Wednesday, April 17, 2013

தாழம்பூவும் தங்கநிலாவும்பட உதவி: கூகிள்


காஞ்சனா ஜெயதிலகர் அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். மென்மையான கதை. காஞ்சனா அவர்கள் குடும்பப் பாங்கான கதைகளை எழுதிக் கொண்டு வருபவர்.  இது ஒரு இனிமையான அதே சமயம் கொஞ்சம் த்ரில்லான கதை…. கதைக்குள் போவோமா…..

நீலவேலி எஸ்டேட்டின் சிறப்பை விவரிக்கும் வரிகள்  இயற்கை அழகை நம் கண் முன்னால் நிறுத்துகிறது. வயதான காரணத்தால் முதலாளி ஜனார்த்தனன் தன்னுடைய இறுதி நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மகள் வயிற்று பேத்தியான கனகாங்கியை தனித்து விட்டு விட்டு செல்கிறோமே என மனக்கவலை அவருக்கு. அந்த கவலை கனகாங்கிக்கும் தான். தாத்தாவுக்கு பின் தனிமையில், வனாந்திரம் போலுள்ள இவ்வளவு பெரிய எஸ்டேட்டில் எப்படி இருப்பதென….

ஜனார்த்தனனின் மகள் குறும்படங்களை  தயாரிக்கும் ஒரு கலைஞனை காதலித்து திருமணம் செய்தவர். கணவனோ சொத்துகளை பற்றி யோசிக்காமல் இயற்கையின் அழகை படமெடுக்க செல்ல மனைவியும் உடன் சென்று, ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட அன்றிலிருந்து கனகாங்கி தாத்தா வசம் தான்

தாத்தாவின் இந்த நிலையில் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு தூரத்து சொந்தம் பிரபாவதி தன் மகன்களில் ஒருவரை கனகாங்கிக்கு திருமணம் செய்ய திட்டமிடுகிறார். தாத்தாவும் வெளியே சென்று மாப்பிள்ளை பார்க்க முடியாததால் சொந்தம் விட்டு போக வேண்டாமென பிரபாவதி மகன்களை பற்றி யோசிக்க, அருகில் உள்ள பண்ணை வீட்டுக்கு அசோக் என்னும் கலைஞன் வருகிறார்.

அபூர்வமான ராகத்தின் பெயரான கனகாங்கி என்ற பெயரை கேட்டதிலிருந்தே அவளை காண வேண்டும் என்று தவித்த  அசோக்கை சந்தித்து தன்னை தாத்தாவிடம் வந்து பெண் கேட்குமாறு நாடகமாட சொல்கிறாள் அழகி கனகாங்கி. பிரபாவதி மகன்களிடம் இருந்து தப்பிக்க….

கனகாங்கியின் அப்பா படங்களை உபயோகப்படுத்த வேண்டி உதவி கேட்க ஏற்கனவே ஒரு முறை தாத்தாவை சந்தித்திருந்ததால், நாடகம் நடத்த கடினமாக இருக்கவில்லை. தாத்தாவுக்கு அசோக்கை பிடித்து விடுகிறது. இந்த அசோக்கை கன்யா என்பவள் ஒரு தலையாக காதலிக்கிறாள். கனகாங்கிக்காக அசோக் நடத்தும் நாடகத்தை நிறுத்த கன்யா சதி செய்கிறாள். மறுபுறம் பிரபாவதி மகன்கள் இடைஞ்சல் தர, கனகாங்கிக்கும் அசோக்குக்கும் இடையே காதல் மலர்கிறது. தாத்தாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக, என்ன முடிவெடுக்கிறார்? கனகாங்கியின் காதல் என்னவானது? கன்யா அசோக்கை விட்டாளா? தெரிந்து கொள்ள புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.

புத்தகத்தை வாங்க அணுக வேண்டிய முகவரி:-

அருணோதயம்
5/3, கெளடியா சாலை,
இராயப்பேட்டை,
சென்னை – 600014.

புத்தகத்தின் விலை ரூ 60.

மீண்டும் சந்திப்போம்,
ஆதிவெங்கட்.

16 comments:

 1. புத்தக அறிமுகமும் சஸ்பென்ஸாக முடிவைச் சொல்லாமல்
  முடித்த விதமும் அருமை
  நிச்சயம் புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்கிற
  ஆவலைத் தூண்டிப் போகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நூலின் தலைப்பே மிக அருமையாக உள்ளது. நூல் விமர்சனமும் அறிமுகமும் சிறப்பாக உள்ளது.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. விறுவிறுப்பான விமர்சனம் ...

  ReplyDelete
 4. நல்ல கதை விமர்சனம் ஆதி.
  நிறைய கதை புத்தகங்கள் படிப்பேன்முன்பு.
  அது போல் நீங்களும் நிறைய படிப்பது அறிந்து மகிழ்ச்சி.
  கதை பெயரும், கதாநாயகி பெயரும் அருமை.

  ReplyDelete
 5. கா.ஜெ. எழுதிய எந்தக் கதையையும் நான் இதுவரை படித்ததில்லை. நீங்க சொல்லியிருக்கற கதைச் சுருக்கம் நிச்சயம் என் ஆவலைத் தூண்டிடுச்சு. முடிந்தவரை இதை நானும் வாங்கிப் படிக்க முயல்கிறேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 6. அருமை...

  அங்கே "பர்மாவிலிருந்து நடையாய் நடந்து".... புத்தக அறிமுகம்... இங்கே ஆவலைத் தூண்டும் மற்றொரு புத்தக விமர்சனம்...

  இரண்டையும் குறித்துக் கொண்டேன்... நன்றி...

  ReplyDelete
 7. சினிமா விமர்சனம் போல ரசிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள்.நன்றி..உங்களைப் பின்தொடரும் ஒரு பதிவர் கலியபெருமாள்புதுச்சேரி

  ReplyDelete
 8. ஆவலைத் தூண்டும் முன்கதை!

  ReplyDelete
 9. ஆவலைத்தூண்டுகின்றவிதத்தில் உங்கள் பார்வை புத்தகத்தை வாங்கத்தூண்டுகின்றது நன்றி பகிர்வுக்கு !

  ReplyDelete
 10. அட!நம்மூர் தொலைக்காட்சி சீரியல் போல இருக்கிறதே!

  ReplyDelete
 11. வாசிக்கனும் என்ற ஆவலை வரவழைத்து விட்டீர்கள்.பெயரே அருமை.

  ReplyDelete
 12. உங்கள் அறிமுகம் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது...

  ReplyDelete
 13. பழைய தமிழ் சினிமா பாட்டுப்புத்தக ஸ்டைலில் “ முடிவை வெள்ளித்திரையில் காண்க “ என்று சொல்லி விட்டீர்கள். நூல் விமர்சனம் சுருக்கமாகவும் சலிப்பில்லாமல் படிக்கும் விதத்திலும் இருக்கிறது. நான நூல் விமர்சனம் செய்தால் கொஞ்சம் நீண்ட உரைதான்.வாய்ப்பு கிடைக்கும்போது நானும் இந்த புத்தகத்தைப் படித்துப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 14. அருமையான கதைச் சுருக்கம். தாழம்பூ வசீகரிக்கிறது.ஏதோசினிமாக் கதை படிக்கிறது போல இருந்தது.
  பக்கத்தில்தானே புத்தகக் கடை இருக்கிறது.
  வாங்கிடலாம். நன்றி ஆதி.

  ReplyDelete
 15. நான் படித்து ரசித்த புத்தகத்தை பற்றிய பகிர்வுக்கு தாங்கள் அனைவரும் தந்த ஆதரவுக்கு நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…