Wednesday, July 10, 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.....

கதம்பம் – 16

இந்த படத்தை பற்றி ஏதோ எழுத போறேன்னு நினைக்காதீங்க….:) கொஞ்சம் நேரம் தான் பார்த்தேன். தொடர்ந்து பார்த்தா தலைக்குள்ள பிரச்சனை வந்திடுமோன்ற பயத்துல தொடர்ந்து பார்க்கல…:)) இப்ப நான் சொல்ல வர்றது என்னன்னா…. சுஜாதா அவர்களின் பாதி ராஜ்யம்என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். அதில் இருந்த ஐந்து கதைகளில் புத்தகத்தின் நடுவில் இருந்த ஹோனாலூலுஎன்ற கதையில் உள்ள கிளைமாக்ஸ் பக்கங்களை காணோம். நூலகத்திலிருந்து எடுத்த புத்தகம். முடிவைத் தெரிந்து கொள்ளாமல் மண்டை வெடித்து விடும்போல் உள்ளது. யாராவது கதைச் சுருக்கத்தை கூற முடிந்தால் நன்றாக இருக்கும்…:))

நம்முடைய புத்தகமானாலும் சரி, அடுத்தவர்களோடது, நூலகம் இப்படி எங்கு எடுத்தால் என்ன! புத்தகத்தை ஏன் பாழ்ப்படுத்த வேண்டும்? சமீபத்தில் தோழி ஒருவரிடம் புத்தகம் வாங்கிய போது அவர் அதில் மார்க் செய்து, எழுதி, மின்னஞ்சல் முகவரியெல்லாம் எழுதி வைத்திருந்தார். கேட்டால் தன்னுடையதில் அப்படித் தான் எழுதுவது வழக்கம் என்றார். தொடர்ந்து சொல்ல முடியவில்லை. இந்த பதிவை படிக்கும் நபர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி

நீயா நானா:-சமீபத்தில் பார்த்த நீயா நானாநிகழ்ச்சியில் திருமணத்திற்கு பின் வேறு ஊர்களுக்கு சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவங்கள், பிரச்சனைகள், புதிதாக தெரிந்து கொண்ட வழக்கங்கள் என்பது பற்றி பேசினார்கள். இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. இந்த தலைப்பில் சுவையான நிறைய விஷயங்களை கேட்க முடிந்தது. வட்டார மொழியால் பிரச்சனை, குடும்ப வழக்கங்கள், சமையல் என நிறைய விவாதித்தனர். கொங்கு தமிழில் உள்ள வார்த்தைகளை நான் என்றாவது பேசினாலே என்னவர் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார். உதாரணமாக அரசாணிக்காய் (பரங்கிக்காய்), மேரக்காய் (செளசெள) இப்படிநானும் விடுவதில்லை அவர்கள் ஊரின் மல்லாட்டை, லோட்டா இப்படி….:)) இன்னொரு நாள் பெண்களுக்கு சமையல் செய்வதே அலுத்து போய் விட்டதாக ஒருபுறமும், மற்றொருபுறம் சுவாரசியமாக உள்ளதாகவும் விவாதம் நடைபெற்றது.

ஆனால் இந்த நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஆரம்பித்து முடிவதற்கு 11.30 ஆகி விடுகிறது. அடுத்த வேலை நாளான திங்கள் எழுந்திருக்க வேண்டாமா! கொஞ்சம் சீக்கிரம் வைத்தால் நன்றாக இருக்கும்.

பார்த்த திரைப்படங்கள்:-தற்போது வருகிற திரைப்படங்களை பார்க்கவே ஏனோ பிடிப்பதில்லை. அப்படியிருந்தும் பார்த்தேன் என்றால் ஏழரை நம்மளை சுத்திகிட்டு தான் இருக்கு என்று அர்த்தம். பார்த்த படங்களில் எதிர்நீச்சல், கும்கி (டி.வி லயே போட்டுட்டாங்களேன்னு சொல்லக் கூடாது. அன்று நான் பார்க்க முடியவில்லை) ஆகியவை நன்றாக இருந்தன.. மூன்று பேர் மூன்று காதல்பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன். வசந்த் படமா இது! என்று இருந்தது….:(( சிறிது நேரம் முப்பொழுதும் உன் கற்பனைகள், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகியவை பார்த்தேன். என்ன இதுவே ஜாஸ்தி இல்லையா…..:)))

ரோஷ்ணி கார்னர்:-ரோஷ்ணியுடன் தினமும் ஒரு கூத்து தான். சமீபத்தில் அவளின் G.K மிஸ் சொன்னார்களாம்….பெரிய சாக்பீஸ் இருந்தா தான் எழுதிப் போடுவேன் என்றுஇவள் வீட்டில் வந்து ஒரே புலம்பல் தான். மிஸ்ஸுக்கு எவ்வளவு கோவம்மா. நான் தாம்மா போய் பெரிய சாக்பீஸ் கொண்டு வந்து கொடுத்தேன் என்று. அடுத்த நாள் வரும் போதே அம்மா இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் என்றாள். என்னவென்று கேட்டால் இன்னிக்கு காலையிலிருந்தே எனக்கு எல்லாமே நல்லதா நடக்குதும்மா.. என்னை முதல் சீட்டுல உட்கார சொல்லிட்டாங்கஎன் ஃப்ரெண்ட் என் கூட சண்டை போடல…. மிஸ் என்னை கொஞ்சினாங்க…. அப்புறம் G.K மிஸ் கூட இன்னிக்கு சின்ன சாக்பீஸே போதும்னு சொல்லிட்டாங்க என்று….:)

அவள் சொல்லச் சொல்ல எனக்கு சிரிப்பு தாங்கலைஅவள் முன்பு சிரித்தால் அவளுக்கு கோவம் வந்துடுமே….:))

ACT II பாப்கார்ன்:-இந்த பாப்கார்ன் வந்த புதிதில் அதன் விளம்பரத்தில் ஒரு குழந்தையின் தந்தை தான் தயாரித்து தருவதாக காண்பிக்கப்படும். அதை பார்த்த பின் எங்க வீட்டு குழந்தையும் அவள் அப்பா தான் செய்ய வேண்டும் எனச் சொல்ல நான் எஸ்கேப் ஆகிட்டேன்….:) அன்றிலிருந்து பாப்கார்ன், சூப் இவையிரண்டும் எப்போது செய்தாலும் அவள் அப்பா தான் செய்து சுடச்சுட தருவார். நாங்களும் சாப்பிடுவோம். இப்படியிருக்க இங்கு வந்ததிலிருந்து வாங்கவே இல்லை. மே மாத விடுமுறையில் அவள் அப்பா வருவதாகச் சொல்ல இரண்டு பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருந்தோம். ஒன்று அப்பா வந்து செய்து தர சுவைத்தோம். இன்னொன்றை அவள் அப்பா தில்லிக்கு சென்ற பின் தற்போது ஒருநாள் நான் செய்யப் போக கொஞ்சம் தகராறு செய்து விட்டது. அதற்கு ரோஷ்ணி ஏம்மா அப்பா எவ்வளவு ஈசியா செய்வா! நீ இப்படி சொதப்பறியேஎன்றாள். என் நேரம் தான்…..:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


என்னவரின் இன்றைய பதிவு - கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் ரத்த பூமி பகுதி 6


19 comments:

 1. அச்சச்சோ... பாதி படித்து முடிவு இல்லையென்றால்... ரொம்பப் பாவங்க நீங்க! பாதிராஜ்யம் என்கிட்ட இருந்தது முன்ன. இப்ப இல்ல. அதுனால முடிவைச் சொல்ல முடியல. நூலகத்துல புத்தகம் எடுக்கறவங்க சில பேர் இப்படி கொடுமையா நடந்துக்கிட்டு பக்கங்களை சேதப்படுத்தி, நம்மையும் படுத்திடறாங்க. அப்புறம்... பாத்த சினிமாக்களைச் சொல்றீங்க. அதப்பத்தி ஒரு எட்டு எட்டு பாரா விமர்சனமா எழுதிப் போட்டீங்கன்னா என்னவாம்? ரோஷ்ணிக்கு முன்பு சிரித்தால் அவளுக்கு கோபம் வந்துடும். சரி.... கோபம் வந்தால் குழந்தை என்ன செய்வாள்? அதச் சொல்லலியே நீங்க... ஹா... ஹா...!

  ReplyDelete
 2. ஆனால் இந்த நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஆரம்பித்து முடிவதற்கு 11.30 ஆகி விடுகிறது. அடுத்த வேலை நாளான திங்கள் எழுந்திருக்க வேண்டாமா! கொஞ்சம் சீக்கிரம் வைத்தால் நன்றாக இருக்கும்./?
  தினம் காலையில் மறு ஒலிப்பரப்பு உண்டு. ஆனால் பழைய நிகழ்ச்சிகள் வரும். நானும் பார்ப்பேன் காலையில்.
  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஊரிலிருந்து வந்தவர்களுடன் வீட்டில் பார்த்தோம் . ஒரே சிரிப்புதான் படம். வீட்டில் கொஞ்ச நேரம் எல்லோரும் கதாநாயகன் மாதிரி பேசிக் கொண்டு இருந்தார்கள். (அதுவே தாங்க முடியவில்லை)
  ரோஷ்ணி கார்னர் மிக அருமை. பாப்கார்ன் அனுபவம் அருமை.

  ReplyDelete
 3. நானே கொஞ்சம் பயந்துட்டேன்..என்னடா இவரு லேட்டா விமர்சனம் பண்ணபோறாரே அப்படின்னு...

  ReplyDelete
 4. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

  நிறைய புத்தகங்கள் எனக்கு இப்படித்தான் கிடைக்கும் ..

  அப்புறம் நானாக நிரப்பிக்கொள்வேன் ..

  எப்போதாவது மீதிப்பகுதி கிடைத்தால் நாம் நிரப்பியதே நன்றாக இருப்பதாகத் தோன்றும் ..!

  ReplyDelete
 5. கிளைமாக்ஸ் படிக்கலையா... பாவம் நீங்க... முடிஞ்சா சென்னையில கிடைக்குதான்னு பாக்கறேன்...

  ReplyDelete
 6. //ஏம்மா அப்பா எவ்வளவு ஈசியா செய்வா! நீ இப்படி சொதப்பறியே” என்றாள். என் நேரம் தான்…..:))//

  ;))))))

  ReplyDelete
 7. ஒரு புத்தகத்தை படிச்சிட்டு அதில் க்ளைமேக்ஸ் இல்லை என்றால் செம்ம கடுப்பா இருக்கும் நானும் நிறைய அனுபவித்திருக்கிறேன்..

  ReplyDelete
 8. கடைசிப் பக்கங்களைப் படிக்க முடியலைன்னா அந்த சஸ்பென்ஸ் தாங்காதுதான்..

  ReplyDelete
 9. எல்லாமே சுவை,பக்கத்தை காணலனு மனசை விட்டுடாதீங்க,எங்க வீட்லையும் தினமும் ஸ்கூல் போயிட்டு வந்து சொல்ற கதைய வச்சே பதிவை தேத்தலாம்,எழுததான் நேரமில்லை.

  ReplyDelete
 10. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ... சுவராஸ்யமாய்... (நான் படத்தை சொல்லலை... பகிர்வைச் சொன்னேன்).

  ReplyDelete
 11. அடடா... பாதி ராஜ்ஜியம் புத்தகம் வெளியூரில் (மதுரை) மாட்டிக் கொண்டிருக்கிறது! என்னிடம் இருக்கும் கதஜியாக கேட்கக் கூடாதோ! என்னிடம் இங்கு இருக்கும் 'சுஜாதா - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 3 பாகத்'திலும், 'விஞ்ஞானச் சிறுகதைகள்' தொகுப்பிலும் கதை இல்லை.

  ReplyDelete
 12. லைப்ரரி புத்தகங்களாகட்டும், சொந்தப் புத்தகங்களாகட்டும் - எதுவும் எழுதுவதோ, பக்கங்களை கிழிப்பதோ தவறு. பலருக்கு இது புரிவதே இல்லை.

  எனக்குக் கூட திருமணம் ஆன புதிதில் 'சவுக்கம், வாருகல், கரி பீராய்வது' இதெல்லாம் புதிதாக இருந்தது.
  கதம்பத்தில் மணம் வீசுவது ரோஷ்ணி கார்னர் தான்!

  ReplyDelete
 13. வெரி குட்! ரோஷ்ணியின் அப்பாவை நல்ல வீட்டுக்காரராக மட்டுமல்லாமல், நல்ல சமையல்காரராகவும் வளர்த்து வைத்திருக்கிறீர்கள்.

  (அவர் சமையலை நானும் சாப்பிட்டுருக்கம்ல.)

  ReplyDelete
 14. விளம்பரங்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு அட பெண்களுக்கு ஆதரவாய், பயனாய் ஒரு விளம்பரம் வருவதும் ஆச்சர்யமே .. இயல்பான வார்த்தைகளுடன் மனதுக்கு இதமான பதிவு

  ReplyDelete
 15. கெட்டிக்கார அப்பா!

  ReplyDelete
 16. கருத்துரைத்த அனவருக்கும் நன்றிகள் பல..

  ரஞ்சனிம்மா - //'சவுக்கம், வாருகல், கரி பீராய்வது' //

  இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் நீங்க சொல்லலையே? வாருகல் - துடைப்பம் என்று நினைக்கிறேன். மீதி இரண்டும் என்ன?

  ReplyDelete
 17. நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோமுன்னா..... மண்டைக்குடைச்சல் தாங்க முடியாதுப்பா:(

  பொன்னியின் செல்வன் படிச்சுக்கிட்டு இருந்தேன் சென்னை மத்திய நூலகத்தில் இருந்து எடுத்து. ஒரு கார்டுக்கு ஒரு புத்தகம்தான் தருவாங்க. ரெண்டு அட்டை இருந்ததால் ரெவ்வெண்டா எடுத்துக்குவேன். நாலு பாகம் ஆச்சு. அஞ்சாவது எடுக்குமுன் ஊரைவிட்டே போயிட்டேன்.

  அப்புறம் ஒரு 15 வருசம் கழிச்சு தெரிஞ்ச இலங்கைத் தோழி பேச்சு வாக்கில் அவுங்ககிட்டே பொன்னியின் செல்வன் இருக்குன்னதும்...... கெஞ்சிக்கூத்தாடி அஞ்சாம் பாகம் மட்டும் கடன் வாங்கினேன். புத்தகம் நாலுநாளுக்குக் கடன் கொடுக்க இல்லாத யோசனையெல்லாம் செஞ்சாங்கன்றது வேற கதை.

  அவசர அவசரமா வாசிச்சுக்கிட்டே வர்றேன்..... ஆதித்தன் கொலையாகும் பக்கங்கள் மிஸ்ஸிங். பைண்டாகும்போதே அதுக்கு முந்தின ரெண்டு அத்தியாயம் ரிப்பீட் ஆகி இருக்கு:(

  அன்னைக்கு ஏற்பட்ட மண்டைக்குடைச்சல்...... இப்போ ஒரு ஆறேழு வருசங்களுக்கு முன் சென்னை லைப்ரரி.காம் நூலகத்தில் கிடைச்சதால் தீர்ந்தது ஒரு வழியா:-)))

  இது கிடக்கட்டும்........... என்ன நினைச்சுக்கிட்டு இருந்தேன்....


  ரோஷ்ணி கார்னர்... சூப்பர்!!!!

  ReplyDelete
 18. You can get this ebook (padhi rajyam) from this link : https://mega.co.nz/#!tMtxmYwD!NYN-8Dz8At3aRwSb87BMElViTQ5KCs2WtwNG4qDPmYk

  ReplyDelete
 19. துளசி டீச்சர் - உங்க அனுபவம் ரொமப நல்லா இருக்கே...:)) நன்றி.

  ரகுநாதன் - சுட்டிக்கு நன்றிங்க. பார்க்கிறேன்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…