Tuesday, September 10, 2013

பண்டிகைகளும் நலம் விசாரிப்பும்!என்ன நட்புகளே! எல்லாரும் எப்படியிருக்கீங்க? பதிவுலகம் பக்கம் வந்து ஏறக்குறைய ஒரு மாதமாகி விட்டது. அப்பப்போ இப்படித் தான் ஆகி விடுகிறது. இனிமேலாவது தொடர்ந்து வலம் வரணும். என்னவரின் தமிழக வருகை, உறவினரின் திருமணம், பதிவர் திருவிழா, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என பிஸியாக இருந்து விட்டேன். இதற்கிடையில் என் வலைப்பூவின் மூன்றாம் பிறந்தநாளும் சத்தமில்லாமல் முடிந்து விட்டது. சென்ற வருடம் ஸ்ரீரங்கத்துக்கு வந்து நெட் கனெக்‌ஷன் கிடைக்க தாமதமானதால் கொண்டாட முடியாமல் போய் விட்டது…..:) சரி விடுங்க! அடுத்த வருடம் தடபுடலா கொண்டாடிலாம்…..:)) நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நான் உங்க அனைவரின் ஆதரவை வேண்டுகிறேன்.

எங்க வீட்டில் எடுத்த பண்டிகை தினப் புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு….
சென்னைப் பயணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சில இடங்களுக்கு சென்று வந்தோம். அவைப் பற்றி அடுத்தடுத்த பகிர்வுகளில்…… பயப்படாதீங்க! பயணத்தொடர் பெரிதாகவெல்லாம் இருக்காது….:)) என்னவருக்கும் எனக்கும் நடந்த பதிவுகள் பாகப் பிரிவினையில் சென்னை பயணத்தை எனக்காக பங்கீடு செய்து கொடுத்துவிட்டார்….:)) அதனால உங்க அனைவரின் வரவேற்பு இருந்தால் கொஞ்சமா எழுதலாம்னு நினைக்கிறேன்….:))நாளை மறுநாள் முதல் ரோஷ்ணிக்கு காலாண்டுத் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளது. நாம தான் அவங்கள விட டென்ஷனா இருப்போமே….:)) உங்க எல்லாரோட பதிவையும் நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்….

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

22 comments:

 1. பதிவிடவில்லையே என்று வருத்தம் வேண்டாம் சகோதரி !
  உங்கள் கணவர் ஒரு ஏழு எட்டு பதிவு போட்டுவிட்டார்.
  ஜாயிண்ட் அக்கவுண்டில் கணக்கு ஏறிவிட்டது.ஹி ஹி

  ReplyDelete
 2. ரோஷ்ணி அவர்களுக்கு நன்றாக சொல்லிக் கொடுங்கள்... பதிவுகள் அப்புறம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. பதிவர் சந்திப்பில் குடும்பப்பதிவர்களாக வந்திருந்து
  விழாவுக்கு அதிக சிற்ப்புச் சேர்த்தது அனைவருக்கும்
  அதிக மகிழ்வளித்தது.
  வாழ்த்துக்கள்
  சென்னை குறித்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து..
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 4. ரோஷ்ணி காலாண்டு தேர்விலும் சிறந்து விளங்க
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அழகான படங்களுடன் அற்புதமான பதிவு.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  செல்வி. ரோஷ்ணி காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியிலேயே முதல் மாணவியாகத் திகழ வாழ்த்துகிறோம்.

  ReplyDelete
 6. வலைப்பூவின் மூன்றாம் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் ஆதி.
  விழா படங்கள், ரோஷ்ணி படம் எல்லாம் அழகாய் நன்ராக இருக்கிறது.

  ரோஷ்ணி காலாண்டுத் தேர்வுகளை நன்கு செய்வாள் டென்ஷன் வேண்டாம் ஆதி.

  ReplyDelete
 7. பாப்பா காலாண்டு தேர்வில் வெற்றி பெறவும், நீங்க அழகா பதிவிடவும் வாழ்த்துகள்

  ReplyDelete
 8. அதெல்லாம் ரோஷ்ணி பரீட்சையில் வெளுத்துக்கட்டிருவாள். கவலையே படாதீங்க ஆதி.

  கொண்டாட்ட மாதத்தில் வரும் எல்லாப் பண்டிகைகளுக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. சென்னைப் பயணப் பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்
  வெல்லக் கொழுக்கட்டை மட்டும்தானா?பார்த்தாலே .இனிக்கிறதே

  ReplyDelete
 10. அதனால உங்க அனைவரின் வரவேற்பு இருந்தால் கொஞ்சமா எழுதலாம்னு நினைக்கிறேன்….:))
  //விரிவாகவே எழுதுங்க ஆதி.ரோஷ்னி க்யூட்!!

  ReplyDelete
 11. முதலில் படிப்பு... அப்புறம் பதிவு.... நன்றி சகோதரி...

  ReplyDelete
 12. பரீட்சைக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. பதிவர் சந்திப்பில் தங்களை , குடும்பத்தோடு, அதுவும் பதிவர் குடும்பமாக சந்தித்தது மிக்க மகிழ்ச்சி!

  அழகான படங்களுடன் அற்புதமான பதிவு.

  ReplyDelete
 14. அன்பு ஆதி,மூன்று வருட பூர்த்திக்கு வாழ்த்துகள்.
  சுற்றுலா வரும்போது கிடைக்கும் விஷயங்களிப் பகிர்ந்தால் தானே எங்களுக்கும் மகிழ்ச்சி. ரோஷ்ணிகுட்டி சுட்டிபோல் அழகாக இருக்கிறாள். அவள் தேர்வுகள் நல்லபடியாக நடக்கட்டும். நல்ல மதிப்பெண்கள் எடுப்பாள் கவலை வேண்டாம்.
  கிருஷ்ணாஷ்டமி,பிள்ளையர் சதுர்த்தி படங்கள் பட்டுப் போல அழகாக இருக்கின்றன.

  ReplyDelete
 15. நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வலைப்பூவிற்கு வாழ்த்துகள்.!

  ReplyDelete
 16. இந்த பதிவை படித்து கருத்திட்டு எனக்கும் ரோஷ்ணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete
 17. நான்காம் வருட நுழைவிற்கு வாழ்த்துக்கள்.பண்டிகை கொண்டாட்டம் பகிர்வு அருமை.ரோஷ்ணி படம் பகிர்வு மகிழ்ச்சி.கால் ஆண்டு பரீட்சைக்கே இப்படியா? பாவம் ரோஷ்ணி.

  ReplyDelete
 18. மூன்றாவது வருஷ நிறைவுக்கு வாழ்த்துகள். பாகப்பிரிவினை ஆயிடுச்சில்ல, நிதானமா எழுதுங்க! :)))) நல்லவேளையா இங்கே அந்தப் போட்டி எல்லாம் இல்லை. ரோஷ்ணி இளைச்சாப்போல் இருக்கா. :))))பிரசாதம் எல்லாம் தாமதமா வந்ததாலே ஆறிப் போச்சு. அடுத்த முறை சுடச் சுட வந்து எடுத்துக்கறேன். படமெல்லாம் நீங்க எடுத்ததா? ரோஷ்ணியா?

  ReplyDelete
 19. நான்காம் வருடத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல வருடங்கள் பல பதிவுகள் எழுதி எங்களையெல்லாம் மகிழ்விக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வலைப்பூவிற்கு வாழ்த்துகள்.!

  ReplyDelete
 21. ஆசியா உமர் - நன்றிங்க.

  கீதா மாமி - கோகுலாஷ்டமி படங்களை அவரும், பிள்ளையார் சதுர்த்தி படங்களை நானும் எடுத்தேன்...:) நன்றி மாமி.

  ரஞ்சனிம்மா - நன்றி.

  மாதேவி - நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…