Friday, February 15, 2013

மகளிர் தின விழா - 2 (பரிசு மழையும், ஆட்டங்களும்)சென்ற பகுதியில் சொன்னது போல பரிசளிப்பு விழா அடுத்த வார விடுமுறை நாளில் வைத்திருந்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீரங்கம் அருகேயுள்ள மாம்பழச்சாலை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களும், குமுதம் சிநேகிதியின் ரிப்போர்ட்டர் மைதிலி சேஷாத்ரி அவர்களும், ஆரோஸ்ரீ அழகு நிலைய உரிமையாளர் அவர்களும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தார்கள்.மாலை நான்கு மணியளவில் விழா ஆரம்பமானது. சென்ற முறை அவரவர் வீட்டிலிருந்து இருக்கைகள் கொண்டு வரச் சொன்னார்கள். இம்முறை வெளியிலிருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் கடவுள் வாழ்த்து, எங்கள் குடியிருப்பில் வசிக்கும் மாமி ஒருவரால் பாடப்பட்டது. அடுத்து உலக அமைதிக்காக ஒரு நிமிட மெளனம் கடைப்பிடிக்கப்பட்டது. அடுத்து சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை. திருமதி மைதிலி சேஷாத்ரி அவர்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இது மாதிரி விழாக்கள் நடைபெறுவதே ஆச்சரியம் தான். மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் ஒருவருக்கொருவர் பழகுவதற்கும், புரிதலுக்கும் உதவியாக இருக்கும். பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிக்க வேண்டும். தொடர்ந்து இதுபோல விழாக்கள் நடைபெற வேண்டும்என்றும் தெரிவித்தார். உதவி ஆய்வாளர் இது போன்ற விழாக்கள் நடைபெறுவதே நல்ல விஷயம். அடுத்து ஸ்ரீரங்கம் முழுவதுக்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய வேண்டும்என்றும் அதில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அழகு நிலைய நிபுணர் வர தாமதமாகியதால் இவர்கள் இருவருமே பரிசுகளை வழங்கினார்கள்.அடுத்து சிறுவர், சிறுமியர், கல்லூரிப் பெண்கள் ஆகியவர்களின் நடனங்கள் ஆரம்பமாயின. தோழி வாணி மகளிர் தினத்துக்காக தானே எழுதிய ஆத்திச்சூடியை வாசித்தார். இவரும் இவரது மகனும் சேர்ந்து ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியும் கேள்வி பதில் போல் செய்து காட்டினர். இவர்களுக்கு நடுவில் கடவுள்வாழ்த்து பாடிய மாமி, ஒரு சினிமா பாடலும் பாடி, ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார். ஈடுபாட்டுக்கு வயது வரம்பு ஏது!பார்வையாளர்களுக்கு போண்டா, சட்னி, காபி, தேநீர் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடனங்கள் சிறப்புற முடிந்ததும் சிறப்பு விருந்தினர்கள், எங்கள் பணிச்சுமையெல்லாம் மறந்து நாங்கள் மிகவும் இன்புற்றோம் என்று சொல்லி விடைப்பெற்றனர்.

அழகு நிலைய உரிமையாளர் எங்கள் குடியிருப்பு வாசிகளில் எட்டு பேருக்கு முன்னூறு ரூபாய் மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் தருவதாக சொல்லவே, அவர்களாகவே விருப்பப்பட்டு வந்த எட்டு பேருக்கு அவை வழங்கப்பட்டது. அவர்கள் அழகு நிலையத்தில் முன்னூறு ரூபாய் மதிப்பிலான ட்ரீட்மெண்ட் தருவார்களாம்.

தோழி வாணியும் சின்ன பசங்க சிலரும், பெரியவர்கள் என அவர்களாகவே விருப்பப்பட்டு வந்து நடனம் ஆடினார்கள். இத்துடன் எங்கள் பரிசளிப்பு விழா சிறப்பாக நிறைவடைந்தது. விழாவினை சிறப்பாக நடத்திய தோழி வாணியை பாராட்டி விட்டு வீடு வந்து சேர்ந்தோம். உண்மையிலேயே எல்லோரையும் ஒருங்கிணைத்து இப்படிப்பட்ட விழாக்களை நடத்துவது பெரிய விஷயம் தான். பாராட்டுகள் தோழி.

அந்தாக்‌ஷரியை தவிர எல்லா போட்டிகளிலுமே நான் கலந்து கொண்டேன். நான் பரிசு பெற்றது இரண்டு போட்டிகளில். ஒன்று மியூசிக்கல் சேர், மற்றொன்று BALANCE BALL. மியூசிக்கல் சேரில் கல்லூரி பெண்களுடன் போட்டியிட்டதில் (இல்லத்தரசிகள் கூட்டத்தில் இடமில்லாததால் சலுகையாக கல்லூரிப் பெண்களுடன் சேர்ந்து கொண்டேன்… :)) இதில் முதல் பரிசு பெற்றேன். இதுவரை மியூசிக்கல் சேரில் பங்கேற்றதே கிடையாது:) கடைசியில் தலையே சுற்றி விட்டது……:)

BALANCE BALLல் இரண்டாவது பரிசு. ஒரு நிமிடத்தில் நான் போட்டது பன்னிரெண்டு பந்துகளை….:) எல்லா விளையாட்டுகளுமே முதல் முறை தான். பரிசு கிடைக்கிறதோ இல்லையோ எல்லாவற்றிலும் பங்கேற்றதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னம்பிக்கையை தந்தது. இந்த தன்னம்பிக்கையில் அடுத்ததாக ஒரு காரியத்தை ஆரம்பிக்கலாம் என்று எண்ணம். அது உங்களுக்கெல்லாம் சாதாரணமாகப் படலாம். ஆனால் பயந்தாங்கொள்ளியான எனக்கு அது பெரிய சாதனை! அது என்னவென்று சாதித்த பின்னர் தெரிவிக்கிறேன். அதுவரை சஸ்பென்ஸ்….. (பேசும் போது சின்ன சஸ்பென்ஸ் வைத்துக் கூட பேசத் தெரியாது எனக்கு…. எழுத ஆரம்பிச்சா என்னமா சஸ்பென்ஸ் வருது :):)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

15 comments:

 1. உற்சாகமான நிகழ்வு.அழகான பகிர்வு.

  ReplyDelete
 2. அது என்னவென்று சாதித்த பின்னர் தெரிவிக்கிறேன்//காத்திருக்கிறோம் ஆதி.அனுபவப்பகிர்வு அருமையாக இருந்தது.

  ReplyDelete
 3. அழகான நிகழ்வுகளை அனுபவித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. R u in Delhi or Srirangam? I was reading almost all the posts with the thought that they happened at Delhi! :)

  Anyhow, nice to know that you had fun! Nice write-up!

  ReplyDelete
 5. //ஈடுபாட்டுக்கு வயது வரம்பு ஏது!//

  உண்மைதான் ஆதி.

  பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  //அது என்னவென்று சாதித்த பின்னர் தெரிவிக்கிறேன். அதுவரை சஸ்பென்ஸ்….. //

  சிறப்பாக சாதிக்க வாழ்த்துக்கள்.
  இருந்தாலும் சஸ்பென்ஸ் தாங்கலை!!.

  ReplyDelete
 6. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்..

  சஸ்பென்ஸ்??.. கரப்பான் பூச்சியைக் கையால் பிடிச்சீங்களா?? :-)))))

  ReplyDelete
 7. பரிசு கிடைக்கிறதோ இல்லையோ எல்லாவற்றிலும் பங்கேற்றதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னம்பிக்கையை தந்தது. இந்த தன்னம்பிக்கையில் அடுத்ததாக ஒரு காரியத்தை ஆரம்பிக்கலாம் என்று எண்ணம். அது உங்களுக்கெல்லாம் சாதாரணமாகப் படலாம். ஆனால் பயந்தாங்கொள்ளியான எனக்கு அது பெரிய சாதனை! அது என்னவென்று சாதித்த பின்னர் தெரிவிக்கிறேன்.//

  ஆதி, உங்கள் சாதனை தொடர வாழ்த்துக்கள். இரண்டு பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
  பெரியசாதனை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  காத்து இருக்கிறேன் சாதிப்பை தெரிந்து கொள்ள !

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. இரண்டு போட்டிகளில் வென்று பரிசு பெற்றதற்கு
  இனிய வாழ்த்துகள்...

  சாதனைகள் தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ஆதி! வெற்றியின் உற்சாகம் தொடர்ந்து இயங்கப் போதுமான உத்வேகத்தை அளிப்பதாய் அமையட்டும்.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்.
  //(பேசும் போது சின்ன சஸ்பென்ஸ் வைத்துக் கூட பேசத் தெரியாது எனக்கு…. எழுத ஆரம்பிச்சா என்னமா சஸ்பென்ஸ் வருது… :):)//
  அதே அதே!

  ReplyDelete

 12. வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 13. பதிவினை படித்து கருத்திட்டு உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…