Monday, July 22, 2013

நேர் நேர் தேமா!

தமிழ் இலக்கணத்தில் உள்ள நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமா என்று வகுப்பு நடத்தவோ அல்லது பள்ளிக்கூட நினைவுகளோ பகிர்ந்து கொள்ள அல்ல….. இந்த பகிர்வு.

தோழியிடத்தில் இரவல் வாங்கி (புத்தகங்களைத் தேடி வேட்டை தான்!) சமீபத்தில் நான் வாசித்த இரண்டு புத்தகங்களும் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. நீயா? நானா?” கோபிநாத் அவர்களின் நேர் நேர் தேமாவும், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற புத்தகங்களும் தான் அவை.. இரண்டுமே சுய முன்னேற்ற புத்தகங்கள்

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க:-


பட உதவி: கூகிள்


மக்களை கவர்வதற்காக வைத்த தலைப்போ? என முதலில் தோன்றினாலும் உள்ளே உள்ள விஷயங்கள் ஒவ்வொன்றும் நம்முள்ளே இருக்கும் தன்னம்பிக்கையை தூண்டில் போட்டு வெளியே இழுக்கிறது.  சந்தோஷம் எங்கும் வெளியில் இல்லை. நம்முள்ளே தான் வைத்துக் கொண்டு இருக்கிறோம். அன்றாட வாழ்வில் சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்துவது மூலம் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி தரலாம்.இப்படியான பல விஷயங்களை எடுத்துக்காட்டுகளுடன், சுலபமாக நாம் புரிந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் தந்திருக்கிறார்.

நேர் நேர் தேமா:-


இந்த புத்தகத்தின் முன்னுரையில் கோபிநாத் அவர்களின் வார்த்தைகளில் இதோ

அரிச்சந்திரன் நாடகம் பார்த்த காந்தி, தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார் என்று சொல்லுவார்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கை இன்னொருவரை அப்படியே மாற்றி விடுமா என்ன? அது சாத்தியம் என்றால், அரிச்சந்திரன் நாடகம் பார்த்த அத்தனை பேரும் உண்மையே பேச வேண்டும் என்று காந்தி போல் முடிவு செய்திருக்க வேண்டும். இந்த புத்தகத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன்.

எனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் நான் சந்தித்த சிறப்பான மனிதர்கள் சிலர் பேசிய விஷயங்கள், அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்று வரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

எழுதியது கோபிநாத் ஆக இருக்கட்டும்.
படிக்கிறவர்கள் காந்தியாக இருங்கள்.
அது தான் என் வேண்டுகோள்.

இந்த புத்தகத்தில் இவர் சிறப்பான சில மனிதர்களான சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், சிவசங்கரி, ப.சிதம்பரம், பாலச்சந்தர் போன்ற பலரை விஜய் டீவி மூலமாக பேட்டி எடுத்து நமக்கு அவர்கள் வாழ்க்கையில் கண்ட வெற்றியின் தாரக மந்திரத்தை நமக்கு தந்திருக்கிறார்.

இந்த கலியுகத்திலும் நேர்மையும், உண்மையும் , செய்யும் தொழிலின் நேர்த்தியும், முயற்சியும் தான் வாழ்வை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது என படிக்கும் போதே நம் தன்னம்பிக்கையின் அளவு நிச்சயம் கொஞ்சம் கூடுதலாகிறது என்பதோ உண்மை.

படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

நீங்களும் வாங்கிப் படித்து டானிக்சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்களேன்….

இந்த புத்தகங்களை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை
தி.நகர், சென்னை- 600017.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


27 comments:

 1. //எழுதியது கோபிநாத் – ஆக இருக்கட்டும்.
  படிக்கிறவர்கள் காந்தியாக இருங்கள்.
  அது தான் என் வேண்டுகோள்.”//

  ;)))))

  புத்தக விமர்சனங்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்கிறீர்கள் ஆதி. நன்றி!

  ReplyDelete
 3. சிறப்பான புத்தகம்... நல்ல விமர்சனம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. இந்த கலியுகத்திலும் நேர்மையும், உண்மையும் , செய்யும் தொழிலின் நேர்த்தியும், முயற்சியும் தான் வாழ்வை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது //

  ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க... எனும் போதே வாங்கிப் பார்க்கலாமென்ற அவா. 'நீயா நானா'வில் கோபிநாத் மேலான அபிமானம்...வெளி வந்தவுடன் வாங்கியாச்சு

  இவ்வருட கண்காட்சியில் 'நேர்நேர் தேமா' பார்த்தும் வாங்காத குறையை உங்க விமர்சனம் தீர்த்தது ஆதி. (அதிகரித்தது?)

  ReplyDelete
 5. படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

  நீங்களும் வாங்கிப் படித்து ”டானிக்” சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்களேன்….

  பரிந்துரைக்குப் பராட்டுக்கள்..

  ReplyDelete
 6. அருமையான விமர்சனம்..

  ReplyDelete
 7. அருமையான விமர்சனம் .இப்பொழுதெல்லாம் நானும் உங்களை மாதிரி நிறைய ஆரம்பிச்சுட்டேன் :)
  இந்த புத்தகங்களை இங்கே லைப்ரரியில் சொல்லி வைத்தா கிடைக்கும் .
  Angelin .

  ReplyDelete
 8. நல்ல புத்தக விமர்சனம் ஆதி.

  ReplyDelete
 9. எழுதியது யாராகவும் இருக்கட்டும் அதில் நமக்கு உபயகமாக எது இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

  விமர்சனம் மிக அருமை....!

  ReplyDelete
 10. இந்த புத்தகம் படிக்க வேண்டுமென்று நினைப்புண்டு.இப்பொழுது தகுந்த விமர்சனம் கிடைத்து விட்டது.நன்றி ஆதி :)

  ReplyDelete
 11. அருமையாக அருமையான இரு புத்தகங்களையும்
  அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி ஆதி

  ReplyDelete
 13. புத்தக விமர்சனம் அருமை !

  ReplyDelete
 14. புத்தக விமர்சனங்கள் அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. தொடர்பதிவு அழைப்பு : http://geethamanjari.blogspot.in/2013/07/blog-post_24.html

  ReplyDelete
 16. வாசிக்கத் தூண்டும் அருமையான விமர்சனம். நன்றி ஆதி.

  இன்று உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது தொடருங்கள்.

  http://geethamanjari.blogspot.com.au/2013/07/blog-post_24.html

  ReplyDelete
 17. இதுமாதிரியான புத்தக விமர்சனங்கள் நிச்சயம் தற்போது தேவை. உங்கள் தொண்டு வளர்க!

  (நேர் நேர் தேமா! நேர்மையான சொற்களும் நேர் கொண்ட நடத்தையும் ஒருவரிடம் இருந்தால் வாழ்வு என்றும் தேமாவாய் இனிக்கத்தான் செய்யும்.)

  ReplyDelete
 18. இப்பகிர்வை வாசித்து, கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல..

  ReplyDelete
 19. வணக்கம் !
  தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம்
  செய்துள்ளேன் .முடிந்தால் அவசியம் வாருங்கள் இங்கே
  http://blogintamil.blogspot.ch/2013/07/3_25.html

  ReplyDelete
 20. அருமையான விமர்சனம்.

  ReplyDelete
 21. வாங்க அம்பாளடியாள்,

  நன்றிங்க.

  வாங்க மாதேவி,

  நன்றிங்க.

  ReplyDelete
 22. வணக்கம்....

  தங்களைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்... நேரமிருக்கும் போது வந்து வாசியுங்கள்...

  அதற்கான சுட்டி இதோ..

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_974.html

  நன்றி.

  ReplyDelete
 23. சே.குமார் - நன்றிங்க.

  ReplyDelete
 24. விமர்சனம் அவற்றை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது!

  ReplyDelete
 25. புலவர் ஐயா - மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…