Tuesday, January 29, 2013

இரட்டிப்பு மகிழ்ச்சி


சமீபத்தில் நம்ம ஜலீலாக்கா நடத்திய பேச்சிலர்ஸ் சமையல் ஈவண்ட் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியாததல்ல…. அதுக்கு நான் பத்து குறிப்புகளை அனுப்பியிருந்தேன். 


 BEST SIDE DISH RECIPE FOR PALAK PANEER


BEST NORTH INDIAN RECIPE


CERTIFICATE OF PARTICIPATION


அதில் என்னுடைய பாலக் பனீர் சப்ஜிக்கு BEST SIDE DISH RECIPE என்ற அவார்டும், BEST NORTH INDIAN RECIPE என்று ஒரு அவார்டும், பங்குபெற்றதற்காக ஒரு சான்றிதழும் என மூன்று சான்றிதழ்களை பெற்றேன். போட்டியை சிறப்பாக நடத்தி பரிசுகளையும், சான்றிதழ்களையும் அளித்த ஜலீலாக்காவுக்கு நன்றி. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.

அந்த மகிழ்ச்சியை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த பரிசு பெறும் வாய்ப்பும் வந்தது!

எங்களது குடியிருப்பில் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் சமையல் போட்டிகளும் இடம்பெற்றன, உபயோகப்படுத்த வேண்டிய பொருளாக மைதா (அ) ரவை இருந்தது. அதில் கலந்து கொண்டு,  இனிப்புக்கான இரண்டாம் பரிசை வென்றேன்.


இரண்டாம் பரிசு பெற்ற ”இனிப்பு துக்கடா”


பெற்ற இரண்டாம் பரிசு


பரிசு கிடைக்காத ரவா கட்லட்!


விதவிதமான ரெசிபிக்கள் வந்திருந்தன. மும்பையில் இருந்து வந்திருந்த ஒரு மாமி இனிப்புக்கான நடுவராகவும், எங்கள் குடியிருப்பிலேயே வசித்து வரும் சமையல் நிபுணரான ஒரு மாமா காரத்திற்கான நடுவராகவும் இருந்தார். மைதா அல்லது ரவை என்றதும் எப்பொழுதும் செய்யும் ரவா இட்லி, ரவா தோசை, ரவா லாடு, கேசரி, மைதா பிஸ்கட், மைதா சீடை போன்ற இவையில்லாமல் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். கூகிள் ராணியிடம் தஞ்சம் புகுந்தேன். அதில் எனக்கு கிடைத்த ரெசிபி தான் பரிசு வென்ற இனிப்பு துக்கடா. ரெசிபியை பகிர்ந்த அடுப்பங்கரை கமலாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்து காரத்திற்கு என்ன செய்வது என்று நானே யோசித்து செய்தது தான் ரவா கட்லட். இரண்டுமே முதன்முறையாக முயற்சி செய்தது. சொதப்பாமல் நன்றாகவே வந்தது. அதுவே பெரிய வெற்றி தானே…….:)) அன்று செய்த கட்லட் ஒன்று கூட கிடைக்காததால் அடுத்த நாள் மீண்டும் செய்த போது படமெடுத்தேன்.

அந்த இரண்டு ரெசிபிக்களின் செய்முறையை அடுத்த பகிர்வில் பகிர்கிறேன். ஒரு பதிவு தேத்திக்கிறேன்ப்பா…..:))

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

22 comments:

  1. ”பரிசு வென்ற இனிப்பு துக்கடா”வுக்கும், பரிசு கிடைக்காவிட்டாலும் நாக்கில் நீர் ஊற வைக்கும்
    ”பரிசு கிடைக்காத ரவா கட்லட் !” களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்:..

    >>>>>

    ReplyDelete
  2. பாலக் பனீர் சப்ஜிக்கு BEST SIDE DISH RECIPE என்ற அவார்டும், BEST NORTH INDIAN RECIPE என்று ஒரு அவார்டும், பங்குபெற்றதற்காக ஒரு சான்றிதழும் என மூன்று சான்றிதழ்களை பெற்ற தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சரி... சரி... படத்தைப் போட்ட இனிப்பு துக்கடாவுக்காக நாக்குல நீர் சொட்ட வெச்சுட்டீங்க. எனக்கு உடனே பார்சல் அனுப்பிடுங்க. இல்லாட்டி உடனே ஸ்ரீரங்கம் கிளம்பி வந்துடுவேனாக்கும்...! மூன்று சான்றிதழ்களைப் பெற்று வெற்றியை அடைந்தமைக்கும் இன்னும் நிறைய நிறைய வெற்றிகள் உங்களை வந்தடையவும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. ”பரிசு வென்ற இனிப்பு துக்கடா”வுக்கு பாராட்டுக்கள்..

    சான்றிதழ்களும் பரிசுகளும்
    வென்றதற்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஆதி.தொடர்ந்து அசத்துங்க.பரிசு பெற்ற இனிப்பு துக்கடா,ரவா கட்லட் ரெசிப்பியை விரைவில் எதிர்பார்க்கலாம் தானே!

    ReplyDelete
  6. ஆதி, இனிப்பு துக்கடா செய்து பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்.
    ஜலீலாவிடம் சான்றிதழ்கள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  7. அன்பு ஆதி. வாவ்! நிறைய சிரமம் எடுத்ததற்கு நல்ல பரிடசுகள் கிடைத்திருக்கின்றன,.
    மிக மிக மகிழ்கச்சி ம. அன்பு ஜலீலாவுக்கும் என் வாழ்த்துகள்.
    இவ்வளவு பேரையும் ஊக்கப் படுத்தி இருக்கிறார்களே.
    நல்லதொரு முயற்கசி,. மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

    ReplyDelete
  8. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஆதி.படங்கள் எல்லாம் அருமை.கட்லட் சூப்ப்ர். செய்முறையை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. மகிழ்வான பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்.... இன்னும் நிறைய வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் ஆதி!!

    ReplyDelete
  12. சான்றிதழ்களும் பரிசுகளும்
    வென்றதற்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  15. Vazhthukkal! Both the dishes look tasty!

    ReplyDelete
  16. வாவ் வாழ்த்துக்கள் ஆதி,

    ReplyDelete
  17. பரிசுபெற்றவர்களுக்கும்
    கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும்
    அருமையாக பதிவாக்கித் தந்தமைக்காக
    உங்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்களை தெரிவித்த மகி, புதுகைத்தென்றல், ரமணி சார், மாதேவி....இவர்கள் அனைவரும் நன்றிகள் பல....

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…