Monday, September 16, 2013

பதிவர் திருவிழா – எனது பார்வையில்

பதிவு எழுதுவதை பெருமையாக எல்லோரிடமும் பீற்றிக் கொள்ளும் நான் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்வது என்றால் சொல்லவும் வேண்டுமோ! சென்றவருடம் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. இந்த வருடம் குடும்பத்துடன் கலந்து கொண்டோம். கோடம்பாக்கத்தில் உள்ள என்னவரின் நண்பர் தன் வீட்டிற்கு அருகில் தான் அரங்கம் உள்ளதாக தெரிவிக்க, முதல்நாள் இரவு மலைக்கோட்டை விரைவு ரயிலை ஸ்ரீரங்கத்தில் பிடித்து மறுநாள் அதிகாலை சென்னை வந்தடைந்தோம். நண்பர் வீட்டுக்கு சென்று அவர்களுடன் கொஞ்சம் அளவளாவி விட்டு விழாவுக்கு தயாரானோம்.நண்பர் வீட்டிலிருந்து ஒரு ஆட்டோவை பிடித்து அரங்கத்தினை சென்றடைந்தோம். சென்னையில் ஆட்டோ கட்டணம் மிகவும் மோசம். அநியாயத்துக்கு கேட்கிறார்கள்…..:(( அரங்கத்தின் உள்ளே சென்றவுடனேயே பார்ப்பவர்களிடமெல்லாம் அறிமுகம் செய்து கொண்டோம். திண்டுக்கல் தனபாலன் அவர்கள், புலவர் இராமாநுசம் ஐயா, சென்னை பித்தன் ஐயா, பழனி கந்தசாமி ஐயா, ஸ்கூல் பையன், கவியாழி கண்ணதாசன் அவர்கள், சேட்டைக்காரன் அவர்கள், மதுமதி அவர்கள், நுழைவாயிலில் நின்றிருந்த அகிலா, தென்றல் சசிகலா, எழில் அருள், அபயா அருணா ஆகியோர்….

மோகன்குமார் சார், கணேஷ் சார் ஆகியோரிடம் எனக்கு முன்பே அறிமுகம் உண்டு. ஆதலால் அவர்களிடம் நலம் விசாரிப்புபுலவர் ஐயா, கந்தசாமி ஐயா, சேட்டைக்காரன், மதுமதி ஆகியோரை என்னவருக்கு முன்பே அறிமுகம்…..:) அவர்களை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எங்கள் பெயர்களை நுழைவாயிலில் பதிவு செய்து கொண்டு நானும் ரோஷ்ணியும் உள்ளே சென்று அமர்ந்தோம். காணாமல் போன கனவுகள் ராஜி வந்து அறிமுகம் செய்து கொண்டார். சிறிது நேரத்தில் பாட்டி சொல்லும் கதைகள் ருக்மணி சேஷசாயி பாட்டி வந்தார்கள். அவர்களை என்னவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா சிறப்பாக ஆரம்பமானது. சுரேகா அவர்களின் நேர்த்தியான நடையில் வரவேற்புரை, பதிவர்கள் அறிமுகம், சிறப்புரை, பாமரன் உரை என விழா தொடர்ந்து கொண்டு இருந்தது. ரமணி சார், ஜாக்கி சேகர் போன்று இடையிடையே நிறைய பேரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் என்னவர்.

ஜாக்கி சேகர் அவர்கள் நீங்க தானே பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் பற்றி விமர்சனம் எழுதியதுஎன்று கேட்டார். ஆமாங்க. இன்னும் கூட தொடர்ந்து அவரின் நாவல்களைத் தான் வாசித்து கொண்டிருக்கிறேன் என்றேன். மகிழ்ச்சி. நிறையப் படிங்க என்றார். நான் விமர்சனமாக எழுதுவதில்லை சார் என்றேன். பதிவு செய்ங்க அது தான் முக்கியம் என்றார். அமுதா கிருஷ்ணா அவர்கள் வந்து அறிமுகமானார்கள். பாமரன் அவர்களிடமும் அறிமுகமானோம். கோவை என்றதும் அட! நம்ம ஊர்காரங்கஎங்கே படித்தீர்கள்? எங்கு வசித்தீர்கள்? என்று மகிழ்ச்சிப் பொங்க விசாரித்தார்.

மதிய உணவுக்குப்பின் அங்கிருந்த புத்தக கடையில் தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் சாதனை அரசிகளும், கேபிள் சங்கர் அவர்களின் தெர்மக்கோல் தேவதைகளும், காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் இதுவரை வாசிக்காமல் போன அவர்களின் முதல் புத்தகமான காலச்சக்கரமும், இவைத் தவிர அன்று வெளியான சேட்டைக்காரன் அவர்களின் மொட்டைத்தலையும் முழங்காலும், மோகன்குமார் சாரின் வெற்றிக்கோடுகளும், சங்கவி அவர்களின் இதழில் எழுதிய கவிதைகளும் வாங்கிக் கொண்டோம்.

மதியம் ரஞ்சனிம்மாவை சந்தித்து நிறைய பேசிக் கொண்டோம். மதுமதி அவர்களின் ”90 டிகிரிகுறும்படத்தை பார்த்து மனம் கலங்கினோம். பாராட்டுகள் சார். அடுத்து புத்தக வெளியீட்டு விழாவும் இடையே ஆர்.வீ.எஸ், அநன்யா மகாதேவன், மாதங்கி மாலீ, எங்கள் ப்ளாக் கெளதமன் சார் ஆகியோரையும் சந்தித்தோம். இதில் ஆர்,வீ.எஸ் முன்பே அறிமுகமானவர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தியுடன் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். விழாவில் கலந்து கொண்டு நிறைய பேரை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஏனோ அங்கிருந்து கிளம்பும் போது மனதில் இனி இடைவெளி விடாமல் நிறைய எழுதணும். அதுவும் உருப்படியாக எழுதணும்என்று தோன்றியது….:) பார்க்கலாம்

நண்பர் வீட்டுக்கு வந்து அரட்டை அடித்து விட்டு இரவு உணவை அங்கேயே முடித்து கொண்டு, எழும்பூருக்கு வந்து அதே மலைக்கோட்டை ரயிலை பிடித்து அதிகாலையில் ஸ்ரீரங்கத்துக்கு வந்தடைந்தோம்அடுத்த ஆண்டு விழாவில் சந்திப்போம் நண்பர்களே!


அனைவருக்கும் இனிய பொன் ஓணம் வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


27 comments:

 1. ஆஹா, அனைத்தும் அருமை. நேரில் கலந்துகொண்டது போன்ற திருப்தி அளித்த சுருக்கமான சுவையான பகிர்வு. நன்றிகள்.

  ReplyDelete
 2. இனிய சந்தோச நிகழ்வுகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. பதிவர் திருவிழா நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. சந்திப்பு மெயில் வேகத்தில் போகுதே!!!!!

  ரசித்தேன்.

  எல்லாம் கொடுப்பனை!

  இனிய ஓணம் வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 5. Happy Onam to you, your kid, and of course, your loving husband.

  subbu thatha.
  meenaachi paatti.
  www.subbuthatha.blogspot.com
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
 6. தங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்வளித்தது
  தங்களவரின் போட்டோ பதிவில் முதலில்
  கொஞ்சம் வயதானவரைப் போல இருந்ததாலும்
  தங்கள் எழுத்தில் இருந்த முதிர்ச்சியைக் கொண்டு
  கொஞ்சம் வயதானவர்களாக இருப்பீர்கள் என
  கணித்திருந்தது எவ்வளவு தவறு என
  நேரில் பார்க்கையில்தான் புரிந்தது
  விழாவுக்கு நீங்கள் குடும்பத்தோடு
  அத்தனை தொலைவில் இருந்து வந்திருந்து
  சிறப்பித்ததும் குடும்பத்தோடு ரோஷிணி உட்பட
  பதிவர்கள் என அறிமுகம் செய்து கொண்டதும்
  விழாவுக்கு கூடுதல் பெருமை சேர்த்தது நிஜம்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 7. இனிய பதிவர் சந்திப்புகள்..


  இனிய பொன் ஓணம் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. அன்பு ஆதி உங்கள் அனைவரையும் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்தான். ஆனால் இந்த அழகிய நிகழ்வை ஆதர்சத்தோடு பகிர்ந்திருக்கிறீர்கள்.
  அனைத்துப் பதிவர்களையும் சந்திக்க முடிவதே ஒரு ஆநந்தம். நாம் எல்லோரும் ஒர் இனம் எனும் உணர்ச்சியைப் போன வருடம் நான் பெற்றேன்.பகிர்வுக்கு மிக நன்றிமா.

  ReplyDelete
 9. அருமையான மலரும் நினைவுகள். அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 10. இனிய ஓணம் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பதிவர் சந்திப்பின் இனிமையான நினைவுகளை அருமையாக பகிர்ந்துள்ளீரக்ள்.

  ReplyDelete
 12. பதிவர் திருவிழாவிற்கு வெங்கட் சாருடன் நீங்கள் இருவரும் கலந்து கொண்டதும் உங்கள் அனைவரையும் சந்தித்ததும் மகிழ்ச்சி.. உங்கள் மூவருடனும் குறைந்த நேரம் கூட பேச முடியாதது தான் சற்று வருத்தம்...

  ReplyDelete
 13. எல்லாவற்ரையும் தெளிவாக விரிவாக எழுதியிருக்கிறீர்கள் ஆதி! கூடவே இருந்து பங்கேற்றது போல இருந்தது!

  ReplyDelete

 14. ஒரு ரன்னிங் கமெண்டரி கேட்டதுபோல் இருக்கிறது. ஓணம் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. விரிவான விளக்கமான பகிர்வு.. நன்றி ஆதி.

  ReplyDelete
 16. சந்தித்த அனைவரையும் விடாமல்(பெயரை) குறிப்பிட்டுள்ளது கண்டு வியந்து போனேன் ! நன்றி!

  ReplyDelete
 17. அருமையா பதிவர் விழாவைப் பற்றி எழுதியிருக்கீங்க..கோவைக்காரங்க எனும் முகவரியோடு உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... நானும் பாலகுமாரன் ரசிகை..ஆனால் இப்போதெல்லாம் நாவல் படிக்க நேரம் கிடைப்பதில்லை..எனவே அவரின் அருமையான எழுத்துக்களின் வாசத்தை அவ்வப்போது பகிருங்கள் ரசிக்கிறேன்...

  ReplyDelete
 18. அற்புதம் உங்கள் கட்டுரை!
  கலந்து கொள்ள முடியாத எங்களைப் போன்றோருக்கு வரப்பிரசாதம்!

  ReplyDelete
 19. மகிழ்ச்சி நன்றி

  உங்கள் மூவருடனும் அதிக நேரம் பேசமுடியலை ; புத்தக வெளியீட்டு விழா என்பதால் சற்று டென்ஷன்..

  ReplyDelete
 20. பதிவர் விழாவில் கலந்துகொண்ட அனுபவத்தை கச்சிதமா சுருக்கமாச் சொன்னாலும் சொல்லவேண்டியவற்றை அழகா தெளிவா சொல்லிமுடிச்சிட்டீங்க. நிறைவான அனுபவப் பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 21. Nice experience..

  I didn't make it to attend..
  (# am I a blogger.. who doesn't write these days ?)


  Well, when have you shifted to SRGM from NDLS ?

  ReplyDelete
 22. காலையில் வராததால், பலரை சந்திக்க முடியவில்லை.
  உங்களையும், உங்களவரையும் ரோஷ்ணி குட்டியையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி, ஆதி!
  எல்லோரும் எழுதிவிட்டார்கள், நான்தான் இன்னும் எழுதவில்லை, பதிவர் சந்திப்பு பற்றி. எப்போது எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை. விரைவில் எழுதி விடுகிறேன் - அடுத்த சந்திப்பிற்குள்!

  ReplyDelete
 23. பதிவர்கள்சந்திப்பின் மகிழ்ச்சி பகிர்வில் .
  நாங்களும் கண்டு மகிழ்ந்தோம்.

  ReplyDelete
 24. பகிர்வுக்கு நன்றி.
  நாங்களும் சென்னை தான் நான் வருகிற நேரம் யாரையும் சந்திக்க முடியவில்லை.

  ReplyDelete
 25. இப்ப நீங்க டெல்லியில் இல்லையா?

  ReplyDelete
 26. பதிவிற்கு பின்னூட்டமளித்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல....

  ஜலீலாக்கா - நான் ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஒண்ணே கால் வருடமாகிவிட்டது....:)

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…