Monday, July 8, 2013

தயிரின் கதை தொடர்ச்சிஎன் சோகக் கதையை கேளுங்க….. பதிவில் என் நிலமையை தெரிந்திருப்பீங்க… இல்லையென்றால் போய் பார்த்துட்டு வாங்க….:) (விளம்பரம் தான்….:)) அதன் தொடர்ச்சி இதோ…

மிகவும் கவலைப்பட்டு கொண்டிருந்த நான் தயிர் உறையாத பிரச்சனையை உங்க எல்லாரிடமும் சொன்னதில், ஏகப்பட்ட தகவல்கள், டிப்ஸ்கள், அறிவுரைகள் கிடைத்தன. அனைவருக்கும் நன்றிகள் பல…. உங்க எல்லாரின் யோசனைகளையும் எனக்கு ஒத்து வரும் போல் எடுத்துக் கொண்டு, செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். தற்போது தயிர் நன்றாக உறைந்து என் வயிற்றில் பாலை வார்த்து விட்டது! (ச்சீ!!! தமிழ் சினிமாவெல்லாம் பார்த்தா இப்படித் தான்)

இப்போ உறையாத காரணத்தை தெரிந்து கொள்ள வருகிறீர்களா? (அது தான் வந்துட்டோம்ல….ன்னு சொல்றது காதுல விழுது….:))) இருக்கும் இருவரில் தயிர் சாப்பிடும் ஒரே ஜீவன் நான் தான். அதனால் தயிர் தினமும் உறைக்கூற்றுவது இல்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தான்… மீதமான பாலை ஏடுடன் ஒரு பாத்திரத்தில் விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு மறுநாளும் மீதமாகும் பாலோடு விட்டு சூடுபடுத்தி உறைக்கூற்றிக் கொண்டிருந்தேன். அப்படி உறைக் கூற்றினால் இரண்டு பாலும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் சூடு பற்றாமல் சரியாக உறையாமல் போயிருக்கிறது. இது தான் தகராறு செய்ததன் காரணம்.. கண்டு பிடித்து விட்டேன்……வெற்றி…வெற்றி…:))

மாமியார் தான் ஒருநாள் கேட்டார்….எப்படி உறைக்கூற்றினாய் என்று….அப்போது தான் சொன்னேன். அன்றன்று மீதமாகும் பாலை சிறிய கிண்ணமானாலும் விட்டு வைத்து உறைக்கூற்றிப் பார் என்று சொன்னார். அதன்படி இப்போது சரியாக உறைகிறது. கோமதிம்மா சொன்னபடி ஆடாமல், அசையாமல் வைத்து உறைக்கூற்றுகிறேன்… பாலை நன்றாக ஆற்றி விட்டு உறைக்கூற்றுவதில் தான் ஒரு பிரச்சனை…(ஸ்ஸ்ஸ்.. அப்பப்பா தாங்க முடியலடா)  

அது போக நான் மாடர்ன் டைப் அல்ல…. இன்னும் பழைய காலம் போல் (அப்போ நீ பாட்டியா கேட்கக் கூடாது) வெண்ணெய் வீட்டிலேயே எடுத்து நெய் காய்ச்சி வைத்துக் கொள்கிறேன்…:)) கடையில் நெய் வாங்குவதே இல்லை. வீட்டில் எடுக்கும் நெய் தான். ஏறக்குறைய திருமணமாகி தில்லி சென்றதிலிருந்தே இந்த பழக்கம் தான். தயிர் ஏடுடன் சாப்பிட என் கணவருக்கு தான் பிடிக்கும்…) இருந்தாலும் எவ்வளவு சாப்பிடுவது! அங்கு திக்கான ஏடு கிடைக்கும். மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ நெய்யாவது கிடைக்கும். இங்கு வந்தும் அந்த பழக்கத்தை விட்டு விட வில்லை. அதனால் ஏடுடன் சூடுபடுத்தி உறைக்கூற்றி விடுகிறேன்….

கீதா மாமி, ஸாதிகா, அமைதிச்சாரல் விஷயம் தெரிந்து விட்டதா? அப்பாடா உங்க மண்டையெல்லாம் உடையாமல் பதிவு போட்டு காப்பாற்றி விட்டேன்…:))
நேயர் விருப்பமாக காரணத்தை பதிவிடும்படி கேட்ட சேஷாத்ரி சாருக்கு நன்றி…:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

23 comments:

 1. பதிவும் மனதில் உறைந்துவிட்டது ..!@

  ReplyDelete
 2. அப்பாடா..! வழி கிடைத்து விட்டது...!

  ReplyDelete
 3. ஏடு இருந்தால் மறுநாள் பாலுடன் சேர்த்தாலும் உறையுமே கோவை2தில்லி. அந்த ஏட்டைத் தனியாகச் சேர்த்து வைத்தாலும் அதில் கொஞ்சம் மோரைச் சேர்த்து ஒரு இரண்டு மணி நேரம் வைத்துவிட்டுப்பின்னர் அதையே உறை ஊற்றலாம். அல்லது அந்த ஏட்டைக் கடைந்து வெண்ணெய் எடுக்கலாம். நானும் வீட்டில் தான் வெண்ணெய் எடுக்கிறேன். தயிர் நன்கு உறைவதால் அதன் மேல் படியும் ஏடை எடுக்கப் பிரச்னை இல்லை. உறைமோர் இல்லை எனில் ஏட்டையே அரை டீஸ்பூன் எடுத்துப் போட்டு வேலையை முடித்துவிடுவேன். ஊர்களுக்குச் செல்கையில் பாலைக் காய்ச்சி ஆற வைத்து அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு வந்து வெளியே எடுத்து சூடு பண்ணாமலேயே உறை ஊற்றி இருக்கேன். தோய்ந்துவிடும். :)))))))

  ReplyDelete
 4. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா! ஒரு வழியா பிரச்சனை ஓய்ந்ததா?!

  ReplyDelete
 5. ’சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்’ என்பது போலத்தான் தயிரின் கதையும்.

  >>>>>

  ReplyDelete
 6. //இராஜராஜேஸ்வரி said...
  பதிவும் மனதில் உறைந்துவிட்டது ..!//

  ஒரே வரியில் எவ்வளவு அழகாகக் ’கட்டித்தயிர்’ போல சமத்தாச் சொல்லிட்டாங்கோ!

  வாக்தேவி என்றால் வாக்தேவியே தான். ;))))))

  கட்டிச்சமத்து தான் !

  ReplyDelete
 7. கட்டித்தயிர் இப்போது வெற்றிகரமாக தயாராவதற்கு வாழ்த்துக்கள் ஆதி!

  நான் கறிவேப்பிலையை சேர்ப்பது உடம்பிற்கு நல்லதென்பதற்காகவும் வசனைக்காகவும் தான்.

  ReplyDelete
 8. பால், தயிர், மோர் சம்சாரிகள் வீட்டில் எப்போதும் நிறைய ஸ்டாக் இருக்கணும். அதை நிர்வகிப்பதும் மிகவும் கஷ்டம் தான்.

  பழைய மோர், புது மோர், மோர்க்குழம்பு வைக்கவெனப் புளிச்ச மோர், பிடிக்காதவங்களுக்காக புளிக்காத மோர், புதுப்பால், பழைய பால், உறக்கூத்தினது, உறக்கூத்த வேண்டியது என ஏகப்பட்ட பாத்திரங்களில் ஃப்ரிட்ஜ் இல் இருக்கும். மிகவும் குழம்பித்தான் போய் விடும்.

  அதுவும் மாமியார் + நிறைய நாட்டுப்பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். யாராவது ஒருத்தர் பொறுப்பா இவற்றை நிர்வகிக்கணும்.

  சமையலும், அப்படியே. ஆளாளுக்கு சமைக்கிறேன் என ஆளுக்குக்கொஞ்சம் உப்பைப் போட்டால், குழம்பு, கூட்டு, ரஸம் என்ன ஆகும்?

  தொடர்ந்து இதுபோல சுவாரஸ்யமாக எழுதுங்கோ.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. உறையாத பிரச்சினைக்கு முற்றுப்புள்ளை வைத்து உறைய வைத்துவிட்டீர்கள்...

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. சாதாரண தயிரில் இத்தனை விஷயம் இருக்கா? ஆஹா!

  ReplyDelete
 11. பிரச்சனை தீர்ந்தா சரி...

  ReplyDelete
 12. தயிர்ப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததா? இனிமேல் ஏதாவது இது சம்பந்தமாக சந்தேகம் வந்தால் தயங்காமல் உடனே......என்னைக் கேட்காதீர்கள். கீதா மேடம் கிட்ட கேட்டுக் கொள்ளுங்கள்! :))

  ReplyDelete
 13. நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் பிரச்சனையை அலசி, பிரச்சனைக்குரிய மூலத்தை அலசி ஒருவழியாக தயிர் உறையவைக்கும் பக்குவத்தை அறிந்ததோடு எங்களுடனும் பகிர்ந்துகொண்டுவிட்டீர்கள். நன்றி ஆதி.

  ReplyDelete
 14. அவரை டில்லியில் தனியா விட்டுடு ஸ்ரீரங்கத்தில் என்ன செய்றீங்க??

  ReplyDelete
 15. ஹப்பாடா.. வெற்றிவாகை சூடியமைக்குப் பாராட்டுகள் ஆதி :-)

  புதுப்பால், பழையபால் ரெண்டையும் சேர்த்து கொதிக்க விட்டு, ஆறினப்புறம் ஊற்றினாலும் உறைகிறது ஆதி. எங்க வீட்டில் மகள் தயிர்ப்பிரியை. அப்படியே சாப்பிடும் ரகம். தனக்கு வேண்டிய அளவு தயிரை தானே ஒரு பாத்திரத்தில் உறை ஊற்றிக்கொள்வாள். அதில் கவனித்ததுதான் இது :-)))

  ReplyDelete
 16. ஸ்ஸ்..அப்பாட..பிராப்ளம் சால்வ்ட் இல்லியா ஆதி.உங்க மெதடை நானும் பாலோ பண்ணுகிறேன்.

  ReplyDelete
 17. அப்பாடா! எங்களுக்கெல்லாம் பெரிய நிம்மதி.
  வடக்கே கிடைக்கும் தயிர் ரொம்பவும் கெட்டியாக இருக்கும், இல்லையா? அங்கு கிடைக்கும் லஸ்ஸி, குல்பி ஐஸ்க்ரீம் எல்லாமே ஒரு தனி சுவை!

  ReplyDelete
 18. நன்றி! பதிவிடும்படி கேட்ட சேஷாத்ரி சாருக்கும் பதிவினைத் தந்த உங்களுக்கும்.

  ReplyDelete
 19. நீயா நானா நிகழ்ச்சி தினம் காலை 10 மணிக்கு விஜய் சேனலில் வருகிறது. அதை தான் நான் பார்ப்பேன்.பழைய நிகழ்ச்சி தான் ஒளிப்பரப்பாகும்.

  ReplyDelete
 20. ஒருவழியாக தயிர் உறைந்ததை உரைத்த விதம் கண்டு உள்ளம் மகிழ்ந்தது! நேயர் விருப்பத்தை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி! நன்றி உரைத்த அனைவருக்கும் என் நன்றி!

  ReplyDelete
 21. கருத்துரைகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

  தற்போது பிரச்சனை இல்லாமல் சமர்த்தாக உறைகிறது என்பதே பெரிய விஷயம் அல்லவா....:)

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…