Wednesday, October 30, 2013

தீபாவளி ஸ்பெஷல் - 3 பெயரே நீங்க தான் வைக்கணும்!!!

அன்பு நண்பர்களே,

இன்று மூன்று வித ஐட்டங்கள் தந்துள்ளேன். எல்லோரும் வந்து ருசி பார்த்து கருத்துக்களை சொல்லுங்களேன்..... அதில ஒன்றுக்கு பெயரே நீங்க தான் வைக்கணும். என்ன! எல்லோரும் ஆளுக்கொன்றா பெயர் வைங்க....பார்க்கலாம்...நேற்று செய்த பாதாம் அல்வா வீட்டிற்கு வைத்துக் கொள்ளத் தான் சரியாக இருக்கும். அக்கம் பக்கம் வீடுகளுக்கு விநியோகிக்க ஏதாவது இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்து மைதா மாவு கேக் முடிவு செய்தேன். வெறும் மைதா மாவாக இல்லாமல், அதனுடன் ஏதாவது சேர்க்கலாமா என்று யோசித்தேன். விளைவு வீட்டில் ரோஸ் மில்க் குடிக்கவென வாங்கி வைத்த பவுடர் இருந்தது. அதை மைதாவுடன் சேர்த்து பர்ஃபி செய்தேன். நன்றாகவே வந்தது. அது மட்டுமில்லாமல் நல்ல வாசனையும் சுவையும்....:))

மைதா ரோஸ்மில்க் பர்ஃபி

அடுத்து மைதாவிலேயே கோகோ பவுடர் சேர்த்து பர்ஃபி போல் இல்லாமல் அல்வா மாதிரி கட் பண்ணி சாப்பிடலாமென செய்தது தான் இது...

எனக்கு ஒரு பெயர் ப்ளீஸ்!!!


மொத்தமாக நான் செய்ததே இவ்வளவு தான். நிறைய செய்து வீணாக்ககூடாது. சுவையும் கலரும் ஜோராக உள்ளது. பெயர் தான் இல்லை.....:((
நீங்களே இதற்கு ஒரு பெயர் வைங்களேன்....

அடுத்து முதல் நாள் செய்த ஓமப்பொடியுடன், கொஞ்சம் காரமுறுக்கும், நேற்று செய்த மைதா டைமண்ட் பிஸ்கெட்டும், எண்ணெயில் வறுத்த அவல், கார்ன்ஃப்ளேக்ஸ், நிலக்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை எல்லாம் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், எல்லாம் சேர்த்து கொஞ்சம் போல எண்ணெயில் பெருங்காயம் பொரிய விட்டு சேர்த்து நன்கு கலந்தேன். மிக்ஸர் ரெடி.....

பூந்தியில்லாத மிக்ஸரா!!!!

இந்த மிக்ஸரில் ஒண்ணே ஒண்ணு தான் மிஸ்ஸிங்.... அது தான் பூந்தி. என்னுடைய பூந்தி தேய்க்கும் கரண்டியெல்லாம் தில்லியில் உறங்குகிறது. சென்ற வருடம் பக்கத்து வீட்டில் வாங்கி தேய்த்தேன். நன்றாகவே வரவில்லை..... சரி! பூந்தியில்லாமல் மிக்ஸர் செய்யக்கூடாது என்று ஏதாவது சட்டமா என்ன.... விட்டு விட்டேன்......:)))


நாளை முடிந்தால் மீண்டும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்புடன் வருகிறேன்......:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

15 comments:

 1. அருமையான சிரத்தையான தீபாவளி தயாரிப்புகள்..!

  ReplyDelete
 2. அருமையான அழகான தின்பண்டங்கள். சிரத்தையாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பெயர்:

  ப்ளாக்கி + ஸ்வீட்டீ ;)

  ReplyDelete
 3. அட...! அனைத்தும் அருமை... பாராட்டுக்கள்...!

  இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. தீபாவளி களை கட்டிடுச்சு போல? :) பெயரில்லாத ஸ்வீட்டுக்கு "சாக்கோ பர்ஃபி" அல்லது "சாக்கோ ஹல்வா" என பேர் வைங்களேன்! கோக்கோ பவுடர் சேர்த்துத்தானே செய்திருக்கீங்க..பொருத்தமான பெயராத்தான் இருக்கும்.

  மிக்சருடன் முறுக்கு, மைதா பிஸ்கட் எல்லாம் சேர்த்து நான் சாப்பிட்டதே இல்லை. இது திருச்சி ஸ்டைல் மிக்ஸரோ?

  அட்வான்ஸாக இனிய தீபாவளி வாழ்த்துக்கள். எங்க வீட்டிலே இன்னும் எண்ணெய்ச்சட்டி அடுப்பில வைக்கவே இல்லை! ;)

  ReplyDelete
 5. முந்திரிப்பருப்பு அல்வா, மிக்சர், ஸ்வீட் பேர் தெரியலை... மிக்சரில் கிஸ்மிஸ் இருந்தால் கூடுதல் டேஸ்ட்...

  ReplyDelete
 6. பூந்தியில்லாமல் மிக்ஸர் செய்யக்கூடாது என்று ஏதாவது சட்டமா என்ன.... விட்டு விட்டேன்......:)))//

  அதனே !


  சாக்லேட் அல்வா என்று பெயர் வைத்து இருக்கிறேன். குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் இல்லையா?
  வாழ்த்துக்கள் ஆதி.
  .

  ReplyDelete
 7. எல்லாமே சூப்பரா இருக்கு ஆதி!..
  இம்முறை தீபாவளியை ஒரு கை பார்க்கிறதுன்னே முடிவாயிட்டீங்களோ....

  அருமை!
  அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. ஒனன்றொன்றும், பார்த்துப் பார்த்து நேர்த்தியாய் செய்தது. தீபாவளி கார்த்துக் கொண்டிருக்கிறது உங்க வாசலில். அடுத்தது என்ன? காட்பரிஸ் ஹல்வா. அதுவும் நன்றாக இருக்கு. அன்புடன்

  ReplyDelete
 9. rose Color பர்பி பார்க்கவே அழகாய் இருக்கு ஆதி..

  ReplyDelete

 10. பெயர் வைக்காத இனிப்புக்கு - பிளாக்கி, ஸ்வீட்டி, சாக்கோ ஹல்வா, சாக்லேட் ஹல்வா, காட்பரீஸ் ஹல்வா எனப் பலப் பெயர்களை தேர்ந்தெடுத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி.

  மஹி அவர்கள் பரிந்துரைத்த ”சாக்கோ ஹல்வா” என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் அந்த இனிப்புக்கு இன்று முதல் சாக்கோ ஹல்வா என்ற பெயர் சூட்டப்படுகிறது.....:)))

  மஹி - மிக்ஸருக்கு எங்கம்மா மைதா பிஸ்கெட், முறுக்கு, ரிப்பன் பக்கோடா எல்லாம் சேர்ப்பாங்க.... அதனால் தான் நானும் சேர்த்தேன். இது திருச்சி ஸ்பெஷல்லாம் இல்லை...:))

  ஸ்கூல் பையன் - மிக்ஸரில் திராட்சை சேர்த்தால் சற்று இனிக்க ஆரம்பித்து விடும்....:)) அதனால் தான் சேர்க்கவில்லை..

  இனிப்பு காரங்களை ருசி பார்த்து, கருத்துக்களையும், வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  மீண்டும் இன்று மாலை ஒரே ஒரு ரெசிபி அதுவும் இந்த தீபாவளியின் கடைசி ரெசிபியுடன் சந்திக்கிறேன். அது இனிப்பா? காரமா? யூகித்து சொல்லுங்கள்....:) சரியாக சொல்பவர்களுக்கு பரிசு உண்டு...:))

  ReplyDelete
 11. சகோதரிக்கு நன்றி! சாப்பிட்டுப் பார்க்க நேரம் இல்லை! மெயின்கார்டுகேட் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. சாக்கோ ஹல்வா சமத்தா செஞ்சிருக்கீங்க..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. தமிழ் இளங்கோ ஐயா - கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  கலியபெருமாள் புதுச்சேரி - மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 14. romba nalla iruku rendu sweets... rose flavor enoda favorite... well made...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்தும் என்னை மகிழ்வித்தது.... மிக்க நன்றி.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…