Thursday, December 26, 2013

கதம்பம் – 19

திருவரங்கம் கோயில் இற்றைகள்:-கடந்த ஒன்றரை மாதங்களாகவே, அதாவது கார்த்திகை மாத ஆரம்பத்திலிருந்தே திருவரங்கம் கோவில் மக்கள் வெள்ளத்தால் மூழ்கி தவிக்கிறது. சபரிமலை பக்தர்கள் ஒருபுறம், மேல் மருவத்தூர் பக்தர்கள் ஒருபுறம் என வீதிகளில் எப்போதும் மக்கள் நடமாட்டம். இப்போது மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் கண்ணாடி அறை சேவையை தரிசிக்க வேறு வரிசை. முடிந்த அளவு சென்று தரிசித்து வருகிறேன். புகைப்படமெடுக்க அனுமதியில்லையாம் :( அதனால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தினமும் அன்றைய திருப்பாவை பாசுரத்தினை மையமாக வைத்து வெகு அழகாக அலங்கரிக்கிறார்கள்.

அடுத்து வரவிருக்கும் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மக்கள் வெள்ளத்தை சமாளிக்க வரிசையில் செல்ல தட்டிகள் அமைத்து, வீதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி என வேலைகளுக்கா பஞ்சம்! தொடர்ந்து ஏதோ ஒரு விழா, கொண்டாட்டம் திருவரங்கத்தில்!

ஜன்னல் காட்சிகள்:-

நேற்று முன் தினம், சமைத்துக் கொண்டே ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு கீழே உள்ள பாட்டி நீண்ட நாட்களாகவே படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரது நிலைமை பற்றி அவரது மகள் வேறு ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு வந்த ஒருவர் தான் ஒரு அமைப்பாக வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, டயப்பர் மாற்றுவது போன்றவற்றை சேவை மனப்பான்மையில் செய்து வருவதாகச் சொல்லி தன் முகவரியையும், அலைபேசி எண்ணையும் தந்து விட்டுச் சென்றார். இப்படிப்பட்ட உதவும் மனப்பான்மையுள்ள மனிதர்கள் இருப்பதால் தான் அங்கங்கே மழை பெய்கிறது.

தேன் மிட்டாய்:-பள்ளிப்பருவத்துக்கு பிறகு சமீபத்தில் ஒருநாள் தெற்கு வாசலில் உள்ள பொரிகடலைக் கடையில் அவல், பொரிகடலை முதலியவற்றை வாங்கிக் கொண்டிருந்த போது, எதேச்சையாக இந்த தேன்மிட்டாயை பார்த்தேன். தயக்கத்துடன் தேன் மிட்டாய்ன்னு சொல்வாங்களே இது தானே? எனக் கேட்க கடைக்காரரும் ஆமோதித்தார். உடனே இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டேன். 5 ரூபாய் பாக்கெட்டுக்குள் 10 தேன் மிட்டாய்கள். :)) ரோஷ்ணியும் சாப்பிட்டு விட்டு அதற்கு ரசிகையாகி விட்டாள். :)) அடுத்த முறை சென்ற போது தீர்ந்து விட்டது என்று சொன்னார் கடைக்காரர் - உடனே தீர்ந்து விடுமாம். என்னைப் போல் தேன்மிட்டாய் ரசிக்கும் ஜீவன்களும் இன்னும் இருக்காங்க போல! :))

பார்த்ததில் பிடித்தது:-

திருதிரு துறுதுறுஎனும் திரைப்படத்தினை சமீபத்தில் தான் பார்த்தேன். விளம்பரத் துறையில் வேலை பார்க்கும் கதாநாயகனும், கதாநாயகியும் மாடலாக ஒரு குழந்தையைத் தேடி அலைந்து கடைசியில் ஒரு குழந்தையும் கிடைக்கிறது. அந்த குழந்தையை வைத்துக் கொண்டு அவர்கள் செய்கின்ற அமர்க்களம் இருக்கே…..:)) ஆனால் அந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒப்பந்த கையெழுத்து வாங்குவதில் தான் பிரச்சனையே. என்ன செய்தார்கள்? முடிந்தால் நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன். இதில் மெளலி ஞாபக மறதியால் பெயரை மாற்றி மாற்றிச் சொல்லி சிரிப்பில் மூழ்கடிக்கிறார்.

ரோஷ்ணி கார்னர்:-

தினமும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு வருவாள். ஒருநாள் என்னோட பெயரை மாத்திடும்மா என்றாள் ஏன்? அழகான பெயரைத் தானே உன் அப்பா தேர்வு செய்து வைத்தார். ரோஷ்ணி என்றால் வெளிச்சம் அல்லது பிரகாசம் என்று அர்த்தம். நீ பிரகாசமாக ஒளிர வேண்டும் என்று வைத்தோம் என்றேன். என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் மூஷிணி, பூசணி என்று என்னெல்லாமோ சொல்கிறார்கள். அதனால் நாளைக்கே என்னோட பெயரை மாத்திடு என்கிறாள். ஒருவழியாக சமாதானம் செய்யவே போதும் போதுமென்றாகி விட்டது:))  இந்த மாதிரி நிறையவே வரும்மார்கழி மாதக் கோலங்களை பார்த்து ஆசை வந்து, தற்போது கோலம் போட பழகிக் கொண்டிருக்கிறாள் - காகிதத்திலும், தரையிலுமாக…. அப்படி அவள் வரைந்த கோலம் மேலே!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.  

44 comments:

 1. செல்வி ரோஷ்ணியின் கோலம் அழகாக வந்துள்ளது. மேலும் நன்னா கோலம் போட பழக்குங்கோ.


  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 2. தேன் மிட்டாயாக இனிக்கும் கதம்பம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்..

   Delete
 3. //என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் மூஷிணி, பூசணி என்று என்னெல்லாமோ சொல்கிறார்கள்.//

  குழந்தை ரோஷ்ணியைப்போய் இவ்வாறெல்லாம் பிற குழந்தைகள் சொன்னால், அவளுக்கு ரோஷமும் கோபமும் வரத்தானே செய்யும்!

  ReplyDelete
 4. இன்னும் எங்கள் வீட்டில் தேன்மிட்டாயும் கமர்கட்டும்
  அடிக்கடி தலை காட்டும். காட்பரீஸ் எல்லாம் இதன் முன்னே
  நிற்குமோ ? கோலங்கள் அழகு. ரோஷிணியை மேலும் ஊக்கப்படுத்தவும்.
  முதலில் நீங்கள் சாக்பீஸில் கோலத்தை வரைந்து அதன் மேல் அவளை
  வரையச் சொல்லிப் பழக்கலாம் கையெழுத்து பழகினார் போல்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக தேன்மிட்டாய்க்கும், கமர்கட்டுக்கும் ஈடு இணை ஏது.....

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி..

   Delete
 5. தேன் மிட்டாய் ஸ்ரீரங்கத்திலாவது கிடைக்குது. சென்னையில் கிடைக்கலை .குடுத்து வச்சவங்க!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! திருச்சி வரும் போது சொல்லுங்க... வாங்கி வெச்சுடலாம்...:))

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா மேடம்..

   Delete
 6. கோலம் அழகு...
  தேன் மிட்டாய் முன்பு போல் இல்லாமல் ருசி குறைகிறது..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

   Delete
 7. காலையிலேயே தேன்மிட்டாய் படத்தைப்போட்டு இப்படி நாவில் எச்சில் ஊற வச்சிட்டீங்களே !

  கலர்கோலங்களை எல்லாம் கண்குளிர பார்த்தாச்சு. அடுத்த வருடமே உங்களுக்குப் போட்டியாக வாசலில் கோலம் போட்டு அசத்தப்போகிறாள். சின்ன வயசுல எங்க பொண்ணும் எங்களிடம் 'ஏம்மா தாத்தா இவ்ளோஓஓ பெரிய பேரா வச்சிருக்காரு?', என்பாள்.

  ஒருத்தர் ரெண்டு பேராவது நல்லவங்க இருப்பதால்தானே எல்லோரும் நல்லா இருக்கோம்.

  ReplyDelete
  Replies
  1. எல்லா செய்திகளையும் ரசித்ததற்கு நன்றிங்க...

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா..

   Delete
 8. ம்ம்ம் முக்கியமான விஷயத்த சொல்ல மறந்திட்டேனே. முடிந்தால் கடைக்காரரிடம் தேன்மிட்டாயின் ரெஸிப்பியக் கேட்டு சொல்லுங்க, செய்து, ஆசைதீர நாங்களும் சாப்பிட்டுப் பார்க்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! கேட்டுப் பார்க்கிறேன்....:) மைதா மாவு என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

   Delete
 9. Kolam super.Melum valara vazthukkal. Un anubavangalum arumai.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா...

   Delete
 10. Roshini in aramba kolam nandraga irukku. Avalukku pazhakkivittal innum nandraga varum. Drawing il interest iruppadhal kandippaga kolam azhagaga poduval.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...

   Delete
 11. குழந்தைகள் உலகம் வித்தியாசமானது.... விரைவில் அழகிய கோலம் போடப் போகிறார்....
  தேன் மிட்டாய் நாவில் எச்சில் வர வைத்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்..

   Delete
 12. சூப்பர் பகிர்வு,மகளின் கோலமும் மிக அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்..

   Delete
 13. பாப்‌பா கோலம் பிரமாதம்!! இந்த வயசிலேயே இவ்வளவு கச்சிதமா போடறாள்!!

  தேன்மிட்டாய் பிடிக்குமா உங்களுக்கும்? இப்‌போதயது கலர் கண்ணைப் பறிக்கிறது. சாப்‌பிட்டு நாளாச்சு. குடிசைத் தொழில் தயாரிப்‌பு நிறைந்திருக்கும் கடைகளில் பார்க்கும் போது வாங்க கூச்சப் பட்டு வந்து விடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. பிடிக்குமாவா? இங்கே பாருங்க எத்தனை ரசிகர்கள் இருக்காங்க....:))

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்..

   Delete
 14. தேன் மிட்டாயின் சுவாரஸ்யம் பதிவு முழுவதும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

   Delete
 15. உங்கள் கதம்பம் வெகு ஜோர். கோலங்கள் மிக அழகு. கன்னாடியறையில்ஆண்டாளை தினம் தினம் கண் குளிரப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.சித்ராசுந்தர் கேட்பது போல் தென் மிட்டாய் ரெசிபியைப் போடுங்களேன். தெரிந்து கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..

   Delete
 16. தேன் மிட்டாய்! பள்ளிச் சிறுவர்களின் குலோப் ஜாமூன்!

  கோலம் போடும் கலை அடுத்த தலைமுறைக்கும் சிறப்பாக தொடரட்டும். வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்...

   Delete
 17. பெயரை மாற்றச் சொல்லி என் மகளும் ரோஷ்ணி வயதில் அடிக்கடி கேட்பாள். சில சமயங்களில் அவளாகவே ஏதாவது பெயரை வைத்துக்கொண்டு இனி தன்னை அப்படிதான் அழைக்கவேண்டுமென்று கட்டளையிடுவாள். ரோஷ்ணியினுடையதைப் படிக்கவும் அந்த நினைவு வருகிறது. ரோஷ்ணிக்கு கைவேலைப்பாடுகளில் ஆர்வம் என்று தெரியும். அழகாகக் கோலமும் இடுகிறாள். அவளுக்கு என் வாழ்த்துக்கள். தேன் மிட்டாய்... ஆஹா... இன்னும் கிடைக்கிறது என்பதும் அதற்கு ரசிகர்கள் இன்னுமிருக்கிறார்கள் என்பதும் ஆச்சர்யம்தான். சேவை மனப்பான்மை கொண்ட மனிதர்கள் அபூர்வமானவர்கள். அத்தகையவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. எல்லா செய்திகளையும் ரசித்ததற்கு நன்றி...

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி...

   Delete
 18. தேன் மிட்டாய் சின்ன வயசு ஆச்சரியங்களில் ஒன்று.எப்படி தேனை உள்ளே வைத்தார்கள் என்று..கோலம் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா...

   Delete
 19. கோலமிடுவது ஒரு கலை.... அது பெண்களுக்கான ஒரு உடற்பயிற்சி... ரோஷ்னிக்கு தொடர்ந்து கற்றுக்கொடுங்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை...

   Delete
 20. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  பிறக்கப் போகும் புத்தாண்டால் எல்லா நலனும் வளமும் பெருகிட
  என் இனிய வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...

   Delete
 21. கதம்பம் மணக்கிரது. ரோஷ்ணி சிலபசங்களுக்கு வாயில் வராது. என்னை எடுத்துக்கொள். நான் கூட பெயரை மாத்தணும் என்ன பேரிது அசட்டு காமாட்சி,அய்யாச்சி மீனாட்சி என்று. அழகான கருணைக் கண்களுடையவள் என்று அர்த்தம். எங்களுக்கு பேரைச் சொல்லி கூப்பிட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார் என் அப்பா.
  கோலங்களெல்லாம் அழகாக வருகிறது ரோஷ்னிக்கு.
  தேன் மிட்டாய் இனிக்கிறது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..

   Delete
 22. தேன் மிட்டாயை பார்த்தவுடன், என் நாக்கில் எச்சில் ஊறுகிறது. அருமையான கோலம், தொடர்ந்து ரோஷினிக்கு கற்றுக்கொடுங்கள்.

  இப்போது தான் நான் தங்களை பின் தொடர ஆரம்பித்துள்ளேன்,

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் சார்..

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…