Friday, January 25, 2013

இளமையில் கொல்! – சுஜாதா
பல நாட்களுக்குப் பிறகு நூலகத்திலிருந்து சுஜாதா அவர்களின் புத்தகம் ஒன்று கிடைத்தது. என் மாமனார் தான் வழக்கமாக புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார். அவருடன் இப்போது நானும் சேர்ந்து கொண்டேன். எழுத்தாளர்கள் வரிசைப்படி அங்கு அடிக்கி வைக்காததால் சுஜாதா புத்தகங்கள் எங்கு உள்ளது எனத் தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்போ கிடைத்ததை விடுவேனா! உடனே படிக்க ஆரம்பித்து விட்டேன்.

முதல் கதையான "இளமையில் கொல்" என்ற குறுநாவல் 1987 - ல் எழுதி, "சுஜாதா" என்கிற மாத இதழில் வெளிவந்ததாம். தன்னுடைய கதையை பற்றி இவர் சொல்வதாவது. "இத்தனை ஆண்டுகள் கழித்துப் படிக்கும் போதும் எந்த விதத்திலும் எந்த அவசரத்திலும் சுவாரஸ்யமாக கதை சொல்லும் திறமையை இழந்து விடவில்லை என்பது தெரியும்" என்கிறார். நிச்சயமாக மிகவும் சுவாரஸ்யமாக தான் செல்கிறது. அங்கங்கே சுஜாதாவின் டச்…..

கதையை பற்றி சொல்வதானால் கதாநாயகன் ரங்கராஜிடம் ஒரு பையை அவரது நண்பன் கதிர்வேலன் தந்து விட்டு தான் பம்பாய் செல்வதாக சொல்லி விட்டுச் செல்கிறார். ஒரு சிறுமியை கொன்ற தடயங்களான அந்த பையையும் அதிலிருந்த பொருட்களையும் தேடி போலீஸ் அங்கு வருகிறது.  கொலையை யார் செய்தது என்று தெரியாத நிலையில், கொலையை கதிர்வேலன் தான் செய்ததாக பொய் சாட்சி சொல்ல சொல்கிறார்கள் அவரது அண்ணனும், அண்ணியும். ரங்கராஜும் அப்படியே செய்கிறார். அதன் பின்பு கதிர்வேலன் எப்படியோ வழக்கிலிருந்து வெளியே வந்து ரங்கராஜை பழி வாங்க காத்திருக்கிறார். இந்த சமயத்தில் ஒரு பெண்ணின் பழக்கம் ஏற்படுகிறது. அவரது கணவர் ஒரு நாள் இறந்து கிடக்க அங்கு எதேச்சையாக சென்ற ரங்கராஜ் தான் கொலையாளி என்று கதிர்வேலன் பழிக்கு பழி வாங்க காத்திருக்கிறான். கொலையை செய்தது யார்? ரங்கராஜ் வெளியே வந்தாரா? கதிர்வேலன் பழி வாங்கினாரா என்பது தான் கதை. கிளைமாக்ஸில் ஏற்பட்ட ட்விஸ்ட் நான் நினைத்துப் பார்க்காதது.

இந்த புத்தகத்தில் தப்பித்தால் தப்பில்லை என்ற கதையும் உள்ளது. இந்த கதையைப் பற்றி சுஜாதா அவர்கள் சொல்வது என்னவென்றால், "1984 - ல் வெளிவந்தது என்றும், தப்பித்தாலும் தப்பு தப்பு தான் என்பது தான் இதன் ஆதர்ச செய்தி" என்கிறார்.

கதை சுருக்கம்: மனைவியை கொலை செய்ய கணவன் திட்டமிடுகிறார். ப்ளாஷ்பேக்கில் மனைவியின் தவறான நடத்தை தான் கொலை செய்ய தூண்டுமளவு காரணம் என்று நமக்கு விளங்கிறது. கொலை செய்தாரா? அல்லது மன்னித்தாரா? என்பது தான் கதையின் கிளைமாக்ஸ்.

இந்த புத்தகத்தை நீங்களும் வாங்கிப் படித்து அனுபவியுங்கள்


விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


12 comments:

 1. சுஜாதா அவர்களின் கதைகளை எந்த்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை,ஆதி.நல்ல புத்தகம் பற்றிய பகிர்வு, நன்றி.

  ReplyDelete
 2. நிச்சயமாக மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கிறீகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. நல்லதொரு புத்தகப் பகிர்வு ஆதி..

  ReplyDelete
 4. naan adikam book padithathu illai.. climax parkavey padikanum poola iruku..

  ReplyDelete
 5. சுவாரசியமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் ஆதி! சுஜாதா எழுத ஆரம்பித்ததிலிருந்து அவரது கதைகள் நிறைய படித்திருக்கிறேன். ஆனால் இந்தக் கதையைப் படித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. மறுபடியும் இதை எடுத்துப் படிக்க‌ வேன்டும்!

  ReplyDelete
 6. சுஜாதா புக்ஸ் இருக்கற இடம் தெரிஞ்சா சொல்லுங்க.. லைப்ரரில தேடி அலுத்துப் போச்சு.
  ஒண்ணு கும்மிருட்டு.. இல்லே அந்த ஷெல்புக்குள்ள போய் வர முடியாம இடுப்பு வலி.. கீழ்த்தட்டுல இருக்கற புக் என்னன்னு பார்க்க முடியல..

  ReplyDelete
 7. தலைப்பிலேயே சுஜாதா டச் கவனிங்க! என்னிடம் இருக்கிறது.

  ReplyDelete
 8. பள்ளிப் பிராயத்தில் படித்தது... சுஜாதா எழுத்துக்களை மறுவாசிப்பாக தருகிறது தங்கள் பதிவு.

  சுஜாதா நேர்காணல்களின் தொகுப்பை போனவாரம் நூலகத்திலிருந்து படித்தேன். நிறைய இடங்களில் ரிஷபன் சார் நினைவு எழுந்தது. பகிர்ந்து கொண்டிருக்கலாம் அவரிடம். வாசிப்பு சுவையில் தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு...

  @rishaban...

  டார்ச் சகிதம் சென்று சங்கடமில்லாமல் சம்மணமிட்டு தரையில் அமர்ந்து கீழ்த் தட்டுகளில் புத்தக வேட்டையை தொடரலாமே...

  ReplyDelete
 9. //இந்த புத்தகத்தை நீங்களும் வாங்கிப்
  அ டி த் து அனுபவியுங்கள்//

  எதற்கு அடிக்கணும்? யாரை அடிக்கணும்?
  படித்து அனுபவித்தால் போதாதா?

  ReplyDelete
 10. இந்த பகிர்வை படித்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

  ரிஷபன் சார் - இப்போ எழுத்தாளர்கள் வரிசைப்படி அடுக்கி வைத்திருக்கிறார்களாம். சென்று பார்த்து விட்டு வந்து சொல்கிறேன் சார்.

  ReplyDelete
 11. வை.கோபாலகிருஷ்ணன் சார் - தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி. இப்போ சரி செய்தாச்சு.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…