Monday, December 16, 2013

மூலி பராட்டா!!! 200வது பதிவு!!!

எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க!

நண்பர்களே! இது என்னுடைய 200வது பதிவு… 2010 ஆகஸ்டு மாதத்தில் என்னுடைய வலைப்பயணத்தை துவக்கினேன். நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது எனக்கு தோன்றும் விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன். இன்று 200 பதிவுகள் எழுதியது குறித்து எனக்கே ஆச்சரியம் தான்…:)) தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி… தங்களுடைய பின்னூட்டங்கள் தான் எனக்கு மேன்மேலும் எழுதும் ஆர்வத்தை உருவாக்குகிறது. ஆதலால் வரப் போகும் நாட்களிலும் தங்களின் ஆதரவை அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.


சரி! வாங்க! இன்று நாம் பார்க்கப் போறது ”மூலி பராட்டா” இது ஒரு வடஇந்திய உணவு… இந்தியில் ”மூலி” என்றால் முள்ளங்கி… பராட்டா என்பது ஸ்டஃப்டு சப்பாத்தி… இப்போ புரிகிறதா! முள்ளங்கியைக் கொண்டு ஸ்டஃப் செய்த சப்பாத்தியை செய்யலாம் வாங்க…

இந்த மாதிரி ஸ்டஃப்டு சப்பாத்திகளில் நிறைய வெரைட்டி செய்வாங்க… தில்லியில் ”பராட்டே வாலி கலி” என்று ஒரு இடமே உள்ளது. இங்கு ஏகப்பட்ட வெரைட்டிகளில் பராட்டாக்கள் கிடைக்குமாம். பிரபலங்கள் பலரும் இங்கு வந்து நின்று கொண்டே கூட சாப்பிடுவார்களாம்… அவ்வளவு பிரபலமான இடம்.. குளிர்காலத்தில் சாதம் சாப்பிடுவது கடினம்.. குளிர் அதிகமாகத் தெரியும். அப்போது இது போல் சுடச்சுட பராட்டாவுடன் ஊறுகாய் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்..

தேவையான பொருட்கள்:-

கோதுமை மாவு – 2 கப்
முள்ளங்கி – 2
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி தழைகள் – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – ¼ தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

கோதுமை மாவை உப்பு, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திக்கு மாவு தயார் செய்து மூடி வைக்கவும். முள்ளங்கியை கழுவி தோல் சீவி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். அதை பிழிந்து சாறை தனியே எடுத்து விடவும். (சிலர் இந்த தண்ணீரை விட்டே மாவை பிசைவார்கள்) பிழிந்து வைத்துள்ள துருவலுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொடிகளையும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும், கொத்தமல்லி தழைகளையும், உப்பையும் சேர்த்து கலந்து வைக்கவும்.


சப்பாத்தி மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து சின்ன பூரி சைஸில் திரட்டிக் கொண்டு நடுவில் ஒரு தேக்கரண்டியளவு முள்ளங்கி கலவையை வைத்து மூடி உருட்டிக் கொள்ளவும். இதை சப்பாத்தியாக தேய்த்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இருபுறமும் வாட்டி எடுக்கவும்…
சுவையான மூலி பராட்டா சாப்பிட தயார்… ராய்தா எனப்படுகிற தயிர் பச்சடியுடனும் ஊறுகாயுடனும் சாப்பிட்டால் சுவையோ சுவை தான்…


என்ன உங்க வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே…

பின்குறிப்புகள்:

1)   முள்ளங்கியுடன் கேரட்டையும் சேர்த்து செய்யலாம்…
2)   முள்ளங்கி சாறை சேர்த்து செய்தால் நெஞ்சு கரிக்கிறது. அதனால் நான் சேர்ப்பதில்லை.. உங்களுக்கு வேண்டுமானால் மாவில் தண்ணீருக்குப் பதிலாக முள்ளங்கி சாறை சேர்த்துப் பிசையலாம்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

தொடர்புடைய பதிவுகள்:-

66 comments:

 1. தங்களின் வெற்றிகரமான 200வது பதிவுக்குப் பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 2. ஏழு ஸ்வீட்களையும் நானே எடுத்துக்கொண்டு விட்டேன். மிக்க நன்றி. மகிழ்ச்சி.


  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இனிப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டது குறித்து மகிழ்ச்சி சார்..

   Delete
 3. அங்கு 600 இங்கு 200. ஆச்சர்யம் தான். அதுவும் ஒரே நாளில், பேசி வைத்துக்கொண்டு.;)))))

  பெண்களுக்கு மூன்றில் ஒரு பாகம் தரப்பட வேண்டும், என சட்டம் வரவேண்டும் எனச் சொன்னார்களே. அது இங்கு அப்படியே நடந்துள்ளது பாருங்கோ. 200/600 = மூன்றில் ஒரு பங்கு தானே !!!!!

  >>>>>

  ReplyDelete
 4. மூலி பராட்டா எனக்கு வேண்டாம். நீங்களே சாப்பிடுங்கோ. பகிர்வுக்கு நன்றிகள். மீண்டும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் சார்? அதுவும் பிடிக்காதா?

   Delete
 5. 200வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  உங்களவரின் அறுனூறாவது பகிர்வுக்கும்....
  பயனுள்ள ரெஸிபி பகிர்வுக்கும்

  ReplyDelete
  Replies
  1. தாங்களும் என்னவருக்காக வாழ்த்துரை தெரிவித்து பதிவிட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி...

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...

   Delete
 6. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி...

   Delete
 7. அய்யாவுக்கு 600வது பதிவு அம்மாவுக்கு 200 வது பதிவு.இன்னும் அதிகம் எழுதி சிறப்புற வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கவியாழி சார்..

   Delete
 8. இருநூறாவது பதிவுக்கு
  இனிய வாழ்த்துகள்..!

  முள்ளங்கியை துருவி சற்றே வதக்கி அப்படியே
  கோதுமை மாவில் பிசைந்து சப்பாத்தியாக சுடுவேன்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 9. அங்கு 600 வது பதிவு... இங்கு 200 வது பதிவு... மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

   Delete
 10. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

  ReplyDelete
 11. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.

  பரோட்டாவுல ஸ்டஃபிங் வெளிய வ‌ராம அழகா வந்திருக்குங்க.

  நானும் எப்போதாவது செய்வதுண்டு. ஆனால் எல்லாவற்றையும் வதக்கி மாவுடன் பிசைந்து அல்லது ஸ்டஃப்ட் சப்பாத்தியாகவும் செய்துவிடுவேன். சிலருக்கு முள்ளங்கி வாசனைகூட பிடிக்காது. நெஞ்சு கரிக்கும்னா முள்ளங்கியை வதக்கி சேர்த்து பாருங்க. முள்ளங்கி ஜூஸை எதுக்கு கீழ விடணும் !

  ReplyDelete
  Replies
  1. சரி தான்! இனிமே அது போலும் செய்து பார்க்கிறேன்..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சித்ரா..

   Delete
 12. வித்தியாசமான பரோட்டா.நாங்கள் ஜம்பாலா ரொட்டி என்போம்.வாழ்த்துக்கள் 300 விரைவில் 3000 ஆகட்டுமாக!

  ReplyDelete
  Replies
  1. 200 வது பதிவுங்க....:)) தங்களின் வாக்குப்படி விரைவில் 300 வது பதிவு வெளிவரட்டும்...:)

   வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸாதிகா மேடம்...

   Delete
 13. மூலி பராட்டா அருமையாக இருக்கு..200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மேனகா..

   Delete
 14. 200 ஆவது பதிப்பிற்கு வாழ்த்துகள். என்ன பெண்ணே நான் முள்ளங்கி வாங்கி செய்து போட்டோ எடுத்தேன். அதே விஷயம் நீ முந்தி கொண்டுவிட்டாய். ஒரேமாதிரி எண்ணம் வியப்பாக இருக்கு.
  ஸந்தோஷமாகவும் இருக்கு. அழகான பரோட்டா. ருசியானதும் கூட. மைதாவில் கூட செய்யலாம். விசேஷமான பகிர்வு. நன்றி பெண்ணே. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தாங்களும் பதிவிடுங்கள் அம்மா... தங்களின் கைப்பக்குவத்தை நாங்களும் கற்றுக் கொள்ள வேண்டாமா?...
   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

   Delete
 15. Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மிடில்கிளாஸ்மாதவி...

   Delete
 16. மூலி பாராட்டா செய்முறை விளக்கம் அருமை.200 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சாரதா மேடம்...

   Delete
 17. மூலி பரோட்டா
  >>
  பேரே பயமுறுத்துதே!!

  ReplyDelete
  Replies
  1. :))) காளி, நீலி, சூலி மாதிரி நினைச்சிட்டீங்களா? ஹா..ஹா..ஹா..

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி..

   Delete
 18. வாழ்த்துக்கள் ஆதி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்..

   Delete
 19. Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா..

   Delete
 20. உருளைக் கிழங்கையும் மசித்து இதனுடன் சேர்த்து, கேரட் குடைமிளகாயும் துருவிச் சேர்த்து என்று நாங்கள் ஆலு பரத்தா செய்வோம். முள்ளங்கி இதுவரை சேர்த்ததில்லை!

  ReplyDelete
  Replies
  1. உருளைக்கிழங்கு பராட்டா, கேரட் பராட்டா எனத் தனித்தனியாக செய்து சாப்பிட்டு பாருங்கள்...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

   Delete
 21. படம் பசியைத் தூண்டுகிறது!!!!

  200 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

   Delete
 22. 200 ஆவது பதிப்புடன் மேலும் பல படைப்புகளைப் பதித்து உயர்ந்திட வாழ்த்துகிறேன்!

  மூலி பரோட்டா செய்முறை அருமை!
  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஆதி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி இளமதி..

   Delete
 23. 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஆதி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜலஷ்மி மேடம்..

   Delete
 24. Replies
  1. 200 avadhu padhivukku vazththukkal. Melum niraya padhivugal thodarndhu vara vazhththugirom.

   Delete
  2. குட்டி பாப்பா என்ன சொல்கிறது...:)

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மஹி...

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

   Delete
 25. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆதி!
  முள்ளங்கியை வைத்து சப்பாத்தியை இடும்போது சரியாக இட வருவதில்லையே. உள்ளே இருப்பது வெளியே வந்துவிடுகிறதே! இங்கு ஒரு கடையில் விதம்விதமான ஸ்டப்டு பராத்தாக்கள் கிடைக்கின்றன. அவர்கள் எப்படி சப்பாத்தி பிய்ந்துபோகாமல் இடுகிறார்கள் என்று எனக்கு வியப்பு. மாவு பிசைவதில் சூட்சுமம் இருக்கிறதோ?

  ReplyDelete
  Replies
  1. மாவு ரொம்ப தளர்ந்து இருக்கக்கூடாது.. இறுக்கமாகவும் இருக்கக்கூடாது...:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 26. வித்தியாசமாக இருக்கிறது. இந்த வாரம் செய்து பார்த்திட வேண்டியது தான். 200 வது பதிவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பொன்மலர்..

   Delete
 27. 200வது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள் ஆதி! இனிப்புடனும் முள்லங்கி பராத்தாவுடனும் அதைக்கொண்டாடிய விதம் சூப்பர்ப்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மனோம்மா...

   Delete
 28. முள்ளங்கிச் சாறு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது போல! இப்போத் தான் தெரியும். பொதுவாகச் சாறை நான் வீணாக்குவதில்லை. மற்றபடி பரோட்டா செய்முறை இப்படித் தான். வெந்தயக்கீரையிலும் சப்பாத்தி பண்ணலாமே! இங்கே வெந்தயக் கீரை அவ்வளவாக் கிடைக்கறதில்லை. ஆலு பரோட்டாவும் இருக்கு! :)))) பரோட்டாவில் வகை வகையாய்த் தான் இருக்கு! :))))

  ReplyDelete
  Replies
  1. மேத்தி பராட்டாவும் நான் தில்லியில் இருக்கும் வரை செய்திருக்கிறேன்..இங்கே கீழ வாசல் மார்க்கெட்டில் கிடைக்கிறது மாமி...ஆலு பராட்டா நானே கீழே சுட்டி கொடுத்திருக்கிறேன்..

   Delete
 29. 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

   Delete
 30. வெரிகுட்! வெரிகுட்! 600-க்கு 200 சரியாப் போச்சு! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அது எப்படி சரியாப் போகும்...:))

   தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்...

   Delete
 31. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தியானா...

  ReplyDelete
 32. தங்களின் 200வது பதிவுக்குப் பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.

  Vijay / Delhi

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி விஜயராகவன் சார்..

   Delete
 33. Replies
  1. மிக்க நன்றி கணேஷ் குமார்...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…