Thursday, November 28, 2013

பிடி கொழுக்கட்டை!


நண்பர்களே! இன்று நீங்க பார்க்கப் போறது பிடி கொழுக்கட்டை அல்லது உப்புமா கொழுக்கட்டை என்று சொல்லப்படும் ஒரு சிற்றுண்டியை. இதை என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். செய்ய மிகவும் எளிது.. சுவை அபாரம். எண்ணெய் அதிகம் இல்லாத சிற்றுண்டி. தில்லியில் கடுங்குளிரில் கூட இதை செய்து சுடச்சுட ருசித்திருக்கிறோம். கோவையில் அரிசிமாவில் சின்ன வெங்காயம் போன்றவற்றை தாளித்து இதைப் போல செய்வாங்க. தேங்காய் எண்ணெய் மணத்துடன் அது ஒருவித சுவையாக இருக்கும். 

வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – கால் தம்ளர்
கடலைப்பருப்பு – கால் தம்ளர்
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்துருவல் – சிறிதளவு (விருப்பப்பட்டால்)

தாளிக்க:-

கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
வரமிளகாய் – 2 (இரண்டாக கிள்ளிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:-

மிக்சியில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் சமையல் எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து தண்ணிர் விடவும். ஒரு தம்ளர் ரவைக்கு இரண்டரை தம்ளர் தண்ணீர் விடலாம். உப்பு சேர்க்கவும். தேங்காய்துருவல் விருப்பப்பட்டால் இப்போது சேர்க்கலாம். தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்த ரவையை கொட்டிக் கிளறவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை நிறுத்தவும். ரவா உப்புமா போல் சுருள சுருள கிளற வேண்டிய அவசியமில்லை…


சூடு கொஞ்சம் தணிந்தவுடன் கிளறி வைத்த உப்புமாவை கொழுக்கட்டையாக பிடித்து நெய் அல்லது எண்ணெய் தடவிய தட்டுகளில் இட்லி பானையில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தவும்…

சூடான, சுவையான பிடி கொழுக்கட்டை பரிமாற தயார்!


தேங்காய் சட்னி, சாம்பார், மிளகாய்பொடி, சர்க்கரை, ஊறுகாய் என எதோடும் ஒத்துப் போகும் இந்த பிடி கொழுக்கட்டை…

நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துங்களேன்…

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

டிஸ்கி:-

முடிந்தவரை படிப்படியான செய்முறைப் படங்கள் எடுத்து முதன்முறையாக பகிர்ந்துள்ளேன்...:)

37 comments:

 1. ருசியான கொழுக்கட்டைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

   Delete
 2. வாவ்...படத்தில் பார்க்கவே அத்தனை மிருதுவாக உள்ளது.நாங்கள் செய்யும் பிடி கொழுகட்டை செய்முறிக்கு மிகவுமே வித்தியாசப்படுகிறது.அவசியம் டிரை பண்ணிப்பார்க்கவேண்டும் ஆதி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா....

   உங்க செய்முறையும் பதிவிடுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

   Delete
 3. என் பெண் திருமண நாளில்
  அவசியம் சிற்றுண்டிக்கு பிடி கொழுக்கட்டை
  வேண்டும் என சம்பந்திகள் சொன்னதால்
  மெனுவில் அதையும் சேர்த்திருந்தேன்
  அனைவரும் சாப்பிட்டுப் பாராட்டினார்கள்
  தாங்கள் செய்முறையை அருமையாக
  விளக்கி இருப்பது மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பெண்ணின் திருமணத்தில் இடம் பெற்றதா! சந்தோஷம்...

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் , தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 4. ரொம்பப் பிடிக்கும். ஆனால் இங்கே புகுந்த வீட்டில் பழக்கமே இல்லையா? எப்போவானும் ஆசைக்குப் பண்ணுவேன். அதுவும் நான் மட்டுமே சாப்பிடறாப்போல் இருக்கும்.:( ஆதலால் பண்ணறதே இல்லை.

  சின்ன மாறுதல் என்னனா அரிசியை மட்டும் ரவையாக உடைத்துக் கொண்டு து.பருப்பு, க,பருப்பு, மி.வத்தல், தேங்காயை அரைத்துக் கொண்டு தாளிதம் செய்ததுக்கு அப்புறமா அதையும் சேர்த்துத் தேவையான நீர் விட்டுக் கொதிக்க வைப்போம். இது கொஞ்சம் மாறுதலா இருக்கும். கொழுக்கட்டை பிடிக்கும் முன்னே குழந்தைகளுக்குக்கொடுப்பதற்காக, ப.மி. எடுத்துட்டு உள்ளே சின்ன அச்சு வெல்லத் துண்டை அல்லது பேரீச்சம்பழத் துண்டை வைச்சுப் பிடிக்கறதும் உண்டு. +இலே பார்த்தேனா, உடனே ஓடி வந்துட்டேன். :)))))

  ReplyDelete
  Replies
  1. உங்க செய்முறைப்படியும் செய்து பார்க்கணும்...

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கீதா மாமி..

   Delete
 5. படத்துடன் செய்முறை விளக்கம் சூப்பர்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 6. செய்து பார்த்துட வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்...

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி...

   Delete
 7. Padaththudan seimurai vilakkam arumai. Parattukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...

   Delete
 8. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். நேற்று எங்கள் அஹத்தில் இதே தான் பலகாரமாகச் செய்திருந்தார்கள். சாம்பாரோடு நாலு, ரஸத்தோடு நாலு, நல்ல தயிரோடு நாலு என சாப்பிட்டு மகிழ்ந்தேன். கெட்டித்தேங்காய் சட்னியோடு சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் அது நேற்று செய்யப்படவில்லை. ;(

  ReplyDelete
  Replies
  1. அன்று தான் எங்கள் வீட்டிலும் இது இரவு சிற்றுண்டி...:)

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

   Delete
 9. என்னை மாதிரி கற்றுக்குட்டிக்கு கூட புரியும் அளவுக்கு படங்களுடன் செய்முறை விளக்கம் கொடுத்தது மிக அழகு.. போட்டோ என்பதையே மறந்து கை பரபரத்தது எடுத்து சாப்பிட !

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்...

   Delete
 10. ஆஹா ! அப்படியே அசந்துட்டேன்,எனக்கு பொதுவாக கொழுக்கட்டை என்றால் மிகவும் பிடிக்கும்.அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்...

   Delete
 11. நல்லதொரு சமையல் குறிப்பு .வாழ்த்துக்கள் தோழி .தொடர்கின்றேன்
  மென்மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்ள .
  மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...

   Delete
 12. முதல் படம் பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. இன்று மாலைச்சிற்றுண்டிக்கு இதுதான் செய்யப்போகிறேன். நன்றி ஆதி.

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் செய்து பார்த்து கருத்துக்களை பகிருங்கள்...

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 13. அருமையான குறிப்பு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ராமலஷ்மி மேடம்..

   Delete
 14. அருமையான குறிப்பு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி காஞ்சனா மேடம்...

   Delete
 15. உப்புமாக் கொழுக்கட்டை எனக்குப் பிடிக்கும்;ஆனால் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சும்மா!அடையார்ஆனந்தபவனில் போய்ப் பார்த்தால் ஒரு கொழுக்கட்டை 12 ரூபாயோ என்னவோ சொல்கிறார்கள்.கட்டுப்படியாகுமா?!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா...

   தாங்கள் திருச்சி வந்தால் கட்டாயம் செய்து தருகிறேன்....

   Delete
 16. Replies
  1. தமிழ்மண வாக்குகளுக்கு மிக்க நன்றி ஐயா.

   Delete
 17. பிடி கொழுக்கட்டை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 18. ஆஹா...
  ருசியான கொழுக்கட்டை...
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி குமார்...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…