Thursday, April 4, 2013

குட்டிப் பொண்ணுக்கு பிறந்தநாள்….


இன்னிக்கு எங்க செல்லத்துக்கு பிறந்தநாள். இந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே என் பிறந்தநாள் வரப் போகிறதே! ஹை! ஜாலி! என்று சொல்லிக் கொண்டிருந்தவள்.. இன்னும் ஒரு மாதம் இருக்கிறது, இன்னும் ஒரு வாரம் இருக்கிறதுஇன்னும் நாலு நாள் இருக்கிறது என்று அவளின் பிறந்தநாள் இதோ வந்தே விட்டது. இந்த சின்ன வயதில் தான் இது போன்ற எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் இருக்கும் அல்லவா!


எங்களது இல்லத்தில்!தில்லியின் Doll Museum பொம்மையைப் பார்க்கும் பொம்மைநானும் தாஜ் மஹாலை தொடுவேன்.....


ஜெய்ப்பூர் ஆமேர் கோட்டையில்...


தில்லி பீதம்புராவின் தில்லி ஹாட்! – குல்ஃபி ரொம்பவே டேஸ்டி!


நான் சீக்கிரமே எழுந்து விடுகிறேன் அம்மா. தலையை இப்படி பின்னி விடு, இந்த வளையல் போட்டுக்கறேன், என்று ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே சென்றாள். அம்மா எனக்கு இந்த பாயசம் தான் வேண்டும் என்று அன்பு கட்டளை வேறு…:) அவளின் ஆர்வத்தைப் பார்க்கும் போது என்னுடைய சிறுவயது பிறந்தநாள்கள் தவறாமல் கண் முன்னே வந்து சென்றது. நாம அனுபவிக்காததை நம் குழந்தைகள் அனுபவிக்கட்டுமே என்று மனதில் தோன்றுவதென்னவோ உண்மைஇப்போது கூட மகளுக்கு, கணவருக்கு என்று பார்த்து பார்த்து இனிப்புகள் செய்யும் எனக்கு என்னுடைய பிறந்தநாளுக்காக செய்ய தோன்றாது…:)பொங்கல் அன்று வீட்டில்....
திருவனந்தபுரம் ZOO
வெளியே இருக்கும் சறுக்கு மரத்தில்!
Garden of Five Senses – தில்லி
பூக்களாலான மயிலுக்கு அருகில் பூமகள்...

Garden of Five Senses – தில்லி
மற்றுமொரு போஸ்!திருவனந்தபுரம் அருகே பொன்முடி!
இயற்கையின் சூழலில்....அவளின் ஒவ்வொரு ஆசைகளும், கனவுகளும் நிறைவேறட்டும். அவள் ஃப்ரெண்ட் கணேஷா அவளை அன்பான, அடக்கமான, அனுசரணையான, ஆரோக்கியமுள்ள குழந்தையாக வைத்திருக்கட்டும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிம்மா!

அம்மாவும், அப்பாவும்

டிஸ்கி:- இது என்னுடைய 150 வது பதிவு. ஒருவழியாக இத்தனை பதிவுகளை தேற்றி விட்டேன். தொடர்ந்து ஆதரவும் தந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் நன்றிகள் பல.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

47 comments:

 1. Happy Birthday & Many More Happy Returns to Roshni!

  Nice photos!

  ReplyDelete
 2. தங்கள் குழந்தை செல்வி ரோஷ்ணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

  HAPPY BIRTH DAY ! ;)

  ReplyDelete
 3. காட்டியுள்ள படங்கள் யாவும் மிகவும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. செல்லப் பெண் ரோஷ்ணிக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழி!

  ReplyDelete
 5. தீபாவளித் திருநாள் போன்ற பண்டிகைகளைக் கூட இன்னும் ஒரு மாசம் இருக்கு பட்டாசு விட, இன்னும் ஒரு வாரம், நாலு நாள்னு நெருங்க நெருங்க வர்ற த்ரில் இருக்கு பாருங்க... ஒரு குறிப்பிட்ட வயசு வரைதான் அனுபவிக்க முடியும். குழந்தை நல்லா அனுபவிச்சு சந்தோஷப்படட்டும்! எல்லாப் படங்கள்லயும் ரோஷ்ணி அழகுதான்... இருந்தாலும் குல்பி சாப்பிடற குழந்தை எனக்கு ரொம்பப் பிடிச்சுதுங்கோ!

  ReplyDelete
 6. செல்லக்குட்டிக்கு முதலில் எங்கள் அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

  உங்க ஒன்னரைச் சதத்துக்கு இனிய பாராட்டுகள்.
  மேன்மேலும் வளரட்டும்.

  நல்லாசிகளுடன்,
  துளசியும் கோபாலும்.

  ReplyDelete
 7. இன்று பங்குனி உத்ராடம். என் பெரிய பிள்ளைக்கும் தமிழ் பிறந்தநாள் இன்று தான். [STAR BIRTH DAY].DOB: 18th MARCH.

  ReplyDelete
 8. உங்கள் செல்லத்தின் பிறந்தநாளுக்கு எங்களின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும்.இந்த நல்ல நாளில் அவங்க அம்மாவின் கனவுகளும், ஆசைகளும் நிறைவேற வேண்டிக்கொள்கிறோம்.

  ReplyDelete
 9. குட்டிப் பெண்ணுக்கு எங்கள் வாழ்த்துகளும் இணைகின்றன.

  உங்கள் 150 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. குழந்தை பிறந்த நாள் அம்மாவும் உதிதாகப் பிறக்கிறாள். அதனால் உங்களுக்கும் ஹாப்பி பர்த் டே ஆதி.!
  செல்லம் ரோஷ்ணிக்கு எங்கள் மனம் நிறைந்த ஆசிகள்.. அருமையான பெற்றோரைப் பெற்றவள். மேன் மேலும் நன்றாக வளர்ந்து நன்மைகள் அடையட்டும்.
  உங்கள் 150 ஆவது பதிவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. தங்களின் 150 வ்து பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)! சிறுவயதுப் படங்களிலிருந்து வரிசையாகப் பகிர்ந்திருப்பது அழகு.

  150-வது பதிவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. பூக்களாலான மயிலுக்கு அருகில் பூமகள்...

  மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

  அவளின் ஒவ்வொரு ஆசைகளும், கனவுகளும் நிறைவேறட்டும். அவள் ஃப்ரெண்ட் கணேஷா அவளை அன்பான, அடக்கமான, அனுசரணையான, ஆரோக்கியமுள்ள குழந்தையாக வைத்திருக்கட்டும்.

  ReplyDelete
 15. 150 வது பதிவுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 16. உங்கள் செல்லக் குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... எல்லா நலமும் வளமும் பெற அவரின் பிரண்டான கணேஷை வேண்டுகிறேன்... உங்கள் குழந்தை கிட்டத்தட்ட அப்பாவின் (வெங்கட் சாரின்) சாயலில் உள்ளது...

  150-க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. Happy Birthday to Roshni and many more happy returns of the day.
  ரோஷ்னிக்கு என் ஆசிகள் பல.

  ReplyDelete
 18. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரோஷ்ணி.

  150-க்கு உங்களுக்கும் வாழ்த்துகள் ஆதி.

  ReplyDelete
 19. செல்லக் குட்டிக்கு (அப்படியே அப்பாவின் முகம்) அன்பான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  150 பகிர்வு மறக்க முடியாதது... மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள் பல...

  ReplyDelete
 20. ரோஷ்னிக்கு பிறந்த நாள் வாழ்த்து! நூற்றி ஐம்பதாவது பதிவுக்கு தனியே ஒரு வாழ்த்து!

  ReplyDelete
 21. குழந்தை ரோஷ்ணிக்கு எனது மனம் கனிந்த
  பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
  வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெற்று
  பல்லாண்டு வாழ மதுரை மீனாட்சியை
  வேண்டிக் கொள்கிறேன்

  படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
  தங்கள் 150 வது பதிவுக்கும்
  தொடர்ந்து பதிவுகள் ஆயிரமாயிரமாய்த் தரவும்
  எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. // பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிம்மா! //

  இன்று பிறந்தநாள் கொண்டாடும் செல்வி ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்! அவர் பெற்றோர் வெங்கட்நாகராஜ் தம்பதியினருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. ரோஷ்ணி நன்கு வளர்ந்துவிட்டாள். பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. oh!maranthu poiten,valthukal,vaalthukal roshni.
  boy cut photo super.

  ReplyDelete
 25. குட்டிதேவதை ரோஷ்ணிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நன்றாக படித்து, நல்பெயரெடுத்து அம்மா,அப்பாவுக்கு பெருமை சேர்த்திடவேண்டும்.
  150 பதிவுகள் எழுதியிருக்கிறீங்க. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. 'நான் வளர்கிறேனே மம்மி' என்று சொல்லும்விதமாக ரோஷ்ணியின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒவ்வொரு போட்டோவாகப் போட்டு அவளது பிறந்த நாளை பதிவர்களும் சேர்ந்து கொண்டாடும்படி செய்திருக்கிறீர்கள்.
  குழந்தைக்கு ரஞ்சனிப் பாட்டி, நாராயணன் தாத்தாவின் ஆசிகளையும் அன்பையும் சொல்லுங்கள்.

  எல்லா அம்மாக்களும் இப்படித்தான் - குழந்தைகளின் பிறந்தநாட்களை கொண்டாடுவோம் - நம் பிறந்தநாளை ஒதுக்கிவிடுவோம்.

  சீனுவின் கருத்தும் (அப்பாவைப் போல பெண்) என் கருத்தும் ஒன்றே.

  உங்களது 150 வது பதிவுக்கும் இன்னும் பல நூறு பதிவுகள் காணவும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. குழந்தை ரோஷ்ணிக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. Happy Birthday Roshini. May all your dreams come true and your parents dreams for you as well. Just a replica of Venkat anna in these pics. Long Live Roshini

  ReplyDelete
 29. செல்லக்குட்டிக்கு இன்னிக்கு புறந்த நாள்.

  செல்லக்குட்டி அது
  வெல்லக்கட்டி.
  தங்கக் கட்டி அதுவும்
  படிப்பிலும் சுட்டி.

  ஹாப்பி பர்த் டே ..
  ஹாய்யா ஊர் சுத்தும் டே
  ஹாய் ஹாய் சொல்லும் டே.

  என் செல்லத்துக்கு
  என்ன வேணும் .... ?

  எல்லா டயமுமே
  எனக்கா நீ
  என் பக்கத்திலேயே
  இருக்கவேண்டும்.

  டாடி, பாவம் டி.
  ஆபீஸு போகணும்டி.
  டா டா சொல்லுடி ...

  தா தா..
  தா தா இல்லைடி கண்ணு
  டா டா சொல்லு.
  தா தா.

  சுப்பு தாத்தா.
  wishes Roshani All the Best
  Happy Birth Day Toooooo Youuuuuuuuuuuuuuuu

  ReplyDelete
 30. பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷினி. வீட்டில் எடுத்த அண்மை போட்டோவில் நல்ல உயரமா தெரிகிறாள்

  ReplyDelete
 31. ரோஷ்ணிக்கு எங்கள் இதயம் கனிந்த பிற்ந்த நாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 32. MANY MORE HAPPY RETURNS OF THE DAY.

  ReplyDelete
 33. அவளின் ஒவ்வொரு ஆசைகளும், கனவுகளும் நிறைவேறட்டும். அவள் ஃப்ரெண்ட் கணேஷா அவளை அன்பான, அடக்கமான, அனுசரணையான, ஆரோக்கியமுள்ள குழந்தையாக வைத்திருக்கட்டும்.

  கனிவான வாழ்த்துக்களுடன் பூரண இறையாசிக்கு பிரார்த்தனைகளும். அப்பா ஜாடையில் இருக்கும் பெண் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள்.ரோஷ்ணி பிறந்த அன்று தானே நீங்களும் பதவி உயர்வு பெற்றீர்கள்... அப்பா... அம்மா என்று! அதற்கும் சேர்த்து கொண்டாட்டம் இருக்கட்டும்

  ReplyDelete
 34. செல்லப்பெண் ரோஷிணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  ஆதி, உங்களுடைய நூற்றைம்பதாவது பதிவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 35. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  இறைவன் அருளால் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இனிதாக வாழ வாழ்த்துக்கள்.
  படங்கள் எல்லாம் ரோஷ்ணி வள்ர்வதை காட்டுகிறது. வாழ்க வளமுடன்.

  //அவளின் ஒவ்வொரு ஆசைகளும், கனவுகளும் நிறைவேறட்டும். அவள் ஃப்ரெண்ட் கணேஷா அவளை அன்பான, அடக்கமான, அனுசரணையான, ஆரோக்கியமுள்ள குழந்தையாக வைத்திருக்கட்டும்.//

  அம்மாவின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் கணேஷா துணை இருப்பான்.

  ரோஷ்ணிக்கு பிடித்த பாயசம் என்ன சொல்லவில்லையே!
  நீங்கள் சொல்வது உண்மைதான் ஆதி, நமக்கு என்று பிடித்ததை செய்ய தோன்றாது குழந்தைகள் கணவர்,மற்றும் உற்றம், சுற்றத்திற்கு பிடித்த உணவை செய்துக் கொடுப்போம்.
  உங்கள் 150வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. ரோஷிணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .

  150 வாழ்த்துகளும். இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சிறப்புறட்டும் கொண்டாட்டம்.

  ReplyDelete
 37. கோவை அரசியே, தியாகச்செம்மலே,

  தங்கள் செல்வச் சிறுமியின் பிறந்தநாள் பதிவே தங்கள் 150 ஆவது பதிவாக மலர்ந்த்தமைக்கு எங்கள் மனம் கனிந்த பாராட்டுக்களை நவில்கின்ற இந்த வேளையில், மேற்கொண்டு வரும் நாட்களில் அது சிகரத்தை த் தொட்டிடவேண்டும் என்ற எங்கள் தீராத ஆசையினை தெரிவித்துக்கொள்கிறேன் .

  செல்ல குட்டியின் வளர்ச்சியினை பற்றிய தங்கள் போட்டோ தொகுப்பு மிக அருமை தங்கள் செல்லமகள், வண்ணமயில், முடிசூடா அழகு தேவதை எங்கள் ரோஷினி ராணிக்கு எங்கள் இதயம் கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  வேளச்சேரி நடராஜன்.

  ReplyDelete
 38. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  இந்தக் குட்டிப் பொண்ணுக்கு .வாழ்க வளமுடன் !

  ReplyDelete
 39. vaazhthukkal sako..!

  ungal 150 pathivirkum pirantyanaalukkum...

  ReplyDelete
 40. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. சுட்டிப் பெண் ரோஷ்னிக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும்,மேலும் நல்ல கல்வி,புத்திகூர்மைகள் வளர்ந்து,அருமையான பெண்ணாக வளர, ஆரோக்யத்துடனிருக்க,எல்லாம் வல்ல கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன். கூடவே ஆதி, வெங்கட் தம்பதிகளுக்கும் நல்லாசிகள். அன்புடன்

  ReplyDelete
 42. ரோஷிணி எல்லா நலனும், வளமும் பெற்று நீடூழி வாழ்வாங்கு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  அப்பா, அம்மா விரும்பியபடி உன் வாழ்வு மலர வாழ்த்துக்கள் ரோஷிணி.

  ReplyDelete
 43. ரோஷ்ணிக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
  ஆதி, உங்களுடைய நூற்றைம்பதாவது பதிவுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 44. குட்டி ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆதி.150 வது பதிவிற்கும் பாராட்டுக்கள்.படங்கள் பகிர்வு அருமை.தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள் பல.

  ReplyDelete
 45. உங்கள் செல்ல பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  வாழ்வில் எல்லா நலனும் இனிதாய் பெற்றிடவும் நீங்கள் எண்ணிய வண்ணம் வளர்த்திடவும் என் நல் வாழ்த்துக்கள்.

  150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  எல்லா படஙக்ளும் மிக அருமை, மயிலுடன் நிற்கும் உஙக்ள் பூமகளும், மிக மிக அருமை.

  படஙக்ள் கொஞ்சம் சின்னதாக்கி போட்டு இருக்கலாம்
  பதிவு ஓப்பன் செய்து ரொம்ப நேரம் கழித்து தான் ஒப்பன் ஆச்சு.

  ReplyDelete
 46. ரோஷ்ணிக்கும், எனக்கும் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

  தங்களின் வாழ்த்துக்களை பொறுமையாக வாசித்து பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்...:)

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…