Friday, February 1, 2013

ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே….. (கோவை – கேரளா சுற்றுலா – 4)
என்ன நட்புகளே! சென்ற பகுதியில் சொன்னது போல தேநீர் குடித்து விட்டு புத்துணர்வோடு வந்து விட்டீர்கள் தானே! இருபத்து இரண்டு வருடங்கள் கழித்து சந்திக்கப் போகும் நபர் யாரென்று தெரிந்து கொள்வோமா? அவர் என் கணவரின் கல்லூரித் தோழி. நெய்வேலியில் படித்த பிறகு அவரவர் பாதையை தேடிச் சென்று விட்டனர். அதன் பிறகு இப்போது தான் சந்திக்கப் போகிறார்கள், அதுவும் குடும்பத்துடன்.

சில மாதங்களுக்கு முன்பு தான் ஃபேஸ்புக்கில் மீண்டும் நட்பைப் தொடர முடிந்தது. கோவை செல்கிறோம் என்றவுடன் அந்த தோழிக்கு தகவல் தெரிவித்திருந்தார். வீட்டில் தோழி, அவரது கணவர், மற்றும் மகன் ஆகியோர் இருந்தனர். மகள் சென்னையில் படித்துக் கொண்டிருப்பதாக சொல்லி புகைப்படத்தை காட்டினார். வீட்டுக்கு அருகிலேயே இருந்த அவரது அன்னையையும் அழைத்து வந்தார். கால மாற்றங்கள், கல்லூரி நாட்கள், தற்போது நட்புகளிடம் உள்ள தொடர்பு, நெய்வேலி நகர நினைவுகள் என பேச்சுகள் சுவாரஸ்யமாக சென்றது. அந்த நாட்களில் இவர்கள் கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தோழி காண்பித்தார். ஒரு சில புகைப்படங்கள் எங்கள் வீட்டிலும் உள்ளது. இருவருமே எவ்வளவோ மாறி போயிருந்தனர். அப்போது பென்சில் போல் இருந்த என் கணவர் இப்போ இருக்கும் நிலை பார்த்து அவர்களுக்கு ஆச்சரியம். தோழியை பார்த்த மகிழ்ச்சியில் என் கணவர் எங்களை மறந்து விட்டார் போலும்! சிறிது நேரம் சென்றதும் தான் இவள் தான் என் மனைவி, இது எங்கள் மகள் என்றார்….:))

அவர்கள் வீட்டில் சாப்பிடச் சொல்லி HALDIRAM-ன் குட்டி குட்டி சமோசாவும், நேந்திரங்காய் உப்பேரியும், வாழைப்பழங்களும் தந்தார்கள். இங்கேயும் நான் தேநீர் வேண்டாமெனச் சொல்ல கணவர் பருகினார். அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அவர்கள் வீட்டு பால்கனி என்னை வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் படி அழைத்தது. அங்கிருக்கும் போதே என்னுடைய கல்லூரித் தோழிகள் என்னைத் தொடர்பு கொண்டு சந்திக்க வந்து கொண்டிருப்பதாக சொல்ல, நாங்களும் அதற்குள் வீடு போய் சேர வேண்டுமே என புறப்பட்டோம்.

தோழி வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் வரும் போது என் கணவர் முகத்தில் (இங்கே அப்படியே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க…) (”உங்கம்மாவுக்கு அவ ஊருக்கு வந்தவுடன் வாயெல்லாம் பல்லா இருக்கு பாரு”) இந்த வரிகளை இந்த தொடரின் முதல் பகுதியில் என் சொந்த ஊருக்கு போனவுடன் என் முகத்தில் தென்பட்டதாக என்னவர் கூறியது. இப்போ என்னவர் முகமும் தோழியை பார்த்த மகிழ்ச்சியில் அப்படித் தான் இருந்தது….:)) இதுவரை அவரிடமே இது பற்றி சொல்லவில்லை. ரசித்துக் கொண்டு வந்து விட்டேன்.  காரில் வரும் போது நாங்கள் இருவரும், இன்று அநேகமாக கோவையையே ஒரு முறை சுற்றி வந்து விட்டோம் என்று பேசிக் கொண்டே வந்தோம்.

வீட்டுக்கு வந்து டிரைவருக்கு செட்டில் செய்து, நன்றியையும் தெரிவித்து விட்டு கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாகியவுடன், வீட்டின் முகவரியை விசாரித்து, தோழிகளிடமிருந்து அழைப்பு வந்தது. நானே வந்து அழைத்து வருகிறேன் என்று நாங்கள் காலாற நடந்து பேருந்து நிற்குமிடத்துக்கு வந்து சேர்ந்தோம். கல்லூரியில் எங்கள் இயந்திரவியல் துறையில் நாங்கள் மூன்றே பெண்கள். ஐம்பத்தியேழு ஆண்கள். கல்லூரிக் கதைகளை பற்றி என் ஆரம்ப கால பதிவுகள் சொல்லும். மூவர் கூட்டணியில் ஒருத்தியை கல்லூரியின் இறுதி நாளுக்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன். ஆம். பனிரெண்டு வருடங்கள் கழித்து. மற்றொருத்தியை பத்து வருடங்கள் கழித்து….. இவளும் நானும் கல்லூரி முடிந்ததும் AUTOCAD சேர்ந்து படித்தோம். சில நாட்கள் ஒன்றாக வேலை பார்த்தோம். அதன் பின்பு இப்போ தான். சமீபத்தில் தான் இவளுக்கு திருமணமாகி இருந்தது. இவளும் மாட்டிகிட்டாளா……:(

இருவருமே பணியில் இருக்கிறார்கள். வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். தோழிகளோடு உரையாடிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் திருமணமாகியிருந்த தோழி, வீட்டுக்கு செல்ல நேரமாகி விட்டது என்று சொல்லி கிளம்பி விட்டாள். மற்றொருத்தியை வீட்டுக்கு அழைத்து வந்து மாமாவிடமும், மன்னிம்மாவிடமும் அறிமுகம் செய்து வைத்தேன். சற்று நேரம் அவள் பணியை பற்றியும், நான்கு வயதேயான மகனை பார்த்து கொள்ளும் அம்மாவை பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்னைப் போல் ஹோம்லியாக, அமைதியாக இருக்க வேண்டுமாம். எப்போதுமே டென்ஷனாக உள்ளதாக தெரிவித்தாள். நான் திருமணமாகி தில்லி சென்றதினாலும், குழந்தையை பார்த்துக் கொள்வதற்காகவும் வேலைக்கு செல்லும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தேன். அப்போதெல்லாம் இயந்திரங்களின் வரைபடங்களை இவளைத் தவிர நாங்கள் இருவரும் மாங்கு மாங்கென்று வரைவோம் விருப்பத்துடன். ஆனால் நடைமுறையில் இப்போ இவள் தான் அதிகம் வரைபடங்களை வரைந்து பயன்படுத்துவதாக சொன்னாள். …:)

தோழிக்கு மன்னிம்மா பழங்கள் நறுக்கி தந்தார். தேநீர் நான் போட்டு தருகிறேன் என்று சொல்ல, போய் உட்கார், வந்தவளுடன் பேசிக் கொண்டிரு, இப்போ தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் போட்டுத் தருகிறேன் என்று மன்னிம்மா சொல்ல, எனக்கு நெகிழ்வாக இருந்தது. இப்படி யாராவது உட்கார வைத்து செய்ய மாட்டார்களா என மனம் ஏங்கியிருக்கிறது போலும்….:) புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு தோழியை பேருந்து நிறுத்தம் வரை உடன் சென்று விட்டு வந்தோம்.

கோவில்கள், சந்திப்புகள் என சுற்றியதில் மகிழ்ச்சியும், சோர்வும் ஒருசேர என்னை ஆக்ரமித்திருந்தது. இன்றைய நாள் இனிமையாக கழிந்தது. நீங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு காலையில் தயாராக இருங்கள். நாளை ஆருத்ரா தரிசனம், பிரசித்தி பெற்ற விநாயகனின் தரிசனம் வேறு கிடைக்கப் போகிறது. கூடுதலாக மஹாலஷ்மியின் கடாட்சம் வேறு! இரவு கேரளாவுக்கு செல்ல தயாராக வேண்டும். அதனால் இப்போதைக்கு பை.பை..

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

15 comments:

 1. ஆதி,கணவரின் நட்பு, உங்களின் நட்பு என்று மனதை துள்ள செய்யும் நினைவுகளை அழகாய் பகிர்ந்து கொண்டு விட்டீர்கள்.

  நம்மை யாராவது உட்காரவைத்து சீராட்டும் நிகழ்வு எப்போதாவது வரும் போது மனம் மகிழ்ச்சியால் நெகிழ்ந்து தான் போகும். மன்னிம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
  அடுத்து ஈச்சனாரி பிள்ளையார் கோவில், அதன் எதிரில் உள்ள மகாலட்சுமி கோவில் பார்க்க ஆவாலாய் இருக்கிறோம்.
  ReplyDelete
 2. மகிழ்ச்சி ததும்பும் இனிய
  நினைவலைப் பகிர்ந்ததற்கு
  நிறைவான பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. // அப்போது பென்சில் போல் இருந்த என் கணவர் இப்போ இருக்கும் நிலை பார்த்து அவர்களுக்கு ஆச்சரியம். தோழியை பார்த்த மகிழ்ச்சியில் என் கணவர் எங்களை மறந்து விட்டார் போலும்! சிறிது நேரம் சென்றதும் தான் இவள் தான் என் மனைவி, இது எங்கள் மகள் என்றார்….:))//

  அருமையாகவே அனுபவித்து எழுதியுள்ளீர்கள். ;)))))

  >>>>>>

  ReplyDelete
 4. // (இங்கே அப்படியே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க…) (”உங்கம்மாவுக்கு அவ ஊருக்கு வந்தவுடன் வாயெல்லாம் பல்லா இருக்கு பாரு”) இந்த வரிகளை இந்த தொடரின் முதல் பகுதியில் என் சொந்த ஊருக்கு போனவுடன் என் முகத்தில் தென்பட்டதாக என்னவர் கூறியது. இப்போ என்னவர் முகமும் தோழியை பார்த்த மகிழ்ச்சியில் அப்படித் தான் இருந்தது….:))

  இதுவரை அவரிடமே இது பற்றி சொல்லவில்லை. ரசித்துக் கொண்டு வந்து விட்டேன். //

  வெங்கட்ஜீ நல்லா மாட்ட்டீஈஈஈஈஈ ! ;)))))

  ReplyDelete
 5. நல்லதொரு பயணமும் நினைவலைகளும் ஆதி. கல்லூரி நட்புகளை ரொம்பக்காலம் கழிச்சுப் பார்க்கறது உண்மையிலேயே நெகிழ வைக்கும் அனுபவம்தான்.

  ReplyDelete
 6. அன்புள்ள ஆதி,
  நீங்களும் உங்கள் கணவரும் அவரவர் பழைய நட்புகளை சந்தித்து மகிழ்ந்து அந்தக் காலத்திற்குப் போய்த் திரும்பி இருக்கிறீர்கள்.
  அந்த குதூகலம் இந்தப் பதிவில் வரிக்கு வரி தெரிகிறது.

  உங்கள் மன்னிம்மாவை நாங்களும் கேட்டதாகச் சொல்லுங்கள்.

  ReplyDelete
 7. அன்பான உறவுகளுடன் மகிழ்வது எப்படி என்பது நெகிழ்வாக எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள் ஆதி.
  உங்கள் மாமா மன்னிக்கு என் விசாரிப்புகளைஸ் சொல்லுங்கள்.

  தங்கள் மகிழ்ச்சி பதிவு முழுவதும் பளிச்சிடுகிறது. வெங்கட் சிரித்ததைப்
  போட்டோ எடுத்திருக்கலாமே. நாங்களும் ரசித்திருப்பூமில்லயா!!!!!!

  ReplyDelete
 8. நாங்களும் உங்கள் மகிழ்வை உணர்ந்தோம்
  சுவாரஸ்யமாகச் சொல்லிப் போவது பதிவின் சிறப்பு
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அழகான பதிவு. கொஞ்சம் பொறாமை வருகிறது. பழைய நட்புகள், பழகிய இடங்கள் என்று தேடிப்போய் பார்ப்பது அத்தனை சுகம். :-)))

  //இப்படி யாராவது உட்கார வைத்து செய்ய மாட்டார்களா என மனம் ஏங்கியிருக்கிறது//
  நிஜம்தான். பெண்கள் எல்லாருக்குமே இருக்கும் உணர்வு என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 10. படிக்கும்போது உணர்வுபூர்வமாய் இருக்கு.. டச்சிங்

  ReplyDelete
 11. எத்தனை தடவை சொன்னாலும் தீராது.. எப்படி தான் இப்படி அழகா எழுதறீங்களோ ஆதி!!!! ரொம்ப சமர்த்து பதிவுகள்! :)) துக்கடா பண்ணி ஜெயிச்சதுக்கும், ரோஷ்ணி ராதை ஆனதுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. வெங்கட்டின் நட்பையும் உங்க நட்பையும் ஒரேநாளில் சந்தி்த்த மகிழ்வான நிகழ்வை அந்த மகிழ்வு எங்களுக்கும் தொற்றிக்கற மாதிரி சொல்லியிருக்கீங்க. ஆஹா.... லக்ஷ்மி கடாட்சத்துடன் கேரளா பயணத்துக்குப் போறோமா... சந்‌தோஷமா தயாராகி வந்துடறேன்!

  ReplyDelete
 13. migavum arumaiyana varthi therivu.yen kovai innum pala sirrappu kondathu,mudindal pollachi athai suttri ulla paguthikalukku poi parungal it is only 40kms away from here.

  ReplyDelete
 14. கோமதிம்மா - சஸ்பென்ஸ சரியாச் சொல்லி உடைச்சிட்டீங்க....:) எழுத நேரம் தான் கிடைப்பதில்லை...

  இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

  வை.கோ சார் - நன்றி சார்.

  அமைதிச்சாரல் - மிக்க நன்றிங்க.

  ரஞ்சனிம்மா -ரசிப்புக்கு நன்றி.

  வல்லிம்மா - மிக்க நன்றி.

  ரமணி சார் - கருத்துக்களுக்கு நன்றி.

  ஹுசைனம்மா - நன்றிங்க.

  ரிஷபன் சார் - மிக்க நன்றி.

  பொற்கொடி - மிக்க நன்றிப்பா.

  கணேஷ் சார் - நன்றி.

  சேலம் 2 கோவை - முதல் வருகைக்கு நன்றிங்க.  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…