Wednesday, July 17, 2013

நினைத்து மறுகுதடி நெஞ்சம்


பட உதவி: கூகிள்

இம்முறை நூலகத்திலிருந்து எடுத்த இந்த புத்தகம் மிகவும் அருமையானதொரு புத்தகம். உமா பாலகுமார் அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தில் உள்ள இரு கதைகளுமே அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடியவை அல்ல

முதல் கதையான நினைத்து மறுகுதடி நெஞ்சத்தில் விருது நகரிலிருந்து மாற்றலாகி கேரளத்தின் ஆலப்புழைக்கு வந்துள்ள குடும்பத்தின் தலைவி சியாமளா. சியாமளாவின் துள்ளி திரியும் மகளான செளம்யா தான் கதை நாயகி. வேலை தேடிக் கொண்டிருக்கும் அவளுக்கு பக்கத்து வீட்டு கருணாகரன் அங்கிள் தான் வேலை செய்யும் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை வாங்கித் தருகிறார்.

அங்கு நாயகனும் ஹோட்டலின் முதலாளியுமான விதுரனுடன் பழக்கமாகிறது. இருவரும் நேசிக்க ஆரம்பிக்கின்றனர். விதுரனின் தந்தை இவர்கள் காதலுக்கு ஒப்புதல் தெரிவித்து செளம்யாவின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. செளம்யாவின் தாய் தான் விதுரனுக்கு தாய் என்று விதுரனின் தந்தை சொல்கிறார். சியாமளாவை நடத்தை கெட்டவள் என்று கூறி அங்கிருந்து செல்ல இளசுகள் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? கடைசியில் இருவரும் குடும்பத்தார் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். அது எப்படி? படித்தால் தான் அதன் சுவாரசியத்தை புரிந்து கொள்ள முடியும்.

அடுத்த கதை உனக்கென தவமிருந்தேன்இதுவும் ஒரு காதல் கதையே…. நித்தி, தாரா இருவரும் கல்லூரி தோழிகள். இருவரில் தாரா காதல் வயப்பட்டிருந்தாள். அவளது வீட்டில் சொந்தம் விட்டு விடக் கூடாது என்று அத்தை மகனை பேசி முடித்திருந்தனர். தாரா அவளது காதல் பற்றி அம்மாவிடம் தெரிவித்தும் ஒப்புதல் கிடைக்க வில்லை. இதைப் பற்றியும் தன் காதலனுடன் எப்படி சேருவது என்றும் சொல்லிக் கொண்டிருந்த தாரா, ஒரு வழியாக திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளாள். இந்த நேரத்தில் ப்ராஜெக்ட் விஷயமாக சென்னையிலிருந்து வந்த நித்தியையும் தன்னுடன் அழகு நிலையத்திற்கு கூட்டிச் சென்று, அங்கிருந்து நித்திக்கும் தெரியாமல் ஓடிப் போய் தன் காதலனுடன் திருமணம் செய்து கொள்கிறாள்.


இது மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்து, மாப்பிள்ளை நொந்து போய் கிடக்கையில், அங்கிருந்த நித்தியை மணப்பெண்ணாக ஏற்க சொல்கின்றனர். மாப்பிள்ளை யாரென அப்போது தான் நித்தி தெரிந்து கொள்கிறாள். சிறுவயதில் கோவையில் அக்கம் பக்கம் வீடுகளில் வசித்து இருவர் குடும்பமும் ஏற்கனவே பரிச்சயமானவர்கள் தான். அதுவும் போக நித்திக்கு அப்போதே நரேன் மீது காதல் ஏற்பட்டிருந்தது. வெளியே சொல்லாமல் மனதுக்குளேயே வைத்திருந்தாள். இப்போ தானாகவே அந்த வாய்ப்பு வர ஒப்புக் கொண்டு விட்டாள்.

எல்லோருக்கும் சம்மதம். ஆனால் மாப்பிள்ளையான நரேனுக்கு பெண்கள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்று மனதில் பதிந்து விட எரிச்சலையும், கோபத்தையும் நித்தி மீது காட்டுகிறான்.  இதையெல்லாம் மீறி நித்தி அவன் மனதுக்குள் ஆழ பதிந்து கொள்கிறாள். குடும்பத்துக்காக நல்ல விஷயங்களை செய்து அவன் மனதில் இடம் பிடிக்கிறாள். காதலை அவரவர் மனதுக்குள்ளேயே வைத்து கடைசியில் தான் அதை வெளிக்காட்டி வாழ்வில் இணைகின்றனர். இதையும் நீங்கள் வாங்கிப் படித்து அதன் சுவையை உணருங்கள்.

இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி

அறிவு நிலையம் பதிப்பகம்
32/107, கெளடியா மடம் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600014
புத்தகத்தின் விலை ரூ 90
மொத்த பக்கங்கள் – 280

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.


17 comments:

 1. இந்த எழுத்தாளரின் புத்தகத்தைப் படிக்கிற சந்தர்ப்பம் ஓரிரு முறை வாய்த்தபோதும் நான் ஆர்வம் காட்டவில்‌லை. இப்ப நீங்கள் சொல்லிருக்கறதப் பாத்தா நல்லாவே எழுதறாங்க போலத் தோணுது. இந்தப் புத்தகத்தை நம்ம ப.பு.கடை பாய்கிட்ட சொல்லி வெச்சு வாங்கிப் படிச்சுர வேண்டியதுதான்... நன்றிங்கோ!

  ReplyDelete
 2. புத்தக விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்.

  பாலகுமரன் எழுதியுள்ள “திருவடி” என்ற புத்தகத்தை நேற்று படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

  அதில் நம் திருமதி வித்யா சுப்ரமணிய்ம் அவர்கள் திரு. பாலகுமாரன் அவர்களுக்கு “சிநேகமாய் ஒரு கடிதம்” என்ற தலைப்பில் 4 பக்க்ங்களுக்கு 05.07.2005 அன்று எழுதியுள்ள ஓர் கடிதமும் வெளியாகியுள்ளது.

  ReplyDelete
 3. நல்லதொரு நூலின் விமர்சனம் அருமை.... நன்றிகள்...

  ReplyDelete
 4. அருமையான புத்தக விமர்சனம் .
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. விமர்சனம் பார்த்தால் புத்தகம் உடனே வாங்கி படிக்க தோன்றுகிறது...!

  ReplyDelete
 6. நன்றாக கதை விமர்சனம் செய்கிறீர்கள் ஆதி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. புத்தக விமர்சனம் வாங்கிப் படிக்கும்
  ஆவலைத் தூண்டிப் போகிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நல்லதொரு புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
 9. சுவாரஸ்யமாய் இருக்கும் போலத் தோன்றுகிறது. நானும் லைப்ரேரியில் தேடித் பார்க்கிறேன். வைகோ ஸார் பாலகுமாரனைச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 10. அருமையான விமர்சனம்..

  ReplyDelete
 11. அருமையான கதைகளை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. இவரது எழுத்துக்களை படித்ததில்லை.அவசியம் படிக்கிறேன்.

  ReplyDelete
 13. நேர்த்தியான கச்சிதமான விமர்சனம். வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. நன்றி ஆதி.

  ReplyDelete
 14. இப்பதிவினை வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல..

  ReplyDelete
 15. நல்ல நூல் அறிமுகம்..

  ReplyDelete
 16. மாதேவி - நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…