விட்டு வந்தேன். அதில் நம்ம பெயர் இல்லை தப்பித்தேன் என்று நினைத்தேன். விதி வலியது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒருவர் வேறு ஒருவரால் அழைக்கப்பட்டதாக சொல்ல தேடி எடுத்து என்னை கோர்த்து விட்டு விட்டார்…:))

சரி! என் சொந்தக் கதையை படிக்கணும்னு உங்களுக்கு எழுதியிருக்கு – வாங்க படிக்கலாம்!…:))

வழக்கம் போலத் தானே இந்த வருடமும் என நினைத்த நான், சற்று யோசித்து பார்த்தேன்.. சந்தோஷமும், சங்கடமும் கலந்து தான் இருந்திருக்கிறது. கண்ணீர் திரையிட்ட தருணங்களை ஒதுக்கி விட்டு சந்தோஷ தருணங்களை மட்டும் பார்க்கலாம்..

எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடந்த குடியரசு தின விழா, மற்றும் மகளிர் தினவிழாவுக்காக நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றேன்…:)) எனக்கே என் மீது நம்பிக்கை வந்த நாட்கள் அவை….

ஆகஸ்டு மாதத்தில் டூ வீலர் ஓட்ட வகுப்பில் சேர்ந்து விழுந்து வாரிக் கற்றுக் கொண்டேன்…இதை பற்றியும் ஓரம் போ ஓரம் போ என்ற தலைப்பில் 
இங்கு பார்க்கலாம்....:))

ரோஷ்ணி பள்ளி ஆண்டு விழாவில் இரண்டாம் பரிசு வாங்கினாள்சமீபத்தில் நடந்த குழந்தைகள் தின ஓவியப் போட்டியிலும் முதல் பரிசு வாங்கியிருக்கிறாள்ஜூன் மாதத்திலிருந்து பாட்டு கற்றுக் கொள்ள வகுப்பில் சேர்ந்திருக்கிறாள்..

சைக்கிள் வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை அவளது தந்தை நனவாக்கியதால், அவளுக்கு கற்றுக் கொடுத்து கொண்டிருக்கிறேன்அவளுக்கு கற்றுக் கொடுக்கும் சாக்கில் நானும் 6,7 ரவுண்ட் ஓடி வருகிறேன்….:))

ஆகஸ்டு மாதத்தில் சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்று பல வருடங்களுக்குப் பிறகு என் தந்தை வழி உறவுகளை சந்தித்தது…. ஒருநாள் ட்ரிப்பாக மகாபலிபுரம் வரை சென்று வந்தது என்று இனிமையான தருணங்கள் அவை

அடுத்து பதிவர் திருவிழாவில் நாங்கள் குடும்பமாக பங்கேற்று நிறைய பதிவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கப் பெற்றோம்

சீனா ஐயா தம்பதிகள், வை.கோ சார், ருக்மணி சேஷசாயி பாட்டி போன்றோர் எங்கள் இல்லத்துக்கு வருகை தந்தார்கள்

வருத்தங்கள் இருந்தாலும் அவற்றை உங்களுடன் பகிர்ந்து உங்களையும் சோகம் கொள்ள வைக்க ஆசையில்லை – ஏற்கனவே பலர் டீ.வி. சீரியல் பார்த்து அழுது கொண்டிருக்க, இது வேறு எதற்கு? 

இந்த தொடரை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.34 comments:

 1. அதானே...? சோகம் எதற்கு...?

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...

   Delete
 2. சுருக்கமாக முடித்து விட்டீர்கள். :)))

  ReplyDelete
  Replies
  1. வேறு ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

   Delete
 3. பகிரும்போது மகிழ்வு இரட்டிப்பாகும். துக்கங்கள் பாதியாகும் இருந்தாலும் சோகத்தை நீங்களே ஒதுக்கித் தள்ளிவிட்டிருப்பீர்கள். அதை திரும்பவும் மனதுக்கு கொண்டு வராதது அருமை.. மகிழ்வுகள் இரட்டிப்பாகட்டும்... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க எழில்...

   Delete
 4. சுருக்கமாகப் பதிவிட்டிருந்தாலும்
  அனைத்து நிகழ்வுகளையும் ஏற்கெனவே பதிவில்
  படித்திருந்ததால் முழுமையாக உணர முடிந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...

   Delete
 5. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 6. அவளுக்கு கற்றுக் கொடுக்கும் சாக்கில் நானும் 6,7 ரவுண்ட் ஓடி வருகிறேன்….:))//
  ரோஷ்ணிக்கு அக்காவாகிவிடுவீர்கள்.
  அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாக்கு பலிக்கட்டும் அம்மா...:))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. Surukkamagavum, azhagagavum indha padhivu amaindhulladhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...

   Delete
 8. வேண்டுக்கோளுக்கிணங்கி பதிவிட்டமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.. ஒரு பதிவு தேத்த உதவியதற்கு....:))))

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராஜி...

   Delete
 9. கதை சுருக்கமாய் இருந்தது. சமீபத்தில் வண்டலூர் zoo-வில் ரொம்ப நாள் கழித்து சைக்கிள் ஓட்டியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா!!

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அமுதா...

   Delete
 10. மகிழ்ச்சித்த்ருணங்களின் சந்தோஷப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 11. இளம் வயதுக்காரர்கள் இப்படிதான் இருக்க வேண்டும். நம்முடைய உறவுகளை ஸந்திப்பதும், நம் குழந்தைகள் தகுதிப்போட்டியில் அவர்கள் முன் வருவதும், பதிவுலக நட்புகளுடன்,கைகுலுக்குவதும்,பெரியோர்கள் ஆசி பெறுவதும்,என்ன ஸாமானிய நிகழ்ச்சிகளா.
  குழந்தைகள் பரிசு வாங்கினால் ஸந்தோஷத்தில் கண்ணில் ஜலம்தான் முதலி்ல் வரும்.நமக்கு.
  அழகான மகிழ்ச்சித் தருணங்கள். நயம்பட சொல்லியுள்ளாய்.அடுத்தது யார் தொடருகிரார்கள்? அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தொடரலாம்... நீங்களும் தொடரலாமேம்மா...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   Delete
 12. தாமதமானாலும் நினைவாக பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்..

   Delete
 13. // வழக்கம் போலத் தானே இந்த வருடமும் என நினைத்த நான், சற்று யோசித்து பார்த்தேன்.. சந்தோஷமும், சங்கடமும் கலந்து தான் இருந்திருக்கிறது. கண்ணீர் திரையிட்ட தருணங்களை ஒதுக்கி விட்டு சந்தோஷ தருணங்களை மட்டும் பார்க்கலாம். //

  துயரங்கள் நம்மோடேயே போகட்டும். மகிழ்வானவற்றை மட்டும் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ( நான் காலையிலேயே அனுப்பிய கருத்துரை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. எனவே மறுபடியும் அந்த கருத்துரை.)

  ReplyDelete
  Replies
  1. காலையில் அனுப்பியது ஏதும் வரவில்லையே... SPAMல் கூட இல்லையே...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா..

   Delete
 14. நன்றாகவே திரும்பிப் பார்த்திருக்கிறீர்கள் ஆதி. நல்ல சந்தோஷமான தருணங்களை பகிர்ந்து எல்லோருக்கும் மகிழ்சசி நினைவுகள் வரவழைத்து விட்டீர்கள். நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலஷ்மி மேடம்..

   Delete
 15. நல்லவற்றை மட்டுமே திரும்பிப்பார்த்துள்ளது நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...

   Delete
 16. அம்மாவும், பொண்ணுமாக போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்குவது எவ்வளவு சந்தோஷம் !! வாழ்த்துகள் ! இனிதான் மற்ற பதிவுகளுக்கும் சென்று வர வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...

   Delete
 17. வாழ்த்துக்கள் ஆதி! அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தியானா...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…