Monday, February 4, 2013

துக்லட் செய்யலாமா!


”துக்லட்”டா? அப்படின்னா என்ன? என்று கேட்க மாட்டீர்கள் தானே? புரிந்திருக்கும் என நினைக்கிறேன். குடியரசு தினத்தையொட்டி சமீபத்தில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற சமையல் போட்டியில் செய்த இனிப்பு துக்கடா, மற்றும் ரவா கட்லட்டின் செய்முறையை பார்க்கலாமா….

இனிப்பு துக்கடா

இரண்டாம் பரிசை பெற்று தந்த கூகிளில் கிடைத்த இந்த ரெசிபியை பகிர்ந்த அடுப்பங்கரை கமலாவுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தேவையானப் பொருட்கள்:-

மைதா – 1 கப்
ரவை – 2 மேஜைக்கரண்டி
சமையல் சோடா – 1 சிட்டிகை
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை – 2 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
பால் – ½ கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:-

1 கப் மைதாவை சலித்து எடுத்துக் கொண்டு அதில் ரவை, பொடித்த சர்க்கரை, உப்பு, சமையல் சோடா, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதில் வெதுவெதுப்பான சூடில் உள்ள பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். குறைந்தது அரைமணியாவது ஊற வேண்டும். பின்பு எலுமிச்சையளவு உருண்டைகளாக செய்து மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து, கத்தியால் கீறி துண்டுகளாகவும் செய்யலாம், அல்லது சின்ன மூடியின் உதவியால் வட்டங்களாக செய்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்து பொன்னிறமாக எடுக்கவும்.

அடுத்து அடிகனமான பாத்திரத்தில் 1 கப் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தணலில் பாகு காய்ச்சவும். ஒற்றை கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து விட்டு அடுப்பை அணைக்கவும். பொரித்து வைத்த துக்கடாக்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பாகில் பிரட்டி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். இப்படியே எல்லாவற்றையும் சேர்த்து எடுத்து வைக்கவும். பாகு இறுகி விட்டால் அடுப்பை பற்ற வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து இளகி வந்ததும் அணைக்கவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிரித்து விடவும். காற்று புகா டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம்.

ரவா கட்லட்

ரவையில் என்ன செய்வது என்று யோசித்து என் புத்தியில் தோன்றியது தான் இந்த கட்லட். ரயிலில் காலையில் செய்த உப்புமா மாலையில் கட்லட்டாக வரும் என்று என்னவர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதை மனதில் வைத்து கொண்டு சில வேறுபாடுகள் செய்து கண்டுபிடித்தது இது.தேவையானப் பொருட்கள்:-

ரவை – 1 கப்
வெங்காயம் – 1
இஞ்சி – 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் – 4 (அ) 5
கேரட் – 1
பீன்ஸ் – 4
உருளைக்கிழங்கு பெரியது – 1
உப்பு – தேவைக்கேற்ப
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
புதினா – சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி - சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மைதா – 2 தேக்கரண்டி
ரஸ்க் தூள் – தேவையான அளவு
கடுகு - சிறிதளவு

செய்முறை:-

ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி ஆவியில் வைத்து எடுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சியையும், பச்சை மிளகாயையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டுக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து இஞ்சி மிளகாய் விழுது சேர்க்கவும். அதற்கடுத்து புதினா, கறிவேப்பிலை, மல்லி சேர்த்து வதங்கியதும், கேரட், பீன்ஸ் சேர்க்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு, அரை தேக்கரண்டி கரம் மசாலாவும் சேர்த்து கொதித்தவுடன் ரவை சேர்த்து கிளறி இறக்கவும்.

ஆறியதும் கிளறி வைத்துள்ள ரவை கலவையுடன் உருளைக்கிழங்கை தோலுரித்து சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை உருண்டைகள் செய்து தட்டி கட்லட் வடிவத்துக்கு கொண்டு வரவும். இதை 2 தேக்கரண்டி மைதாவில் தண்ணீர் சேர்த்து கரைத்த கரைசலில் முக்கியெடுத்து, ரஸ்க் தூளில் புரட்டி, ஒரு தட்டில் வைத்து ஃப்ரிட்ஜில் அரை மணி வைத்தெடுத்து காயும் எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும். சூடான, சுவையான கட்லட் தயார்…. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

20 comments:

 1. காலையில் பசியைக் கிளப்பிட்டீங்க..

  ReplyDelete
 2. ரைட்டு... எத்தனை தடவை படத்தையே பாத்து ஜொள்ளு விடறதாம்...? உடனே வீட்ல செய்யச் ‌சொல்லி சுவைச்சுடறேனுங்கோ...!

  ReplyDelete
 3. உப்புமா கட்லெட் ஐடியா அருமை.

  இனி நம்ம வீட்டில் அடிக்கடி உங்க கட்லெட் வரலாம்:-))))

  நன்றீஸ் ரோஷ்ணியம்மா.

  ReplyDelete
 4. Bookmark செய்து விட்டேன்... வீட்டில் பிறகு வந்து குறிப்பு எடுத்துக் கொள்கிறார்களாம்...

  நன்றி...

  ReplyDelete
 5. துக்லட் பெயரே வித்த்யாசமாக உள்ளதே!

  ReplyDelete
 6. அருமையான துக்கடா, ரவா கட்லட் குறிப்புக்கு நன்றி.
  அம்மா இனிப்பு துக்கடா டைமண்ட் டைமண்டாக செய்வார்கள்.

  ReplyDelete
 7. நல்ல குறிப்புகள். செய்து பார்க்கிறேன். நன்றி.

  ReplyDelete
 8. manathil pathiyum elimaiyaana seimuraikal,pakirvirku nanri.

  ReplyDelete
 9. congrats
  ippadi thaan thoklak seivagala.. super.. seithu parkuren... cutlet mu super

  ReplyDelete
 10. செயல் முறை விளக்கம் அருமை.அதுவும்,ரவை கட்லெட் படிக்கும் போதே சாப்பிட தூண்டியது.இரண்டு நாட்கள் மாலை சிற்றுண்டிக்கு நான் தயாராகிவிட்டேன்.பகிர்வுக்கு நன்றி ஆதி.

  ReplyDelete
 11. துக்லட் செய்யலாமா!

  அருமையான ருசியான சமையல் குறிப்புகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. ரெண்டுமே நல்லாருக்குங்க

  ReplyDelete
 13. jரொம்பவே அழகாகவும் ருசியாகவும் இருக்கு. செய்யும் விதம் படிக்கும் போதே ருசியை மனது கற்பனை செய்து நாக்கு ருசித்து விடுகிறது. நல்ல குறிப்பு

  ReplyDelete
 14. புதுமையான அருமையான ருசியான சமையல் குறிப்புகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 15. இரண்டுமே அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. நல்ல குறிப்புகள்.

  ReplyDelete
 17. http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
  அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

  ReplyDelete
 18. இனிப்பு துக்கடாவையும், ரவா கட்லட்டையும் ருசித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete
 19. paakkave alagaa irukku... naan trichy varum podhu senju tharuveengalaa...:)

  ReplyDelete
 20. புவனா - திருச்சி வரும் போது செஞ்சு குடுத்துட்டா போச்சு...:) நன்றிப்பா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…