Monday, September 30, 2013

நட்பு என்னும் நூலெடுத்து…..நட்பு என்பது ஒரு அலாதியான உணர்வு. ஒருவரை மனதார பிடித்து விட்டால் அவர்கள் செய்யும் தப்புகள் கூட நம் கண்ணை மறைத்து விடும். பதிலாக அவர்களுக்கே நாம் பரிந்து பேசுவோம். இதுவே ஒருவரை பிடிக்காவிட்டால் அவர்கள் எது செய்தாலும் குற்றம் தான்செய்யாவிட்டாலும் குற்றம் தான்…..:) அதே போல தான் நல்ல நட்புக்கு பல வருடப் பழக்கம் தேவையில்லை. சில நாட்கள் பழகினாலும் மனதில் இடம் பிடித்து, பல வருடங்கள் பழகிய உணர்வை ஏற்படுத்தி விடும். இதெல்லாம் இங்கு ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்?

திருவரங்கம் வந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே என் மகளுக்கு ஒரு நட்பு கிடைத்தது. அவர்கள் வகுப்பில் இவளைப் போலவே அந்த மாணவனும் புதிதாக சேர்ந்திருந்தான். மேட்டூரிலிருந்து திருவரங்கம் வந்துள்ள அவன் எங்கள் குடியிருப்பில் தான் உள்ளான் என்பதை தெரிந்து கொண்டதிலிருந்து இருவரும் வீட்டிற்கு போவது, வருவது, விளையாடுவது என நாட்கள் ஓடின

அந்த சிறுவனின் அம்மா என் மகளிடம் வீட்டுப்பாடம் பற்றிய விவரங்களை அலைப்பேசியில் கேட்பார்கள். அப்போது நானும் அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் பழக ஆரம்பித்தேன். இப்படியாக அம்மாவுக்கும் மகளுக்கும் நட்பால் நேரங்கள் நல்லபடியாக சென்றன. தோழியின் கணவர் சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் இவர்கள் இங்கு வசித்துக் கொண்டிருந்தனர்.

எங்காவது ஷாப்பிங், சினிமா, ஹோட்டல் என்று செல்லலாம் என்று யோசித்து இதுவரை போக முடிந்ததில்லை. கோவிலுக்கு சென்று மணல்வெளியில் குழந்தைகளை விளையாட விட்டு நாங்கள் அரட்டை அடித்திருக்கிறோம். சரி இப்போ அதுக்கென்ன? என்று தானே கேட்கிறீர்கள்….


விஷயம் இது தான்…. விசா கிடைத்து இப்போது இவர்களும் சவூதிக்கு சென்று விட்டார்கள்…. செல்லப் போகிறார்கள் என்றதிலிருந்தே என் மனதை அதற்கேற்ப மாற்றி கொண்டு விட்டேன். ஆனால் குழந்தைகள்? மகள் அவர்கள் சென்றதிலிருந்தே ஓரே அழுகை தான்என்னுடைய BEST FRIEND என்னை விட்டு விட்டு ஊருக்கு போயிட்டான்….இப்போ என்ன பண்ணுவேன் என்று…..:))

சிறுவயதிலிருந்து எனக்கு கிடைத்த நட்புகளையும், காலத்தால் அவர்களுக்கும் நமக்கும் ஏற்படும் இடைவெளியையும் சொல்லி புரிய வைத்தேன்.

நெடுநேர அழுகையின் பின் அவள் ஃப்ரெண்ட் கணேஷாவிடம் முறையிட்டிருக்கிறாள். கூடிய சீக்கிரம் ஒரு ஃப்ரெண்ட் கிடைக்கவாம்……:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


25 comments:

 1. Oh...that's a tough thing for the kids to understand. Ganesha will her many more good friends soon!

  ReplyDelete
 2. ஆமாங்க நட்பு என்ற அருமையான உணர்வுக்கும் வேறு எதுவுமே இணையில்லை...கண்டிப்பாக உங்கள் மகளுக்கு அருமையான புதிய நட்பு கிடைக்கும்....

  ReplyDelete
 3. ரோஷ்ணிமா, சீக்கிரம் நல்ல சிநேகிதம் கிடைக்கும். பாவம் குழந்தையின் மென்மையான மனம். வாடுவதைக் கண்டு வருத்தம்.
  நீங்கள் கையாண்டவிதம் அருமை ஆதி.

  ReplyDelete
 4. நட்பின் உன்னதமும் நண்பனின் பிரிவு தரும் வலியும் உணரத் தக்கவளாய் தங்கள் மகளின் வளர்நிலையில் தக்கவாறு பங்களித்திருப்பதற்கு பாராட்டுகிறேன் ரோஷ்ணிம்மா !

  ReplyDelete
 5. நன்றாக சொல்லி புரிய வைத்தீர்கள்... இருந்தாலும் உடனே தாங்கிக் கொள்வது சிறிது சிரமம் தான்... காலம் அனைத்தையும் மாற்றும்... விரைவில் புதிய நட்பு கிடைக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. நெடுநேர அழுகையின் பின் அவள் ஃப்ரெண்ட் கணேஷாவிடம் முறையிட்டிருக்கிறாள். கூடிய சீக்கிரம் ஒரு ஃப்ரெண்ட் கிடைக்கவாம்……:))

  குழந்தையின் பிரார்த்தனை விரைவில் நிறைவேறட்டும் ..
  நட்பெனும் நூல் ரசிக்கவைத்தது..!

  ReplyDelete
 7. காலம் மாற்றி விடும்! விரைவில் இன்னொரு நட்பு கிடைக்கும்!

  ReplyDelete
 8. ரோஷ்ணிக்கு வெகு விரைவில் இன்னொரு நல்ல நட்பு கிடைக்கும்.

  ReplyDelete
 9. நாமும் கடந்து வந்ததைச் சொல்லிப் புரிய வச்சீங்க பாருங்க, அங்க நிக்கிறீங்க நீங்க!! டெல்லியிலிருந்து வரும்போது நண்பர்களைப் பிரிந்துதானே வந்தாள், அதைவிட நல்ல நட்பு கிடைத்ததைப் போல மீண்டும் இன்னொரு நட்பூவும் சீக்கிரம் கிடைக்கும்.

  படம் பதிவுக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது.

  ReplyDelete
 10. குழந்தைக்கு சீக்கிரம் நல்ல நெருங்கிய இன்னொரு நட்பு கிடைக்கட்டும். சிறு சிறு அனுபவங்கள்தான் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கின்றன! குழந்தைக்கு அனுபவப் பாடமும் தொடங்கி விட்டது போலும்!

  ReplyDelete
 11. பாப்பாவுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் சீக்கிரம் கிடைக்க என் ஃப்ரெண்ட் முருகன்கிட்ட வேண்டிக்குறேன்ன்னு சொல்லுங்க.

  ReplyDelete
 12. உண்மையான நட்புக்களைப் பிரிவது மிகவும் கஷ்டமே. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 13. விரைவில் அடுத்த பெஸ்ட் ஃப்ரண்ட் கிடைக்க, கவலை மறையும்...

  ReplyDelete
 14. குழந்தை தானே... பக்குவம் வந்ததும் மாறிவிடும்..

  ReplyDelete
 15. ரோஷ்ணிக்கு கூடிய சீக்கிரம் நல்ல ஃபிரண்ட் கிடைக்க ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 16. கூடிய சீக்கிரம் ரோஷ்ணிக்கு புது நட்பு கிடைக்க கணேஷா உதவட்டும்.

  ReplyDelete
 17. ரஞ்சனிம்மா - மிக்க நன்றி.

  ReplyDelete
 18. கணேசன் அருளால் நல்லதொரு நட்புக் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 19. கீதா மாமி - கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 20. குழந்தை மனசுக்கு ஒருகுறையும் வராதுப்பா. நண்பனை இழப்பது மனசுக்குக் கஷ்டம்தான். ஆனால் நட்பை இழக்கவேண்டாமே இந்த கணினி யுகத்தில்! மெயிலைத் தட்டிவிடச் சொல்லுங்கோ.

  ReplyDelete
 21. டீச்சர் - அப்படித் தான் செய்து கொண்டு இருக்கிறாள். தங்கள் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 22. // நெடுநேர அழுகையின் பின் அவள் ஃப்ரெண்ட் கணேஷாவிடம் முறையிட்டிருக்கிறாள். கூடிய சீக்கிரம் ஒரு ஃப்ரெண்ட் கிடைக்கவாம்……:)) //

  உங்கள் குழந்தைக்கு நிச்சயம் ஒரு நல்ல நட்பு விரைவில் கிடைக்கும். அதுவும் ஒரு பெண் குழந்தையின் நட்பாகவே அமைய பிரார்த்தனை செய்கிறேன்!

  ReplyDelete
 23. ஃப்ரெண்ட் கணேஷாவிடம் முறையிட்டிருக்கிறாள். கூடிய சீக்கிரம் ஒரு ஃப்ரெண்ட் கிடைக்கவாம்……:))//
  ரோஷ்ணிக்கு ஃப்ரண்ட் சீக்கிரம் கிடைக்க கணேஷன் அருள் புரிவார்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. வாங்க தமிழ் இளங்கோ ஐயா,

  தங்களின் கருத்துக்கு நன்றி.

  வாங்க கோமதிம்மா,

  தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 25. குழந்தைகள் தங்கள் நட்பை விரைவில் மறக்க மாட்டார்கள்.என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.பதிவுக்கு என் பாராட்டுகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…