Monday, November 25, 2013

பூத்தொட்டி வால் ஹேங்கிங் செய்யலாமா?வீணாகப் போன ஒரு பொருளை வைத்து நாங்கள் செய்த வால் ஹேங்கிங் இது....

குக்கர் கேஸ்கெட் வீணாக போய்விட்டது...சரி அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன்.

அதை விட பொழுது போகாமல் என் பின்னாலேயே சுற்றிக் கொண்டு, என்னைத் தொந்தரவு செய்து கொண்டு இருந்த ரோஷ்ணிக்கு வேலை கொடுக்கவென முடிவெடுத்தேன்.....:))

1) கிஃப்ட் பேக்கை சுற்றி வந்திருந்த பேப்பரை கேஸ்கெட் முழுதும் இறுக்கமாக சுற்றச் சொன்னேன்....

2) சார்ட் பேப்பரை வட்டமாக வெட்டி பின்பக்கமாக கேஸ்கெட்டை சுற்றி ஒட்டச் சொன்னேன்...

3) அதில் ஏதாவது ஒரு படத்தை வெட்டி அதில் ஒட்டச் சொன்னேன்...

4) ஐஸ்கிரீம் குச்சிகளை பின்பக்கமாக வைத்து ஒட்டினேன்.

5) தெர்மக்கோல் உருண்டைகளை சுற்றிலும் ஒட்டினோம்.

6) எடுப்பாக தெரிவதற்காக சுற்றி ஸ்டிக்கர் பொட்டுகளை ஒட்டினேன்.

இப்போது  எங்கள் வீட்டின் அழகை மேலும் மெருகூட்ட
அழகான வால் ஹேங்கிங் தயார்...

யார் வந்தாலும் ரோஷ்ணி நான் தான் செய்தேன் என பெருமையாக சொல்லிக் கொள்கிறாள். ...:)

நீங்களும் செய்து பாருங்கள். குழந்தைகளையும் செய்ய வைத்து மகிழ்ந்திடுங்கள்....

தில்லியில் சில வருடங்களுக்கு முன்பு நான் செய்த வால் ஹேங்கிங் இதோ...இது கேஸ்கெட் முழுவதும் உல்லன் நூலைக் கொண்டு சுற்றி, காலண்டரில் இருந்த பிள்ளையாரை வெட்டி ஒட்டி ஸ்டிக்கர் பொட்டுகளால் அலங்காரம் செய்தது....

என்னிடம் இன்னும் ஒரு கேஸ்கெட் கூட உள்ளது. அதை சாட்டின் ரிப்பன் கொண்டு முழுவதும் சுற்றி வைத்துள்ளேன்.... இதை வேறுவிதமாக பொம்மைகளை தொங்கவிட்டு செய்யலாம் என்று யோசனை......:))

தங்களுக்கும் ஏதாவது டிப்ஸ் தெரிந்தால், அதை எனக்கு தெரிவித்தால் மகிழ்வேன்...:)


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

32 comments:

 1. அழகான பயனுள்ள வேலைப்பாடு ...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 2. பாதி அளவில் மட்டும் ஏதாவது டிசைன் செய்து பின் மீதியை
  டவல் ஹாங்கராக வாஷ்பேசினுக்கு அருகில் மாட்டலாம்.
  உங்கள் கைவேலை அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி மேடம்.

   Delete
 3. அருமை... கல்லூரி விடுமுறை சமயத்தில் கேஸ்கட்டை உல்லன் நூலைச் சுற்றிவிட்டு இடையில் அப்போதெல்லாம் உல்லன் நூலால் செய்யக்கூடிய ப்ளாஸ்டிக் பூக்கள் கிடைக்கும் வாங்கி நாம் உல்லன் போட வேண்டும் , அதை வாங்கி செய்து மாட்டினேன்... இன்னமும் அம்மா வீட்டில் இருக்கிறது....இப்பல்லாம் பொறுமை இல்லீங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 4. வால் ஹேங்கிங் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்.... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 5. ரொம்ப அழகாக வந்திருக்கு ஆதி.சிம்பிளான வால் ஹேங்கிங்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஸாதிகா.

   Delete
 6. நல்லாருக்குங்க... பூக்கள் படம் நீங்க/ரோஷிணி வரைஞ்சதோன்னு நினைச்சேன்...

  //என்னிடம் இன்னும் ஒரு கேஸ்கெட் கூட உள்ளது. //

  ஸ்டாம்ப் கலெக்‌ஷன் மாதிரி, ‘கேஸ்கட் கலெக்க்ஷன்’ பண்றீரீங்களா என்ன? :-))))

  ReplyDelete
  Replies
  1. படம் புத்தகத்திலிருந்து எடுத்தது தான். கொஞ்சம் கலரிங் ரோஷ்ணி பண்ணியிருக்கா...:)

   ரொம்ப நாளா ஏதாவது செய்யலாம் என்று எடுத்து வைத்தது. அவ்வளவு தான்.. கலெக்‌ஷனெல்லாம் இல்ல....:))

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

   Delete
 7. Indha chinna vayasil Roshini in thiramai abaram . Vazhththukkal .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..

   Delete
 8. அழகான பயனுள்ள வேலைப்பாடுகள். நானும் முன்பெல்லாம் இதுபோலப் பொறுமையாக செய்தது உண்டு. பிள்ளையார் ஜோராக இருக்கிறார். பாராட்டுக்கள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 9. வால் ஹேங்கிங் நல்ல அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 10. நீங்களும் ரோஷிணியும் சும்மாவே இருக்க மாட்டீர்கள் போலிருக்கிறது. வால் ஹேங்கிங் நன்றாக உள்ளன,

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 11. Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 12. மிக அருமைங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்.

   Delete
 13. கொள்ளை அழகு! குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வழியாகவும் அமைந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா...

   Delete
 14. அழகாய் இருக்கிறது நீங்கள் செய்ததும், ரோஷ்ணி செய்ததும்.
  பயனுள்ள பொழுது போக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 15. நல்லா இருக்கு. ஒரு காலத்தில் இதில் பைத்தியமாக அலைந்திருக்கேன். :))) இப்போ ஆர்வம் இல்லாமல் போச்சு! :)))) கண்ணாடியை வட்டமாக, சதுரமாக வெட்டி வாங்கி இஞ்செக்‌ஷன் ட்யூப்களை ஒட்ட வைத்து ரதம் செய்தது உண்டு. எங்கே போனப்போ உடைஞ்சதுனு நினைவில் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. இஞ்செக்‌ஷன் ட்யூப்களை வைத்து ரதமா!!! வாவ்!!

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கீதா மாமி...

   Delete
 16. ரோஷிணிக்கு பாராட்டு சொல்லிடுங்க..:)

  ReplyDelete
 17. தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி...

  ரோஷ்ணியிடம் தெரிவித்து விட்டேன்...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…