Friday, December 13, 2013

”கோவிந்த் தாபா” தால் மக்கனி!


பெயரைப் பார்த்ததுமே பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இது வட இந்தியாவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள செய்யும் ஒரு சைட் டிஷ். தானியங்களை உபயோகித்து செய்வதால் உடலுக்கு பலம் தரக்கூடியது.

தில்லியில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள ”கோவிந்த் தாபா”வில் இந்த தால் மக்கனி சுவையாக இருக்கும்… ஆவி பறக்க வெண்ணெய் மிதக்க, கிண்ணத்தில் வரும் சப்ஜிகளின் அந்த சுவை இன்றும் நாவில்…..:)) மாதம் ஒருமுறை தாபாவுக்கு சென்று சாப்பிடுவோம். அங்கு ஷாஹி பனீர், கடாய் பனீர், பாலக் பனீர், மட்டர் பனீர், மலாய் கோஃப்தா இவற்றுடன் சுடச்சுட தந்தூரி ரொட்டி, தவா ரொட்டி, நான், மிஸ்ஸி ரொட்டி, லச்சா பராட்டா ஆகியவைகள் மிகவும் சுவையாக இருக்கும்…:)) நண்பர்களின் GET TOGETHER அவ்வப்போது இந்த தாபாவில் தான் நடக்கும்… என்றாவது போரடித்து போனால் தாபாவிலிருந்து சப்ஜிகளை வாங்கி வந்து வீட்டில் ரொட்டி போட்டு சாப்பிடுவோம்…:) எங்கள் மகளுக்கு இந்த ”தால் மக்கனி” மிகவும் பிடிக்கும்…

இந்த தாபாவுக்கு முதன் முதலில் நான் சென்ற போது என்னவர் முதல் அனைவருமே இரண்டு கையால் சப்பாத்தியை பிய்த்து, ஸ்பூனில் சப்ஜியை எடுத்து, பிய்த்து கைகளில் வைத்துள்ள சப்பாத்தி துண்டில் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்… கைகளில் எதுவுமே படவில்லை…:)) எனக்கோ இரண்டு கையால் பிய்த்து சாப்பிட தோன்றவில்லை.. யோசித்து கொண்டிருந்ததை பார்த்த நண்பர் மாறன்,  ”நீங்க பாட்டுக்கு எப்போதும் போல் சாப்பிடுங்கள், பின்னாடி வாஷ்பேசின் இருக்கு…. நானும் உங்களைப் போல் தான்” என்றார்…:))) அந்த நண்பர் வட்டம் எல்லாம் இன்று பிரிந்து மும்பை, சென்னை, தில்லி என தனித்தீவுகளாக ஆகி விட்டது…..:(

சரி! வாங்க! இந்த சுவையான நினைவுகளுக்குப் பின்னேயுள்ள தால் மக்கனியின் செய்முறையை பார்க்கலாமா?


தேவையானப் பொருட்கள் :-

கறுப்பு உளுந்து - அரை கப்
ராஜ்மா – அரை கப்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 2 பற்கள்
மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி
தனியாத் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு மேஜைக் கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
ஃப்ரெஷ் கிரீம் – தேவையான அளவு
வெண்ணெய் – ஒரு மேஜைக் கரண்டி
கொத்தமல்லி – அலங்கரிக்க..

செய்முறை :-

காலையில் சப்பாத்திக்கு செய்வதானால் கறுப்பு முழு உளுந்தையும் ,ராஜ்மாவையும் முதல்நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற விடவும். காலையில் கொடுக்கப்பட்டுள்ள அளவுப்படி வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் சீரகத்தை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும் போதே மேலே கொடுத்துள்ள பொடிகளை ஒவ்வொன்றாகப் போட்டு பச்சை வாசனை போனதும், கறுப்பு உளுந்தையும், ராஜ்மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும், தண்ணீரையும் விட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு சிம்மில் 20 நிமிடங்கள் வைத்து நிறுத்தவும்… சற்று ஆறியதும் ப்ரெஷ் க்ரீமை மேலே விட்டு சிறிதளவு வெண்ணையை போட்டு கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிக்கவும்…..


சுவையான தால் மக்கனி தயார்…. இதை வட இந்தியர்கள் சப்பாத்தியுடனும், சாதத்துடன் சேர்த்து ”தால் சாவல்” ஆகவும் சாப்பிடுவர்… இதை நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துங்களேன்…

சொல்ல மறந்துட்டேனே! இன்று வரை என்னவரும், மகளும் இரண்டு கையால் பிய்த்து தான் வட நாட்டவர்கள் போல் சாப்பிடுவர்…:)) நான் எப்படி! என்று கேட்கிறீர்களா? நான் அன்று போல் தான் இன்றும் வாஷ்பேசின் இருக்கா என்று பார்த்து விட்டு தான் சாப்பிடும் கேசாக இருக்கிறேன்….:))))

பின்குறிப்பு:-

கறுப்பு உளுந்து, ராஜ்மாவுடன் மசூர் தாலும் சேர்ப்பார்கள்..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.


32 comments:

 1. அறியாத டிஷ்
  செய்து பார்க்க ஆசை
  ராஜ்மாவு மசூர்தாள் என்பது என்னவெனப்
  புரியவில்லை
  கொஞ்சம் விளக்கினால் மகிழ்வேன்

  ReplyDelete
  Replies
  1. ராஜ்மா என்பது சோயா பீன்ஸ் வகையை சேர்ந்தது... டபுள் பீன்ஸ் என்று கூட சொல்வார்கள்.. அடர் சிகப்பு நிறத்தில் பெரிதாக இருக்கும்..
   மசூர் தால் என்பது கேசரி பருப்பு, மைசூர் பருப்பு என்றும் சொல்லப்படும் தானியம்....

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 2. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 3. டெல்லி வந்தால் உங்கள் வீட்டருகே உள்ள தபாவிலே சாப்பிடுறேன்

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வாருங்கள்..

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி சார்...

   Delete
 4. தால் மக்கனியின் செய்முறை குறிப்புகளுக்கு நன்றி... செய்து பார்ப்போம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 5. MTR ready to eat -இல் பல வட இந்திய பக்க உணவுப் பதார்த்தங்களை வாங்கி உண்பதுண்டு. வீட்டிலேயே செய்யும் துணிவு இன்னும் வரவில்லை. உங்கள் பதிவு பார்த்து செய்யலாம் என்று தோன்றுகிறது. நன்றி ஆதி.

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்கள்.. சுலபமானது தான்..

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி..

   Delete
 6. இன்னிக்கு நைட் சப்பாத்திக்கு சைட் டிஷ் இதான்

  ReplyDelete
  Replies
  1. அப்போ ராஜ்மாவையும், கறுப்பு உளுந்தையும் ஊறவைத்து விட்டீர்களா?

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி..

   Delete
 7. நானும் ஒரு செய்தேன் ஆனா வீட்டில் யாருக்கும் பிடிக்கல..நல்லதுதான் யாருக்கும் பிடிக்காதே,இப்போ உங்க குறிப்பை பார்த்ததும் சாப்பிடனும் போல இருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. :))) அது தான் உண்மை...

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேனகா...

   Delete
 8. அடிக்கடி செய்வதுதான் .. அருமையான குறிப்புகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 9. ஒருமுறை செய்து ருசிக்கும் ஆவல் வருகிறது. குறித்துக் கொண்டுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. சாப்பிட்டு பாருங்கள்... நிச்சயம் பிடிக்கும்..

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்...

   Delete
 10. ருசியான பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 11. அருமையான பகிர்வு.உட நினைவுகளை பகிர்வது சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்..

   Delete
 12. வித்தியாசமான சைட்டிஷ்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸாதிகா மேடம்..

   Delete
 13. இங்குள்ள நார்த் இண்டியன் ஸ்டாலில் இதனை சுவைத்திருக்கிறேன்..பெயர் & செய்முறை இன்று தான் அறிந்தேன்.நன்றாக உள்ளது ஆதி......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷமீ...

   Delete
 14. தால் பக்கனி புதுமையா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்...

   Delete
 15. Pudhu vagayana side dish. Try pannugiren.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

   Delete
 16. செய்து பார்க்கிறேன் ஆதி.. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…