Tuesday, October 29, 2013

தீபாவளி ஸ்பெஷல்! - 2 ஸ்வீட் எடு கொண்டாடு!!

நண்பர்களே! நேற்றைக்கு காரம் செய்து உங்களுக்கு விருந்து வைத்தாயிற்று! இன்று ஸ்வீட் எடு கொண்டாடு.....:)


இன்று பாதாம் அல்வாவும், மைதா டைமண்ட் பிஸ்கெட்டும்.....

எல்லாரும் எடுத்துக்கோங்க...

பாதாம் அல்வா

வலையில் ஒரு தளத்தில் ஒரு ரெசிபியை பார்த்து செய்யலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அவர்கள் முந்திரியில் செய்திருந்தார்கள். என்னிடம் சிறிதளவு பாதாம் மட்டுமே இருந்தது. சரி! முந்திரிக்கு பதிலாக நாம் பாதாமில் செய்யலாம் என்று செய்தேன்.... எல்லாம் ஒழுங்காக செய்தும் ஏதோ சொதப்பலாகி செட் ஆகவில்லை...:)) அதனால் நெய் விட்டு கிளறி அல்வாவாக்கி விட்டேன்....:)) எப்பூடிடிடி!!!!  தில்லியில் இரண்டு முறை தீபாவளிக்கு பாதாம் அல்வா செய்துள்ளேன்.

அவர்கள் முந்திரியை பொடியாக்கி செய்திருந்தார்கள். நான் பாதாம் என்பதால் தண்ணீரில் ஊறவைத்து, தோலுரித்து அரைத்து செய்தேன்....:)) சரி! எப்படியும் பண்டத்தை பாழாக்காமல் மாற்றியதில் எனக்கு நிம்மதி + மகிழ்ச்சி....:))

மகள் தான் ரொம்ப எதிர்பார்ப்புடன் பள்ளியிலிருந்து வந்தவுடன் பார்த்து ஏமாந்து விட்டாள். ரொம்ப நேரம் கோபமாகவும் இருந்தாள்.....:)) வேடிக்கை தான்...:))

நான் மட்டும் என்ன சமையலில் சூரப்புலியா! ஒரு சில சமயம் சொதப்பலாகி தான் விடுகின்றன. என்னவோ சொல்லி சமாதானப்படுத்தினேன்...:))


பாதாம் அல்வா:-

பாதாம் - அரை கப்
சர்க்கரை - 1/4 கப்
பாகுக்கு தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
நெய் - அரை கப் ( எவ்வளவு விட்டாலும் இழுத்துக்கும்)
ஏலக்காய்பொடி, கலர் - தேவைக்கேற்ப

பாதாமை அரைத்துக் கொண்டு, ஒற்றைக் கம்பி பதமுள்ள சர்க்கரை பாகில் போட்டு கிளறவும். ஏலக்காய்ப்பொடியும், கலரும் சேர்க்கவும். சுருண்டு வரும் போது தேவையான அளவு நெய் விட்டு கிளறி இறக்கவும்.

அடுத்து மிக்ஸரில் கலப்பதற்கும், ரோஷ்ணி தனியே சாப்பிடுவதற்காகவும் மைதாமாவில் டைமண்ட் பிஸ்கெட் செய்தேன்.... எடுத்துக்கோங்க......

மைதா டைமண்ட் பிஸ்கெட்


மைதா டைமண்ட் பிஸ்கெட்:-

மைதா - 1 கப்
பொடித்த சர்க்கரை - கால் கப்
வெண்ணை - கால் கப்

சப்பாத்தி மாவாக பிசைந்து திரட்டி, கட் பண்ணி பொரிக்கவும். மெலிதாக திரட்டினால் தான் மொறுமொறுப்பாக வரும்.

 நாளை ஏதேனும் செய்து ஒழுங்காக வந்தால் பதிவிடுகிறேன்.....:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

19 comments:

 1. டைமண்ட் பிஸ்கட் எனக்கு பிடிக்கும் செய்யுறதுக்கும் ஈசி.

  ReplyDelete
 2. மைதா டைமண்ட் பிஸ்கெட் சூப்பராக செய்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. //இன்று பாதாம் அல்வாவும், மைதா டைமண்ட் பிஸ்கெட்டும்.....
  எல்லோரும் எடுத்துக்கோங்க...//

  ஆஹா, எடுத்துக்கொண்டேன்,...... ருசியோ ருசியாக இருந்தன. மிக்க நன்றி.

  ReplyDelete
 4. சூப்பர்ர்..தீபாவளி களை கட்டுகிறது...பாதாம் அல்வா +மைதா பிஸ்கட் இரண்டையும் எடுத்துக்கிட்டேன்..

  ReplyDelete
 5. பாதாம் அல்வா புதுமை..!

  ReplyDelete
 6. ஸ்வீட் எடுத்துக்கொண்டோம், நல்லா இருக்கு!

  ReplyDelete
 7. பார்க்க அழகா இருக்கு அல்வா... கண்டிப்பா சுவையாத்தான் இருக்கும்...

  ReplyDelete
 8. ரெண்டுமே பாக்க நல்லாத்தானே இருக்கு , நீங்க உண்மையை சொல்லாட்டி யாருக்குமே தெரியாது. நிறைய செய்து நல்லா சாப்பிட்டு பட் பட்என்று பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. டயமண்ட் எனக்கும் பிடிக்கும். இதுக்கு சங்கர் பாலின்னு பூனாவில் பேர் சொல்லுவாங்க. இது கட் பண்ணத் தனி லாட்னா கூட உண்டு. பெருசா சப்பாத்தியாத் திரட்டிட்டு அதுலேகுறுக்கேஒரு முறை நெடுக்கே ஒரு முறை அந்த லாட்னாவை ஓட விட்டால் துண்டுகள் ஒரே அளவில் ரெடி!

  ReplyDelete
 10. களைகட்டத் தொடங்கியாச்சு உங்க வீட்ல தீபாவளி...

  அசத்துறீங்க.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. அருமையான, பாதாம் அல்வா, பிஸ்கட் அருமை.

  ReplyDelete
 12. நல்ல பலகாரங்கள்
  என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
  நன்றி!

  ReplyDelete
 13. அசத்தல் பலகாரங்கள். நாம் நினைத்தபடி செய்யவரவில்லை என்றால் அதை வீணாக்காமல் வேறொன்று செய்து அசத்துவதும் ஒரு திறமைதான். புதுப்புது ரெசிப்பி எல்லாம் இப்படித்தானே கண்டுபிடிக்கப்படவேண்டும்?

  ReplyDelete
 14. இனிப்புகளை ருசித்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 15. அல்வாவும், பிஸ்கட்டும் அருமை! நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்! நன்றி!

  ReplyDelete
 16. சிலஸமயம் இப்படி ஆகும். ஸமாளிச்சுடலாம். கேஸரி பவுடர் கைவசம் இருந்திருக்காது. ருசியில்
  நன்றாகவே இருக்கும். வேரென்ன வேண்டும். நன்றாக இருக்கிரது. அன்புடன்

  ReplyDelete
 17. சேஷாத்ரி சார் - மிக்க நன்றி.

  காமாட்சிம்மா - மிக்க நன்றி.

  ReplyDelete
 18. எடுத்துக் கொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. மாதேவி - மிக்க நன்றிங்க.

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…