Thursday, October 31, 2013

தீபாவளி ஸ்பெஷல் - 4 இது தான் கடைசி ரெசிபியா!!!

நட்புகளே! இன்று நான்காவது நாளாக இனிப்பு ஒன்றை செய்து உங்களுக்கு விருந்தளிக்கப் போகிறேன்....

நான்கு பேரும் லட்டுக்காக வெயிட்டிங்!!!

என்ன இது? என்று கேட்பவர்களுக்கு.... இதன் பெயர் ”மலாய் லட்டு” "GAYATHRI'S COOK SPOT" என்ற தளத்தில் இந்த ரெசிபியை பார்த்ததிலிருந்தே இதை செய்தே தீர வேண்டும் என்று மனதிற்குள் ஒரு வைராக்கியம்....:)) சமீபத்தில் தான் இந்த தளத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகளை அள்ளித் தருகிறார். படங்கள் கண்களை கவரும் விதமாக உள்ளன. இந்த சுவையான லட்டை பகிர்ந்த காயத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

சுவையான மலாய் லட்டு!!!

பாலில் செய்ய வேண்டிய பண்டமாதலால் கடைசியாக இதை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, இன்று இந்த ”மலாய் லட்டை” செய்தேன். கலரும் வாசனையும் அருமையாக உள்ளது. சுவையும் சூப்பர்....

பாலை திரித்து பனீர் செய்து அதனுடன் மில்க்மெய்டு, பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு அரைத்த விழுது, கலர், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறி, இறுகியவுடன் அடுப்பை நிறுத்தி ஆறவிட்டு லட்டு பிடிக்கலாம். மேலே அலங்கரிக்க பிஸ்தா துணுக்குகளை வைத்துக் கொள்ளலாம்.

படிப்படியான செய்முறை படங்களுடன் பார்க்க வேண்டுபவர்கள் காயத்ரி அவர்களின் தளத்திற்கு சென்று பார்க்கவும்.

இன்றோடு இனிப்பு கார வகைகள் செய்து முடித்தாயிற்று. நாளை தீபாவளி மருந்து தான் அரைத்து கிளற வேண்டும். 2003 ல் வந்த அவள் விகடனில் ஒரு தோழி எழுதியிருந்த மருந்துக் குறிப்பை வைத்துக் கொண்டு தான் இவ்வளவு வருடமாக தீபாவளி மருந்து தயாரிக்கிறேன். எங்கிருந்தாலும் அந்த தோழிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நாளை மருந்தோடு சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்,

திருவரங்கம்.

16 comments:

 1. சுவையான மலாய் லட்டு!!!

  அருமை..இனிய தீபாவளி வாழ்த்துகள்..!

  ReplyDelete
 2. மலாய் லட்டின் கிளிப்பச்சைக் கலரே அழகோ அழகாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. ம்ம்ம் :) looks yummy இன்னும் ரெசிப்பி வரணுமே .நாலு பொம்மைகள் தான் காட்டியிருக்கீங்க ஒவ்வொரு பதார்த்ததுடனும் ஸோ !! இன்னும் அட்லீஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்வீட்ஸ் வரணும்னு நினைக்கிறேன் :)

  Angelin.

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சலின் - ஏற்கனவே மூன்று நாட்களாக இனிப்புகளும் காரங்களும் வந்து கொண்டிருக்கின்றது. பாதாம் அல்வா, சாக்கோ அல்வா, மைதா ரோஸ்மில்க் பர்ஃபி, இன்று செய்தது நான்காவது இனிப்பு.... மூன்று நாட்களாக வந்த பதிவுகளை பாருங்கள் ஏஞ்சலின்...

   Delete
 4. வித்தியாசமா இருக்கு; செய்து பார்க்கத் தூண்டுது. :-)

  ReplyDelete
 5. "மலாய் லட்டு" செய்ததில்லை... இணைப்பில் பார்த்து தெரிந்து கொள்கிறோம்... நன்றி...

  இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...

  என்றும் சொர்க்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

  ReplyDelete
 6. மலாய் லட்டு அருமை.மருந்து சாப்பிட காத்து இருக்கிறேன்.
  காத்து இருக்கும் நான்கு பேர் அழகு.

  ReplyDelete
 7. அருமையான மலாய் லட்டு!... பார்க்கவே கலர் வான்னு கூப்பிடுதே..:)

  நாளைய லேகியத்திற்கும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.!

  இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. மலாய் லட்டை சுவைத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 9. லேகியமா.. ஆஹா.. அந்த சுவைக்கு ஈடாகாது.. மலாய் லட்டு பார்க்கவே மிக அழகாய்

  ReplyDelete
 10. ரிஷபன் சார் - லேகியம் மாலையில்.... தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 11. லட்டு லட்டாக ருசியாக இருக்கிரது. மருந்து கிளரவில்லை. நீ செய்வதில் ெடுத்துக் கொண்டு விடுகிறேன். அன்புடன்

  ReplyDelete
 12. தீபாவளி ஆசீர்வாதங்கள். அன்புடன்

  ReplyDelete
 13. காமாட்சிம்மா - மருந்து ரெசிபி இப்போ கொடுத்திருக்கிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். தங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 14. சூப்பரா இருக்கு மலாய் லட்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 15. தங்களின் பாராட்டு கண்டு மிக்க மகிழ்ச்சி...

  நான் தான் தங்களுக்கு நன்றி சொல்லணும்...:))

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…