Wednesday, February 27, 2013

ஆலு பராத்தா!
வட இந்திய உணவான “ஆலு பராத்தாஎன்பது, ஒரு ஸ்டஃப்ட் சப்பாத்தி. உருளைக்கிழங்குடன் மசாலா சேர்த்து சப்பாத்தி உள்ளே வைத்து செய்வது. வட இந்தியாவில் சப்பாத்திக்கு உள்ளே பல விதமான பூரணம் வைத்து ஆலு பராத்தா, மேத்தி பராத்தா, கோபி பராத்தா என பல வித பராத்தாக்களை தயார் செய்வார்கள். மிகவும் பிரபலமானதும், சுவையானதும், அனைவருக்கும் பிடித்தமானதும் ஆலு பராத்தா. இந்தப் பராத்தாவினை எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம்!

தேவையானப் பொருட்கள் :-

கோதுமை மாவு – 1கப்
உருளைக்கிழங்கு – 3 (பெரியது)
உப்பு தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
மஞ்சள் தூள் சிறிதளவு
கொத்தமல்லி  இலைகள் சிறிதளவு
எண்ணெய் () நெய் தேவையான அளவு

செய்முறை :-

கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இது தான் ஸ்டஃப் செய்ய வேண்டிய பூரணம்.

பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து சிறிய சப்பாத்தியாக திரட்டிக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டியளவு உருளைக்கிழங்கு மசாலா கலவையை வைத்து மூடி, மாவை தொட்டுக்கொண்டு பராத்தாவாக திரட்டவும். எவ்வளவு மெலிதாக செய்ய முடியுமோ செய்யலாம். சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணையோ அல்லது நெய்யோ விட்டு வாட்டி எடுக்கவும்.

சூடான சுவையான, ஆலு பராத்தா தயார். இதற்கு சைட் டிஷ் ஆக ராய்தா எனப்படும் தயிர் பச்சடி, ஊறுகாய் அல்லது தொக்கு ஒத்துப் போகும்.

இந்த ரெசிபியை PASSION ON PLATE – GIVE AWAY ஈவண்டிற்கு அனுப்பி வைக்கிறேன். 


மீண்டும் சந்திப்போம்,

ஆதிவெங்கட்.

26 comments:

 1. குறித்துக் கொண்டாயிற்று...

  காராசாரமாக ஒரு சட்னி இல்லையா...?

  நன்றி...

  ReplyDelete
 2. ஆதி, ஆலுபராத்தா அருமை. டெல்லி போனால் மகள் செய்து தருவாள் .

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. எங்க வீட்டம்மா அடிக்கடி செய்வாங்க... கொஞ்சம் வேலை அதிகமோ?

  ReplyDelete
 4. சாப்பிட அருமையாக இருக்கும்.

  ReplyDelete
 5. சுவையான சப்பாத்தி - பரிசுபெற வாழ்த்துகள்..

  ReplyDelete
 6. படத்தில் காட்டியுள்ளது பார்க்க அருமையாக உள்ளது. நானும் வேறு வழியில்லாமல் பெங்களூர் BHEL CANTEEN இல் ஒரு நாள் மதியம் இதை சாப்பிட்டுள்ளேன், அதுவும் தொட்டுக்கொள்ள காரசாரமான புளிப்பான ஊறுகாய் இருந்ததால் மட்டுமே.

  படத்தில் காட்டியுள்ள வெங்காயப்பச்சிடி மட்டும் எனக்கு மிகவும் பிடித்தமானது. அப்படியே எடுத்துக் குடித்து விடுவேன்.

  சுத்த வழுவட்டையான இதை எப்படித்தான் அடிக்கடி செய்து அலுப்பில்லாமல் தினம் சிலர் சாப்பிடுகிறார்களோ?

  ReplyDelete
 7. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
 8. சுவையான பராத்தா.பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. சன்னா மசாலாவும் இது கூட அருமையா ஜோடி சேருதுங்க.

  ReplyDelete
 10. சுலபமாகசெய்து காட்டிட்டீங்க:0

  ReplyDelete
 11. ஓ! ஒரு தென்னிந்திய உணவு; ஒரு வடஇந்திய உணவா? பேஷ்! பேஷ்! ரொம்ப நல்ல இருக்கு. வெற்றி கிடைக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. எளிமையாக இருக்கிறது. சுவையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. அருமையான சப்பாத்தி.சுலப்மாக செய்து காட்டி இருக்கீங்க.

  ReplyDelete
 14. திரு. வெங்கட் அவர்களும் ஆலு பராத்தா ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே!

  (சமைப்பதிலா? சாப்பிடுவதிலா? என்று கேட்காதீர்கள்)

  ReplyDelete
 15. ஆஹா! சூப்பர் ஈஸியா இருக்கே! செய்து பார்க்கிறேன். அப்படியே கோக்கி ப்ரை எப்படி செய்வது என்றும் சொல்லிகொடுங்க தோழி, அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 16. வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 17. பராத்தா அருமையா இருக்குப்பா .என் மகளுக்கு சப்பாத்தி வகைன்னா ரொம்ப பிடிக்கும் ...செய்து விடுகிறேன் இம்முறையில் .

  ReplyDelete
 18. ரொம்ப அருமையாக இருக்கிறது....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 19. Dear Adhi
  How are you? For Aloo Pranta we should not add garam masala powder, chilli powder and turmeric powder in the masala.

  Masala consists of (1) boiled aloo (2) namak[salt] (3) chopped green chilli (4) anar dhana powder( dried Pomegranate) (for sour taste) (5) carom seeds (ajwain i.e. omam) and chopped green dhania leaves. This is the original aloo pranta (panjabi style). Hope you agree with me because we use to prepare this for the last 25 years. Some people use to add amchur powder also instead of anar dhana powder because anar dhana powder is costly.
  Hope you agree with me.

  Vijay
  New Delhi

  ReplyDelete
 20. நன்றாக இருக்கின்றது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  எங்கள் நாட்டில் மைதா கூடுதலாக சாப்பிடுவதால் மைதாவிலும் செய்வோம்.

  ReplyDelete
 21. திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க சார். ஊறுகாய் தான் இருக்கே...:)

  கோமதிம்மா - நன்றி.

  ஸ்கூல் பையன் - வேலையெல்லாம் அதிகமில்லங்க...:) உங்க வீட்டிலும் செய்வாங்களா! நன்றிங்க.

  கந்தசாமி ஐயா - நன்றிங்க.

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

  வை.கோ.சார் - வடக்கில் மிகவும் பிரபலமானது சார்...:) அங்கே மூன்று வேளையுமே சப்பாத்தி தானே...அதனால் அதில் சில வித்தியாசங்கள் மட்டும் செய்து சாப்பிடுவார்கள்...:) என் மாமியார் கூட கேட்பார் பல் இல்லதவங்க எப்படித் தான் சப்பாத்தி சாப்பிட முடியுமோவென்று...:)

  சக்தி தாசன் - நன்றிங்க.

  ராம்வி - வாழ்த்துக்கு நன்றிங்க.

  அமைதிச்சாரல் - சன்னா மசாலா ஒத்து போகுதா! இனி டரை பண்ணிடலாம்.

  அப்பாவி - நன்றிங்க. இனி அடிக்கடி செய்ங்க...:)

  புதுகைத்தென்றல் - நன்றிங்க.

  ஸாதிகா - இந்த முறையிலயும் வித்தியாசம் காட்டி செய்யலாம்.

  ரஞ்சனிம்மா - கண்டந்திப்பிலி ரசமும், பரங்கிக்காய் பாயசமும் பழைய குறிப்பிலிருந்து அனுப்பியிருக்கிறேன். வாழ்த்துக்கு நன்றிம்மா.

  ஸ்ரீராம் - மிகவும் சுவையானது தான். நன்றி.

  ஸாதிகா - இரண்டாம் முறையும் கருத்து தெரிவித்ததற்கு நன்றிங்க.

  ஈஸ்வரன் சார் - //திரு. வெங்கட் அவர்களும் ஆலு பராத்தா ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே!

  (சமைப்பதிலா? சாப்பிடுவதிலா? என்று கேட்காதீர்கள்)//

  கேட்கவெல்லாம் மாட்டேன். சந்தேகமே வேண்டாம். இரண்டுலயும் தான்....:))


  செம்மலை ஆகாஷ் - நன்றிங்க. கோபி ஃப்ரை சொல்லுகிறீர்களா?
  http://asiyaomar.blogspot.in/2013/02/chilli-gobi-fry.html

  இந்த பதிவை பாருங்கள்.

  நிலாமகள் - நன்றிங்க.

  ஏஞ்சலின் - செய்து கொடுங்க...நன்றிங்க.

  மலர் - நன்றிங்க.

  விஜயராகவன் சார் - பஞ்சாபி ஸ்டைலில் தங்களின் குறிப்புக்கு நன்றி சார். நானும் முதலில் பச்சை மிளகாயும், தனியாவும் மட்டுமே தான் சேர்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தான் இந்த முறையில் செய்ய ஆரம்பித்தேன்... இது பிடித்ததால்.

  மாதேவி - நன்றிங்க. மைதாவிலும் செய்வீர்களா!

  ReplyDelete
 22. Naanum ippadi thaan seiven.. thairu thaan thothukolla ennakum pidikum..Thanks for linking this recipe to my event 

  ReplyDelete
 23. ஃபாயிஜா - நீங்களும் இப்படித் தான் செய்வீர்களா! மகிழ்ச்சி. எனக்கும் தயிர் தான் பிடிக்கும்...:)

  ReplyDelete
 24. என் வீட்டாரின் ஓட்டு ஆலு பராத்தாவிற்கு நிச்சயம்.நல்ல பகிர்வு

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…