அல்லம் பச்சடியா! இது
என்ன புதுசா இருக்கே என்று நினைக்கிறீர்களா? ஒன்றும்
புதுசில்லைங்க.. இஞ்சிப்
புளி, புளி இஞ்சி என்று சொல்வார்களே… அது தான்.
ஆந்திராவில் இது அல்லம் பச்சடி…:)
தெலுங்கில் அல்லம் என்றால் இஞ்சி. ஆந்திர
செய்முறை வேறு. நாம் இப்போது செய்யப் போவது நம்முடைய வழக்கமான முறை தான். கேரளாவிலும் இது மிகவும் பிரபலம்.
தயிர் சாதத்துக்கு தொட்டுக்
கொண்டு சாப்பிட இது மிகவும் தோதான ஜோடி. வாங்க செய்முறை பார்க்கலாம்…
தேவையானப்
பொருட்கள்:-
இஞ்சி – 100 கிராம்
பச்சை மிளகாய் –
7 அல்லது 8
புளி – எலுமிச்சையளவு
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி –
சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு
நல்லெண்ணெய் –
தேவையான அளவு
கடுகு – ½ தேக்கரண்டி
செய்முறை:-
இஞ்சியை தோல் சீவி
நன்கு கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில்
வாணலியை வைத்து, எண்ணெய் சூடானதும், கடுகு தாளித்துக்
கொள்ளவும். பின்பு பச்சை மிளகாயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். அடுத்து இஞ்சியை சேர்த்து வதக்கி
கொள்ளவும். பின்பு புளியை கரைத்து விட்டு உப்பு, மஞ்சள்பொடி,
வெல்லம் சேர்த்து நன்கு கொதித்து கெட்டியானதும்
இறக்க வேண்டியது தான். சுவையான இஞ்சிப் புளி தயார்.
ஆந்திர செய்முறை :-
இஞ்சி, புளி, வரமிளகாய், உப்பு,
வெல்லம் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்க வேண்டியது தான். இது தான்
அல்லம் பச்சடி…:) இதில் காரம் தூக்கலாக
இருக்க வேண்டும். இந்த முறையில்
நான் இருமுறை செய்து பார்த்திருக்கிறேன்.
என்ன நட்புகளே! உங்கள்
வீட்டிலும் இது போல் இரு முறையிலும் செய்து பார்த்து சுவையுங்கள்.
இஞ்சியை பொடியாக
நறுக்கி உப்பு, எலுமிச்சை சாறு விட்டு ஒரு பாட்டிலில்
வைத்துக் கொண்டு,
அவ்வப்போது வாயில் போட்டுக் கொள்ளலாம். பித்தத்தை
குறைக்கும். நன்கு ஜீரணமாகும். பசியைத்
தூண்டும்.
மாங்காய் இஞ்சி
கிடைக்கும் போது அதையும் இது போல் பொடியாக நறுக்கி உப்பு, எலுமிச்சை சாறு
விட்டு கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம்
தாளித்து வைத்துக் கொண்டால் மோர் சாதத்துக்கு அருமையாக இருக்கும். செய்து பாருங்கள்.
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
அருமையாக இருக்கும்.
ReplyDeleteஅடிக்கடி செய்வதுண்டு..
”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி”ன்னு ஒரு பழமொழியே உண்டு.
ReplyDeleteமோர்/தயிர் சாதத்துக்குஇது மிகவும் சூப்பராக இருக்கும்.
வெல்லப்பச்சிடி தான் நான் தொடவே மாட்டேன்.
இந்த அல்லம் பச்சிடி [புளி இஞ்சி, புளி மிளகாய்] என்றால் நிறைய சாப்பிடுவேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
இரண்டு செய்முறையையும் கொடுத்து அசத்திடீங்க. சிலபேருக்கு இஞ்சி கண்ணில் தெரிந்தால் சாப்பிட மாட்டார்கள். எங்கள் வீட்டில் எல்லாவற்றிலும் இஞ்சியை துருவி சேர்ப்பேன்.
ReplyDeleteஅதனால் நான் இரண்டாம் வகையைத்தான் செய்யப் போகிறேன்.
செய்முறை குறிப்பிற்கு நன்றி.
இதேபோல வெறும் பச்சை மிளகாய் போட்டு செய்து தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும்.
எங்கூர்ல இஞ்சியை வதக்கி அரைத்தும் வெல்லப்பச்சடி செய்வோம். இனிப்பும் காரமுமாக அசத்தும். அதிக காரம் வேண்டாம்ன்னா தயிர் சேர்த்து இஞ்சி தயிர்ப்பச்சடியும் செய்யலாம்.
ReplyDeleteஅல்லம் பச்சடி ஜூப்பரு. செஞ்சுர வேண்டியதுதான்.கொஞ்சம் இஞ்சித்தொக்கு மாதிரி இருக்குமோ!!
அல்லம் பச்சடி மிக அருமையாக இருக்கிறது ஆதி.
ReplyDeleteசுவையான அல்லம் பச்சடி.
ReplyDeleteஇங்கு ஃப்ரஷ்ஷாக இஞ்சி கிடைக்கும். உடனே செய்துபார்க்கிறேன். நன்றி ஆதி.
ReplyDeleteபுளி இஞ்சி அல்லம் நன்றாக இருக்கிறது. புளி மீளகாய் செய்வதுண்டு. காரம் ஒத்துக் கொள்ளாததால் செய்வதில்லை. நல்ல குறிப்பு ஆதி.
ReplyDeleteஅல்லம் பச்சடியை சுவைத்து, கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteபுளி மிளகாய் என் அம்மா கையால் செய்து நானும் ருசித்திருக்கிறேன். இந்த பதிவை எழுதும் போது புளி மிளகாய் குறிப்பு கொடுக்க மறந்து விட்டேன்...:)
அல்லம் பச்சடி சூப்பர். அதுவும் பெசரட்டுக்கு ஏத்த ஜோடி. :))
ReplyDeleteபுதுகைத் தென்றல் - பெசரட்டுக்கு ஜோடியா! நல்லது. நன்றிங்க.
ReplyDeleteஎதுவானாலும் ஓணம் சத்ய இதில்லாமல் ஆகாது:-)
ReplyDeleteஇஞ்சியை, தோல் சீவிட்டு காரட் துருவி அட்டாச்மெண்ட் போட்டு ஃபுட் ப்ராஸஸரில் போட்டுருவேன்.