Saturday, August 10, 2013

கொள்ளிடமும், மாலோலனும்!

நேற்று தோழி குடும்பத்துடன் , கரை புரண்டோடும் கொள்ளிடத்திற்கு சென்றிருந்தோம். வறண்டு கிடந்த காவிரி கரைபுரண்டோவது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது. குழந்தைகள் இப்பவே குளிக்க வேண்டும் என்று அடம்....:) இரண்டு நாள் போகட்டும்.....அப்புறம் வந்து குளிக்கலாம் என்று தண்ணீரில் கால் நனைத்து விட்டு, இடதுபுறம் இருந்த மண்டபத்திற்கு தண்ணீரில் இறங்கி அங்கு போய் சிறிது நேரம் நின்று விட்டு திரும்பி வர மனமில்லாமல் திரும்பி வந்தோம்..... குழந்தைகள் மட்டுமல்ல நாங்களும் தான்.....:))





நீச்சல் போட்டி நடக்குது



கிழக்கே போகும் ரயில்






இவர் தான் மாலோலன். வயது பதினேழு. சேலையூர் அஹோபில மடத்திலிருந்து அழகியசிங்கருடன் ஸ்ரீரங்கத்திற்கு வந்துள்ளார். அங்கு பாகனை பாடாய்படுத்தும் இவர் ஸ்ரீரங்கத்திற்கு வந்து சமத்தாயிட்டாராம்...:) காபி, டீ, கூல் டிரிங்ஸ், பிஸ்கெட் என எதுவாயிருந்தாலும் கபளீகரம் செய்கிறார். டேப் ரிக்காடரில் பாட்டு கேட்கிறார்....:))










மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

21 comments:

  1. வறண்டு கிடந்த காவிரி கரைபுரண்டோவது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது


    ஸ்ரீரங்கத்திற்கு வந்து சமத்தாயிட்ட யானை அருமை ..

    படங்கள் மன நிறைவைத் தந்தன..

    எவ்வளவு நாளாயிற்று இப்படி காவிரியையைப்பார்த்து .. பொங்கிப்பிரவகிக்கும் காவிரி உற்சாகம் தருகிறாள்..!

    ReplyDelete
  2. அன்பு ஆதி காவிரியின் படங்களுக்கு நன்றி.
    எக்காரணம் கொண்டும் குழந்தைகளைத் தண்ணீரில் விட வேண்டாம்.

    ReplyDelete
  3. நீரோடு காவிரியைப் பார்க்கவாகவேணும்
    அவசியம் திருச்சி வரவேண்டும் போல் உள்ளது
    படங்களுடன் பகிர்வு அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மிகவும் குளிச்சியான் மற்றும் குதூகலமான பதிவு.

    மனதை மகிழவைக்கும் அருமையான படங்களுடன் கூடிய மிகச் சிறப்பான பதிவு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
  5. குதூகலித்துச் சுழித்தோடும் கொள்ளிடமும், அதில் குதியாட்டம் போடும் சிறுவர்களும், வைக்கோற்கிரீடம் சூட்டிக்கொண்டு அழகாய் போஸ் கொடுக்கும் மாலேலனும் மனங்கொள்ளை கொண்ட அழகு. பகிர்வுக்கு நன்றி ஆதி.

    ReplyDelete
  6. கொள்ளிடக்கரைக்குப் போகணும்னு தினம் தினம் சொல்லிட்டு இருக்கேன். இன்னும் நேரம் வாய்க்கலை. அட, மாலோலன் தலை அலங்காரம் படு ஜோரா இருக்கே! :)))) இவர் வந்திருப்பது இப்போத் தான் தெரியும். இங்கே காவிரிக்கரைக்கும் இவர் வந்திருந்தாரோ! ஆமாம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. நிறைந்தோடும் கொள்ளிடமும்,நின்றாடும் மாலோலனும் மனதுக்கு நிறைவு!

    ReplyDelete
  8. காவிரியை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
    மாலோலன் மிக அழகு. காணொளியில் அவ்ர் செய்யும் குறும்புகளை பார்த்து குழந்தைகள் பேசிக் கொள்வது அருமை.
    படங்கள் பகிர்வுக்கு நன்றி ஆதி.

    ReplyDelete
  9. கொள்ளிடம் படங்கள் அருமை... ஆஹா... அழகு....

    மாலோவன் அழகு....

    ReplyDelete
  10. காஞ்சு போயிருந்த கொள்ளிடத்தை பாத்து மனசு வலிச்சிருந்தது. உங்க போட்டோ மனதுக்கு சந்தோஷமா இருக்கு. ரொம்ப நாளைக்கப்புறம் ஆடிபெருக்குக்கு மக்கள் மகிழ்ச்சியா இருந்ததை டீவியில பாத்தேன்.

    ReplyDelete
  11. படங்களுடன் கூடிய பதிவு அருமை! அருமை!

    ReplyDelete
  12. Kollidamum Malolanum video katchi arumai.

    ReplyDelete
  13. அனைத்து படஙக்ளும் மிக அருமை

    ReplyDelete
  14. நிறைந்து ஓடும் காவிரியைப் பார்க்க மனமும் நிறைந்து போயிற்று.
    நிறைய படங்கள் போட்டு எனது காவிரி தாகத்தை தீர்த்ததற்கு நன்றி!

    ReplyDelete
  15. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கூறி
    சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..

    ReplyDelete
  16. காவிரிக்கு அம்மா மண்டபம் போகலாம் ..
    கொள்ளிட கரைக்கு எப்படி போவது .... ஏதேனும் படித்துறை உண்டா ?

    ReplyDelete
  17. கருத்துரைத்துள்ள அனைவருக்கும் நன்றிகள் பல....

    ssk- காவிரிக்கு அம்மா மண்டபம் போல் கொள்ளிடக்கரை படித்துறையும் உண்டு. ஸ்ரீரங்கத்தில் தான்.

    ReplyDelete
  18. கொள்ளிடம் படங்கள் அருமை.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…