Monday, December 2, 2013

எம் ஃபார் மோங்க்கி!சங்கவி அவர்கள் தன் மகனின் பள்ளி அட்மிஷனுக்காக அலைவது குறித்து தெரிவித்திருந்தார். அதை படித்ததிலிருந்தே எங்கள் மகளின் பள்ளி செல்ல ஆரம்பித்திருந்த நாட்கள் நினைவுக்கு வந்தனசுகமான அந்த மழலைப் பருவ நாட்கள் மீண்டும் வாரா! எனவே அவளின் பள்ளிப் பருவ நாட்களை பற்றிய டைரி போல் இதைக் கொள்ளலாம்ரோஷ்ணியின் சேமிப்பிற்காக இங்கே பதிவு செய்கிறேன்

தில்லியில் குழந்தையின் 2 வயதிலிருந்தே ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பி விடுவார்கள்எங்கள் வீட்டில் 3 வயதில் ப்ளே ஸ்கூலில் சேர்ப்பதற்கே அவள் அப்பா சீக்கிரம் சேர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்…:)) (அபியும் நானும் கதை தான்..) வீட்டிலிருந்து ஐந்து நிமிடத் தொலைவில் ஒரு ப்ளே ஸ்கூல் இருக்கவே, ஒருநாள் முற்பகல் பதினோரு மணி போல் ரோஷ்ணியை அழைத்துக் கொண்டு, அங்கு விசாரிக்கச் சென்றேன். அவர்களும் தகவல்களைச் சொல்லி ஒரு விண்ணப்ப படிவம் தந்தார்கள். அன்று அமாவாசையும், புதன்கிழமையுமாக இருந்ததால், உடனேயே பூர்த்தி செய்து கொடுத்து முன்பணமாக என் கையில் வைத்திருந்த 500 ரூபாயையும் கட்டி விட்டேன்.. பள்ளி முடிய இன்னும் ஒரு மணிநேரம் இருக்கவே இப்போவே சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி மகளை அங்கே விட்டு விட்டு ஓடி வந்து விட்டேன்…:))

அவளுக்கு மறுநாள் முதல் கொடுக்க வேண்டிய லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில், ஸ்கூல் பேக் முதலியவைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த பின் தான் அவளின் அப்பாவுக்கு மகளை பள்ளியில் சேர்த்த விஷயத்தை தொலைபேசி மூலம் சொன்னேன்….:)) பள்ளி முடியும் நேரத்திற்கு சென்று, விட்டு வந்தவுடன் சிறிது நேரம் அழுது விட்டு, மற்ற குழந்தைகளை பார்த்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்திருந்த குழந்தையை அழைத்து வந்தேன்….:))மறுநாள் முதல் காலையில் கிளம்ப குஷியாகத் தான் இருப்பாள். ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு அவள் அப்பா அலுவலகம் கிளம்பும் போது நாங்களும் ரெடியாகி விடுவோம். அப்பாவுக்கு பைசொல்லி விட்டு, அங்கு கொண்டு போய் விட்டதும் ஆரம்பமாகி விடும் அழுகை…:)) அப்போதெல்லாம் என்னை பெயர் சொல்லித் தான் அழைப்பாள்…:)) அப்பா என்றுமே அப்பா தான்…:)) புவனா என்ன விட்டுட்டு போகாத புவனா…. என்று ஒரே அழுகை தான்மனதை கல்லாக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவேன்….:)) அந்தத் தெரு திரும்பும் வரை கத்தல் கேட்கும்…. (நான் அப்போ ராட்சசியா தான் இருந்திருக்கிறேன் போல!)

வீட்டில் தமிழே பேசி பழகியதால் ரோஷ்ணிக்கு அப்போ இந்தி தெரியாது. அதனால் பானியை தண்ணீர் என்று கேட்பாள் என்று ஆசிரியருக்கு பாடம் எடுத்து, அவள் கேட்டால் புரிந்து கொள்ளும்படி சொல்லித் தருவேன். அது போல் இவளிடமும் இந்தி வார்த்தைகளையும் சொல்லித் தந்தேன். அப்போ இருந்த ஆசிரியர்கள் அனைவரும் பெங்காலிகள். அதனால் அவர்கள் மொழியின் கலப்பில் ஆங்கிலமும், இந்தியும் சொல்லித் தருவார்கள். அப்படித் தான் எம் ஃபார் மோங்க்கி வந்தது…..:))

எல்லாம் ஏறக்குறைய ஒரு மாதம் வரை தான்…. அவளும் பழகிக் கொண்டு, அழாமல் செல்லவே அப்பா அலுவலகம் செல்லும் போது அவளை விட்டு விட்டு செல்ல ஆரம்பித்தார்…:) (என்ன இருந்தாலும் பெண்குட்டி அழுதா தாங்காது கேட்டோ! கதை தான்..) மாண்டசோரி முறையில் கற்க ஆரம்பித்ததால் முதலிலேயே A, B, C என ஆரம்பிக்காமல் / LINE – LINE என கற்றாள். ஞாயிறு காலையில் எழுப்பும் போது இன்றைக்கு / LINE, - LINE, பென்சில், ரப்பர் எல்லாத்துக்கும் சுட்டி (லீவு) என்பாள்…..:))

பள்ளியில் சேர்த்த அன்றிலிருந்தே ஹோம்வொர்க் ஆரம்பமாகி விட்டது. பழக வேண்டுமென்பதற்காக நான்கு பக்கங்களுக்கு கொடுப்பார்கள். விளையாட்டுத் தனத்தால் பலமுறை கைப்பிடித்து எழுதவும் அமர மாட்டாள். நானே எழுதி தந்திருக்கிறேன்…..:)) ப்ளே ஸ்கூலில் மாதம் ஒரு நிறம் என தேர்வு செய்து வைத்திருப்பார்கள். அன்று அந்த நிற உடை, உணவு என சகலமும் அந்த நிறம் இடம்பெற்றிருக்க வேண்டும். சில நேரம் நாம் தடுமாற வேண்டியிருக்கும். கோடையில் அணிந்த அந்த நிற உடை குளிர்காலத்துக்கு அணிய முடியாது.. அதனால் புதிதாக வாங்க வேண்டும்

ஒரு முறை சுதந்திர தினத்துக்கு ட்ரை கலர் லஞ்ச் கொடுத்தனுப்ப சொல்லியிருந்தார்கள். மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்து தோழி ஒருவரின் பரிந்துரையில் ப்ரெட்டில் பச்சை சட்னி அரைத்து தடவி அதன் மேல் ஒரு ப்ரெட், அதன் மேல் தக்காளி சாஸ் தடவி நடுவில் ஒரு நீல நிற ஜெம்ஸ் வைத்துக் கொடுத்தேன். எங்கள் வீட்டுக் குழந்தை ஜெம்ஸை மட்டும் சாப்பிட்டு விட்டு, செய்த எனக்கு சின்சியராக அப்படியே கொண்டு வந்திருந்தது….:))) இப்படிப் பலமுறை படுத்துவார்கள்….பாரத மாதா வேடமிட்டு அனுப்பி வைத்திருந்தோம். இரண்டு வரிகளை அவள் அப்பா சொல்லிக் கொடுத்திருந்தார். வீட்டில் அழகாக சொல்லவே பதிவு செய்தோம். பள்ளியில் அம்மா அம்மாமட்டுமே….:)))


இப்படி பல சுவையான நிகழ்ச்சிகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு எல்.கே.ஜிக்கு அட்மிஷன் வாங்க வேண்டுமே என்ற எண்ணம் டிசம்பரிலேயே ஆரம்பித்து விட்டது. என்ன செய்தோம்…. பார்க்கலாம் அடுத்த பகுதியில்….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


34 comments:

 1. ரோஷ்னியின் பள்ளி ஆரம்பநாள் நினைவுகள் சுவாரஸ்யாமாக இருக்கிறது இதெல்லாம் என்று மனதில் நிலைத்து நிற்பவை அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸாதிகா மேடம்...

   Delete
 2. சுவைக்கும் நினைவுகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 3. ஆஹா சுவைக்கும் நினைவுகளே தொடராக்கி இருக்கிறீர்கள்... சுவராஸ்யம்... தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்...

   Delete
 4. இனிமையான நினைவுகள்...

  கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 5. உண்மையிலேயே இப்படி எல்லாம் கஷ்டப்பட்டதே இல்லைனு தான் சொல்லணும். எங்க பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பறச்சே கொஞ்சம் கஷ்டமா இருந்தது என்னமோ உண்மை. ஆனால் அங்கே ராணுவக் குடியிருப்பில் "அம்போ"னு நானும் அவளும் மட்டும் தனியா இருப்போமா! குழந்தைக்கு நாலு பேரோடு பழக்கம் வரட்டுமேனு பள்ளியில் சேர்த்தோம். ஆனால் நாலு வயசு ஆகிவிட்டது. அவளுக்குப்பள்ளியில் பாடம் படிப்பது மட்டுமே கஷ்டம். மற்றபடி அக்கம்பக்கத்துப் பெண்கள், பிள்ளைகளோடு சேர்ந்து சில நாட்களிலேயே ஹிந்தியைக் கற்றுக் கொண்டு வீட்டில் அவளுடைய பொம்மைகளை எல்லாம் வைத்து வகுப்பு எடுப்பாள்.

  பிள்ளை அம்மா பிள்ளை. என்னை விட்டுப் பிரிய மாட்டான். மூணு வயசு வரை பல்லும் வரலை; பேச்சும் வரலை. அதுக்காகவே பள்ளியில் சேர்த்தோம்னாலும் அக்காவும், அப்பாவும் முறையே பள்ளி, அலுவலகம் போனப்புறமா அவருக்கு வீட்டில் பொழுதே போகாது. நானும் ஸ்கூல்னு கொச்சையா ஜாடை காட்டிச் சொல்லுவார். ஆனால் அங்கே அவரை விட்டுட்டு நான் அந்தண்டை, இந்தண்டை நகர முடியாது. கவனம் திரும்பற வரைக்கும் காத்திருந்து வாசல்லே உள்ள வேப்பமரத்திலே ஏறி உட்கார்ந்துக்கிறேன்னு சொல்லிட்டு வெளியே வருவேன். பள்ளி முடியும் முன்னரே போயிடுவேன். கொஞ்சம் தாமதமானாப் போச்சு, டீச்சரோடு சேர்ந்து அவங்களையும் தொந்திரவு செய்து வேப்பமரத்தை அலசி எடுத்துடுவான். :)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

   Delete
 6. மறக்க முடியாத இனிய நினைவுகள். படங்களும் அருமை. மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 7. Roshini romba cute. Abiyum naanum example arumai. Nigazhvugalum adhai appadiye pradhibalikkindrana.

  Bharadhamadha photo romba azhaga irukku. Blue dress photola smiling face. Moththaththil so....... cute.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

   Delete
 8. jரோஷ்னி படங்கள் அருமையாயிருக்கு. அவள் பெரியவளாகும் போது உபயோகமாக இருக்கும். நாம் எப்படி இருந்தோம் என்பதை பார்க்க படிக்க சபாஷ் அம்மா என்று சொல்லுவாள். இந்த பாஷை ப்ராப்ளம் இருக்கே இது ரொம்ப அனுபவத்தைக் கொடுக்கிரது. படிக்க அவகாயிருக்கு நினைவுகளின் அனுபவம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

   Delete
 9. மலரும் நினைவுகள்.

  குழந்தைகளை ஸ்கூலில் விட்டு விட்டு.. வீடுவந்தும் அவர்கள் நினைவாகவே இருக்கும், கொஞ்ச நாளைக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

   Delete
 10. //செய்த எனக்கு சின்சியராக அப்படியே கொண்டு வந்திருந்தது….:))) // ஹா ஹா ஹா

  ரோஷ்ணி புகைப்படங்கள் அழகு... அதிலும் பாரதமாதா புகைப்படம் அருமை...

  நான் முதல் நாள் பள்ளி செல்லும் போது அழவில்லை என்று அம்மா சொல்லுவார், காரணம் அண்ணன் எனக்கும் முன்னமே பள்ளிக்கு சென்றதால் நானும் அவனுடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பேனாம் :-)))))))))

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு சார்...

   Delete
 11. இனிமையான மலரும் நினைவுகள்...சுவராஸ்யம்,அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி மேனகா..

   Delete
 12. சுவையான மலரும் நினைவுகள்... இந்தப்பதிவை ரோஷினி பின்னாளில் படிக்கும்போது அருமையாக இருக்கும்.... எனக்கு ஒரு பிரச்சனை முடிந்துவிட்டது, இன்னொன்று இன்னும் ஒரு வருடத்தில்....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை...

   Delete
 13. அழகான நினைவுச்சுருள்களை நீளவிட்டிருக்கிறீர்கள். இதைப் படித்ததும் எனக்கும் பல நினைவுச்சுருள் நீள ஆரம்பித்துவிட்டது. நெகிழ்வும் மகிழ்வும் இணைந்த தருணங்கள் அல்லவா அவை? ரோஷ்ணியின் புகைப்படங்கள் அனைத்தும் அழகு. அவளுக்கான சீர் இப்போதே சேர ஆரம்பித்துவிட்டது. மகிழ்ச்சி ஆதி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி...

   Delete
 14. எங்க மகளுக்கு பத்து மாதம் இருக்கப்போ காதை குத்திட்டு அப்படியே கிண்டர் கார்டனில் அட்மிஷனும் ஒரே நாளில் ரெஜிஸ்டர் செய்தோம் :) கிண்டர் கார்டனில் மட்டுமில்லை பள்ளியிலும் ஜெர்மனில சீருடை இல்லை :) இங்கே யூகேவில்தான் சீருடை நம்மூர்போலவே :)
  ..நினைவுகள் தாலாட்டும் எப்போ மீட்டி பார்த்தாலும் ,,அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங் .
  ரோஷிணியின் பாரதமாதா கெட்டப் superb !!

  Angelin.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்...

   Delete
 15. ரோஷ்ணியின் பள்ளி அனுபவங்கள், படங்கள் எல்லாம் அருமை. எனக்கும் மலரும் நினைவுகள் வந்து போயிற்று மனதில்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 16. சுவாரசியம். தொடர்ந்து பகிருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்...

   Delete
 17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

  வலைச்சர தள இணைப்பு : அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)

  ReplyDelete
 18. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…