Friday, July 26, 2013

என் இனிய கணினியே - என் முதல் கணினி அனுபவம்

என்னுடைய கணினி அனுபவங்களைப் பற்றி எழுதச் சொல்லி தோழி கீதமஞ்சரி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள். இந்த பதிவு எழுத காரணமாக இருந்த அவர்களுக்கு முதற்கண் என் நன்றி. இன்றைய உலகில் கணினி இல்லாமல் எதுவுமில்லை என்கிற அளவுக்கு நாம் இருக்கிறோம். ஆரம்பம் முதலே கணினியை கற்றுக் கொள்வதில் எனக்கு எந்த வித பயமோ, தகராறோ இருந்ததில்லை.

பள்ளி நாட்களில் கணினி பற்றி எதுவும் எனக்கு பரிச்சயமில்லை. பத்தாவது முடித்தவுடன் விடுமுறையில் தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் டைப் ரைட்டிங் சேர்ந்தேன். அப்போது அப்பா சொன்ன காரணம் பிற்காலத்தில் கணினியில் டைப் பண்ண சுலபமாக இருக்குமென்று.  ஏறக்குறைய ஒரு மாதம் சென்ற பின் எனக்கு MERITல் GOVERNMENT POLYTECHNIC-ல் D.M.E படிக்க இடம் கிடைத்தது. இனி டைப் ரைட்டிங் தேவையில்லை என்று அப்பா சொன்னதால் அதை தொடரவில்லை.நான் D.M.E அதாவது DIPLOMA IN MECHANICAL ENGINEERING படிக்கும் போது மூன்றாம் வருடத்தில் ஒரு செமஸ்டரில் கணினி பற்றிய பாடங்கள் வந்தன. அப்போது PRACTICAL வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று கணினியை காண்பித்தார்கள். MS-DOS, LOTUS, BASIC ஆகிய மொழிகளை பற்றிய அங்கு சிறு அறிமுகங்கள் கிடைத்தன. அப்போது வழக்கத்தில் இருந்த FLOPPY மூலம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம் என்றும் தெரிந்து கொண்டேன்.

DIPLOMA முடித்த கையோடு நானும் என் தோழி கீதாவும் எங்கள் வீடுகளில் கெஞ்சி கூத்தாடி கோவையின் பிரபலமான PSG INSTIUTE OF TECHNOLOGY ல் AUTOCAD 2000 கோர்ஸுக்கு பணம் கட்டி சேர்ந்தோம். கோவையின் பிரபலமான கல்லூரியில் சேர்ந்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், அங்கிருந்த வெளிநாட்டினருடன் நாங்களும் கற்றுக் கொள்கிறோம் என்று மறுபுறம் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. DIPLOMA படிக்கும் போதே எனக்கு MACHINE DRAWING ல் மிகுந்த ஈடுபாடு உண்டு. வீட்டிலும் எப்போதும் DRAFTER வைத்துக் கொண்டு வரைந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். அதே MACHINE DRAWING கணினியில் 2D, 3D மூலம் வரைகிறதென்றால் கசக்குமா என்ன? முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டு சான்றிதழ்களைப் பெற்றேன்.அதன் பிறகு சென்னைக்கு சென்றேன். அங்கு தி.நகரில் என்னுடைய உறவினரின் சென்டரில் CNC (COMPUTER NUMERICAL CONTROL) TURNING AND MILLING கோர்ஸ் சேர்ந்தேன். லேத்தில்(LATHE) மாங்கு மாங்கென்று வேலை செய்து உருவாக்க வேண்டிய உதிரி பாகங்களை, கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் சிறிய அளவிலான லேத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கணினி சுலபமாய் முடிக்கிறது என்பது எனக்கு அப்போது மிகுந்த ஆச்சரியம் தான். கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் லேத்தில், உருவாக்க வேண்டிய பாகத்தை பொருத்தி விட்டு, கணினியில் PROGRAMME களை டைப் பண்ணி ON பண்ணி விட்டால் அவ்வளவு அழகாக நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி GROOVE  எடுக்க வேண்டிய இடத்தில் எடுத்து என்று சூப்பராக இருந்தது. அப்போது G00, G20, G14, G21  என ஏகப்பட்ட ப்ரோகிராம்களை விருப்பமாக எழுதி செய்திருக்கிறேன். அந்த கோர்ஸ் முடித்து சான்றிதழ் பெற்றவுடன், அவர்களே அடுத்து PRO E  கோர்ஸ் சேர்ந்து படித்து முடித்தவுடன் அங்கேயே பணிபுரியும் படிச் சொன்னார்கள்.

ஆனால் சில பல காரணங்களால் அங்கிருந்து கிளம்பி கோவை வந்து சில இடங்களில் பணிபுரிந்தேன். அப்போது என் மாமா EMAIL பற்றி எனக்கு சொல்லித் தந்து எனக்கு ஒரு முகவரியும் துவக்க சொல்லிக் கொடுத்தார். அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்பியும் பழகினேன். பணிபுரிந்த இடங்களில் தனிக்காட்டு ராணியாக இருக்கும் போது WINAMP மூலம் பாடல்கள் கேட்டுக் கொண்டும், SOLITAIRE, MINESWEEPER விளையாடிக் கொண்டும் இருப்பேன். திருமணம் நிச்சயமான பின் ப்ரவுசிங் செண்டர் சென்று ஓரிரு முறை என்னவரோடு CHAT செய்தும் பழகிக் கொண்டேன். அதன் பிறகு திருமணமாகி தில்லி சென்ற பின் எனக்கும் கணினிக்கும், என்னுடைய துறைக்கும் எந்த வித தொடர்பும் இன்றி, முழு மூச்சோடு கரண்டி அலுவலகத்தில் பணிபுரியத் தொடங்கினேன்….:))2009ல் அலுவலகத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் என்னவர் தன்னுடைய வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததிலிருந்து, தான் எழுதியதை முடிந்த போது ப்ரிண்ட் அவுட் எடுத்து வந்து காண்பிப்பார்கள். படித்துப் பார்ப்பேன். பின் எங்கள் வீட்டில் மடிக்கணினி வாங்கிய பின்னும் அவரது பதிவுகளைத் தான் படித்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டம் இடுவதற்கு அவருக்கு ஃபோன் போட்டு கேட்டு, தங்கிலீஷில் கொலை பண்ணி போட்டுக் கொண்டிருந்தேன்.

2010 ஆகஸ்ட்டில் (அட! அடுத்த மாதம் என்னுடைய வலைப்பூவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்) எனக்கான வலைப்பூவை தொடங்கி கொடுத்து NHM WRITER டவுன்லோட் செய்து தமிழில் டைப் பண்ண சொல்லிக் கொடுத்தார். முதலில் டைரியில் எழுதி வைத்துக் கொண்டு அதைப் பார்த்து டைப் பண்ண ஆரம்பித்தேன். இரண்டு பேரும் வலைப்பூவில் எழுதுவதனால் ஒரு சலுகை. ஆரம்ப காலங்களில் நான் எழுதி வைத்துள்ளதை என்னவர் தான் டைப் பண்ணி பதிவிடுவார். அதன் பின் சில நாட்களில் நானும் கற்றுக் கொண்டேன். டைப்பிங் தெரியாததால் மிகவும் மெதுவாக, KEYPAD மட்டுமே பார்த்து டைப்பிக் கொண்டிருந்தேன். இப்போது தான் KEYPAD ஐ பார்க்காமல் டைப் பண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பல சமயங்களில் வெற்றியும் கிட்டுகிறது…..:))


எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்துட்டிருக்காஎன்று அவ்வப்போது பேச்சுகள் காதில் விழுந்தாலும், என்னவரின் ஒத்துழைப்பு தான் நான் பதிவுலகத்தில் உலவுவதற்கு காரணம். மகளும் இப்போது தன்னுடைய பாடத்தில் வரும் கணினி விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுக்கிறாள். பதிவுலகம் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நட்பு வட்டமும் பெரிதாகி உள்ளது. எந்த ஊருக்கு செல்வது என்று முடிவெடுத்தாலும் அங்கு பதிவர் சந்திப்பு வைத்துக் கொள்ளலாமா? என்று தான் முதலில் தோன்றுகிறது. இந்த மாதிரி பல சந்தோஷங்களை தந்திருக்கும், தந்து கொண்டிருக்கும் என் தோழி கணினியே உனக்கு நன்றிகள் பல

இந்த பதிவை தொடர நான் அழைப்பது….


மீண்டும் சந்திப்போம்.....


ஆதி வெங்கட்
திருவரங்கம்.24 comments:

 1. LOTUS, BASIC, FOXBASE என்று கேட்டால், இப்போது சிரிக்கிறார்கள்...! சுவாரஸ்யமான அனுபவம்...! உங்களவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அனுபவங்களை சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 3. ஆதி, உங்கள் கணினி அனுபவம்,மிக அருமையாக உள்ளது.
  உங்கள் அழைப்புக்கு நன்றி.
  ’கற்றல் நன்றே’ என்று வலைகல்வியைப் பற்றி 2009 ம் ஆண்டே எழுதி இருக்கிறேன்.
  உங்கள் விருப்பத்திற்கு மறுபடியும் எழுதுகிறேன்.

  ReplyDelete
 4. பல சந்தோஷங்களை தந்திருக்கும், தந்து கொண்டிருக்கும் தோழி கணினி பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 5. முதல் கணினி அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது...!

  ReplyDelete
 6. ஆஹா.. வரேன்.. வரேன், வந்துட்டே இருக்கேன். நிச்சயமாகத் தொடர்கிறேன்.

  ஆசியாக்கா அழைச்ச தொடர்பதிவும் அந்தரத்தில் விட்டிருக்கேன். அதையும் தொடரணும். ஹி..ஹி..

  ReplyDelete
 7. // அதன் பிறகு திருமணமாகி தில்லி சென்ற பின் எனக்கும் கணினிக்கும், என்னுடைய துறைக்கும் எந்த வித தொடர்பும் இன்றி, முழு மூச்சோடு கரண்டி அலுவலகத்தில் பணிபுரியத் தொடங்கினேன்….:)) //

  நல்ல ஜோக்! இப்போது வலையுலகிலும் வலம். நல்ல அனுபவம்.

  ReplyDelete
 8. ஆஹா, உங்கள் தகுதிச் சான்றிதழ்கள் எல்லாம் மலைக்க வைத்தன. இவ்வளவு தெரிஞ்சும் கணினி அறிவு இல்லைனு சொல்வது எல்லாம் உங்கள் தன்னடக்கத்தையே காட்டுகிறது. தட்டச்சும் சீக்கிரமே பழகிடும். வாழ்த்துகள். அப்பாவியோட பதிவிலே நீங்க கொடுத்த பின்னூட்டப் பதிவின் ஃபாலோ அப் பார்த்து வந்தேன். :)))))

  ReplyDelete
 9. aaha kandipa podaren. (pathivuku matter thethiyachu) :))

  ReplyDelete
 10. .. MS-DOS, LOTUS, BASIC ..

  நீங்களும் எங்க காலத்து ஆள்தானா...

  ReplyDelete
 11. முதல் கணினி அனுபவம் அருமை.

  ReplyDelete
 12. சுகமான அனுபவத்தை சுவராஸ்யமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. சுவாரஸ்யமான பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. அசத்தல் அனுபவங்கள். ஆர்வமும் முயற்சியும் அடுத்தடுத்தப் படிக்கு இட்டுச்சென்றதை அழகாய்ப் பகிர்ந்துள்ளீர்கள். அழைப்பை ஏற்று முதல் கணினி அனுபவத்தை இனிதே பதிவு செய்த உங்களுக்கு நன்றியும் பாராட்டும் ஆதி.

  ReplyDelete
 15. நிஜமாகவே நீங்கள் கணனியில் புலிதான். எத்தனை கற்றிருக்கிறீர்கள்! ஆங்கில தட்டச்சு தெரிந்தால் கணனியில் தட்டச்சு செய்வது சுலபமாயிற்றே.

  நானும் நீங்கள் படித்ததெல்லாம் படித்தேன். autocad தவிர. இப்போது எதுவும் நினைவில்லை.

  கணினியின் மூலம் இப்போது நாம் பார்க்கும் உலகம் சுவாரஸ்யமானது. மகிழ்ச்சியானது. பல நட்புக்களை வளர்க்கிறது.

  நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.
  நீங்கள் அழைப்பு விடுத்திருக்கும் பெண்மணிகள் எழுதுவதையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 16. //MS-DOS, LOTUS, BASIC ... FLOPPY//

  நானும் ‘அந்தக் காலத்து’ ஆள்தான்!! இதெல்லாம் என் பதிவில் சொன்னாப்புரியுமா, அலல்து ‘அம்மி, உரல், விறகடுப்பு’ மாதிரி ஆச்சரியமாப் பாப்பாங்களானு நினைச்சேன். ப்ரவால்ல, இங்க நிறைய பேர் நம்ம காலத்து ஆட்கள்தான் போல, தைரியமா எழுதுறேன் - இன்ஷா அல்லாஹ். :-))))))

  //கரண்டி அலுவலகத்தில்//
  ஹூம்.. நாம எப்பேர்ப்பட்ட பெரிய பதிவில இருந்தாலும், இந்த அலுவலகத்தில் பார்ட்-டைம் ஜாப்பாவது பார்த்தே ஆகணும்!! :-(((

  ReplyDelete
 17. சுவாரஸ்யமாக தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. க்ணினி அனுபவம் படிக்க சுவாரசியம்

  ReplyDelete
 19. சூப்பர் ஆதி! என்னன்னமோலாம் படிச்சுருக்கீங்க கணினில.கலக்குங்க!

  ReplyDelete
 20. சான்சே இல்லை ஆதி... நாங்களெல்லாம் உங்க பக்கத்தில் கூட வர முடியாது!

  ReplyDelete
 21. கணனியில் எத்தனை படித்திருந்தாலும் கையில் கரண்டி தான்!படித்தது என்றைக்கும் வீண் போகாது.
  நல்ல அனுபவங்கள்.
  இப்போது வலைப் பதிவிலும் கலக்குகிறீர்கள், ஆதி!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. நானெல்லாம் கணினிப் படிப்பு எதுவும் படிக்காமல் நேரடியாகத்தான் அதனுடன் பழகினேன். நீங்கள் தியரியாகவும் நிறையப் படித்து, ப்ராக்டிகலாகவும் நெருங்கி இருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்த விதம் ரசனை!

  ReplyDelete
 23. கணினியில் என்னென்னமோ கரைத்து குடித்துருக்கிங்களே!நீங்க டீசண்டா கரண்டி டிப்பார்ட்மண்ட் னு சொல்லிட்டீங்க,,,,,,நல்லாருக்கு.

  நான் சட்டி பானை உருட்ற வேலை னு சொல்வோமுங்க.

  மகளுக்கு தேர்வு நடைபெறுகிறது,சோ நான் பதிவிட தாமதமாகும்.அழைத்தமைக்கு நன்றி,அல்ரெடி நம்ம மதுரைத் தமிழரும் தொடர்பதிவிட அறிவித்துள்ளார்.

  தகவல் தெரிவித்த தனபாலன் & ரூபன் சாருக்கு நன்றிகள்.

  ReplyDelete
 24. என் கணினி அனுபவங்களை வாசித்து, தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல..

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…