அரிசி உப்புமா, குருணை உப்புமா, அரிசி உடைசல் உப்புமா என்று சொல்லப்படும் அனைத்துமே
ஒன்று தான். எங்க வீட்டில் ரவை, சேமியாவில் செய்யப்படும் உப்புமாவுக்கெல்லாம் வேலையே
இல்லை. பேச்சிலர்ஸ் டேஸில் ரவா உப்புமா சாப்பிட்டு அலுத்ததால் ரவா உப்புமாவே செய்யாதே
என்று சொல்லியதால் செய்வதேயில்லை. சேமியாவும் அப்படித் தான்….:)
அரிசி உப்புமா என்றால் எல்லோருக்குமே இஷ்டம். அதுவும் வெங்கலப் பானையில் செய்து
காந்தலோடு சாப்பிட்டால் ஆஹா! சிலர் குக்கரில் வைப்பார்கள். அதெல்லாம் இங்க நடக்கவே
நடக்காது…:) எங்க அப்பாவுக்கு வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம், குருணை உப்புமா என்றால்
உயிர்.
இங்கு நான் சொல்லப்போகும் செய்முறை என் மாமியார் வீட்டு முறைப்படி… ஒரு சிலர்
வீட்டு வழக்கம் வேறு. இதிலயும் மாற்றங்கள் செய்வார்கள்.
தேவையானப் பொருட்கள்:-
அரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – 1 கையளவு
கடலைப்பருப்பு – 1 கையளவு
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்துருவல் – சிறிதளவு
நெய் - சிறிதளவு
தாளிக்க:-
கடுகு – ½ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய் – 2 (அ) 3
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 குழிக் கரண்டி
செய்முறை :-
கொடுக்கப்பட்டுள்ள அரிசி, துவரம்பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு ஆகியவற்றை மிக்சியில்
போட்டு ரவை போல் பொடித்துக் கொள்ளவும். அரிசியில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறி
வைத்து ஐந்து நிமிடம் கழித்து பருப்புகள், மிளகுடன் பொடித்தால் ஒன்று போல பொடிக்க வரும்.
எப்படி வசதியோ அப்படி செய்யலாம்.
அடுப்பில் வெங்கலப் பானையை வைத்து எண்ணெய் விட்டுக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும்
கடுகு போட்டு வெடிக்க விடவும். அடுத்து வரிசையாக கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இரண்டாக
கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை, இவற்றுடன் பெருங்காயம் சேர்க்கவும். பொன்நிறமாக வறுபட்டதும்
தண்ணீர் விட வேண்டும். 1 தம்ளர் அரிசிக்கு 2 1/2 தம்ளர் தண்ணீர் விடலாம். தேவையான அளவு
உப்பு சேர்க்கவும். கொதிக்கும் போது சிறிதளவு தேங்காய் துருவல் சேர்க்கவும். இது விருப்பம்
தான்.
தண்ணீர் கொதிக்கும் போது, அடுப்பை மிதமான தணலில் வைத்து, பொடி செய்த அரிசி ரவை
கலவையை ஒரு கையால் போட்டுக் கொண்டே ஒரு கையால் கிளற வேண்டும். விட்டு விட்டால் கட்டி
தட்டி விடும். கலவை தண்ணீருடன் சேர்ந்து கெட்டிப் பட்டதும், சரியான அளவு உள்ள மூடியை
போட்டு மேலே ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால்
சூடான இந்த தண்ணீரை சேர்த்து கிளற வசதியாக இருக்கும்.
அவ்வப்போது மூடியை எடுத்து கிளறி விடலாம். மேலோட்டமாக கிளற வேண்டும். அடி வரை
கிளறினால் அடிக்காந்தல் கிடைக்காது. அடுப்பும் குறைந்த தணலில் தான் இருக்க வேண்டும்.
நன்றாக வெந்தாலும் அடிக் காந்தலுக்காக சிறிது நேரம் விடவும். ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு
பிறகு நமக்கு சுவையான அரிசி உப்புமா தயாராக இருக்கும். காந்தலானவுடன் மணமே உங்களை அடுப்பை
நிறுத்த அழைக்கும். மேலே சிறிதளவு நெய் விட்டால் வாசனையாக இருக்கும். இதுவும் விருப்பமே..
ஐந்து நிமிடம் உலைப்பாற விட்டு விட்டு கபளீகரம் செய்யலாம்…:)
பின்குறிப்பு – 1 இதற்கு தொட்டுக் கொள்ளவென்று தனியாக
எதுவும் கட்டாயமில்லை. சர்க்கரை, நெய், ஊறுகாய், கொத்சு, சாம்பார் என எதுவோடும் ஒத்துப்
போகும்.
பின்குறிப்பு – 2 வெங்கலப் பானையில் செய்வதால், செய்த சிறிது நேரத்தில் சாப்பிட்டு விடவும்.
நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது.
பின்குறிப்பு – 3 அடுப்பை நிறுத்திய ஐந்து நிமிடங்கழித்து உப்புமாவை வேறு பாத்திரத்தில் மாற்றி
விட்டு அடிக்காந்தலை பெயர்த்து எடுத்தால் வந்து விடும். கிரிஸ்பியாக பிரமாதமாக இருக்கும்.
பின்குறிப்பு - 4 எண்ணெய் கொஞ்சம் தாராளமாக சேர்த்தால் சுவையும் கூடுதலாகும்….:)
என்ன நட்புகளே! நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து விட்டு கருத்துகளை
தெரிவியுங்கள். இந்த ரெசிபியை நான் PASSION ON PLATE ஈவண்டிற்கு அனுப்புகிறேன்.
மீண்டும் சந்திப்போம்,
ஆதிவெங்கட்
Upma looks delicious!
ReplyDeleteபுட்டு மாதிரி தான் இருக்கிறது...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்...
// இந்த ரெசிபியை நான் PASSION ON PLATE ஈவண்டிற்கு அனுப்புகிறேன்.//
ReplyDeleteவெற்றி உமக்கே!!!!
என் ஃபேவரிட் சமாச்சாரம் இந்த உப்புமா. மாங்காய் இனிப்பு ஊறுகாயுடன் கும்பகோணம் கோமளா மாமி கைப்பக்குவத்தில் சாப்பிட்டது இன்னும் நெஞ்சில் நிற்கிறது!
வெள்ளைக்கொண்டைக்கடலை (வடக்கில் செடியோடு கிடைக்குமே) கொஞ்சம் உப்புமாவில் மாமி சேர்ப்பார்கள். இங்கே நான் வேகவைத்த கடலையைச் சேர்க்கிறேன். சில சமயம் வேர்க்கடலையைக் கூடவே தாளிப்பதும் உண்டு.
ரவை உடைக்கும்போது ஒரு தேக்கரண்டி சீரகமும் சேர்க்கலாம்.
இங்கே நம்மிடம் வெண்கலப்பானை இல்லாததால் கண்ணாடிப் பாத்திரத்தில் மைக்ரோவேவில் உப்புமா.
காந்தலை ரொம்பவே மிஸ் பண்ணறேன் ரோஷ்ணியம்மா.
இந்த ரெசிபியை நான் PASSION ON PLATE ஈவண்டிற்கு அனுப்புகிறேன்./
ReplyDeleteவெற்றிபெற இனிய வாழ்த்துகள்..
அரிசி ரவா உப்புமா குறிப்பு பிரமாதம் ஆதி! நீங்கள் விவரித்திருக்கிற விதம் அருமை! நெய் சேர்ப்பது எனக்குப் புதுசு! நான் பருப்புகளுடன் மிளகாய் வற்றலையும் சேர்த்துப் பொடித்துக்கொள்வேன். சில பேர் பச்சரிசியில் செய்வார்கள். சில பேருக்கு புழுங்கலரிசியில் செய்வது தான் பிடிக்கும். நீங்கள் எந்த அரிசியைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்? அரிசியில் தண்ணீர் தெளித்துப்பிசிறுவது நல்ல ஐடியா! அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteஅருமையான குறிப்பு. வெற்றிக்கு வாழ்த்துகள்!
ReplyDeletewow... kalakkal upma. Never tried this, enga veetla rava upma thaan fav
ReplyDeleteஇந்த ரெசிபியை நான் PASSION ON PLATE ஈவண்டிற்கு அனுப்புகிறேன்.//
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் ஆதி.
நேற்று டின்னர் இதுதான். தொட்டுக்க தக்காளி கொத்சு :))
ReplyDeleteஇரண்டே இரண்டு கேள்விகள்!
ReplyDeleteஇவ்வளவு ருசியாக செய்த உப்புமாவை நிறையச் சாப்பிட்டு விட்டால் வயிறு உப்புமா?
இவ்வளசு ருசியாக செய்தால் உப்புமா எல்லோருக்கும் பத்துமா?
அற்புதமாக இருக்கு ஆதி,
ReplyDeleteஉப்புமா செய்முறை,படங்கள் எல்லாம்.
//ரெசிபியை நான் PASSION ON PLATE ஈவண்டிற்கு அனுப்புகிறேன்.//
உங்க குறிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ருசியான குறிப்பு ஆதி.. அதுவும் கொத்சும் சேர்ந்தா ருசிக்குக் கேக்கணுமா என்ன?
ReplyDeleteநாங்களும் அவ்வப்போது செய்வோமே...! :))
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்.
மஹி - நன்றிங்க.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் - புட்டு வேறங்க...:) நன்றி.
டீச்சர் - கோமளா மாமியின் கைப்பக்குவம் அப்படியே மனசுக்குள் இருக்கு போல...:)
சீரகமும் முன்பு சேர்த்துக் கொண்டிருந்தேன். இப்போ விட்டு விட்டேன்.
காந்தலுக்கு நீங்க அடுத்த முறை திருச்சி வாங்க..:)
வாழ்த்துக்கு நன்றிங்க.
இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.
மனோம்மா - நீங்கள் அரிசி ரவா உப்புமாவென்று சொல்வீர்களா! பச்சரிசியில் தான் நாங்கள் செய்வதால் வெறும் அரிசி என்று போட்டு விட்டேன். புழுங்கலரிசியிலும் செய்வார்களா? தெரிந்து கொண்டேன்.
ராமலஷ்மி - நன்றிங்க.
அப்பாவி - எனக்கும் ரவா, சேமியா, அவல் என்று எல்லா உப்புமாவும் பிடிக்கும்...ஆனால் மீதி இருவருக்கும்... ம்ஹூம்...
கோமதிம்மா - நன்றி.
புதுகைத்தென்றல் - தக்காளி கொத்சுடனா! வாவ்!
ஈஸ்வரன் சார் - உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல உங்க நண்பர் தான் இருக்கிறாரே....:) எவ்வளவு கேள்விகள் வேண்டுமானாலும் அவரிடம் கேளுங்கள்...:)
ராம்வி - நன்றிங்க.
அமைதிச்சாரல் - நன்றிங்க.
ஸ்ரீராம் - அவ்வப்போது செய்வீர்களா! நீங்களா? உங்க பாஸா?...:))
இந்த ரெசிபியை நான் PASSION ON PLATE ஈவண்டிற்கு அனுப்புகிறேன்.//
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள் ஆதி.
நல்ல குறிப்பு. வெற்றிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசீரகம், மிளகு இரண்டையுமே அரிசியுடன் போட்டு பொடி செய்துவிடுவேன். காந்தலுடன் பார்க்கவே அழகாக இருக்கிறது உங்கள் அரிசி உப்புமா!
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
எனக்கும் காந்தல் தான் பிடிக்கும்.. ஆனா இப்பல்லாம் பண்ண மாட்டேங்கிறாங்க..
ReplyDeleteரவா உப்புமா படு போர். அதெல்லாம் சோம்பேறிகளும் சுவை தெரியாதவர்களும் செய்வது.
ReplyDeleteஅரிசி உப்புமா .... அரிசி உப்புமா தான்.
ஆனால் அதை வக்கணையாகப்பண்ணனும்.
கண்ணை மூடிக்கிட்டு எண்ணெய் விடவும்.
சூடாக சாப்பிடுவதை விட முதல் நாள் இரவு செய்ததை மறுநாள் காலை நல்ல கெட்டித்தயிரில் கொஞ்சம், வெங்காய வற்றல் குழம்புடன் கொஞ்சம் என சேர்த்து அடித்தால் ரொம்ப ஜோராக இருக்கும்.
தேவாமிர்தமாக இருக்கும்.
இதெல்லாம் எங்க அம்மாவோ, எங்க பெரிய அக்காவோ அல்லது என் [பழைய] மனைவியோ செய்யணும்.
ஒட்டலுடன் சும்மா கமகமன்னு இருக்கும்.
இப்போ இந்த பாழாய்போன குக்கர் வந்ததிலிருந்து ஒட்டலையே பார்க்க முடிவது இல்லை.
[அதனால் தான் என் பழைய மனைவி என்று சொல்லியுள்ளேன்.
அதாவது குக்கர் வருவதற்கு முந்திய வெங்கலப்பானையுடன் கூடிய என் இதே மனைவி.]
காஞ்சனா ராதாகிருஷ்ணன் - வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
ReplyDeleteமாதேவி - நன்றிங்க.
ரஞ்சனிம்மா - நானும் மிளகும், சீரகம் சேர்த்து பொடித்து விடுவேன். இப்போதெல்லாம் மிளகு மட்டுமே...நன்றிம்மா.
ரிஷபன் சார் - காந்தல் வேண்டுமென்றால் அப்படியே எங்க வீட்டுக்கு வந்துடுங்க....:)
வை.கோ.சார் - காந்தலை ஒட்டல் என்பீர்களோ! தங்களின் கருத்துக்களுக்கு நன்றி சார்.
Romba nalla iruku..
ReplyDeleteThanks for linking this recipe to my event
ஃபாயிஜா நன்றிங்க.
ReplyDeleteபன்சி ரவாவில் பழக்கம் உண்டு . எனது முயற்சியில் எப்படி வரும்னு தெரியல ,ஒரு நாளைக்கு ட்ரையல் விடுகிறேன்,
ReplyDelete