Monday, February 18, 2013

பள்ளம், மேடு, சம்மந்தி! (கோவை – கேரளா சுற்றுலா – 6) கோவை-கேரளா சுற்றுலா பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4  பகுதி 5 


   
காலை எழுந்தது முதல் கேரளத்தின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே வந்தேன். ஆறுமரங்கள்பூக்கள்பறவைகள், தோட்டத்தின்நடுவில் வீடு என ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக இருந்தது.வண்டியிலும் கும்பல் ஏறிக் கொண்டும்இறங்கிக் கொண்டும் இருந்தது. கேரளத்தின் எல்லா பகுதிகளிலுமே இப்படித் தான் போல. எல்லா ரயிலுமே எல்லா நிறுத்தங்களிலும் நின்று அலுவலகங்களுக்கு செல்பவர்களை ஏற்றிக் கொள்கிறது. முன்பதிவு செய்து வரும் நம்மை விட அவர்கள் செளகரியமாக உட்கார்ந்து கொள்கிறார்கள் :) வழக்கம் போல் தேநீர் வேண்டாமெனக் கூறிரயில் வேறு சற்று தாமதமாகசெல்வதால் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொள்ளலாம் என்று வாங்கச் சொன்னேன்

பிரெட் ஆம்லெட்டும்இட்லியும் தான் இருக்கின்றனவாம். இரண்டாவது உள்ளது தான் சாப்பிடக்கூடுமென்பதால் வாங்கிக் கொண்டோம். வாயில் போட்டால் உப்பும் இல்லைபுளிப்பும் இல்லைதூக்கி அடித்தால், நம் மீது கொலைக் குற்றம் சாற்றப்பட வாய்ப்பு உண்டு! – யார் மேலாவது பட்டால் கபால மோக்ஷம் தான்! ஒருவித சுவையுமே இல்லாத சாம்பார் :(எங்களால் முடியும் வரை உள்ளே தள்ளி விட்டு, மீதியை வெளியே தள்ளினோம்! ரயில்வே துறை நிறையவே முன்னேற வேண்டும். வாங்கிய காசுக்குண்டான பொருள் கிடைத்தால் தானே மகிழ்ச்சி.

காலை 9.40க்கு ரயில் திருவனந்தபுரத்தை சென்றடைந்தது. கும்பலை வெளியே அனுப்பிய பின்னர் நாங்களும் எங்கள் லக்கேஜ்களுடன் இறங்கினோம். இங்கு என் கணவரின் நண்பரான பிரமோத் வீட்டில் தான் தங்கப் போகிறோம். ஆகவே எங்களை அழைத்துச் செல்ல வெளியே அவர் தன் காரில் காத்திருந்தார். காரில் ஏறி அமர்ந்து நல விசாரிப்புக்கு பின் அவர் வீட்டை நோக்கி பயணமானோம். முன் சீட்டில் அமர்ந்து கொண்ட என்னவரும்பிரமோத்தும் பேசி கொண்டிருக்கட்டும். நாம் இந்த வேளையில் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.

இந்த பிரயாண நேரத்தில் நாம் பிரமோத்தை பற்றி சற்று தெரிந்து கொள்ளலாமாஇவர் கேரளத்தை சேர்ந்தவர். தில்லியில் ஒரு அரசு பயிற்சிக்காக வந்த போது என்னவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. தமிழ் ஓரளவு புரிந்து கொள்வார் ஆனால் பேசத் தெரியாது. நாம் அவருடன் பேச மலையாளமும்ஆங்கிலமும்ஹிந்தியும் தான். அப்பொழுது முதலே கேரளத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தை தில்லிக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்.

எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் பிரமோத்தை அழைத்து வந்த போது தான் எனக்கு அறிமுகம். முன்னறிவிப்பு இல்லாது திடீரென அழைத்து வந்தார். அவர் இங்கு சாப்பிடுவாரா என்று தெரியாது, கேட்கவும் முடியாது. அவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் போதுகூட கொஞ்சம் சாதம் வைத்தேன்அன்று எதோ கூட்டும்ரசமும் செய்திருந்தேன். ரசத்தை கொஞ்சம் பெருக்கிதேங்காய் துவையல் அரைத்து அரிசி அப்பளத்தை பொரித்தும் வைத்தேன். நான் நினைத்தது போல் என்னவரும் என்னமா சாப்பிடலாமாஎன்றார்.  நல்லதா போச்சு…:)

பிரமோத்துக்கு துவையல் மிகவும் பிடித்து விட்டது. சம்மந்தி வளர நன்னாயிட்டிருந்து” என்று பறைஞ்ஞு...  அதாங்க, நல்லாயிருக்குன்னு சொல்லி அவர் மனைவியிடம் உடனே தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். இங்கு சூப்பரான ஒரு விருந்து சாப்பிட்டேன் என்று…. :)

சரி! இப்போ ஃப்ளாஷ்பாக் முடிந்து திருவனந்தபுரத்துக்கு வந்துடுவோமாசாலைகள் குறுகலாகவும்மேடும்பள்ளமுமாகவே இருக்கு. ஒரு வீடு மேட்டிலும் அடுத்தது பள்ளத்திலும்….கேரளத்தின் எல்லா இடங்களிலுமே இப்படித் தான் இருக்கும் என்று என்னவர் சொன்னார். ஸ்டேஷனிலிருந்து இருபது நிமிட தூரத்தில் ஒரு மேட்டில் அவர் வீடு இருந்தது. அருகில் முழுவதும் மிலிட்டரி ஏரியா…. திருவனந்தபுரம் வருகிறோம் என்றதும் தங்க வெளியில் ஏற்பாடு செய்யும்படி சொன்னவுடன்அதெல்லாம் வேண்டாம் எங்கள் வீடு பெரியது தாராளமாக இங்கேயே தங்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்பும் நான் தயக்கம் காட்ட நாங்கள் நான் வெஜ் சமைக்கிறதும் இல்லைசாப்பிடறதும் இல்லை. விட்டு விட்டோம்….என்று சொல்லவே சரி கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அவரது வீட்டிலேயே தங்க ஒத்துக் கொண்டோம்.

பிரமோத் தன் மனைவி ராக்கிமகன் கேஷுமகள் மின்னு மூவரையும் அறிமுகம் செய்து வைத்தார். ராக்கி கேரள அரசுப் பணியில் இருக்கிறார். குட்டீஸில் கேஷு நான்காம் வகுப்பிலும்மின்னு L.K.G யிலும். ஹாய் சொல்லி அறிமுகமானோம். எங்களுக்கென எல்லா வித வசதிகளோடும் ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்துவிட்டார். குளித்து நாங்கள் தயாராக, வாங்க, சாப்பிடலாம் என்றார்.

காலை உணவாக இடியாப்பம்உருளைக்கிழங்கு ஸ்டூகூட்டுக் கறிஅச்சப்பம்சாயா. கணவனும் மனைவியுமாக பரிமாறினார்கள். எல்லாமே சுவையாக இருந்தது. பின்பு எல்லோருமே தயாராகி அருகிலிருந்த மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம். அட ஆமாங்க, நம்முடைய சொந்தக்காரங்களை சந்திக்க வேண்டாமா? நாங்கள் நுழைவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். இங்கேயே மீன்கள் காட்சியகத்துக்கும் சேர்த்து நுழைவுச்சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துமஸ் முடிந்து புது வருடத்தையொட்டி நாங்கள் சென்றிருந்ததால் அதற்கான அலங்காரங்கள் கண்ணைக் கவர்ந்தன. மலையாளப் பாட்டுகள் காதுகளைத் துளைத்தன. புல்லில் யானைபோன்றும் கேரள அரசு என்றும் செய்து வைத்திருந்தார்கள். அது ரொம்பவே அழகு. பிளாஸ்டிக்குக்கு உள்ளே அனுமதி இல்லை. எடுத்துச் சென்றால் வாயிலேயே வாங்கி தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.

உள்ளே போகலாம் வாங்க. என்னவரின் கேமராவுக்கு நல்ல தீனி கிடைக்கப் போகிறது. குட்டீஸ்களுக்கு செம த்ரில்லிங்கான அனுபவம். எனக்கு புதிதான ஒரு இடத்தை பார்க்கும் ஆனந்தம். எல்லாம் ஒரு சேர பார்ப்பதற்கு முன் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க… (நோ... நோ... கல்லெல்லாம் எடுக்கக் கூடாது... பேசிட்டே இருக்கும்போது இப்படியா?) டைப் பண்ணி கை வலிக்குதுப்பா. அதனால கொஞ்சம் வெயிட்டீஸ் ப்ளீஸ்..:)

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

17 comments:

 1. கேரளப்பயணமா?.. ஆஹா. நான் ரெடி. அவிடெ கப்ப மயக்கு கழிச்சோ?

  ReplyDelete
 2. இங்கு சூப்பரான ஒரு விருந்து சாப்பிட்டேன் ..

  அருமையான பகிர்வுகள் .பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. ஆதி, கேரளப் பயணம் அருமை. கேரள விருந்தோம்பல் அருமை, அருமை. நான் பிறந்த ஊர் என் அம்மா வழி தாத்தா வீடு அங்குள்ளது. என் தாய்மாமா திருவனந்தபுரத்தில் இருக்கிறார்கள்.

  மிருககாட்சி சாலை நன்றாக இருக்கும். நான் பார்த்து பலவருடங்கள் ஆகி விட்டது. மாமாவும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள், உங்கள் பதிவு திருவனந்தபுரம் போகும் ஆசையை தூண்டி விட்டது.

  ReplyDelete
 4. ச்சம்பந்தி எனிக்கும் இஷ்டமானு கேட்டோ:-)))))

  யானைக்குக் காத்திருக்கிறேன்!!!!

  ReplyDelete
 5. இங்கு மைசூர் மிருகககாட்சி சாலையிலும் அப்படித்தான் பேப்பர் கவர் வைத்திருக்கிறார்கள் தின் பண்டங்களை அவற்றில் போட்டுக் கொடுத்துவிட்டு பிளாஸ்டிக்
  கவர்களை குப்பைத்தொட்டியில் எரிந்து விடுகிறார்கள்.

  நல்ல அனுபவ பயணம் ஆதி. தொடருங்க கூடவே நாங்களும் வருகிறோம்.

  ReplyDelete
 6. பயன அனுபவம் சுவாரஸ்யமாக இருக்கு.

  ReplyDelete
 7. நம்மூர் துவையலை 'சம்மந்தி' என்பார்களா?
  ரயில்வே சாப்பாடு பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு சரி. அதேபோல கேரளாவில் ரயிலில் (ஏ.சி. வகுப்பிலும் கூட!)எல்லோரும் ஏறுவார்கள்; உரிமையுடன் நம் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுவார்கள். நாமும் ஒன்றும் செய்ய முடியாமல் பேசாமல் இருப்போம்!


  அடுத்த பதிவுக்கு சஸ்பென்ஸ் - உடன் காத்திருக்கிறோம்!ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள்!

  ReplyDelete
 8. கட்டுரை சுவையாக செல்கிறது...

  ReplyDelete
 9. //பிரமோத்துக்கு துவையல் மிகவும் பிடித்து விட்டது. ”சம்மந்தி வளர நன்னாயிட்டிருந்து” என்று பறைஞ்ஞு... அதாங்க, நல்லாயிருக்குன்னு சொல்லி அவர் மனைவியிடம் உடனே தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். இங்கு சூப்பரான ஒரு விருந்து சாப்பிட்டேன் என்று…. :)//

  சூப்பர். ;)))))

  தேங்காய் துவையலா? காரசாரமாக பெருங்காய மணத்துடன் இருந்திருக்குமோ? கூடவே ரஸம் + அப்பளாம் வேறு. பின்னென்ன, அது பசிக்கேற்ற ருசியானதோர் விருந்தே தான்.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. அமைதிச்சாரல் - கழிச்சிட்டில்லா! கூடவே வர்றதுக்கு நன்னி....

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றி.

  கோமதிம்மா - உங்க ஊரா! நல்லது. அடுத்த முறை போயிட்டு வாங்க. நன்றிம்மா.

  டீச்சர் - ஓ! நிங்களுக்கும் இஷ்டமோ! நன்னி..:)

  ராம்வி - மைசூரிலும் இப்படியா! கூடவே வர்றதுக்கு நன்றிங்க.

  ஸாதிகா - நன்றிங்க.

  ரஞ்சனிம்மா - ஆமாம்மா...எல்லா பெட்டியிலும் தான் ஏறிக் கொள்கிறார்கள்...:(

  கந்தசாமி ஐயா - நன்றிங்க.

  கே.பி.ஜனா சார் - நன்றி.

  வை.கோ சார் - ஒரு மாதத்துக்கு மேலாக வெளியில் சாப்பிடுபவருக்கு ,அன்று விருந்தாக தான் இருந்திருக்கும் போல...:) நன்றி சார்.

  ReplyDelete
 11. சாதாரணமாகவே ரயில்களில் சாப்பிடும் ஐட்டங்கள் சுவை குறைந்து வருகின்றன.

  ஸ்டூ.. எங்கள் மலையாள நண்பரின் மகள் ஒருவர் எங்கள் வீட்டில் வந்து செய்து கொடுத்து அசத்தினார்.

  ReplyDelete
 12. அழகான பகிர்வு. திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலை பள்ளி, கல்லூரியில் இருந்தபோது இரண்டு முறை சென்றுள்ளேன். தொடருங்கள்.

  ReplyDelete
 13. நானும் பாதி வழியில் வந்துவிட்டேன்.
  //நம்முடைய சொந்தக்காரங்களை சந்திக்க வேண்டாமா//
  நோக்கடா இந்த பெண்குட்டி எந்தா பறைஞ்சிது (திரைப்படங்களில் பார்த்த பதிந்த மலையாளம்)
  ஸ்டூ பற்றி குறிப்பு கொடுங்கள்.

  ReplyDelete
 14. ஸ்ரீராம் - ரயில்களில் உணவு படு மோசம்...:( ஸ்டூ சாப்பிட்டிருக்கிறீர்களா! நன்றி.

  ராமலஷ்மி - இரண்டு முறை சென்றிருக்கிறீர்களா! மகிழ்ச்சி. தொடர்வதற்கு நன்றி.

  ஆச்சி - மலையாளம் வெளுத்து வாங்கறீங்க...:) சொந்தக்காரங்க தான்..:) ஸ்டூ பற்றி பிரமோத் மனைவி ராக்கியை கேட்டு விட்டு பகிர்கின்றேன்.

  ReplyDelete
 15. கேரளப் பயணம் நன்றாகச் செல்கிறது. மீண்டும் வருகின்றேன்....

  ReplyDelete
 16. மாதேவி- பயணத்தில் தொடர்ந்து வருவதற்கு நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…