Wednesday, October 16, 2013

கமிஷனருக்குக் கடிதம்!பங்களூரு உப்பாரப்பேட்டை காவல் நிலையத்தில் இளம்பெண் மாயா என்பவள் ஏ.எஸ்.பியாக புதிதாக பணியில் சேருகிறாள். அங்கே இவளுடன் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக சுதாகரும், ரமேஷூம் பணிபுரிகிறார்கள். பணியில் சேர்ந்த அன்றே ஹிட் அண்டு ரன் கேஸ் ஒன்றை பார்வையிடச் செல்கிறாள். அடுத்து தற்கொலை ஒன்று. இப்படி பணியில் சேர்ந்த அன்றே விபத்து, தற்கொலை, ரத்தம் எனப் பார்த்து மிகவும் சோர்வடைகிறாள்.
தங்களுடன் ஒரு பெண் பணிபுரிவதில் கமிஷனரான சுதாகருக்கு வெறுப்பு ஏற்படுத்தியது. அதனால் மாயாவுக்கு இப்படிப்பட்ட கேஸ்களைக் கொடுத்து அவளே ராஜினாமா செய்து விட்டுச் செல்லும் படி செய்தார். ஆனால் மாயாவோ கொஞ்சம் பயந்தாலும், சமூகத்தை திருத்த தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாக நினைத்து தனக்கு கிடைத்த கேஸ்களில் அக்கறை வைத்து பணிபுரிந்தாள்.

அதன் பின் சுதாகர் மாயாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் சுதாகர் விவாகரத்தானவர் என்பதையும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும், மாதமொரு முறை அவள் தந்தையை காண வருவதாகவும் சொல்லி, ரமேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் சொல்கிறார். ஆனால் மாயாவுக்கோ திருமணம் பற்றிய எண்ணமேயில்லை…

இப்படியிருக்க இவர்களுக்கு விதவிதமான கேஸ்கள் கிடைக்கின்றன. மூவரும் இணைந்து செயல்படுகிறார்கள். இடையில் வக்கீல் மூலமாகவும், பத்திரிக்கையாளர் மூலமாகவும் நிறைய பிரச்சனைகள் வந்து மாயாவிற்கு பணியில் நிலைத்து இருக்க முடியுமா என்கிற நிலை ஏற்படுகிறது. சுதாகரும் ரமேஷும் வேறு தங்களை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்க, மாயா யோசிக்க ஓரிரு நாட்கள் கேட்கிறாள். இதற்கிடையில் சுதாகரின் மகளும் கடத்தப்படுகிறாள். எங்கு சென்றாள்? என்ன ஆனாள்? என யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து ”கமிஷனருக்குக் கடிதம்” என நான்கு கடிதங்களை அனுப்புகிறார்கள். அதில் தங்களின் வேண்டுகோளை வைக்கிறார்கள்.இது தான் நான் சமீபத்தில் வாசித்த சுஜாதா அவர்களின் ”கமிஷனருக்குக் கடிதம்” என்கிற புத்தகத்தின் கதை. க்ரைம் நாவலாக ஆரம்பித்த இந்த கதையில் காதலும் உண்டு. இடையில் கேஸ்களை கண்டுபிடிக்க மாயா லேப்க்கு செல்லும் போது நம்மாலும் அறிவியல் பூர்வமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. படித்துக் கொண்டே வந்தீர்களா? இனி…..

கமிஷனரின் மகள் கிடைத்தாளா? யார் கடத்தினார்கள்? மாயா யாரைத் தேர்ந்தெடுத்தாள்? வேலையை தக்க வைத்துக் கொண்டாளா? சமூகத்தை திருத்த எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா? போன்ற உங்களின் கேள்விகளுக்கான விடையை அந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

விசா பப்ளிகேஷன்ஸ்
புதிய எண்: 16, பழைய எண்: 55
வெங்கட்நாராயணா ரோடு,
தி.நகர், சென்னை – 600017.
தொலைபேசி எண் – 2434 2899, 2432 7696
புத்தகத்தின் விலை – ரூ 70.
மொத்த பக்கங்கள் - 144

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

36 comments:

 1. விறு விறுப்பான
  விமர்சனம் ..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 2. Replies
  1. வாங்க தனபாலன்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 3. இதுவரை படித்ததில்லை. படிக்கத் தூண்டுகிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்க டி.என்.முரளிதரன் சார்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 4. ரைட்டு... ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்....

  நல்லது

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவிதை வீதி செளந்தர்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. விமர்சனம் நல்ல விறு விறு...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜனா சார்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 6. விறுவிறுப்பான புத்தக விமர்சனத்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வை.கோ சார்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 7. சுஜாதாவைப் போலவே படிப்பவர் ஆவலைத் தூண்டும் வண்ணம் எதிர்பார்ப்புகளோடு ஒரு நூல் விமர்சனம். அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தமிழ் இளங்கோ ஐயா,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 8. உங்களவர் வலைப் பக்கமே காணாமே என்று நானும் கமிசனருக்கு கடிதம் எழுதலாம்னு இருக்கேன் !நானும் சுஜாதா கதைகளை விரும்பி படிப்பதுண்டு !
  த ம.8

  ReplyDelete
  Replies
  1. வாங்க பகவான்ஜி,

   உங்கள் கருத்துரையை ரசித்தேன். மிக்க நன்றி.

   என்னவரின் கணினி இன்னும் சரியானபாடில்லை....:(

   Delete
 9. சமீபத்தில்தான் வாசித்தேன் ..ரொம்ப நல்லா இருக்கு .....உங்க விமரிசனம் அருமை .

  Angelin

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின்,

   வாசித்தீர்களா....மகிழ்ச்சி.

   தங்களின் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 10. வேணியின் காதலன் ,பெண் இயந்திரம் இவையும் அருமை கிடைச்சா வாசிங்க

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்களையும் வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்கிறேன்.

   Delete
 11. இந்தப் புத்தகத்தை பலமுறை பார்த்து வாங்காமல் விட்டிருக்கிறேன், கதை வித்தியாசமாக இருக்கும் போல் உள்ளது.. நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்.. அருமையான விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சீனு,

   அவசியம் வாங்கி வாசித்துப் பாருங்கள்.

   தங்களின் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 12. ஆதி ,கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது,, படிக்க தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதிம்மா,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 13. நூல் அறிமுகத்திற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவிப்ரியன்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 14. படிக்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தியானா,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 15. அருமையான விமர்சனம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சே.குமார்,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 16. விமர்ச்சனமே விருவிருப்பு!கதைகளைப் படிக்காத கன்போன்றாரைத் தூண்டும்! ஐயமில்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க புலவர் ஐயா,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 17. விறுவிறுப்பா விமர்சனம்... இப்பல்லாம் நாவல் படிக்கும் பொறுமை இல்லைங்க.... கண்டிப்பா சந்தர்ப்பம் வாய்க்கும்போது படிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க எழில்,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க...

   Delete
 18. இந்த நாவல் படித்ததில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் படிக்கிறேன்.
  விமரிசனம் படிக்க நன்றாக இருக்கிறது, ஆதி!
  உங்கள் கணவரின் பதிவுகளைப் படிக்க வரும்போது உங்கள் பதிவுகளையும் படிப்பது ஏன் வழக்கம். இப்போது அவர் எழுதுவதை நிறுத்தியிருந்ததால் உங்கள் பதிவுகளைப் படிக்க முடியவில்லை. இப்போது அவர் திரும்பவும் எழுத ஆரம்பித்துவிட்டாரே. இனி உங்க பதிவுகளையும் படிக்க வந்துவிடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரஞ்சனிம்மா,

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…