Thursday, October 24, 2013

சுவையான பீட்ரூட் பூரியும், சன்னாவும்!வலையில் மேயும் போது இந்த பீட்ரூட் பூரியைப் பார்த்தேன். சரி, குழந்தைக்கு லஞ்ச் பாக்ஸுக்கு தரலாமே என்று முயற்சித்தேன். நன்றாக வந்தது. இதை நீங்களும் ருசிக்கலாமே என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு….:)

இந்த குறிப்பை தனது பக்கத்தில் பகிர்ந்த  விஜயலட்சுமி தர்மராஜ் அவர்களுக்கு என் நன்றிகள். இவர் ”விருந்து உண்ண வாங்க” என்ற வலைப்பூவில் ஆங்கிலத்தில்  எழுதி வருகிறார். சமீபத்தில் தான் இவரின் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. குறிப்புகளை விட அதன் படங்கள் கண்களைக் கவர்கின்றன. நாவில் நீர் சுரக்க வைக்கின்றன....:) தீபாவளி பட்சணங்களுக்கு, புதுமையாக ஏதேனும் கிடைக்க வேண்டி, இவரின் பக்கத்தில் தான் தேடி வருகிறேன்.....:))


பள்ளிக்கு தயார் செய்யும் அவசர நிலையிலும் பதிவிடுவதற்காக படங்கள் எடுத்தேன்.....:)) என்னே! எந்தன் கடமையுணர்ச்சி!!!!

பீட்ரூட் பூரிக்கு தேவையானப் பொருட்கள்:-

கோதுமை மாவு – 2 கப்
பீட்ரூட் – 1
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :-

பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவிய பீட்ரூட்டை மிக்சியில் போட்டு அரை தம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை நன்றாக வடிகட்டி பிழிந்து எடுக்கவும். இந்த பீட்ரூட் ஜுஸை வைத்து தான் நாம் பூரியை செய்யப் போகிறோம். கோதுமை மாவில் உப்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு தேவையான பீட்ரூட் ஜூஸை சேர்த்து பூரிக்குண்டான மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும். பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

மாவை தேவையான அளவு எடுத்து உருண்டைகள் செய்து பூரியாக தேய்த்து பொரித்து எடுக்க வேண்டியது தான். கலர்ஃபுல்லான பீட்ரூட் பூரி தயார். பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளையும் இந்த பூரியின் நிறம்  சாப்பிடத் தூண்டும்.  நீங்களும் செய்து தந்து குழந்தைகளை அசத்துங்களேன்.
 
 இது முன்பு செய்த சோலே!

தலைப்பில் சன்னா என்று போட்டு விட்டு அதைப் பற்றிய குறிப்பு கொடுக்கவில்லையே என நினைத்தீர்களா? ”சன்னா என்கிற சோலே மசாலா” பற்றி முன்பே ஒருமுறை செய்முறை குறிப்பு கொடுத்திருக்கிறேன். அதைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டு வாங்களேன்…

பின்குறிப்பு:-

1) பீட்ரூட் சாறு சேர்த்திருப்பதால் சுவையில் ஒன்றும் மாறுபாடு தெரியவில்லை. அதனால் தைரியமாக எவ்வளவு தேவையோ சேர்த்துக் கொள்ளலாம்.

2) கலர் குறைவாக வேண்டுமென்றால் கொஞ்சமாக சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். எப்படியோ! குழந்தைகளுக்கு காயின் சத்து சேர்ந்தால் சரி..

3) என் பெண்ணும் சூப்பராக இருந்ததும்மா... என்று லஞ்ச் பாக்ஸை காலி செய்து விட்டு வந்தாள்....:) இதை முதலிலேயே சொல்லணுமோ!!!மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

43 comments:

 1. பள்ளிக்கு தயார் செய்யும் அவசர நிலையிலும் பதிவிடுவதற்காக படங்கள் எடுத்தேன்.....:)) என்னே! எந்தன் கடமையுணர்ச்சி!!!!

  அளவ்ற்ற கடமை உணர்ச்சிக்கு பாராட்டுக்கள்..!
  பாலக் கீரையை பச்சையாக அரைத்து செய்யும் பூரி செய்தது உண்டு.. இதுவும் செட்து பார்க்கலாம்..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

   பாலக்கீரையிலா! நானும் முயற்சித்து பார்க்கிறேன்.

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 2. உங்க கடமை உணர்ச்சிக்கு பாராட்டுக்கள் சகோதரி

  Typed with Panini Keypad

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவியாழி கண்ணதாசன் சார்,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 3. அருமையான வித்தியாசமான
  ஐட்டத்தை படத்துடன் பகிர்வாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  இந்த வார மெனுவில் சேர்த்தாகிவிட்டது

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி சார்,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 4. Replies
  1. வாங்க ரமணி சார்,

   தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி.

   Delete
 5. அடடா... வித்தியாசமாக இருக்கே... செய்து பார்ப்போம்... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் சார்,

   விஜயலட்சுமி தர்மராஜ் அவர்களுக்கு தகவல் அளித்ததற்கு முதல் நன்றி.

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 6. கேள்வி பட்டிருக்கேன். ஆனா செஞ்சதில்லை. ரெசிப்பிக்கு நன்றி

  என் பெண்ணும் சூப்பராக இருந்ததும்மா... என்று லஞ்ச் பாக்ஸை காலி செய்து விட்டு வந்தாள்....:) இதை முதலிலேயே சொல்லணுமோ!!!//

  அதானே முக்கியம். அதுக்குத்தானே நாம இம்புட்டு கஷ்டபடுவது. :))

  ReplyDelete
  Replies
  1. வாங்க புதுகைத் தென்றல்,

   நிச்சயமாக அதான் முக்கியம்....:))

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 7. நல்லா இருக்குங்க பூரி & சன்னா! நான் இன்னும் கலர்ஃபுல் பூரிகள் செய்ய முயற்சிக்கலை. :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மஹி,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 8. முயற்சி செய்து பார்க்குறேன். என்ன என் வீட்டுக்காரருக்குதான் ஏன் இது இப்படி கலரா இருக்குன்னு கேப்பாங்க. அதனால, அவங்களுக்கு வெள்ளைகலர் பூரி. பசங்களுக்கு சிவப்பு பூரின்னு செஞ்சு கொடுத்திட்டா போச்சு!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி,

   கலருக்கு காரணத்தை சொல்லுங்க...:))

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 9. அருமையான செய்திகளை ருசியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வை.கோ சார்,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 10. Romba santhosam Adhi, enaku intha thagaval inaipu kudutha Dindigul Dhanabalan sir kum mikka nandri... Muthal thadavai ingu, athilum enoda recipe potathu pakka mikka santhosam and romba nandri ungal paratukum, innum urchagama iruku ennaku... thodarnthu varugai tharavum... :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜயலட்சுமி,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருவேன்.

   Delete
 11. /லஞ்ச் பாக்ஸை காலி செய்து விட்டு வந்தாள்....:) இதை முதலிலேயே சொல்லணுமோ//

  இந்த ரிஸல்ட் கிடச்சதாலத்தானே, இங்க பதிவா வந்துருக்கு!!

  பீட்ரூட், கேரட், பாலக்னு விதவிதமா கலர்களில் செஞ்சு கொடுத்து அசத்துங்க.

  ஆமா, காய் அரைச்ச விழுதை அப்படியே சேர்க்கலாமே? காயையும் சாப்பிட வச்ச மாதிரி ஆகுமில்லியா. ஏன் ஜூஸை மட்டும் சேர்க்குறீங்க? அப்ப விழுதை என்னப் பண்ணுவீங்க?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹுசைனம்மா,

   இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கலைன்னா நீங்க, நீங்களாவே இருக்க முடியாது.....:))))

   காய் அரைச்சு விழுதாவே சேர்க்கலாம்னு நினைச்சேன். ஆனா காலை நேரத்தில் இப்படியெல்லாம் விஷப்பரீட்சை செய்து பார்க்கத் தோணலை. அப்புறம் சொதப்பலாயிட்டா லஞ்சுக்கு என்ன கொடுக்கறதுன்னு முழிக்கணும்.....:))) சப்பாத்திக்கு ஓக்கே.... பூரிக்கு எண்ணெயில் பிரிஞ்சு போயிட்டா.? இல்லை எண்ணெயை குடித்திட்டா? அடுத்த முறை நிதானமாக செய்து பார்க்கணும்...:)))

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
  2. /இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கலைன்னா//

   ஹி.. ஹி.. .. ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இப்படி கேள்வியா கேக்குறோமேன்னு தோணும். ஆனாலும் விடமுடியலை!! ஏன்னா, சந்தேகம்னு ஒண்ணு தோணிட்டா, அதுக்கு விடை கிடைக்கலன்னா தூங்கமுடியாதே!! :-)

   நானும் முன்னாடி கேரட் பூரி செய்வேன். அப்ப துருவி அப்படியே சேத்துடுவேன். அதான் கேட்டேன். ஆனா முக்கியமான பாயிண்ட், நான் இப்படி காலை நேரத்துல புது ரெஸிப்பி செய்ற ரிஸ்க் எடுக்கவே மாட்டேன்!! நீங்க தைரியமா செஞ்சிருக்கீங்க!! :-)))

   Delete
  3. வாங்க ஹுசைனம்மா,

   தங்களின் உடனடி பதில் கண்டு மகிழ்ச்சி....:) தூக்கம் வரணும். அதனால கண்டிப்பா விடை தெரிஞ்சிக்கோங்க....:))) தப்பே இல்லை.....:))))

   துருவி போட்டு செய்திருக்கீங்களா? அப்ப நானும் செய்திடுறேன்.

   Delete
 12. கண்களைச் சுண்டி இழுக்கின்றது பூரியும் சால்னாவும்...:)

  அருமையான பகிர்வு! பீட்றூட் சாறினால் சற்றே கூடுதல் சிவப்பு நிறமாகத் தோணும்..
  அதுவும் அழகுதான்... அருமையான குறிப்பு.

  வாழ்த்துக்கள்!

  த ம.5

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி. தமிழ்மண வாக்குகளுக்கும்...

   Delete
 13. கலர்ஃபுல் பூரி. செய்து பார்க்க ஆவல் பெருகுதே...! ஹுஸைனம்மாவுக்குத் தோன்றிய சந்தேகம் எனக்கும் தோன்றியது. பதில்தான் கிடைத்து விட்டதே...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் சார்,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 14. உங்களின் ரெசிபியை என் இல்லஅரசியிடம் காட்டணும்னு இருக்கேன் [அதான் எனக்கு தெரியுமேன்னு சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ]
  த.ம 6

  ReplyDelete
  Replies
  1. வாங்க பகவான்ஜி,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 15. கலர் அழகா வரது. காயும் சேர்கிரது. பாலக்,மெந்தியகீரை சேர்த்தும் பண்ணுவதுண்டு. சுடசுட
  சாப்பட்டால் தட்டே காலிதான். சுவையாந குறிப்பு. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சிம்மா,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 16. பீட்ரூட் பூரியும், சன்னாமசாலாவும் அருமை.
  ரோஷ்ணிக்கு பிடித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
  பீட்ரூட் பிடிக்காத என் மகனுக்கு முன்பு தோசை மாவில் கலந்து ’பிங் கலர் தோசை ’ என்று செய்து கொடுப்பேன்.
  பீட்ரூட், காரட், வெங்காயம் வதக்கி தோசை மாவில் போட்டு செய்து கொடுப்பேன்.
  இப்போதும் அந்த தோசை விரும்பி சாப்பிடுகிறான்.
  குழந்தைகளை காய்கள் சாப்பிட வைக்க இது போல் செய்து கொடுப்பது நல்லது தான் ஆதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதிம்மா,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 17. நல்லா இருக்குங்க!! நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க தியானா,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 18. பீட்ரூட் பூரி உடனேயே செய்து பார்க்கத் தூண்டுகிறது. சோலேயின் அழகு மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோம்மா,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 19. உங்கள் கடமை உணர்ச்சி எங்களை இப்பொழுதே பூரி சாப்பிடத்தூண்டுகிறது...பகிர்விற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கலியபெருமாள்,

   தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 20. கலர்ஃபுல்லா அழகாயிருக்கு பீட்ரூட் பூரி. பாலக்கை வேக வெச்சு மிக்ஸியிலிட்டு அரைத்து அதோட மாவைச்சேர்த்து பாலக் பூரியும் செஞ்சு கொடுங்க குழந்தைக்கு..

  ReplyDelete
 21. அமைதிச்சாரல் - நன்றிங்க... பாலக் தான் இங்கே கிடைப்பது கடினம்...:))

  ReplyDelete
 22. பழைய பதிவா? புதுசோனு நினைச்சேன். பீட்ரூட்டே இங்கே வாங்கறதில்லை. அதனால் மட்டுமில்லை. குழந்தைங்களும் இல்லையே சாப்பிட! செய்து பார்க்க வாய்ப்பில்லை. முகநூலில் பட்டாணி சப்ஜி என்று பார்த்தேன். இங்கே வந்தால் சனாவாக மாறி இருக்கு! :))))

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…