Friday, March 8, 2013

வண்ண வண்ண கோலங்கள்...


மகளிர் தினத்தையொட்டி எங்கள் குடியிருப்பில் நடைபெற்ற  கோலப்போட்டிகள் பற்றி முன்பே என்னுடைய மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பதிவில் எழுதியிருந்தேன். உலக மகளிர் தினமான இன்று வண்ணமயமாக கோலங்களை பார்த்து ரசிக்கலாமா....



முதல் பரிசு பெற்ற கோலம்


இரண்டாம் பரிசு பெற்ற கோலம்






மூன்றாம் பரிசு பெற்ற கோலம்









இது நாங்க போட்ட கோலம்!



இது தான் கோல அணி!



நிகழ்ச்சியை நடத்திய தோழி வாணி அவர்கள் எழுதிய பெண்கள் தின ஆத்திச்சூடி

அ – அன்பின் அடையாளம்
ஆ – ஆளுமையின் பிறப்பிடம்
இ – இனிமையாகப் பழகுபவர்கள்
ஈ – ஈடில்லா தாய்மை உள்ளம் கொண்டவர்கள்
உ – உள்ளத்தில் உறுதி உள்ளவர்கள்
ஊ – ஊக்கத்துடன் முன்னேறுபவர்கள்
எ – எளிமையாக இருப்பவர்கள்
ஏ – ஏளனத்தை விரும்பாதவர்கள்
ஐ – ஐயமில்லை அவர்களே நம் நாட்டின் பெண்கள்
ஒ – ஒற்றுமைக்கு வழி வகுப்பவர்கள்
ஓ – ஓய்வை துறந்தவர்கள்
ஒள – ஒளவியம் (பொறாமை) அகற்றியவர்கள்
ஃ – அஃதே நம் பெண்கள், ஆம் அவர்களே நம் கண்கள்.

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்...


பட உதவி: கூகிள்


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

25 comments:

  1. கோலங்கள் அருமை...

    வாழ்த்துக்கள் (எல்லா நாளும்)

    ReplyDelete
  2. கண்ணைக் கவரும் வண்ணக் கோலங்கள் அத்தனையும் அழகு

    ReplyDelete
  3. மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கண்ணையும் கருத்தையும் கவரும் பகிர்வு. கோலக் குழுவில் உங்களை அடையாள படுத்த வில்லையே புகைப்படத்தில்... வாணிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வண்ணக்கோலங்கள் எண்ணம் நிறைந்தன ...
    மகளிர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வண்ணக் கோலங்கள் அழகு.
    எண்ணக் கோலத்தில் விளைந்த ஆத்திசூடியும் அருமை.
    மகளிர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. kaNkavar kalar kalar koolangkaL.vaazththukakL.

    ReplyDelete
  8. வண்ண வண்ணக் கோலங்களுடன் மகளிர் தின வாழ்த்து சொன்னது அருமை.
    மகளிர் தின வாழ்த்துகள் ஆதி!

    ReplyDelete
  9. அனைத்துக்கோலங்க்ளும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள். இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. கோலங்கள் நல்லா இருக்கு.

    ReplyDelete
  11. வண்ணக் கோளங்களின் அணிவகுப்பும், புதிய ஆத்திச்சூடியும் ரசித்தேன்.

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க.

    டி.என்.முரளிதரன் - நன்றிங்க.

    நிலாமகள் - நன்றிங்க.//கோலக் குழுவில் உங்களை அடையாள படுத்த வில்லையே புகைப்படத்தில்//

    அந்த புகைப்படத்தை எடுத்தது நான்...:)

    இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

    கோமதிம்மா - நன்றி.

    ஸாதிகா - நன்றிங்க.

    ரஞ்சனிம்மா - நன்றி.

    வை.கோ சார் - நன்றி.

    புதுகைத்தென்றல் - நன்றிங்க.

    ஸ்ரீராம் - நன்றி.


    ReplyDelete
  13. மகளிர் தின வாழ்த்துக்கள் !

    வண்ணக் கோலங்கள் அழகு..

    ReplyDelete
  14. // ஆ – ஆளுமையின் பிறப்பிடம் //

    ஆமாமாம் அதுவும்
    தில்லியில ------ பல ஆண்டுகளாய்..
    வங்காளம் மற்றும்
    தமிழ்நாட்டுல ( ஐந்தாண்டு இடைவளைக்குப் பின்) ----- இரண்டாண்டுகளாய்
    மத்தியிலும் ---- சில/பல ஆண்டுகளாய்..

    -----------------------
    // ஒளவியம் (பொறாமை) // thanks for writing the meaning also

    ReplyDelete
  15. எண்ணங்கள் ஆயிரம் கொண்ட வண்ணக் கோலங்கள்!
    சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. கோலங்கள் அருமை.

    தோழி வாணி அவர்களின் ஆத்திச்சூடி சிறப்பாக இருக்கு.

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  17. கோலங்கள் அத்தனையும் அழகாக இருந்தாலும் அந்த தாமரைப்பூ கோலம் மிக அழகாய் இருக்கிறது!

    தோழி வாணியின் ஆத்திச்சூடியும் அருமை!

    மகளிர் தின வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. கோலங்கள் மிக அழகு. மகளிர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. வண்ணக் கோலங்கள் அழகு.மகளிர்தின வாழ்த்துகள்

    ReplyDelete
  20. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். இருந்தாலும் அழகான வண்ணக்கோலங்களில் மனம் லயித்து, புதிய ஆத்திச்சூடியைப் படித்து வியந்தேன். உங்களுக்கு என் மனம் நிறைந்த மகளிர்தின நல்வாழ்த்துகள் தோழி!

    ReplyDelete
  21. கோலாகலமா இருக்கு கோல அடுக்கு!

    ReplyDelete
  22. கோலங்கள் மிக அருமையாக இருக்கிறது....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  23. ரிஷபன் சார் - நன்றி.

    மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - நன்றி.

    தி.தமிழ் இளங்கோ சார் - நன்றி.

    ரமாரவி - நன்றிங்க.

    மனோம்மா - நன்றி.

    ராமலஷ்மி - நன்றிங்க.

    சென்னை பித்தன் - நன்றி சார்.

    கணேஷ் சார் - நன்றி.

    கே.பி.ஜனா சார் - நன்றி.

    மலர் - நன்றிங்க.

    ReplyDelete
  24. தாமதமான வாழ்த்துகள்.அனைத்து கோலங்களும் புதிய ஆத்திச்சூடியும் நன்று ,சுப்பர்.

    ReplyDelete
  25. ஆச்சி - நன்றிப்பா.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…