Wednesday, December 18, 2013

திருவாதிரைத் திருநாள்.....களியும்! கூட்டும்!

இன்று திருவாதிரைத் திருநாள்.... 

நன்றி - கூகிள்

சேந்தனார் என்னும் சிவபக்தன், சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வசித்து வந்தார்... தினமும் சிவனடியார்களுக்கு அமுது படைத்து அவர்கள் மனம் கோணாமல்  நடந்து கொள்வார்... ஒருமுறை மழை பெய்து விறகுகளெல்லாம் நனைந்து விடவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்...

அந்நேரம் ஒரு அடியாரும் வந்து சேரவே, ஈர விறகில் கஷ்டப்பட்டு சமைத்து வீட்டில் இருந்த அரிசியையும், உளுந்தையும் போட்டு களி செய்து சிவனடியாருக்கு படைத்தனர். அவர் இதுவரை தன் வாழ்நாளிலேயே இப்படியொரு களியை சாப்பிட்டதில்லை என்று கூறியதும், தம்பதிகள் மகிழ்ந்து நடராஜரின் சந்நிதிக்கு ஓடோடிச் சென்றனர்... 

போகும் வழியெல்லாம் இவர்கள் படைத்த களி சிதறிக் கிடந்தது... நடராஜரின் வாயிலும் களி இருக்கவே, தங்கள் வீட்டுக்கு அமுதுண்ண வந்தது அந்த சிவபெருமானே என அகமகிழ்ந்தனர்... அன்று மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரமாக இருந்தபடியால் அன்று முதல் களி செய்து கடவுளுக்கு படைப்பது வழக்கமாயிற்று...


சூரிய உதயத்திற்கு முன்பே களியும், எழுகறி கூட்டும் செய்து நைவேத்தியம் செய்யும் படி வீட்டுப் பெரியவர்கள் சொல்ல, அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வாசலில் கோலமிட்டு, விளக்கு ஏற்றி வைத்து, ரேடியோவில் சுப்ரபாதமும், கந்த சஷ்டி கவசமும் ஒலிக்க நானும் உடன் சொல்லிக் கொண்டே சமைக்க ஆரம்பித்தேன்... இன்றைய நாளின் சிறப்புகளையும் தெரிந்து கொண்டு, சாஸ்திரங்கள் குறித்த சுவாமி ஓம்கார் அவர்களின் உரையையும் கேட்டுக் கொண்டே சமையலை முடித்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்தேன்...:) 

ஏழுவித காய்கள் போட்டு செய்த கூட்டு!

ரோஷ்ணிக்கு அரைப்பரீட்சை நடப்பதால் அவளையும் படிக்க வைத்து, தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி விட்டு, அருகிலுள்ள சிவன் கோவிலுக்கும் சென்று தரிசித்து , வழியில் ஆஞ்சநேயரையும் பார்த்து விட்டு வீடு வந்தடைந்தேன்...

திருவாதிரைக் களி!
மாலையில் தான் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று வர வேண்டும்.. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் கண்ணாடி அறை சேவையில் பாசுரப்படி சிறப்பாக அலங்காரம் செய்திருப்பார்கள்... இதற்காகவே ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்து அலங்காரம் செய்வார்கள்... இன்று ஓங்கி உலகளந்த உத்தமன் என்று நினைக்கிறேன்... பார்த்து விட்டு வந்து பகிர்கிறேன்..

நன்றி - துளசி டீச்சர்

திருவரங்கம் முழுவதும் வண்ண வண்ண கோலங்களும், இரட்டை இழைக் கோலங்களுமாக கண்களைக் கவர்கின்றன... அவற்றையும் படம் பிடித்து வர வேண்டும்...:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


28 comments:

 1. அழகழகான படங்களுடன் அற்புதமான ருசியான பகிர்வு.

  களிப்பூட்டியது தாங்கள் காட்டியுள்ள களியும் கூட்டும்.

  இங்கும் அதே அதே ! ரஸித்து ருசித்து வர தாமதமாகிவிட்டது.

  வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. அருமை... அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்..

   Delete
 3. திருவாதிரை களி செய்யுறது எப்படின்னு பதிவு போடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. 1 கப் அரிசிக்கு கொஞ்சம் துவரம்பருப்பும், பயத்தம்பருப்பும் சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ரவை போல் பொடித்து கொள்ளவும். 1 கப் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, ரவை கலவையை சேர்த்து 2 1/2 தம்ளர் தண்ணீர் சேர்த்து ஏலக்காய் பொடியும் துளி நெய்யும் சேர்த்து குக்கரில் சாதம் வைப்பது போல் 3 அல்லது 4 விசில் விட்டு இறக்கி, நெய்யில் முந்திரி, திராட்சை, தேங்காய் வறுத்து சேர்க்கவும்..களி தயார்...

   இதுக்கு தனியாக பதிவு எதற்கு...:) செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்..

   நன்றி ராஜி..

   Delete
 4. உங்கள் கழியும், கூட்டும் கண்ணாலேயே சுவைத்தேன், ரசித்தேன். தினம் ஆண்டாளுக்கு ஓரொரு அலங்காரம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே . படம் எடுக்க அனுமதி இருந்தால் பகிருங்களேன். எங்களுக்கும் தரிசனம் செய்த திருப்தி கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உள்ளே படம் பிடிக்க அனுமதியில்லை...கேட்டு பார்க்கிறேன்...நிச்சயமாக முடிந்தால் பகிர்கிறேன்..

   மிக்க நன்றி ராஜலஷ்மி மேடம்..

   Delete
 5. திருவாதிரை களியும், கூட்டும் அருமை.
  ஆண்டாள் கண்ணாடி சேவை படம் அழகோ அழகு.
  துளசிக்கு நன்றி.
  உங்கள் பகிர்வுக்கும் நன்றி.
  கோலங்கள் காண ஆவல்.

  ReplyDelete
 6. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் கண்ணாடி அறை சேவையில்
  பாசுரப்படி சிறப்பாக அலங்காரம் செய்திருப்பார்கள்...//

  ருசியான நைவேத்தியத்தை அருமையான பதிவாக்கியதற்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 7. களியும் கூட்டும் நன்றாக இருக்கிறது. பண்ணாதவாளுக்கு பாத்தாலே சாப்பிட்ட புண்ணியம் வந்துவிடும் களி செய்யயும் காரணத்தை எளுதியிருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.
  மாயவரம்,தஞ்சாஊர்க்காரர்கள் இதை நோன்பாகச்செய்து கழுத்தில் சரடு கட்டிக்கொள்ளும் வழக்கமும் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
  தோத்திரங்கள் சொல்லிக்கொண்டே ப்ரஸாதம் செய்தால், மடியுடன் செய்தால் சுவை கூடும்.
  உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். மற்ற நாட்களில் களிக்கு இந்த ருசி வராது.
  செய்வதை ச்ரத்தையுடன் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது பெண்ணே.
  படங்களெல்லாம் அருமை.. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி காமாட்சிம்மா...தங்களைப் போன்றவர்களின் வழிகாட்டல் தான் காரணம்..

   Delete
 8. Replies
  1. நன்றி காஞ்சனா மேடம்..

   Delete
 9. ஆண்டாள் ஓவியத்தின் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை ஆதி! திருவாதிரைக்களி வெல்லம் கலந்து செய்தது பார்க்க அழகு! எப்படி செய்தீர்கள் என்று சொல்லுங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மனோம்மா... செய்முறை ராஜிக்கு சொல்லியிருக்கிறேன்..பாருங்க.. சுலபம் தான்..

   Delete
 10. திருவாதிரைக் களியும் கூட்டும் பார்க்கவே
  ருசி எப்படி இருந்திருக்கும் என எண்ணவைக்கின்றது!..

  ஆண்டாள் கண்ணாடி சேவை அலங்காரம் அற்புதம்!

  மனோ அக்கா கேட்பதைத்தான் நானும் கேட்கிறேன். களிக் குறிப்பினைக் கூறுங்கள்.
  நான் இன்று காமாக்ஷி அம்மா குறிப்பின்படி செய்தேன். அருமையாக இருந்தது.

  வாழ்த்துக்கள் ஆதி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இளமதி...ராஜிக்கு சொல்லியிருக்கிறேன் பாருங்க..

   Delete
 11. திருவாதிரைக் களி உண்டது இல்லை. உங்கள் பதிவில் திருவாதிரைக் களியோடு கூட்டையும் பார்க்கும்போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தமிழ் இளங்கோ சார்..

   Delete
 12. திருவாதிரைக் களியின் வரலாறு இப்போதுதான் தெரிந்துகொண்டேன். களியும், கூட்டும் சூப்பரா இருக்குங்க. ஆண்டாள் சேவை தரிசனத்திற்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. திருப்பல்லாண்டு பாடிய சேந்தனாருக்குப் பின்னால் இப்படியும் ஒரு கதை இருக்கிறதென்று இப்பொழுது தான் தெரியும். களியும் கூட்டும் பார்க்கவே சுவையாக இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வியாசன்...தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி..

   Delete
 14. ஹைய்யோ!! களி தின்னு வருசம் பல ஆச்சு(

  மார்கழி என்றாலே மனசில் களிநடனம் ஆடுகிறாளே ஆண்டாள்!

  முடிஞ்சவரை தினமும் எட்டிப் பார்த்துட்டு வாங்க. உங்க மூலமா நானும் தரிசிக்கிறேன்.

  அட்லீஸ்ட் ஒரு மாசமாவாவது அங்கே வந்து தங்கி அரங்கனையும் ஆண்டாளையும் தாயாரையும் சேவிக்கணும் என்றொரு தீராத ஆசை இருக்கு!

  ReplyDelete
 15. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…