Friday, January 11, 2013

ரங்கனைக் கண்டேன்!பட உதவி: கூகிள்

வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே ஸ்ரீரங்கமே அமர்க்களப்பட்டது. பகல்பத்து உற்சவத்தில் இரண்டாம் நாள், மண்டபத்தில் எழுந்தருளியிருந்த பெருமாளை அரைமணி நேரம் வரிசையில் நின்று, காத்திருந்து பார்த்து வந்தோம். அதன் பின்பு ரோஷ்ணிக்கு அரையாண்டு பரீட்சை இருந்த காரணத்தால் தொடர்ந்து போகவே முடியவில்லை. வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று மோகினி அலங்காரம் பார்க்கலாம் என்று காலையில் 08.30  மணிக்கு சென்றோம்.

சென்ற முறை சென்றது போல் நேரே உள்ளே விட வில்லை. மூலவரை பார்க்கவும், உற்சவரை பார்க்கவும் ஒரே வரிசை தான் எனவும், உள்ளே சென்ற பின் தான் பிரித்து விடுவோம் என்று அங்கிருந்த போலீசார் சொல்லவே, வரிசையில் நிற்க ஆரம்பித்தோம். எங்கிருந்து என்றால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தவர்களுக்கு நான் சொல்லும் இடம் தெரியும். தான்யலஷ்மி செங்கமல நாச்சியார் சன்னிதி தாண்டி ஒரு இடத்தில் ரங்கா ரங்காஎன கத்தினால் எதிரொலி கேட்கும். அங்கிருந்து நிற்க ஆரம்பித்தோம்.

வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது. இடையில் சிலர் நுழைய பார்த்தனர். பின்பு போலீசார் வந்து அவர்களை பின்புறம் போய் நிற்க சொல்லி சென்றனர். ஆனாலும் சிலர் நுழைந்து விட்டனர். என் முன்னாடி நின்ற பெரியவர் விருத்தாசலத்திலிருந்து வருடா வருடம் ஏகாதசிக்காக வந்திருந்து இரண்டு நாட்கள் தங்கி செல்வாராம். அவர் சொன்னது நமக்கு நாமே கட்டுபாட்டோடு இருந்தால் காவலுக்கு இத்தனை போலீசார் தேவையேயில்லைஎன்று. வாஸ்தவமான பேச்சு. எந்த காலத்தில் அப்படி இருக்கப் போகிறோமோ?

ஒலிபெருக்கியில் காவல்துறையினருக்கு வந்த அறிவுரை - காவலர்கள் தம்முடைய உறவினர்கள் என்று எவரையும் குறுக்கு வழியில் உள்ளே அனுப்பக் கூடாது என்று. ஆனால் அங்கு அது தான் நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண்மணி கூட கத்திக் கொண்டிருந்தார். நாங்கல்லாம் என்ன முட்டாளா! இவ்வளவு நேரம் வரிசையில் நின்று வருகிறோம். இப்படி இடையில் நீங்க உள்ளே விட்டால் என்ன அர்த்தம்என்றுஅதை யாரும் காதில் வாங்குவதாயில்லை.

அப்படியே நகர்ந்து நகர்ந்து நான்கு வரிசைகளைத் தாண்டி உள்ளே சென்றோம். அங்கே மூலவரை பார்க்க தனித்தனி வரிசைகள். தர்ம தரிசனம், 50 ரூ கட்டணம், 250 ரூ கட்டணம். ஆனால் ஒழுங்காக எழுதி வைக்கவும் இல்லை. போலீசாருக்கும் தெரியவில்லை. உற்சவரை பார்க்க எந்த வழி என்று தெரியவில்லை. செல்லும் வழியில் இருந்த ஒரு வரிசையில் உள்ளே நின்றோம். சிறிது தூரம் சென்ற பின் உற்சவரை தரிசனம் செய்து விட்டு வந்த ஒருவரிடம் விசாரித்தால் அதற்கு வரிசை தேவையில்லை என்றார்.

அப்போ இது என்ன வரிசை என்று சிலரிடம் விசாரித்தால் மூலவரை பார்க்க 250 ரூ கட்டணம் செலுத்தி விட்டு காத்திருந்தவர்கள் அவர்கள். எங்களை மாதிரி நின்றவர்களும் இருந்தார்கள்.  நெருக்கமாக கட்டைகள் கட்டியிருந்ததால் நுழைந்து வெளியே வரவும் முடியாது, தாண்டி குதிக்கவும் முடியாது. ஒரு வழியாக அங்கிருந்தவர்களை நகரச் சொல்லி வெளியே வந்து விட்டோம்.

பின்பு ஒரு வழியை கண்டுபிடித்து ஓடிச் சென்று அங்கு சிறிது நேரம் வரிசையில் நின்று ஒரு வழியாக பெருமாளை மண்டபத்தில் மோகினி அலங்காரத்தில் தரிசனம் செய்ய முடிந்தது. ராக்கோடி வைத்து பின்னல் பின்னி குஞ்சலமும் ஜடை அலங்காரமும் என அருமையான தரிசனம். அரையர் சேவை நடந்து கொண்டிருந்தது. பாசுரங்களை பாடிக் கொண்டிருந்தனர். இரண்டு மணிநேரம் செலவிட்டு பெருமாளை கண்டதில் மகிழ்ச்சி. சரி அடுத்த நாள் வைகுண்ட ஏகாதசிக்கு என்ன செய்தேன்? பெருமாளைக் கண்டேனா? சொர்க்க வாசல் சென்றேனா? அடுத்த பதிவில் சொல்கிறேன். காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்.


24 comments:

 1. ரங்கனைக் கண்டேன்!ரங்கனைக் கண்டோம் ..!!

  ReplyDelete
 2. காலையில் ரங்கன் தரிசனம் தங்களின் பதிவு மூலமாக. சந்தோஷமாக இருந்தது ஆதி.

  தரிசனதிற்காக அதிக மக்கள் வரும் கோவில்,ஏற்பாடுகளை இன்னும் சரியாக செய்தால் நமக்கு செளகரியமாக இருக்கும்.

  நானும் பெருமாளை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரம்)சேவித்து இருக்கிறேன். அந்த ஜடை, ராக்குடி,சுரிய,சந்திர பிறைகள், காலில் கொலுசு.....அவரை விட்டு பார்வையை திருப்பவே முடியாது.
  நல்ல பதிவு.

  ReplyDelete
 3. நீங்கள் கண்ட ரங்கனை நாங்களும் கண்டோம். பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி ஆதி..

  ReplyDelete
 5. ரங்கனைப் பாக்கறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்ததா... ஆனாலும் அதன்பின் கிடைத்த தரிசனம் மட்டற்ற ஆன்ந்தத்தை அளித்திருக்கும என்பதில் ஐயமில்லை. அருமைங்க. உங்களுக்கும் ரோஷிணிக்கும் மற்றும் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. நாங்களும் கூட வந்தது மாதிரி இருக்கு.

  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

  ReplyDelete
 7. ரங்கனை கண்டோம் ஆதி.ரோஷிணி நலமா?

  ReplyDelete
 8. கூட்டத்துலே நசுங்காமல் நான் உங்ககூடவே வந்து ராக்கொடியும் குஞ்சலமும் வச்சுப்பின்னி இருந்த மோஹினிரங்கனைச் சேவிச்சுட்டேன். நன்றீஸ்.

  அழைக்கின்றான் அரங்கனைப் பார்த்தது முதல் ஒரு வருசம் ஸ்ரீரங்கம் கேம்ப் என்று பினாத்திக்கிட்டே இருந்து இப்பக் கொஞ்சம் கொஞ்சமா ஜகா வாங்கிக்கிட்டே இருக்கேன்ப்பா:-)))

  ReplyDelete
 9. ஸ்ரீரங்கம் திருப்பதியை மிஞ்சிவிட்டது என்று சொல்லலாம் போல இருக்கும்.ஆனால் ஸ்வாமியையாவது தரிசிக்க விடுகிறார்களா!நீங்கள் அவனைக் கண்டது நாங்கள் கண்டது போலத்தான்.இதோஇன்னும் இரண்டு நாட்களில் போகி ஒங்கல் என்று வரிசையாக வந்துவிடும். விழாக்கால வாழ்த்துகள் ஆதி உங்களுக்கும் வெங்கட் ரோஷ்ணி மற்றும் குடும்பத்தாருக்கும்.

  ReplyDelete
 10. ஒரு சிறிய ’திருப்பதி’ அனுபவமா? அல்லது ’த்ருப்தி’ அனுபவமா?

  அடுத்த பதிவில் தான் தெரியுமோ!

  ReplyDelete

 11. ரோஷ்ணி படிப்பது திருவரங்கத்திலா? கீதா மேடம் பதிவிலும் சாமி பார்க்க பட்டக் கஷ்டங்களைப் படித்தேன்.

  ReplyDelete
 12. எதிர்பார்த்து காத்திருந்து பெறும் எதுவும் தனி மதிப்பு பெற்று விடுமல்லவா!

  ReplyDelete
 13. எங்கு சுத்தியும் ரங்கனைக் கண்டேன் அப்படிங்கறாப்பல நீங்களும் சேவிச்சு எங்களையும் கூட்டிண்டு போயிட்டீங்க. நன்றி.”பாரில் நின் பாத மூலம் பற்றினேன் பரம மூர்த்தி ஆருளர்களைக் கணமா அரங்கமா நகருளானே.....”

  ReplyDelete
 14. நமக்கு நாமே கட்டுபாட்டோடு இருந்தால் காவலுக்கு இத்தனை போலீசார் தேவையேயில்லை” என்று. வாஸ்தவமான பேச்சு. எந்த காலத்தில் அப்படி இருக்கப் போகிறோமோ?

  ஸ்ரீரங்கத்தின் பெருமூச்சு அது.

  ReplyDelete
 15. அருமையான பதிவு....உங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 16. ஆதி என்ன எல்லாமே ஸ்ரீரங்கம் பதிவாவே இருக்கு, அங்கேயே ஜாகையா? ஸ்ரீரங்கம்னு ஆரம்பிச்சா நான் ஒரு மினி தொடரே எழுதணும், ரொம்ப கொசுவத்தியை கிளப்புறீங்க‌.. வைகுண்ட ஏகாதசி நல்லா ரசிச்சுருக்கீங்கன்னு தெரியுது! :)

  ReplyDelete

 17. வணக்கம்!

  பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
  எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

  ReplyDelete
 18. ரங்கனை தர்சித்தோம்.

  இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. அரங்கனை சேவிப்பதற்கு இத்தனை க்யூ என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. நேராகப் போய் சேவித்துவிட்டு வந்ததெல்லாம் கனவோ என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 20. 42 வருசத்துக்கு முன்பு.

  அதிகாலை நிர்மால்ய தரிசனத்துக்கு ரங்கன் முன்னே நிற்கிறோம். திடீர்ன்னு பின்னால் இருந்து ஒரு சூறாவளிக்காற்றும் யானை பிளிறலும்! திடுக்கிட்டுப்போய் பார்த்தால், குலசேகரன் படியைத்தொட்டு நிக்கறேன்.யானைக் காற்று தள்ளிக்கிட்டுப்போய் விட்டுருச்சுப்பாகெல்லோரும் சிரிக்கறாங்க. மானக்கேடாய்ப்போச்சு. 32 கிலோதான். பறக்கவும் ச்சான்ஸ் இருந்துருக்கே:-)

  ReplyDelete
 21. oops...

  //விட்டுருச்சுப்பாகெல்லோரும்//

  தட்டச்சுப்பிழை :(

  விட்டுருச்சுப்பா. எல்லோரும்

  ReplyDelete
 22. இப்பதிவினை படித்து கருத்துகளை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 23. உங்களின் இந்தப்பதிவின் மூலம் நாங்களும் ரங்கனைக் கண்டோம். சந்தோஷம் கொண்டோம். ;)

  ReplyDelete
 24. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  படித்து கருத்து தெரிவித்த தங்களுக்கு நன்றி சார்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…