Monday, March 11, 2013

உள்ளங்கையில் ஒரு கடல் – பிரபஞ்சன்
பிரபஞ்சன் அவர்கள் தமிழ் மொழியின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் சாதனை முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளராக  கெளரவித்திருக்கின்றன. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளர்.

இந்த புத்தகத்தின் பதிப்புரையில் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள செய்தி: "தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்த போதே பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட நாவல் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது."

நான் சமீபத்தில் வாசித்த இந்த கதை மிகவும் வித்தியாசமான கதையாக இருந்தது. கதைக்குள் போவோமா?

முன்னுரையில் பிரபஞ்சன் அவர்கள் இந்தக் கதையை பற்றி சொல்கிறார். புகழ்பெற்ற ஒரு சினிமா இயக்குநர் காணாமல் போவதில் தொடங்குகிறது இந்தத் தொடர்கதை. அவனைத் தேடிப் புறப்படுகிறாள் இளம் பத்திரிக்கையாளர் ஒருத்தி. அவன் உலகமும், உறவும், அவள் தேடலும் தான் கதை”.

பிரபல பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராக பணிபுரியும் செல்வி, பத்திரிக்கை ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்பட இயக்குனரான மூர்த்தியை தேடி செல்கிறார். தேடச் சொன்னது  அவரது நண்பரான தயாரிப்பாளர் பரசுராம். முதலில் ஆசிரியரின் வேண்டுகோளுக்காக தேட சென்றவள். அவர் தங்கியிருந்த மேன்சன், நண்பர்கள், காதலி என்று பல பேரிடம் விசாரிக்க விசாரிக்க அவர் மேல் மரியாதை கூடுகிறது. மூர்த்தி ஒரு சிறப்பான மனிதர் எனத் தெரிகிறது. பெண்களின் மானத்தை போற்றுகிறவர், உதவும் மனப்பான்மையுள்ளவர், அவர் ஒரு இயற்கை விரும்பி என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு, அவர் ஒளிந்து கொண்டு இருக்கும் இடத்தை அடைகிறாள். அவர் தன் பேரை மாற்றிக் கொண்டு இவள் தேடி வந்தவர் தான் இல்லை என்று சொல்கிறார். செல்வியும் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதைப் போல் நடிக்கிறாள். தினமும் அவரை சந்தித்து பேசி, அவரிடம் நேரிடையாக கேட்காமல் அவர் ஒளிந்து கொண்டிருக்கும் காரணத்தை கண்டுபிடிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவரை சென்னைக்கு அழைத்து வந்து தயாரிப்பாளரிடமும், காதலியிடமும் ஒப்படைக்கிறாள்.

ஒளிந்து கொண்டதற்கான காரணம் என்ன? வாங்கிப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

இந்த புத்தகத்தை வாங்க அணுக வேண்டிய முகவரி:-

கவிதா பப்ளிகேஷன்
தபால் பெட்டி எண் 6123
8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்,
தி.நகர், சென்னை – 600017.
புத்தகத்தின் விலை ரூ 90

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

16 comments:

 1. வாரமலரில் வெளியான கதை பற்றிய அருமையான விமர்சனத்திற்குப்பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. அது என்ன காரணமா இருக்கும்னு (இருக்கற கொஞ்சநஞ்ச) முடியைப் பிச்சுக்க வெச்சுட்டீங்களே தோழி...! புத்தக விமர்சனம் எழுதறதன் நோக்கத்துல அதுவும் ஒண்ணுதானே... அதனால அவசியம் வாங்கிப் படிச்சுடறேன். ரைட்டா? இதென்ன ஆச்சர்யம்..! இன்னிக்கு வெங்கட் தளத்துலயும் புத்தக விமர்சனம், இங்கயும்... அழகான கருத்தொற்றுமைக்கு மனம் நிறைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
 4. பிரபஞ்சனின் எழுத்துக்கள் படித்ததில்லை.அவசியம் இந்த நூலைப்பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 5. இப்படி நிப்பாட்டினால் தான் வாங்கி படிக்க முடியும்...

  நன்றி...

  ReplyDelete
 6. பிரபஞ்சன் அவர்கள் எழுதிய இந்த கதை படித்ததில்லை.
  படிக்க ஆவலை ஏற்படுத்தி விட்டு விட்டது உங்கள் கதை விமர்சனம்.

  ReplyDelete
 7. பிரபஞ்சன் அவர்களின் வானம் வசப்படும் ,சமீபத்தில் படித்தேன் ..இந்த புத்தகம் எங்கள் லைப்ரரியில் கிடைக்குமென்றே நினைக்கிறேன் ..நீங்க பிரபஞ்சன் அவர்களின் சந்தியா வாசித்து விட்டீர்களா ,ஒரு முறை ஊரில் அது தொடராக எதோ ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரபாகிகொண்டிருன்தது ..

  ReplyDelete
 8. அங்கும் புத்தக விமரிசனம்1இங்கும்!
  அங்கும் த.ம.6..இங்கும்!

  ReplyDelete
 9. புத்தக விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 10. ஆர்வத்தைத் தூண்டும் விமரிசனம்!

  ReplyDelete
 11. இராஜராஜேஸ்வரி மேடம் - தங்களது முதல் கருத்துரைக்கு நன்றி.

  கணேஷ் சார் - தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  சக்தி தாசன் - நன்றிங்க.

  ஸாதிகா - தங்களது வருகைக்கு மகிழ்ச்சி. அவசியம் வாங்கி படித்துப் பாருங்கள்.

  திண்டுக்கல் தனபாலன் - தங்களது வருகைக்கும் தொடரும் ஆதரவுக்கும் நன்றிங்க.

  கோமதிம்மா - தங்களது கருத்துரைக்கு நன்றி.

  ஏஞ்சலின் - பிரபஞ்சன் அவர்களின் நாவல்களில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது! தங்களது கருத்துரைக்கு நன்றி.

  சென்னை பித்தன் சார் - அங்கும், இங்கும் கருத்துகளை பதிந்ததற்கு நன்றி.

  வை.கோ சார் - தங்களது வருகைக்கு நன்றி.
  ReplyDelete
 12. கே.பி.ஜனா சார் - நன்றி.

  ReplyDelete
 13. //பிரபஞ்சன் அவர்கள் தமிழ் மொழியின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர்.//

  உண்மைதான் அதி, அவருடைய படைப்புகள் மிகவும் அருமையாக இருக்கும்.
  நல்லதொரு புத்தக அறிமுகம்.

  ReplyDelete
 14. நாவல் குறித்து உங்கள் மதிப்புரை அருமை...

  படிக்க ஆசைதான்... வெளிநாட்டில் கிடைக்காதே..

  ReplyDelete
 15. திரு பிரபஞ்சன் அவர்களின் எழுத்துக்கள் அருமையாக இருக்கும். நீங்கள் சொன்ன புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 16. ராம்வி - நன்றிங்க.

  சே.குமார் - நன்றி. கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்.

  ரஞ்சனிம்மா - நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…