Sunday, December 15, 2013

வீடும் + குறிப்புகளும்!!!!


 இந்த வீடு காலண்டர் ஷீட்டினால் ஆனது… வருடத் துவக்கத்தில் மாத மற்றும் தினசரி காலண்டர்கள் நிறைய நமக்கு வருமல்லவா! அது போல் ஒரு தினசரி காலண்டரில் செய்யப்பட்டது தான் இது! மூன்று நான்கு கிடைக்கும் பட்சத்தில் ஒன்றை இது போல் நீங்கள் செய்யலாம். நவராத்திரி கொலுவிலும், ஷோகேஸிலும் வைத்து அழகு பார்க்கலாம். முழுத்தாள்களும் இருந்தால் தான் இந்த வீடு அழகாக அமையும். மடித்து மடித்து செய்து கொண்டே வந்தால் வீடு அழகாக அமைந்து விடும்…ஒரு தாளை இப்படி மடிக்கவும்


அடுத்த தாளை இப்படி மடிக்கவும்

கடைசியில் இப்படி வந்துவிடும்

நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண் எனக்கு இதன் செய்முறையை சொல்லிக் கொடுத்தாள்.. அப்போது இரண்டு செய்து வைத்தேன். பல வருடங்கள் கழித்து கிராமத்தில் உள்ள என்னவரின் பெரியம்மா வீட்டிற்கு சென்ற போது இந்த காலண்டர் தாள்கள் முழுதாக இருந்ததை பார்த்தவுடன் செய்யத் துவங்கி விட்டேன்……:)) செய்தால் மட்டும் போதுமா! உங்க எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா…:))))

குறிப்புகள்:-

ரெடிமேட் சட்டைகள் வாங்கும் போது உள்ளே அட்டைகள் வைத்து வரும் அல்லவா! அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். அதை வைத்து எங்கள் மகள் ஓவியங்கள் வரைய பயன்படுத்திக் கொண்டாள். கிரீட்டிங் கார்டும் தயாரிக்க சொல்லிக் கொடுத்தேன். இன்னொரு உபயோகம் இந்த கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் வாசலில் விளக்குகள் வைப்போமல்லவா! அதன் கீழே இந்த அட்டையை வட்டமாக வெட்டி வைத்தோம். தரையில் எண்ணெய் கசியாமல் இருக்க உதவியது… நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.


தேங்காய்த்துருவல் கடைசி வரை குளிர்சாதனப் பெட்டியில் நன்றாக இருக்க வேண்டுமா?

தேங்காய் வாங்கி உடைத்தவுடன் குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் மஞ்சள் படியத் துவங்கி விடும். கவர் சுத்தி வைத்தாலும் அப்படித்தான்.. துருவி வைத்தாலும் ஒரு மாதிரி வாடை வந்து விடுகிறது… சமீபத்தில் தான் ஒருவர் சொன்னதாக என் மாமியார் என்னிடம் சொன்னார்… அதாவது துருவி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்கும்படி…. தற்போது அப்படித் தான் செய்து வருகிறேன். கடைசி வரை நன்றாக இருக்கிறது. ஒன்றே ஒன்று மறக்க கூடாது…. காலையில் எழுந்தவுடன் வெளியே எடுத்து வைத்துவிட வேண்டும். அப்போது தான் வெளியே உள்ள தட்ப வெப்பநிலைக்கு மாறி சமையலில் சேர்க்க ஏதுவாக இருக்கும்….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

30 comments:

 1. அருமை!பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்...

   Delete
 2. பயனுள்ள தகவல்கள்... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...

   Delete
 3. இந்த கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் வாசலில் விளக்குகள் வைப்போமல்லவா! அதன் கீழே இந்த அட்டையை வட்டமாக வெட்டி வைத்தோம். தரையில் எண்ணெய் கசியாமல் இருக்க உதவியது


  நல்ல முயற்சி...பாராட்டுக்கள்..

  கார்த்திகை விளக்குகளை அரச் இலை அல்லது அவரை இலைகளின் மேல் வைப்பது வழக்கம் ,, இலைகள் கிடைக்காவிட்டால் இப்படி செய்வது நல்லது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 4. பயனுள்ள குறிப்புகள். பாராட்டுக்கள். நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 5. பயனுள்ள தகவல்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா மேடம்..

   Delete
 6. தேங்காய் விற்கும் விலையில் நல்ல பயனுள்ள குறிப்பு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில் மேடம்..

   Delete
 7. காட்சிக்கு நிறைவான கைவண்ணப் பொருட்கள். கூடவே தேங்காய்த் துருவல். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா..

   Delete
 8. அருமையான தாள் வீடு.
  உங்கள் கைவண்ணம் வீட்டிலும் வீட்டுக் கோலத்திலும் மிளிர்கிறது.
  ரசித்தேன். மிக அழகு!

  உபயோகமுள்ள சிறு சிறு குறிப்புகளும் அருமை!

  இங்கே நாமிருக்கும் நாட்டிலே எமக்கு குளிர் சாதப்பெட்டியைப் போன்று அல்லது இரண்டு மடங்ககாகப் ப்ரீசர் வைத்திருப்போம்.
  அவ்வப்போது கிடைக்கும் அத்தனை காய்பிஞ்சுகள், சமைத்த மேலதிக உணவுகள், தேங்காய் எனப் பதப் படுத்தி நீண்டகாலம் வைத்து உபயோகிப்பதற்கு!
  உடனுக்குடன் தேடினாலும் இங்கு கிடக்காதே சில பொருட்கள்...

  உங்கள் பதிவும் பகிர்வும் பிரமாதம். நன்றியும் வாழ்த்துக்களும் ஆதி!

  த ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி...

   Delete
 9. வீடும், வீட்டுக் குறிப்புகளும் அருமை ஆதி. தேங்காய் டிப்சிற்கு என் ஓட்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலஷ்மி மேடம்..

   Delete
 10. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷேஷாத்ரி சார்...

   Delete
 11. வீடு அழகு என்றால் சொல்லியிருக்கும் குறிப்புக்கள் அழகோ அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்..

   Delete
 12. அற்புதம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

   Delete
 13. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 14. வீடு நல்லாருக்குங்க. முன்னெல்லாம் தீபம் முடிந்ததும் எண்ணெய் கரையை எடுப்பதே பெரிய வேலை. இதுவும் நல்ல ஐடியாதான்.

  நான் தேங்காயைத் துருவி எல்லாம் வைக்கமாட்டேன். இரண்டு மூடியையும் தனித்தனியாக ஒரு டிஷ்ஷூ பேப்பரால் வாய்ப்பகுதியை முழுவதுமாக மூடி ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரங்கள் வரை வரும். அதற்குமேலும் இருக்கும், நான்தான் நீக்கிவிடுவேன்.

  ஃப்ரீஸர்ல வச்சு எடுத்தா அந்த டேஸ்ட் வரமாட்டேன்றது. எதுக்கும் இத ட்ரை பண்ணி பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் குறிப்புக்கும் நன்றி...முயற்சி செய்து பார்க்கிறேன்..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா...

   Delete

 15. வல்லவர் கைபடின் அனைத்தும் நல்லதே! அருமை ! இதற்குத் தேவை பொறுமை!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…