Wednesday, October 9, 2013

புலியைப் பார்ப்போமா? A2B! பரிசு என்ன? (கிழக்குக் கடற்கரை சாலையில் ஒரு நாள் - 3)நண்பர்களே! சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்கு எல்லோருமே சரியாக பதில் சொல்லியிருந்தீர்கள்… மனிதனை விட கொடிய மிருகம் இந்த உலகத்தில் எதுவுமேயில்லை….:) அந்த பெட்டியின் உள்ளே இருந்தது கண்ணாடி தான்.  என்னவர்  என்னை அழைத்து கேட்ட போது நானும் உங்களைப் போல் தான் சரியாகச் சொன்னேன்…..:)) உங்கள் அனைவருக்குமான பரிசு இதோ….


 கூகிளுக்கு நன்றி

அடுத்து நாம் போகப் போவது TIGER’S CAVE என்று சொல்லப்படுகிற புலிக்குகைக்கு. ஆமாங்க! புலியை அதன் குகையிலேயே சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா! வாங்க! உள்ளே நுழையலாம். கடற்கரையை ஒட்டிய இடத்தில் அலைகளின் ஓசைக்கு நடுவில் செதுக்கப்பட்ட பெரிய பெரிய பாறைகள் விதவிதமான வடிவத்தில் அழகாக காட்சியளித்தன. நடுநாயகமாக குகை போன்ற அமைப்பில் புலியின் முகங்களோடு யானையும் ஒன்று சேர அழகோ அழகு தான். இரண்டு பாறைகள் வெட்டுபட்டு அதன் நடுவில் சிறு இடைவெளியுடன், பெரிய பாறை, சிறு குன்று போன்ற அமைப்பு என எங்கெங்கும் விதவிதமாக வடிவமைக்கப்பட்ட பாறைகள் தான்.
பட உதவி - கூகிள்


புலிக்குகை என்றதும் புலியைத் தான் சந்திக்கப் போகிறோம். என்ற ஆவலோடு வந்திருக்கும் என் போன்றவர்கள் , இங்கு காண்பதெல்லாம் காதல் ஜோடிகள் தான்……:)) எங்கெங்கு காணினும் அவர்கள் தான்…..:)) பாறைகளை பார்த்துக் கொண்டே வந்த நான் இன்னும் சற்று உள்ளே தள்ளி இருந்த கோவில் போன்ற அமைப்புடன் சிவலிங்கமும் இடம் பெற்றிருக்கும் இடத்திற்கு செல்ல எத்தனிக்க, என்னவர் அங்கிருந்த காதல் ஜோடிகளை கண்டதால், "வேண்டாம் வா….. குழந்தையோடு செல்ல லாயக்கில்லை" என்று அழைத்து வந்து விட்டார்….

V.G.P, தக்ஷிண் சித்ரா, முதலைப் பண்ணை என சென்ற இடமெல்லாம் பள்ளிக் குழந்தைகள் தென்பட்டனர். இங்கு நல்லவேளை அவர்கள் இல்லை… தில்லியில் GARDEN OF FIVE SENSES என்ற இடத்தில் இப்படித்தான், ஏதேனும் திருவிழா இல்லாத நாளில் சென்றால், குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் நேராக மட்டும் தான் பார்த்து செல்ல வேண்டும். அங்கே இங்கே பார்த்து விட்டால் அவ்வளவு தான்…..:( காதல் என்ற பெயரில் இவர்கள் செய்வது அநியாயம். என் தில்லித் தோழியும் ஒருநாள் தன் கணவருடன் சென்று விட்டு வந்து புலம்பினார்.

சரி! வாங்க! நாம அடுத்து எங்கே போகப் போகிறோம்? மகாபலிபுரத்துக்குத் தான். ஆனால் மதியமாகி விட்டதே! அதற்கு முன்பு ஒரு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் எங்களைப் போன்ற சைவ உணவு வேண்டுபவர்களுக்காக அடையார் ஆனந்த பவன் இங்கே திறந்திருக்கிறார்கள். காலையிலேயே சித்தப்பாவும், சித்தியும் ஓட்டுனரிடம் மதியம் இங்கே அழைத்துச் செல்லும்படி சொல்லி அனுப்பியிருந்தார்கள். உள்ளே போகலாமா? குளிர்சாதன வசதியுடன் உணவகத்தை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். வாசலிலேயே அன்றைய மெனு எழுதி வைக்கப்பட்டிருந்தது.

கூகிளாண்டவருக்கு நன்றி!

என்னவரும் ஓட்டுனரும் முழுச் சாப்பாடு ஆர்டர் செய்ய, மகளுக்கு சப்பாத்தி ஆர்டர், நான் மினி மீல்ஸ் தேர்வு செய்தேன். கிண்ணங்களில் சாம்பார் சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், சேமியா பாயசம், முட்டைக்கோஸ் கறி போன்றவற்றுடன் அப்பளம், வடாம், மோர் மிளகாய். இவற்றோடு ஒரு சப்பாத்தி குருமாவுடன். எலுமிச்சை சாதம் மட்டும் கொஞ்சம் கசப்படித்தது. மற்றபடி சாப்பாடு மிகவும் நன்றாகவே இருந்தது. எல்லோரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

இனி நேராக மாமல்லபுரத்துக்குத் தான். முதலில் ”ஐந்து ரதங்கள்” இருக்கும் இடத்திற்கு சென்றோம். இந்திய தொல்லியல் துறைக்குட்பட்ட இந்த இடத்திற்கு, நமக்கான நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். பள்ளிச் சிறார்களும், வெளிநாட்டவர்களும், விடுமுறையை கழிக்க வந்த மக்களும் என அந்த இடமே நமக்கான உற்சாகத்தை அள்ளித் தந்தது.
முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் அரிய படைப்பான ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட தேர் போன்ற வடிவமைப்புடைய ஐந்து இரதங்களையும், யானை, சிங்கம், நந்தி போன்றவற்றையும் பார்க்க ஆரம்பித்தோம். பஞ்சபாண்ட ரதங்கள் என்று அழைக்கப்படுகிற இவற்றுக்கும் மகாபாரதத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று அங்குள்ள பலகைச் சொல்கிறது.

தர்மராஜ ரதம், பீம ரதம், த்ரெளபதி ரதம், நகுல சகாதேவ ரதங்கள் என கல்லில் செதுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களை கண்டு களித்தோம். ஒவ்வொன்றையும் பார்க்கும் போதே பிரமிப்பை தோற்றுவித்தது. காலத்தால் ஒருசில உருவங்கள் சிதிலமடைய ஆரம்பித்தாலும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அடுத்து நாங்கள் சென்றது. அர்ஜூனன் தபசு, கிருஷ்ணனின் வெண்டை உருண்டை ஆகிய இடத்திற்கு…..

நீங்களும் கண்டு களித்தீர்களா? அடுத்த இடத்திற்கு செல்லும் வரை சற்றே ஓய்வு தான்…..:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

28 comments:

 1. கல்லில் செதுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களை
  அருமையாகக்காட்சிபடுத்தியதற்கு நன்றிகள்..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

   தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 2. ஆகா.. அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

   தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 3. அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

  ReplyDelete
  Replies
  1. படித்து கருத்துரையும் போட்டாச்சு.

   Delete
 4. எல்லாம் அருமை. ரஸித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வை.கோ சார்,

   தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. ஆஹா.... என் தேடலுக்கு விடை கிடைச்சுருச்சு. வீட்டு கொலுவில் மகாபலிபுரம் செட் அடுக்கும்போது என்ன வரிசையில் வருதுன்னு குழம்பினேன். இப்போ விடை உங்கள் பதிவின் படத்தில். டேங்கீஸ் ரோஷ்ணியம்மா.

  புலி சமாச்சாரம் துளசிதளத்தில் வந்தது இங்கே.

  http://thulasidhalam.blogspot.com/2010/03/blog-post_08.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க டீச்சர்,

   கொலு செட் அடுக்க எங்க புகைப்படம் பயன்பட்டதில் மகிழ்ச்சி டீச்சர். டீச்சர் நீங்க எழுதாத இடம் தான் ஏது? பார்த்தேன்.

   Delete
 6. புலிக்குகைக்கு நானும் சென்றிருக்கிறேன்..ஆனால் மாமல்லபுரம் போகத்தான் ஏனோ இன்னும் கொடுத்து வைக்கவில்லை...ஏதோ காரணத்தால் தள்ளிப்போகிறது...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கலியபெருமாள்,

   நேரம் கிடைக்கும் போது மாமல்லபுரம் சென்று ரசித்து வாருங்கள்.
   தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 7. புகைப்படங்கள் அற்புதம்
  உங்களவருக்கு வாழ்த்துக்கள்
  சுவாரஸ்யமாக விளக்கிச் சென்றது
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி சார்,

   தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 8. அழகான படங்களுடன் அனுபவப் பகிர்வு சிறப்பு. நன்றி ஆதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதமஞ்சரி,

   தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 9. எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத சிற்ப வேலைப்பாடுகள்.
  இங்கிருந்து கொண்டே உங்களுடன் எல்லா இடங்களையும் புகைப்படங்களில் பார்த்துவிட்டேன். அடுத்த இடத்திற்குப் போக ரெடி!

  ReplyDelete
 10. வாங்க ரஞ்சனிம்மா,

  எங்களுடன் தொடர்ந்து வருவதற்கு நன்றிம்மா.

  ReplyDelete
 11. படங்கள் எங்களையும் அந்த இடத்திற்கே அழைத்துச் சென்றன...
  அருமையான படங்கள்...
  ஆமா அண்ணன் கல்லைத் தள்ளுறாரா தாங்கிப் பிடிக்கிறாரா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க குமார்,

   அண்ணன் கல்லைத் தாங்கி தான் பிடிக்கிறார். தங்களுக்கு குழப்பமாக உள்ளதா...:))

   தங்களின் கருத்துரைக்கு நன்றிங்க.

   Delete
 12. அனுபவத்தை அழகான படங்களுடன் பகிர்ந்த விதம் சிறப்பு, நாங்களும் சுற்றுலா சென்று வந்த உணர்வை ஏற்ப்டுத்தியுள்ளீர்கள் தங்கள் பதிவின் மூலம். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாண்டியன்,

   முதல் வரவுக்கும், கருத்துரைக்கும் நன்றிங்க.

   Delete
 13. மீண்டும் இந்த இடங்களுக்குப் போன உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ஆதி. நீங்கள் சொல்வது ஈசிஆர் சாலை முழுவதும் இப்பொழுது காதலர் சாலை ஆகிவிட்டது. நாம் தான் கடிவாளம் போட்டுக் கொண்டு மேல செல்ல வேண்டும். படங்கள் அத்தனையும் வெகு ஜோர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லிம்மா,

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 14. ஆஹா! நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை!? அடுத்த வாரம் மகாபலிபுரத்தை பத்தி போடத்தான் டைப்பிக்கிட்டே உங்க பக்கம் வந்தால்.., இங்கயும் அதே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி,

   அப்படியா! எழுதுங்கள். உங்களின் பார்வையில் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

   தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 15. அருமையான பயண அனுபவங்கள். படங்கள் எல்லாம் அழகு.
  குழந்தைகளுடன் குழந்தையாக வெங்கட் நந்தி மேல் அமர்ந்து இருக்கும் காட்சி அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதிம்மா,

   மிக்க மகிழ்ச்சிம்மா. தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…