Friday, September 27, 2013

நிலா நிலா ஓடி வா! காலம் மாறிப் போச்சு!!!

என்னங்க! சின்னபிள்ளைத் தனமாக நிலா நிலா ஓடி வான்னு பாடறேன்னு நினைக்காதீங்க! நம்மல்லாம் நம்ம காலத்துல இப்படித்தான் பாடியிருப்போம்.



நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேல ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
நடு வீட்டுல வைய்யி
நல்ல துதி செய்யி

கடைசி வரிகளை ஒரு சிலர் மாத்தி சொல்லலாம். ஆனா பாட்டு இது தான்.

ஆனா இப்பப் பாருங்க! இந்த காலத்து குழந்தைங்களுக்கு தகுந்த மாதிரி இருந்த இந்தப் பாடல் என் மகளின் பாடத்தில் உள்ளது. பிடித்திருந்ததால் இங்கு பகிர்கிறேன்.

நிலா, நிலா, ஓடி வா;
நில்லாமல் ஓடிவா
பல காலம் இப்படிப்
பாடிப் பயன் இல்லையே!
மலை மேலே ஏறிநீ
வருவாய் என்றே எண்ணினோம்.
மல்லிகைப்பூக் கொண்டுநீ
தருவாய் என்றும் பாடினோம்.

எத்தனை நாள் பாடியும்
ஏனோ நீயும் வரவில்லை.
சத்தம் போட்டுப் பாடியும்
சற்றும் நெருங்கி வரவில்லை.

உன்னை விரும்பி அழைத்துமே
ஓடி நீ வராததால்
விண்கலத்தில் ஏறியே
விரைவில் வருவோம் உன்னிடம்!

-    அழ. வள்ளியப்பா
                                                                       
என்ன நட்புகளே! இனி நாமும் இப்படிப் பாடுவோமா?….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


15 comments:

  1. நிலா பாட்டு பட்டாக ஜொலிக்கிறது புதுமையாக .
    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. குழந்தைக்கவிஞர் திரு. அழவள்ளியப்பா அவர்களின் புதிய சிந்தனை அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய
    அழ வள்ளியப்பா அவர்களின் கவிதையை
    தங்கள் பதிவின் மூலம் தான் அறிந்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. காலத்துக்கேத்த மாதிரி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பிச்சா நல்லதுதான்!!

    ReplyDelete
  5. நிலாப்பாட்டின் புதிய வடிவம் அருமை..

    ReplyDelete
  6. அட இதுவும் நல்லாத்தான் இருக்கு!!!!

    ReplyDelete
  7. ரொம்ப நன்றாக காலத்துக்கு ஏற்றபடி இருக்குங்க ஆதி.

    ReplyDelete
  8. காலத்துக்கேற்ற மாற்றப் பட்ட பாடல்! நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  9. ஆதி திரு.,அழ .வள்ளியப்பா அவர்களின் பாடல் பகிர்வு அருமை.
    என் பதிவில் நானும் நிலா பாட்டு பகிர்ந்தேன்.

    ReplyDelete

  10. குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா பாடியதாகவே இருந்தாலும், எப்போதும் பாடும் பழைய பாடலில் இருக்கும் வசீகரம் இதில் இல்லை. செயற்கையாக இருக்கிறது.

    ReplyDelete
  11. நிலா பாட்டை ரசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல....

    ReplyDelete
  12. நிஜமான புதுக் கருத்து!
    பழைய பாடல் நமக்குப் பழகி விட்டதால் புதியதை ஏற்றுக் கொள்ள கொஞ்ச நாள் ஆகும்.

    ReplyDelete
  13. ரஞ்சனிம்மா - கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…