Saturday, December 14, 2013

உண்பதற்குச் சில நியதிகள்!



புத்தக அலமாரியை சுத்தம் செய்த போது என் அப்பா வைத்திருந்த புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது. தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்என்ற தலைப்பில் இருந்த இந்த புத்தகத்தில் சிறப்பான கருத்துகள் நிறைய இருந்தன. ரோஷ்ணி கூட இந்த புத்தகத்தை எடுத்து வாசித்து பார்த்துவிட்டு  இனிமேல் இது போல் செயல்படப் போறேன்என்று சொல்லியிருக்கிறாள்.

அப்பாவும் சரி, என்னவரும் சரி, எந்த புத்தகம் வாங்கினாலும் அதில் வாங்கிய தேதியை எழுதி வைக்கும் பழக்கமுள்ளவர்கள். இந்த புத்தகத்தை 2004ம் வருடம் சென்னை கிரி டிரேடிங் ஏஜென்சி, மயிலாப்பூரில் வாங்கியிருக்கிறார்.. விலை ரூ 7 மட்டுமே!

அதிலிருந்து சில கருத்துக்களை இன்று பார்க்கலாமா? உண்பதற்கு கூட சில நியதிகள் உண்டாம்.


  1. குறித்த காலத்தில் மட்டுமே உண்ண வேண்டும்.
  2. மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும். கோபம், வருத்தம் ஆகிய உணர்வுகளுடன் உண்ணக்கூடாது.
  3. சத்துள்ள உணவை உண்ண வேண்டும். அவையாவன முளைகட்டிய தானியங்கள், கீரை, காய், பழம் முதலியன.
  4. நன்றாக மென்று உண்ண வேண்டும்.
  5. அளவோடு உண்ண வேண்டும். வயிற்றில் அரைப்பங்கு திடப்பொருள், கால் பங்கு திரவப்பொருள் இருக்கவும், எஞ்சிய கால் பங்கு காற்றோட்டத்திற்காக காலியாகவும் விடப்படவேண்டும்.
  6. மற்றவர்களின் கட்டாயத்திற்காக உண்பதும், காப்பி முதலியவற்றை அடிக்கடி குடிக்கவும் கூடாது.
  7. உணவு அதிகம் இருக்கிறது. வீணாகிவிடும் என்பதற்காக அதிகம் உண்ணக்கூடாது. இரண்டு, மூன்று நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் சமைத்து வைத்திருந்த உணவு பதார்த்தங்களை உண்ணக்கூடாது.
  8. உணவிற்குப் பின் சிறிது ஓய்வு வேண்டும். அப்படி ஓய்வு கிடைக்காது என்றால் மிகக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
  9. அதிக களைப்புடன் இருக்கும்பொழுது உண்ணக்கூடாது. அப்பொழுது தேவை சிறிது ஓய்வும், உறக்கமும் தான்.

என்ன வாசித்தீர்களா! நாமும் இது போல் கடைபிடிக்க முயற்சிக்கலாமே.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

42 comments:

  1. எளிமையான கடைபிடிக்கக் கூடிய
    கடைபிடிக்கவேண்டிய பழக்கம்தான்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

      Delete
  2. Replies
    1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  3. வணக்கம்

    அருமையான நியதிகள் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..

      Delete
  4. பயனுள்ள கருத்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

      Delete
  5. தொடர வேண்டிய நல்ல கருத்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

      Delete
  6. வாழ்வில் அனைவரும் பின்பற்றவேண்டிய முத்தான கருத்துக்கள்...நன்றி ஆதி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷமீ...

      Delete
  7. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் - என்னும் வாய்மொழிக்கேற்ப உணவை விருந்தாயல்லாது மருந்தாய் ஏற்கும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும். உண்ணும்போது கடைபிடிக்கவேண்டிய நியதிகள் மிகவும் பயனுள்ளவை. புத்தகத்தில் வாங்கிய இடம், தேதி குறித்துவைக்கும் வழக்கம் பாராட்டத்தக்கது. பகிர்வுக்கு நன்றி ஆதி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி..

      Delete
  8. காட்டியுள்ள படம் அருமை. பகிர்வு மிகவும் பயனுள்ளது. பாராட்டுக்கள். பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

      Delete
  9. எளிமையாய் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்தாம்... ஆனாலும் மனதில் கொள்ளாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா அன்பரசு மேடம்..

      Delete
  10. படிக்க சுவாரஸ்யம். முழுதும் கடைப் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம். :))))

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

      Delete
  11. மிகவும் பயனுள்ள கருத்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குணசேகரன் ...

      Delete
  12. எல்லாம் சரி.ஃ பாலோ பண்ணத்தான் முடியலை (சோம்பேறித்தனம் தான் )

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா மேடம்..

      Delete
  13. Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்..

      Delete
  14. இந்த மாதிரி நடந்துக்கறது எல்லாராலயும் முடியுமா தெரியலை! :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

      Delete
  15. குறித்துவைத்துக்கொண்டு கடைபிடிக்கவேண்டிய குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸாதிகா மேடம்...

      Delete
  16. நல்லதுதான் சொல்லி இருக்கீங்க. ஆனா பாலோ பண்ண முடியலையே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் சார்...

      Delete
  17. கடைப் பிடிக்க முயல வேண்டும். ஆனால் மிக கடினம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்...

      Delete
  18. அனுபவத்தில் மிக்க நல்ல முறைகள். கடைபிடிக்கவேண்டிய நல்ல முறைகள். அவசியம் நேரும்போது மட்டும் டாக்டர் சொன்னார் என்று சில நாள் கடை பிடிப்பார்கள். அப்புறம் அவ்வளவுதான். நோயற்ற வாழ்வுக்கு இதெல்லாம் உதவிகரமாக இருக்கும். உபயோகமாந பதிவு. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

      Delete
  19. இவற்றைப் பின்பற்றினால் ஆயுள் ஆரோக்கியத்தோடு
    மனிதன் நீண்டகாலம் வாழலாம் ! அருமையான தகவலைப்
    பகிர்ந்துகொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றியும்
    வாழ்த்துக்களும் தோழி .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...

      Delete
  20. Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...

      Delete
  21. Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா...

      Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…