Wednesday, February 20, 2013

கல்யாண சாப்பாடு!
சமீபத்தில் திடீரென அழைப்பு வர ஒரு சஷ்டியப்தபூர்த்திக்கு சென்றேன். உறவினர்களை பார்த்து பேசி விட்டுஅறிமுகப் படலங்கள் முடிந்தபின் காலைச் சிற்றுண்டி சாப்பிட அழைத்துச் சென்றார்கள். நேரமானதால் வேண்டாம் நேராக மதியம் சாப்பிடுகிறேன் என்றேன். வற்புறுத்தி அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார்கள். எல்லோரும் சாப்பிட்டு விட்டதால்நான் மட்டுமே பந்தியில். கிச்சடிஅல்வாசாம்பார்-வடை,ஊத்தப்பம்இட்லிசட்னிசாம்பார் என்று இருந்தது. எனக்கு வேண்டிய அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டேன். எல்லாமே நன்றாக இருந்தது. பொறுமையாக கேட்டு கேட்டு பரிமாறினார்கள்.

பின்பு மீண்டும் பேச்சு. அங்கு சென்ற பின் தான் தெரிந்தது எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஒருவரும் எனக்கு தூரத்து சொந்தம் என – குடியிருப்பில் பல முறை பார்த்தாலும் இது தெரியாதது ஆச்சரியம் தான். திருமண சடங்குகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் ஜூஸ் வந்தது. ஹோமம் முடிந்து தம்பதி பூஜை,திருமணம் என முடிந்ததும் அவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டேன். அடுத்து என்ன மதிய சாப்பாடு தான்….:))

மூன்றாவது பந்தியில் உறவினர்களுடன் சாப்பிட அமர்ந்தேன். வழக்கம் போல் உருளைக்கிழங்கு கறிபீன்ஸ் பருப்புசிலிஅவியல்பழப் பச்சடி,வெள்ளரிக்காய் தயிர் பச்சடிகொத்தமல்லி சாதம்பருப்பு வடைசாம்பார்,ரசம். வத்தக்குழம்புமோர்ஊறுகாய்அப்பளம் இவற்றுடன் சாதம்பருப்பு,நெய் – இது தான் மெனு :)

குழம்பு சாதம் முடிந்ததும் டிஸ்போஸபிள் டம்ளரில் பால் பாயசம்ரசம் சாதத்திற்கு பிறகு குலோப்ஜாமுன் (இதுவும் டம்ளரில் தான்) பின் மோர் சாதம் சாப்பிட்ட பிறகு எழுந்து கை அலம்பிய உடன் ஜில்லென்று ஐஸ்க்ரீம். கூடுதலாக இங்கும் குலோப்ஜாமூன் – வட இந்தியர்கள் போலஐஸ்க்ரீமுடன் குலோப்ஜாமூன் கலந்து சாப்பிடுவார்களே என இங்கும் அதை வைத்திருந்தார்கள். கடைசியாக பீடா தனித்தனியாக கவர் போட்டுஎப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சென்று போட்டுக் கொள்ளலாம். சமையல் மிகவும் அருமையாக இருந்தது. அதை விட சில விசேஷங்களில் அவசர அவசரமாக எதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பார்க்காமல் சாதத்தை மேலே போடுவார்கள்,இல்லையென்றால் குழம்பு முடித்த உடன் மோரை விட்டு விடுவார்கள்,அதுவும் இல்லையென்றால் சாப்பிட்டு முடிக்கும் முன் இலையை எடுக்க துவங்கி விடுவார்கள். இது எதுவும் இல்லாமல் என்ன வேண்டும்என்ன சாப்பிட்டு முடித்தீர்கள்ரசம் விடணுமாமோர் விடணுமா எனக் கேட்டுபரிமாறியது என்னை மிகவும் கவர்ந்தது. எல்லாரையுமே கவர்ந்திருக்கும்.

சாப்பிட்டு முடித்த பின்னர் என் நெருங்கிய உறவினர் கூட சொன்னார்….. ”ஒரே ஒரு குறை தான் என்று” என்ன குறை என்று பதறிப் போய்க்கேட்டதற்கு ஒரு குறையுமே சொல்ல முடியவில்லையே, அது தான்குறை என்று  சொன்னார். :)

இவர்களின் முகவரி:-

SRI SHIVA VISHNU CATERING
K.S.VAIDYANATHAN @RAVI
PADMA VILAS, 30, BHARATHIYAR STREET,
TOWN STATION ROAD TRICHY – 2
PH.NO. 2703507
CELL.. 9443754044தாம்பூலம் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். தாம்பூலத்திலும் ரவிக்கைத் துணிக்கு பதிலாக அழகான ஒரு மண்டபத்தில் தவழும் கிருஷ்ணன் இருந்தார். நல்ல விஷயம் தான். யாரும் அந்த துணிகளை தைத்துக் கொள்வதில்லை. சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் அதற்கு பதிலாக இது மிகச்சரியானது.

சரி! என்னுடைய இந்த பதிவை பற்றி கீதா மாமியிடம் யாரும் சொல்லி விடாதீர்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு அருகில் தான் இந்த மண்டபம்….:)) ரோஷ்ணி பள்ளியிலிருந்து வரும் நேரம் ஆகி விடுமென்பதால் மாமியை பார்க்காமல் வந்து விட்டேன்….:))


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

29 comments:

 1. சூப்பர் சாப்பாடு!!!!1

  ரவிக்கைத்துணி.... சுற்றல் உண்மைதான்:(

  ReplyDelete
 2. அருமையான சாப்பாடு....

  ReplyDelete
 3. கேட்டதற்கு ”ஒரு குறையுமே சொல்ல முடியவில்லையே, அது தான்குறை”

  அழகான பகிர்வு ..

  ReplyDelete
 4. I'm calling geetha maamu right now...:)

  Your post made us present there as well

  ReplyDelete
 5. கல்யான சப்பாடு அருமை. குறை சொல்லமுடியாமல் நன்கு சமைத்து உபசரித்தவர்களை நாம் நினைவில் வைத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்வது நல்லது தான். விஷேசம் செய்பவர்களுக்கு உதவுமே!
  தாம்பூல பையில் கொடுத்த மண்டபத்துடன் தவழும் கண்ணன் அருமை.

  ReplyDelete
 6. நாங்க சமீபத்துல ஒரு உபநயனம் போயிருந்தோம். அதில் டப்பர்வேர் பாட்டில் கொடுத்தார்கள். இதுவும் உபயோகமான பொருள்தான். ஆனால் என்ன விஷயம் என்றால் அதற்கு முதல் நாள் தான் ஒரு டப்பர்வேர் பாட்டில் வாங்கியிருந்தேன். இரண்டு பாட்டில்களும் ஒரே கலர் வேற!

  நானும் ரவிக்கைத் துணிக்கு எதிரிதான். ஏதாவது உபயோகமான பொருளாகத்தான் கொடுப்பேன்.

  இரண்டுவாரமாக கல்யாணங்கள், பூணூல் என்று கல்யாண சாப்பாடாக இருக்கிறது. அதனால் இப்போதைக்கு என் ஓட்டு மிளகு ரசத்திற்கே!

  ReplyDelete
 7. மனுஷன் விரதம் இருக்கிற நேரத்தில இதெல்லாம் படிக்க வச்சு விரதத்த கலைக்க வச்சுட்டீங்களே.

  (வெங்கட்! ஆந்திரபவனில் டேபிள் புக் பண்ணிடுங்க. திருச்சியில் இடி இடிச்சா தில்லியில் ஏன் மழை பெய்யணும்னு கேட்காதீங்க)

  ReplyDelete
 8. //கிச்சடி, அல்வா, சாம்பார்-வடை,ஊத்தப்பம், இட்லி, சட்னி, சாம்பார் //

  //உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் பருப்புசிலி, அவியல், பழப் பச்சடி,வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, கொத்தமல்லி சாதம், பருப்பு வடை, சாம்பார்,ரசம். வத்தக்குழம்பு, மோர், ஊறுகாய், அப்பளம் இவற்றுடன் சாதம், பருப்பு,நெய்//

  //பால் பாயசம், குலோப்ஜாமுன், ஐஸ்க்ரீம், கூடுதலாக இங்கும் குலோப்ஜாமூன் //

  இவ்வளவும் ஒரு ஒரு பிடி பிடிக்கணும்னா கையில தனியா ஒரு வயிறு கொண்டுபோணும் போலருக்கே!! பார்ஸல் தருவாங்களாமா? :-))))

  ReplyDelete
 9. கிருஷ்ணன் கிஃப்ட் சூப்பர் ஐடியா.

  ReplyDelete
 10. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்னு பாடத் தோணுது,பகிர்வை பார்த்தவுடன்,யாரங்கே !எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ்..

  ReplyDelete
 11. வைத்துக் கொடுக்கும் பொருட்களில் இது போல வித்தியாசமாகக் காணும்போது சந்தோஷமாகத்தான் இருக்கும். கல்யாண சாப்பாட்டு மெனு பற்றித்தான் ஏதோ பதிவு போல, ஆஹா... ரசித்து விட்டு, நாமும் முன்பு இதே போல எழுதியதை இங்கு விளம்பரப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். புஸ்...ஸ்... :)))

  ReplyDelete
 12. சரி! என்னுடைய இந்த பதிவை பற்றி கீதா மாமியிடம் யாரும் சொல்லி விடாதீர்கள்.//

  அநியாயமா இல்லையோ?? மெனக்கெட்டு தொலைபேசிச் சொல்லிட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களோட டூ விட்டாச்சு! :(

  ReplyDelete
 13. எந்தக் கல்யாண மண்டபம்? எதிரே?? பக்கத்திலே???

  ReplyDelete
 14. ரவிக்கைத்துணி 70 ரூ 75 ரூ போட்டு வாங்கினால் நல்லதாகவே கிடைக்கும். நான் நவராத்திரிக்கு அப்படித்தான் வாங்கிக் கொடுக்கிறேன். அல்லது சின்னதாய் வெண்கலத்தில் பிள்ளையார், கிருஷ்ணன் இப்படி ஏதேனும் கொடுக்கலாம். அதுவும் நல்லதே.

  // யாரும் அந்த துணிகளை தைத்துக் கொள்வதில்லை. சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் //

  எனக்கு வரும் துணிகளை அநேகமாய் ஒரு மீட்டர் இருந்தால் தைத்துக் கொண்டு விடுவேன். குறைச்சலாய் இருந்தால் தான் யாருக்கானும் கொடுப்பது. அதுவும் 80சென்டிமீட்டர் அளவு போதும்னு சொல்றவங்களுக்கு! :)))))

  ReplyDelete
 15. அந்த முகவரி மிகவும் பயன்படும் ஆதி, சுற்று வட்டாரத்தினருக்கு. திவ்யமாக இருந்தது பதிவும்.

  ReplyDelete
 16. கல்யாண சாப்பாடு பிரமாதம்.

  வைத்துக்கொடுப்பதைப்பத்தி சரியாச்சொன்னீங்க.

  ReplyDelete
 17. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  ReplyDelete
 18. படித்ததுமே வயிறு நிறைந்து விட்டது!

  ReplyDelete
 19. 'சுவை'யான அறிமுகம்!

  ReplyDelete
 20. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  (http://blogintamil.blogspot.in/2013/02/4.html)

  ReplyDelete
 21. நல்ல தகவல் பகிர்வு.

  ரவிக்கைதுணி என்னதான் நல்லதாக கொடுத்தாலும் யாரும் தைத்துக் கொள்வதில்லை. இந்த மாதிரி பொருட்களை தாம்பூலத்தில் கொடுப்பது சிறந்ததுதான்.

  ReplyDelete
 22. டீச்சர் - நன்றிங்க. பெரும்பாலும் யாரும் தைத்துக் கொள்வதில்லை.

  ஸ்கூல் பையன் - நன்றிங்க.

  திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க.

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

  புவனா - நானே சொல்லிட்டேன்ப்பா...:)

  கோமதிம்மா - அவர்களின் விபரம் யாருக்காவது உபயோகப்படலாம் என்று தான் பகிர்ந்தேன். கிருஷ்ணன் அழகாக இருக்கிறார் எங்கள் வீட்டு பூஜையறையில்.

  ரஞ்சனிம்மா - ஓ! இப்படி வேற நடக்குதா! இருந்தாலும் உபயோகப்படும் பொருள் எத்தனை இருந்தாலும் நல்லது தானே..
  மிளகு ரசமா அதுவும் சூப்பரானது தான்..

  ஈஸ்வரன் சார் - நீங்க இருவரும் உணவுத் திருவிழா அது இதுன்னு சுத்தறீங்க... நான் ஒருநாள் கல்யாண சாப்பாடு சாப்பிட்டால் ஒண்ணும் ஆயிடாது..:) அவர் அப்படியெல்லாம் கேட்க மாட்டார்...:)

  ஹுசைனம்மா - பார்சல்லாம் கிடைக்காது. எவ்வளவும் முடியுமோ அவ்வளவு சாப்பிட வேண்டியது தான்...:)

  ReplyDelete
 23. அமுதா கிருஷ்ணா - நன்றிஙக.

  ஆசியா உமர் - ஓ! உங்க பாட்டு நல்லா இருக்கே...:) வாங்க ஒரு விருந்து வெச்சிட்டா போச்சு..:)

  ஸ்ரீராம் - மெனு பற்றி அல்ல பதிவு. நீங்க உங்க பதிவின் லிங்க்கை கொடுத்திருக்கலாமே. அது என்னவென்று படித்திருப்பேன்...:)

  கீதா மாமி - என்ன மாமி! கோபிச்சிக்கப்படாது! டூ வெல்லாம் விட்டா என்ன அர்த்தம்! பழம் விட்டாச்சு ஓகே...:)

  ஸ்ரீ யோகா கல்யாண மண்டபம்...:) எதிரே அல்ல! கொஞ்சம் நடை தான்..:)

  ரவிக்கைத் துணி பெரும்பாலும் யாரும் தைத்துக் கொள்வதில்லை. சிலர் உங்களைப் போல தைத்துக் கொள்ளலாம்..

  நிலாமகள் - பயன்படலாம் என்று தான் பகிர்ந்தேன். நன்றிங்க.

  அமைதிச்சாரல் - நன்றீங்க.

  தமிழ் இளங்கோ சார் - வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி. கருத்தும் தெரிவித்து விட்டேன்.

  குட்டன் - நன்றிங்க.

  கே.பி.ஜனா சார் - நன்றி.

  திண்டுக்கல் தனபாலன் - தகவலுக்கு நன்றி.

  ராம்வி - நன்றி.

  ReplyDelete
 24. சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 25. கடைசியில நல்ல ட்விஸ்ட்

  ReplyDelete
 26. SRI SHIVA VISHNU CATERING
  K.S.VAIDYANATHAN @RAVI

  இவர் தான் நான் பணி ஓய்வு பெற்ற அன்று, மாலை என் வீட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் [சுமார் 200 பேர்களுக்கு] பொறுப்பேற்று, திருமண மண்டபத்தில் திருப்தியாக அத்தனை உணவு வகைகளையும் தயாரித்து, பரிமாறி உதவியவர்.

  பாராட்டப்பட வேண்டிய நல்ல பதிவு.

  கிருஷ்ணர் விக்ரஹம் சூப்பர். ;)))))

  ReplyDelete
 27. மாதேவி - நன்றிங்க.

  டி.என்.முரளிதரன் - ரசித்ததற்கு நன்றி சார்.

  வை.கோ.சார் - தங்கள் வீட்டிலும் இவர் தானா! மகிழ்ச்சி. நன்றாக உபசரித்தார்கள்..

  ReplyDelete
 28. ஒரே பீலிங் ......போங்க,நம்மூர் பந்தியில் உக்காந்து சாப்பிட்டு பல வருடமாயிட்டு.சவுத் தாலி என்று சாப்பிட்டிருந்தாலும் நம்மூர் பந்தியில் உறவுகளையும் .நட்புகளையும் ,அறிந்தவர்களையும் பார்த்து,பேசி ,குசலம் விசாரித்து ருசியான உணவுடன் வயிறும் நிரம்புவது தனி இனிமைதான்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…