Wednesday, December 11, 2013

நாங்கள்லாம் இதை எல்.கே.ஜியிலேயே ஆரம்பிச்சுட்டோம்ல!!!!


எங்கள் மகளின் மழலைப் பருவ நாட்களைப் பற்றிய டைரி இது

முதல் பகுதி எம் ஃபார் மோங்க்கி!


இந்தப் பகுதியில் பள்ளியில் விழாக்கள், பள்ளிக் கட்டணங்கள், தில்லி மக்களின் மனப்பாங்கு, பணபலம் என்று சிலதைப் பற்றி பார்க்கலாம்….

பள்ளியில் RAINY DAY, GRANDPARENT’S DAY, TEACHER’S DAY, JANMASHTAMI, GRADUATION DAY, WINTER CARNIVAL என்று பலவிதமான விழாக்கள் கொண்டாடப்படும்…  GRADUATION DAY பற்றி அப்போது நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ…..தில்லியில் எல்லாவற்றிலுமே எல்லோருக்குமே அலட்சியம் தான்…:( இப்படித் தான் ஒருநாள் மதியம் பள்ளியிலிருந்து வரும் மகளை அழைத்து வர நிறுத்தத்திற்கு சென்றிருந்தேன்அப்போது ரோஷ்ணி எல்.கே.ஜியில் இருந்தாள். அங்கு சென்று நின்றவுடன் இறக்கத்திலிருந்து அம்மா என்று என் காலை பிடித்து இழுக்கிறாள்…. என்னடா! எப்போ வந்தே? என்று கேட்டால் வேன் (B)பையா என்ன விட்டுட்டு, மம்மி இப்போ வந்துடுவாங்கன்னு சொல்லிட்டு போயிட்டார் என்கிறாள்….  நான் அதிர்ந்து விட்டேன்….:(((

காரணம்  அது மெயின் ரோடு - கடைகள், வீடுகள், வங்கி என ஜன நடமாட்டம் மிகுந்த இடம்…. ஏகப்பட்ட வண்டிகளும், ரிக்‌ஷாக்களும் செல்லும் நெருக்கடியான இடம்குழந்தைக்கு அப்போது எங்கள் வீடும் அடையாளம் தெரியாது…. ஒருவேளை தானாகவே ரோட்டை கிராஸ் செய்திருந்தாலோ, அல்லது யாராவது கூட்டிக் கொண்டு போயிருந்தாலோ என்ன ஆவது? நினைக்கும் போதே அழுகை பொத்துக் கொண்டு வந்தது…. குழந்தையை தூக்கிக் கொண்டு வீடு வந்து நெடுநேரம் ஆகியும் அந்த சம்பவம் கண்ணை விட்டு அகலவில்லைஓட்டுனரிடம் விசாரித்தால் சாதாரணமாக சாரிஒன்றை சொல்லி விட்டார்…. அது முதல் ரோஷ்ணியிடம் அம்மா வராமல் வண்டியை விட்டு இறங்கக் கூடாது என்றும்ஐ.டி.கார்டில் உள்ள நம்பரை (B)பையாவிடம் காட்டி போன் செய்யச் சொல்லுஎன்றும் சொல்லிக் கொடுத்தோம்….வேன் ஓட்டுனர் அமித் பள்ளியின் கேட் வரை விட்டு விட்டு செல்வார்…. உள்ளே அவள் வகுப்புக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும்நண்பரின் மகள் சிறிது நாட்கள் இவளை வகுப்பில் விட்டு விட்டு செல்வாள்…. அவளுக்கு வகுப்புக்கு நேரமாகி விட்டால்…. வகுப்புக்கு செல் என்று சொல்லி விட்டு செல்வாள்…. அப்போதெல்லாம் அங்கேயே நின்று கொண்டு ரோஷ்ணி அழுது கொண்டு இருப்பாளாம்….. ஆசிரியர் யாராவது ஐ.டி கார்டை பார்த்து அந்த வகுப்பில் விட்டு விட்டு செல்வார்களாம்இதை கேள்விப்பட்டு ஏதேதோ சொல்லி அவளாக வகுப்புக்கு செல்லும்படி செய்தோம்இப்படியாக தினமும் ஒரு கூத்து தான்…:))

சென்ற பகுதியில் தில்லியில் பள்ளிக் கட்டணங்களை பற்றி குறிப்பிடும்படி ரமணி சார் கேட்டிருந்தார்கள்.. DELHI PUBLIC SCHOOL என்று சொல்லப்படுகிற பிரபலமான பள்ளியில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பே எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வருடத்துக்கு 4 முதல் 5 லட்சங்கள் எனக் கேள்விப்பட்டோம்…:)) நாங்கள் எங்கள் மகளுக்கு எல்.கே.ஜி, யூ.கே.ஜி, ஒன்றாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் செலவழித்த தொகை 1.5 லட்சங்களுக்கும் மேல்….:))) சில பள்ளிகளில் மதிய உணவும் அங்கேயே தருவதாக சொல்லி அதற்கும் மாதம் ரூ1000 வரை வாங்கிக் கொள்வார்கள்.பள்ளி சேர்த்தது முதலே பெற்றோராகிய எங்களுக்கு பெரிய பாடாக ஒன்று இருந்தது. அது என்னவென்றால்… PROJECT அல்லது ACTIVITY WORK என்பார்களே அது தான்…:) இன்று ஒரு ALPHABET சொல்லிக் கொடுத்தால்…. அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் இரண்டை எதைக் கொண்டாவது அலங்கரித்து செய்து வர வேண்டும்…:)) பள்ளி விட்டு வீடு வந்ததும் முதலில் டைரியை எடுத்து பார்ப்பேன். அதில் என்ன செய்து கொண்டு வர வேண்டும் என்று எழுதி தந்திருப்பார்கள்.அப்பாவின் வேலை அந்த எழுத்து சம்பந்தப்பட்ட பொருளை அலுவலகத்திலிருந்து வரும் போது பிரிண்ட் அவுட் எடுத்து வர வேண்டும்அம்மாவின் வேலை பஞ்சு, கிரேயான்ஸ், பென்சில் துருவல்கள், தேங்காய் நார், பருப்புகள், கலர் பேப்பர்கள் , தேவையில்லாத குறுந்தகடுகள் என்று எதையாவது வைத்து அதை இரவுக்குள் தயார் செய்து வைக்க வேண்டும்…..:)) மகள் அதை பள்ளியில் காட்டி அந்த பாராட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்…:))) சிலது அழகாக இருக்கும்பட்சத்தில் பள்ளியிலேயே வாங்கி வைத்துக் கொள்வார்கள்…:))என்னுடைய பள்ளிப்பருவத்தில் வாரத்தில் ஒருநாள் பள்ளியிலேயே CRAFT PERIOD என்று இருக்கும்அதில் ஆசிரியர் சொல்லித் தரும் கைவேலைகளை நாங்கள் அங்கேயே செய்து காட்ட வேண்டும்அப்படி செய்தால் தான் குழந்தைகளின் மனதிலும் பதியும்சோப்புகள் வரும் டப்பாக்கள், பேஸ்ட் டப்பாக்கள் என்று வைத்து சோஃபாக்கள் செய்வது, சிகரெட் டப்பாவில் ஹேண்ட் பேக், பட்டை ஒயரை வைத்து கிளி, மீன், மாலைகள், கூடைகள், துணியில் க்ரோஷா தையல் போன்றவை இன்றும் நினைவில் உள்ளன….அதை விடுத்து பெற்றோர் செய்து தர குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் என்பது என்னவிதமான கற்றல் முறை? எங்கள் வீட்டிலாவது நாங்கள் செய்வதை எங்கள் மகள் பார்க்க முடிகிறதுதில்லியில் பெரும்பாலானவர்கள் இது போல் ஏதேனும் WORK கொடுத்தாலே ஸ்டேஷனரி கடைகளில் தந்து செய்து தரச் சொல்லி விடுவார்கள்அவர்களும் 500, 750, 1000 என வசூலிப்பார்கள்….:)

குழந்தைகளின் வித்தியாசமான பெயர்கள், ஆசிரியர்களின் மனப்பாங்கு, பள்ளி அட்மிஷனுக்கு அலைந்தது இதோடு முடிந்ததா? என்று பல விஷயங்களைப் பற்றி அடுத்த பகுதியில்….


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


34 comments:

 1. பகிர்ந்திருக்கும் ஆர்ட் மிக அருமை.நாமும் சேர்ந்து கூட படிப்பது போல்.நல்ல அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்..

   Delete
 2. பள்ளிக் கட்டணங்கள் பயமுறுத்துகின்றன. குழந்தைகளுக்குக் கைவேலை கொடுக்கிறோம் என்று பெற்றவர்களைப் படுத்துவது கொடுமை. அந்த வயதில் குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று யோசிக்கக் கூட முடியாத பள்ளிகள்! குறைந்த பட்சம் இது போன்ற 'ப்ராஜக்ட்' களை மாதத்துக்கு ஒன்று என்றாவது கொடுத்தால் மெல்ல அவர்களையே செய்யப் பழக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.. கொடுமை தான்..

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்...

   Delete
 3. அம்மாவின் வேலை பஞ்சு, கிரேயான்ஸ், பென்சில் துருவல்கள், தேங்காய் நார், பருப்புகள், கலர் பேப்பர்கள் , தேவையில்லாத குறுந்தகடுகள் என்று எதையாவது வைத்து அதை இரவுக்குள் தயார் செய்து வைக்க வேண்டும்///பாவம் அம்மாக்களுக்குத்தான் அதிக வேலை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி சார்..

   Delete
 4. அருமையான பதிவு.

  தொடர்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டீச்சர்..

   Delete
 5. பெற்றோர் செய்து தர குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் என்பது என்னவிதமான கற்றல் முறை?

  கல்விச் சுமை.....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 6. நம்ம ஊர் பள்ளிகள் இடையே கூட எல்.கே.ஜி, யூ.கே.ஜி குழந்தைகளுக்கு கிராஃட் ஒர்க் என்று கொடுக்கிறார்கள்.ஆனால் பெரும்பாலும் அதை செய்வதென்னவொ பெற்றோர்கள் தான்..இந்த பதிவை பார்த்ததும் என் சித்தி பையன்களுக்கு செய்து கொடுத்தது நினைவு வருகிறது ஆதி...அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷமீ...

   Delete
 7. நமக்கு தான் வேலை அதிகம்... ஆனாலும் அதில் ஒரு சந்தோசம் இருக்கும்...

  ரசிக்க வைக்கும் பகிர்வு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 8. மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

  ReplyDelete
  Replies
  1. வாசித்து கருத்தும் தெரிவித்து விட்டேன்..

   Delete
 9. பிள்ளைக்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுவதில் நமக்கு சந்தோசம்தானே!!

  ReplyDelete
  Replies
  1. ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும், ஒருபக்கம் படுத்தல் தான்...

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி..

   Delete
 10. சுமையான கல்வித்திட்டத்தை சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  சிறு குழந்தைகளுக்கு ஓரளவு விபரம் தெரியும் வரை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்களுக்கு [குறிப்பாக தாயாருக்கு] வயிற்றைக்கலக்கத்தான் செய்யும்.

  நித்யகண்டம் பூர்ண ஆயுஷூ என்பதுபோல முதல் ஓரிரு ஆண்டுகள் மிகவும் கஷ்டம் தான்.

  இரண்டரை வயதே ஆன பேரன் அநிருத்தை 10 நாட்கள் முன்பு ஓர் பாலவிகார் பள்ளியில் சேர்த்துள்ளோம். அவனது மன ஏக்கங்களைப்பார்க்க எங்களுக்கு மிகவும் கஷ்டமாகவே உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அதற்குள் அநிருத்தை பள்ளியில் சேர்த்தாச்சா!!!

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 11. டெல்லியில் படிக்கவைக்க
  லெட்சாதிபதியாகவும் இருக்கனும்
  அதிக ஓய்வு நேரம் இருப்பவராகவும் இருக்கனும் போல
  பகிர்வு அருமை
  அங்குள்ள சூழலை புரிந்து கொள்ளமுடிகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பணபலம் தான் முக்கியம்...

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..

   Delete
 12. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கு மிக்க நன்றி சார்..

   Delete
 13. சுவராஸ்யம்..ஆர்ட் வேலை அழகா இருக்கு!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேனகா..

   Delete
 14. Project work yellam kuzhandhaigale panninaldhan vubayogamaga irukkum. Parents dhan seyyavendiirukku. Idhanal selavudhan. Sixth std., kku mela project work vaikkalam.

  Yella photovilum Roshini romba azhaga irukka.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

   Delete
 15. பகல் கொள்ளை என்பது டெல்லியில் பள்ளிகள் அடிக்கும் கொள்ளை யாகும்! அறிவேன்!

  த ம 6

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா!

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா..

   Delete
 16. நீங்களும் எல்.கே.ஜியிளிருந்து படிக்க ஆரபித்டிருக்கிரீர்கள் . இப்ப நீங்க எந்த கிளாசில் இருக்கிறீர்கள்..ஹோம் ஒர்க்கெல்லாம் சரியாகசெய்கிறீர்கள் தானே. (just a joke)
  அருமையாக சொல்லியுக்கிறீர்கள் நீங்கள் படும் பாட்டை.
  ரோஷ்ணி செம க்யூட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..

   Delete
 17. Project work pulambal innaikki ellaa veetlayum kekka mudiyudhu...:(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புவனா...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…