Wednesday, February 13, 2013

களி, கூட்டு மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் [கோவை கேரளா சுற்றுலா – 5]


கோவை-கேரளா சுற்றுலா பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 

என்ன நட்புகளே! சென்ற பதிவில் சொன்னது போல் ஓய்வு எடுத்த பின் புத்துணர்ச்சியோடு இருக்கிறீர்களா! இன்று ஆருத்ரா தரிசனம். அதனால் குளித்து விட்டு முதலில் அருகில் இருந்த ஒரு சிவன் கோவிலுக்கு  சென்று வந்தோம். கூட்டம் இல்லாததால் அமைதியாக தரிசனம் செய்ய முடிந்தது. இப்போதைக்கு சுத்தமாக பராமரித்து வைத்துள்ளனர். வீட்டுக்கு வந்து ஈச்சனாரி பிள்ளையார் கோவிலுக்குச் செல்லலாம் என்று கிளம்பி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தோம். மாமா வீட்டிலிருந்து ஐந்தாவது நிறுத்தத்தில் தான் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையாரப்பன் குடி கொண்டிருந்தான்.வாசலிலேயே மகளிர் சுய உதவிக் குழுவினரின் காலணிகள் வைக்குமிடம் இருந்தது. இங்கு காலணிகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. அங்கு வைத்து விட்டு உள்ளே சென்றோம். கண்குளிர பிள்ளையாரப்பனை தரிசனம் செய்தோம். உள் பிரகாரம் முழுவதும் பிள்ளையாரின் திருவிளையாடல்களை ஓவியமாக வரைந்து ஃபிரேம் செய்து வைத்திருந்தார்கள். புகைப்படமெடுக்க அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள். வெளி பிரகாரத்தில் தேர், கல்யாண மண்டபம், பிரசாத கடைகள் அதைத் தாண்டி புத்தக கடைகள் என இருந்தன. கோவில் வரலாறுகள், ஸ்லோகங்கள், நாவல்கள், குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள், வண்ணம் தீட்டி மகிழ புத்தகங்கள், குறுந்தகடுகள் என அணிவகுத்திருந்தன. பார்வையிட்டு விட்டு வெளியே வந்தோம்.எதிரே தான் மஹாலஷ்மி கோவில் உள்ளது. அங்கு சென்று விட்டு வரும்படி மன்னிம்மாவின் அன்பு கட்டளை. காலணிகளை எடுக்கும் போது மகளிர் சுய உதவி குழுவினரிடம் கேட்ட போது அதோ தெரியுது பாருங்கஎன்றனர். நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த மஹாலஷ்மி மந்திர்க்கு சென்று சேர்ந்தோம். மந்திர் என்று பார்த்ததுமே இது வட இந்தியர்களின் கோவில் என்று புரிந்தது. கோபுரமும் வட இந்திய பாணியில் தான் இருந்தது. காவலரை தாண்டி உள்ளே நுழைந்ததும் தோட்டத்தின் நடுவில் மெகா சைஸ் விஷ்ணு அனந்த சயனத்தில் தேவியர்கள் அருகில் இருக்க காட்சி தந்தார். அமைதியான சூழலில் இருந்த கோவிலின் பிரகாரத்தை வலம் வந்தோம். ஸ்ரீவத்ஸா நம்மை முதலில் வரவேற்கிறார். அது யாருங்க ஸ்ரீவத்ஸா என்பவர்களுக்கு….நம்ம ஆஞ்சநேயரின் நாமகரணங்களில் ஸ்ரீவத்ஸாவும் ஒன்று. வட இந்திய கோவில் என்றதும் பளிங்கு சிலைகள் தான் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் இங்கு கருப்பு நிறத்தில் கற்சிலைகள் தான் இருக்கின்றன. ஆக, வட இந்தியாவும், தென் இந்தியாவும் இணைந்த கோவில்

அடுத்து நவக்கிரகங்கள், சுப்ரமணியர், விநாயகர் என சுற்று பிரகாரத்தை வலம் வந்தோம். அஷ்டலஷ்மியின் உருவங்கள் ஆங்காங்கே செதுக்கப்பட்டுள்ளன. உள்ளேயும் அஷ்டலஷ்மியின் திருவுருவப் படங்கள். உண்டியலிலும் லஷ்மிக்களின் உருவங்கள். மஹாலஷ்மிக்கு அபிஷேகம் முடிந்து திரையிடப்பட்டு அலங்காரம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அங்கு காத்திருந்தோம். நீண்ட நேரம் ஆகவே ரோஷ்ணி வீட்டுக்கு போகலாம் என நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். அம்மனின் புடவைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தவரிடம் கேட்டதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம் எனக் கூறவே மனமின்றி கிளம்பினோம்.

வெளியே வந்து பேருந்தை பிடித்தோம். சாலையில் ஏதோ வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் சுற்றிக் கொண்டு சென்றது. அருமையான இளையராஜா பாடல்கள் இசைத்துக் கொண்டிருக்கவே இறங்க வேண்டிய இடம் வந்தும் மனமில்லாமல் இறங்கினேன் என்று தான் சொல்ல வேண்டும். இதற்காகத் தான் பள்ளி, கல்லூரி நாட்களில் அரசு பேருந்துகளை விட்டு விட்டு தனியார் பேருந்தை பிடித்து தான் வருவேன். பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிக்கையில் மனதில் ஒரு சந்தோஷம், உற்சாகம்…:)

வீட்டுக்கு வந்தால் அன்று ஆருத்ரா தரிசனம் ஆகையால் மன்னிம்மா கையால் சுவையான திருவாதிரைக் களியும், ஏழுகறி கூட்டும் சாப்பிட்டு விட்டு, சற்று ஓய்வெடுத்தோம். மாலையில் அருகிலேயே இருந்த எங்கள் உறவினர்களை சந்தித்தோம். என்னுடைய மாமா தாத்தா (அம்மாவின் மாமா) 85 வயதிலும் தினமும் நல்ல உடற்பயிற்சி, கீர்த்தனங்கள் இயற்றுவது (சமீபத்தில் இந்த பாட்டுகளை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்) கவிதைகள் என தொடர்ந்து உற்சாகமாக இருக்கிறார். அவரது அனுபங்கள் பற்றி எங்களோடு பேசிக் கொண்டிருந்தார். ரோஷ்ணியிடமும் நன்றாக விளையாடினார். அதே போல் இந்த தாத்தாவின் பெண் ஒருவர் ஓவியங்கள் பிரமாதமாக வரைவார். சிறுவயதிலிருந்து பார்த்து அதிசயித்திருக்கிறேன். அவர் தற்போது வரைந்து வரும் ஓவியங்களையும் பார்வையிட்டு விட்டு மாமா வீட்டுக்கு வந்து கேரளா செல்வதற்கு தயாராக ஆரம்பித்தோம். இரவு 11.50க்கு ரயில். பத்தரை மணிக்கு ஆட்டோ சொல்லியிருந்தோம்.

சாப்பிட்டதும் ரோஷ்ணி தூங்க ஆரம்பித்து விட்டாள். நாங்கள் பயணத்துக்கு தேவையானதையெல்லாம் எடுத்து வைத்து விட்டு மாமா, மன்னியிடம் பேசிக் கொண்டிருந்தோம். ஆட்டோ வந்ததும் அவளை எழுப்ப முடியவில்லை. பின்பு அப்படியே தூக்கிக் கொண்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, ஆட்டோவில் அமர்ந்து ஜங்ஷன் வந்து சேர்ந்தோம். நேரம் ஆக ஆக பிளாட்ஃபார்ம் தெரியாததால் நுழைவாயிலிலேயே காத்திருந்தோம். பதினைந்து நிமிடங்களே பாக்கி இருந்த நிலையில் தகவல் மையத்தில் கேட்டுக் கொண்டு இரண்டாம் பிளாட்ஃபார்முக்கு சென்று சேர்ந்தோம். மும்பையிலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர, ரயிலில் ஒருவழியாக ஏறி லக்கேஜ்களை வைத்து பூட்டி விட்டு படுத்து விட்டோம்.

காலையில் 6 மணிக்கெல்லாம் எனக்கு முழிப்பு வந்து விட பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு வந்து அமர்ந்து கேரளத்தின் இயற்கை அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன். இரவு எப்படியோ அசதியில் தெரியவில்லை. இப்போது தான் கவனித்தேன். ரயில் ஒவ்வொரு சின்ன சின்ன ஸ்டேஷனிலும் நிற்க கும்பல் ஏறி - இறங்கிக் கொண்டிருந்தது….:( இனி திருவனந்தபுரத்தில் சந்திக்கலாமா? பை..பை…:))


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

17 comments:

 1. //வட இந்திய கோவில் என்றதும் பளிங்கு சிலைகள் தான் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் இங்கு கருப்பு நிறத்தில் கற்சிலைகள் தான் இருக்கின்றன.//

  மந்திரில் கோவில்! பயணத்தில் கூடவே வந்தோம்... வருகிறோம்!


  ReplyDelete
 2. இனிய பயணம்... தொடர்கிறோம்...

  ReplyDelete
 3. அந்த அரவணையான் என்னமா படுத்திருக்கான் பாருங்க!!!!!

  பயணத்தில் கூடவே வர்றேன் கேட்டோ:-))))

  ReplyDelete

 4. மஹாலஷ்மி கோவில் அருகில் அருமையான பக்த ஆஞ்சநேயர் ஆலயம் , தியானிக்க பிரமிட் அமைப்பு ஆகியவை அமைந்துள்ளன ..

  கற்பகம் கல்லூரிக்கு எதிரில் இருக்கிறது ...


  http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_31.html
  ஆனந்த ஆஞ்சநேயர் ...

  ReplyDelete


 5. அருமையான தங்கள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

  http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_4.html
  மஹாலஷ்மி மந்திர் ...

  ReplyDelete
 6. //பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிக்கையில் மனதில் ஒரு சந்தோஷம், உற்சாகம்…:)//

  ஆமாம் ஆதி,உற்சாகமாகத்தான் இருக்கும்.

  மிக அழகான கோவில்களின் தரிசனம்.

  மாமா தாத்தாவைப்பற்றிய தகவல்கள் சிறப்பு.

  தொடருங்க நாங்களும் கேரளாவிற்கு உங்க கூடவே வருகிறோம்.

  ReplyDelete
 7. சயனத்தில் மகாவிஷ்ணு அழகு. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 8. கேரளா போகும் அனைத்து ட்ரையின்களிலும் கூட்டம் அள்ளும்.தொடர்கிறோம்.

  ReplyDelete
 9. கோவில் தரிசனம் எல்லாம் முடித்து கேரளா கிளம்பியாச்சா? அங்கே சந்திப்போம் ஆதி..

  ReplyDelete
 10. கன்னியாகுமரியை கண்டு களித்த திருப்தி கிடைத்தது. வளர்க உங்கள் தொண்டு
  விஜய்

  ReplyDelete
 11. கூடவே களி+கூட்டு புகைப்படத்தையும் போட்டிருந்தால், நாங்களும் சப்புக் கொட்டியிருப்போம். :-)

  சுவாரசியம்!

  ReplyDelete
 12. http://jaghamani.blogspot.com/2012/05/blog-post_21.html
  ஈஸ்வரமைந்தர் ஈச்சனாரி விநாயகர் ...

  http://jaghamani.blogspot.com/2011_04_01_archive.html
  இன்பவாழ்வளிக்கும் ஈச்சனாரி விநாயகர் ..

  ReplyDelete
 13. சயனத்தில் மகாவிஷ்ணு அழகாய் இருக்கும் இடத்தில் முதலில் அனுமன் பெரிதாக இருந்தார். அவருக்கு ம்காவிஷ்ணு தான் இங்கு இருந்தால் பொருத்தம் என நினைத்தார் போலும்(மகாலட்சிமிகோவில் என்பதால்) கீழே விழுந்து விட்டார், பின் மகா விஷ்ணு அங்கு வந்தார்.
  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் இருக்கும் ஈச்சானரி கோவிலில். நீங்கள் எந்த கிழமையில் போனீர்கள்?

  ReplyDelete
 14. அழகான படங்களுடன், அற்புதமான பகிர்வு. களி+கூட்டு சாப்பிட்ட களிப்பினைத்தந்தது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. இப்பதிவினை படித்து கருத்திட்டு என்னுடன் பயணத்தில் கூடவே வந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 16. பயணம் ஆரம்பித்தது தெரியும். திருவனண்தபுரம் வரை வந்தாச்சா:)
  ஸாரிம்மா.கவனிக்காமல் இருந்து விட்டேன்,
  ஈச்சநாரி கோவில் எப்பவோ போனது. எல்லாம் மாறியிருக்கும்.
  கோவை அழகு நகரம்.இனிமேல் சரியாக ஃபாலோ செய்கிறேன்.

  ReplyDelete
 17. வாங்க வல்லிம்மா திருவனந்தபுரத்திலுள்ள மிருகக்காட்சி சாலையில் இருக்கிறோம்....:) கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிட்டு...:) இனிமே தான் சுற்றிப் பார்க்கணும்.

  நீங்களும் சேர்ந்துக்கோங்க...

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…