கோவை-கேரளா சுற்றுலா பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
என்ன! எல்லோரும் மிருகக்காட்சி சாலைக்குள்ளே போவதற்குத்
தயாரா இருக்கீங்களா! வாங்க உள்ளே போகலாம்! தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ளது போலவே சிங்கம், புலியைத் தவிர எல்லா மிருகங்களுமே சுதந்திரமாக அதனதன்
இடத்தில் உலாவிக்
கொண்டிருக்கின்றன. சிங்கமும், புலியும் தான் கூண்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தன. அவைகள் இந்த இடத்துக்கு வந்த தேதி, அவற்றின் பெயர் என தகவல்கள் இருந்தன. சிங்கவால் குரங்கு, கரடி, மான்கள், யானை, காண்டாமிருகம், சிறுத்தை இப்படி பலவகையான மிருகங்களும், கிளிகள், மயில்கள் என விதவிதமான பறவைகளும் நம்மை வரவேற்றன. அங்கங்கே மலையாளத் தமிழில் வழிகாட்டும்
பலகைகள் இருந்தன! அதென்னங்க மலையாளத் தமிழ் இங்க பாருங்க….
பலாமரங்களும், நாகலிங்க மரம், ஆலமரம் என்ற அந்த சூழல் நன்றாக இருந்தது. அங்கங்கே சில உயிரினங்களை
பற்றி நாம் ஆச்சரியப்படும் தகவல்கள் உள்ள பலகைகள் காணப்பட்டன. உள்ளே சற்று தூரம்
நடந்து வந்தவுடன் ஒரு இடத்தில் AVTன் சுவையான தேநீர் கிடைத்தது. எல்லோரும் வாங்கிப் பருகினோம். எனக்கு டிப் டீ இல்லாமல் இது போல்
மெஷின்லிருந்து வரும் தேநீர் பிடிக்கும்…:) அடுத்து REPTILE HOUSE க்கு சென்றோம். கண்ணாடி கூண்டுக்களுக்குள் விதவிதமான பாம்புகள்…… அய்யோ! கடவுளே! இன்னிக்கு விபூதி வைத்துக் கொண்டு தான்
படுக்கணும். சீக்கிரம் பார்த்து விட்டு வெளியே ஓடி வந்துட்டேன்….
இன்னும் சில படங்கள் இங்கே இருக்கு!
மீன்கள் காட்சியகத்துக்கும் நுழைவுச் சீட்டு
வாங்கியிருந்ததால் அங்கும் சென்றோம். சின்னது தான். உள்ளே குளம் போல் அமைத்து அதில் படகு ஒன்று
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் பாலம். அதில் ஒருபுறம் ஏறி மீன்களை பார்த்து
விட்டு மறுபுறம் இறங்க வேண்டும். சென்ற முறை கோவை போன போது குரங்கு நீர்வீழ்ச்சியும், ஆழியார் அணைக்கும் சென்று வந்தோம். அங்கே ஆழியார் அணைக்கருகில் ஒரு மீன்கள் காட்சியகம்
சென்றோம். இதை விட பெரியது. நிறைய மீன்கள் அங்கே இருந்தது…
மிருகக்காட்சி சாலைக்கு வெளியே
குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், ஊஞ்சல் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன். அதில் குட்டீஸ் ஆனந்தமாக
விளையாடினர்.
ஒரு வழியாக மிருகக்காட்சி சாலையை சுற்றிப் பார்த்த
திருப்தியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். தோட்டத்திலிருந்து வாழையிலைகளை பறித்து
வந்து எங்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. மெனுவாக சிகப்பரிசி சாதம், பருப்பு (பார்த்தவுடன் மோர்குழம்பு என்று நினைத்தேன்.
பாசிப்பருப்புடன் உப்பு ,காரம் சேர்த்து
குழம்பு போல் செய்தது) , அவியல், பப்படம், கிச்சடி (தயிர் பச்சடியைத் தான் இவர்கள் கிச்சடி என்கின்றனர்) தோரன் (கறி, அல்லது பொரியல்). மதிய உணவு வழக்கம் போல் சாம்பார், ரசம் என்றில்லாமல் வித்தியாசமாக சாப்பிட்டது நன்றாக இருந்தது. பிரமோத்தும், ராக்கியும் அருமையாக உபசாரம் செய்தார்கள்.
அவர்களும் சாப்பிட்டவுடன் அடுத்து ஒரு இடத்திற்கு செல்ல
தயாராகச் சொன்னார்கள். எங்கு என்று கேட்டால் சஸ்பென்ஸ்! திருவனந்தபுரத்தில் எப்போது வேண்டுமானாலும்
மழை வரும். அதனால் தோட்டத்தில் காயப்
போட்டிருந்த துணிகளையெல்லாம் எடுத்து உள்ளே போடச் சொன்னார் ராக்கி. அங்கிருந்த நான்கு
நாட்களும் துணி காய்வதற்கு தான் படாத பாடு பட வேண்டியிருந்தது…..:)
கிளம்புவதற்கு முன்னால் பிரட்டலுக்கு, வேண்டாம் வேண்டாம் டீச்சர் சொல்ற மாதிரி டேஷ்க்கு மாத்திரை
போட்டுக்கணுமா தெரியலை. ரொம்ப தூரம் என்றால் கண்டிப்பா போட்டுக்கணும்…:) சொல்லவும் இல்லையே…. கோவையில் பட்ட அனுபவத்திற்கு பிறகு திருவனந்தபுரம்
செல்கிறோம் என்றவுடன்
சுற்றிப் பார்க்கும் ஆவலை விட அங்கே அங்கங்கே வீசும் மீன் நாற்றத்தில் என்ன செய்யப் போகிறேனோ!
கூட வர்றவங்களும் மூட் அவுட் ஆகப் போறாங்களேன்னு பயம் தான் அதிகமாக இருந்தது….:)
காரில் ஏறி அரை மணி பிரயாணத்தில் SHANGUMUGAM
BEACH ஐ சென்றடைந்தோம்.
கடலை நெருங்குகிறோம் என்பது நம் முகத்தின் வீசும் சில்லென்ற காற்றே சொல்கிறது. எவ்வளவு முறை
பார்த்தாலும் சில விஷயங்கள்
அலுக்கவே அலுக்காது. அதில் கடலும் ஒன்று. கன்னியாகுமரி, மெரினா, பாண்டிச்சேரி போன்ற கடற்கரைகளை
நான் பார்த்திருந்தாலும் ரோஷ்ணிக்கு இதுவே முதல் முறை. செமையாக எஞ்சாய் பண்ணினாள். நானும்
தான். மின்னு மட்டும் கடலில் விளையாடாமல் அவள் அம்மாவுடன் மணலில் வீடு கட்டிக்
கொண்டிருந்தாள். நாங்கள் அனைவரும் கால் நனைத்து வீடு திரும்ப மனமின்றி இருந்தோம்.
இருட்டத் துவங்கியதும் அங்கிருந்து கிளம்பி வீடு
வந்தடைந்தோம். மாத்திரை போட்டுக் கொள்ளவில்லை. வழியில் ஒரு 7UP மட்டும் வாங்கிக் குடித்தேன். ஆனால் தலைவலி வந்து விட்டது. இரவு உணவு நான்
தயார் செய்கிறேன் என்று மதியமே சொல்லியிருந்தேன். அதற்கு தேவையானப் பொருட்களை ராக்கி
நடுவில் ஒரு இடத்தில் இறங்கி வாங்கினார். வீட்டுக்கு வந்தவுடன் அதற்கு தயார் செய்யத் துவங்கினேன். என்ன
என்கிறீர்களா! சப்பாத்தியும் ஷாஹி பனீர் (பனீர் பட்டர் மசாலா) சப்ஜியும்….:)
நானும் ராக்கியும் ஆங்கிலமும், மலையாளமும், இந்தியும் கலந்து கட்டி பேசிக் கொண்டே இரவு உணவை இருவருமாக தயார் செய்தோம். வட இந்திய
உணவுகளுக்கான செய்முறையை கேட்டு தெரிந்து கொண்டார். குழந்தைகளுக்கு பரிமாறி அவர்கள் சாப்பிட்டதும்
நாங்களும் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தோம். பிரமோத்தின் பெற்றோர்
எங்களுக்காக அவர்கள் வீட்டில் விளைந்த சக்கப்பழங்களை (பலாப்பழங்கள்) கொடுத்தனுப்பி
இருந்தார்கள். அதனையும் உண்டவுடன் அசதியாக இருந்ததால் தூங்கச் சென்றோம்.
நாளை வேறு சில இடங்களுக்கு செல்ல வேண்டுமே…..அது என்ன இடங்கள்? தெரிந்து கொள்ள காத்திருங்கள்…..:)
மீண்டும் சந்திப்போம்,
ஆதிவெங்கட்.
படங்கள் அருமை... இனிய பயணம் தொடரட்டும்...
ReplyDeleteஅட... ரோஷினி முன்னை விட கொஞ்சம் வளந்துட்டா போலருக்கே... பாத்து நாளாச்சு! பாம்புன்னா படையே நடுங்கும்பாங்க. நீங்க நடுங்குனதுல என்ன வியப்பு! சிகப்பரிசி சாதமா...? நான் சாப்பிட்டதில்லையே! நல்லா இருந்துச்சா? உங்க கூட தொடர்ந்து பயணிக்க ஆவலாக இருக்கேன் நான்.
ReplyDeleteநல்லா சுத்திப்பார்த்தாச்சா.. நடந்து நடந்து கால் வலிச்சுருக்குமே. ஆனா நாங்க எந்தச்சிரமமும் இல்லாம உங்க ரெண்டு பேர் வலைப்பூவுலயும் ஜூவுல உலாத்திட்டிருக்கோம் :-))))
ReplyDeleteசிகப்பரிசி எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதோட வாசனையே தனிதான். வீட்ல பசங்களுக்குத்தான் அதோட கலரும் சைஸும் ஒத்துக்காது. அதுவுமில்லாம அந்த அரிசி ஜீரணமாக கொஞ்சம் டைம் எடுக்கும் :-)
அருமையான படங்கள்சுவாரஸ்யமான பொருத்தமான பகிர்வு.தொடருங்கள்.
ReplyDeleteபலாமரங்களும், நாகலிங்க மரம், ஆலமரம் என்ற அந்த சூழல் நன்றாக இருந்தது.
ReplyDeleteபதிவும் அழகான சூழலில் அருமையாக இருக்கிறது .. பாராட்டுக்கள்..
திருவனந்தபுரத்தில் எப்போது வேண்டுமானாலும் மழை வரும்.// குடை இல்லாமல் எங்கும் போக மாட்டோம். அங்கு. வெயிலுக்கும் குடை வேண்டும். மழைக்கும் வேண்டும்.
ReplyDeleteசிவப்பு அரிசி புட்டும் கொழுக்கட்டை எல்லாம் நன்றாக இருக்கும் ஆதி.
நீங்கள் செய்த அயிட்டங்கள் அவர்களுக்கு பிடித்து இருக்கும். குழந்தைகளின் படம் வெங்கட் பதிவில் பார்த்தேன்.
கடல் எப்போதும் அலுக்காது உண்மை.
அட்டடடா! சிகப்பரிசி சாதமா! வெரிகுட்! வெரிகுட்! அதிலும் சிகப்பரிசி பழையசாதம் என்றால் - ம்ம்ம்! தயிரும், மோர்மிளகாயும், மாங்காய் ஊறுகாயும், காலையில் சாப்பிட்டால் சாயுங்காலம் வரை தாங்குமேய்யா!
ReplyDeleteவழியில் நீங்கள் குடித்தது 7UP. உங்கள் பதிவுக்கும் புகைப்படங்களுக்கும் THUMPS UP!
படங்களுடன் சுவையான பகிர்வு. அந்த சிகப்பரிசி எனக்கு அலர்ஜி! தலைவலியுடனேயே மாலை உணவை தயார் செய்து முடித்து விட்டீர்கள் போல!
ReplyDeleteபகிர்வு அருமை,அநேக மிருகக்காட்சி சாலையில் புளியும் சிங்கமும் படுத்திருப்பதை தான் நானும் பார்த்திருக்கிறேன்,உங்கள் படத்திலும் அதே,சகோ வெங்கட் பக்கமும் படங்கள் மிக அழகு.கடல் என்றால் எப்பவும் கொண்டாட்டம் தான்,கரையில் அமர்ந்து அலைகள்,கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் கடலை பார்த்துக் கொண்டேயிருக்கலாமே எத்தனை நேரமானாலும் சலிக்காதே.. தொடருங்கள் ஆதி.
ReplyDeleteபடங்களும் பதிவும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றாக சுற்றிப் பார்த்தோம்.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் - பயணத்தில் தொடர்ந்து வந்து கருத்துக்களை தெரிவிப்பதற்கு நன்றிங்க.
ReplyDeleteகணேஷ் சார் - ரோஷ்னியை நீங்கள் பார்த்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகப்போகிறதல்லவா.....:) வளர்ந்துட்டாள்...:) சிகப்பரிசி சாதம் எனக்கு பிடிக்கவில்லை சார்...:)
அமைதிச்சாரல் - கால் வலிக்காம நீங்கள்லாம் எங்க இரண்டு பேரின் வலைப்பூவிலும் தொடர்ந்து சுத்தி வரதே பெரிய விஷயம் இல்லையா....:) நன்றிங்க.
சிகப்பரிசி சாதத்துக்கு ருசியே இல்லை என்று தான் எனக்கு தோன்றியது...எனக்கு பிடிக்கலைப்பா..:))
ஸாதிகா - தொடர்ந்த வாசிப்புக்கு நன்றிங்க.
இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.
கோமதிம்மா - மழையினால் துணி காய்வது தான் பெரிய பாடாக இருந்தது. மற்றபடி மழையில் நனைவது எனக்கு பிடித்த விஷயம்...:)
கோவையில் எங்க பக்கத்து வீட்டு லில்லி சேச்சி சிகப்பரிசி மாவில் கொழுக்கட்டை செய்வாங்க தேங்காய் சர்க்கரை உள்ளே வைத்து...இந்த மாவில் புட்டு சுவைத்ததில்லை...
ஈஸ்வரன் சார் - சிகப்பரிசிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும் போல இருக்கே...:) வெள்ளை சாதத்தில் பழையதுக்கு என் வோட்டு எப்பவுமே உண்டு. சின்ன வெங்காயமும் கடித்துக் கொண்டால் ஆஹா! தேவாமிர்தம் தான்...:)
ஸ்ரீராம் - சிகப்பரிசியை அன்புக்காக சாப்பிட்டேன். எனக்கும் அலர்ஜி தான்...:) தலைவலியை சரியாக நினைவு வைத்து கேட்டுள்ளீர்களே! அதோடு தான் செய்தேன்...:) காலையிலேயே சொல்லி விட்டேன். அவர்களும் மைண்ட் செட் பண்ணி இருப்பார்கள் பாவம். அப்புறம் மாட்டேன் என்றால் சங்கடமாகி இருக்கும்...:) அப்புறம் தலைவலியை பற்றி மறந்து விட்டேன்...:))
ஆசியா உமர் - ஆமாங்க. கடல் அலுக்கவே அலுக்காத ஒன்று....எத்தனை நேரமானாலும் ரசிக்கலாம்...:)
மாதேவி - நன்றிங்க.
padangalum pakirvum arumai
ReplyDelete