Monday, January 28, 2013

அநுவாவியும், அப்பாவியும் - கோவை கேரளா சுற்றுலா – 3

பயணத்தின் புது திட்டமாக ஒரு மலைக்கோவில் என்று சொன்னேனல்லவா! அது தான் அநுவாவி சுப்ரமணியர் கோவில். நம்ப மகி போன பதிவில் சரியா யூகித்திருந்தாங்க. மகி உங்களுக்கு ஒரு பூங்கொத்து. டிரைவர் சொன்னவுடனேயே, ஆமாங்க நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா போனதில்லை என்று சொன்னேன். டிரைவர் அப்போது தான் சொன்னார் பார்க்காம போனா அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க என்று. மருதமலை இருக்கும் மலைத்தொடரின் அடுத்த கோடியில் இருப்பது தான் இந்த அநுவாவி மலை. காட்டின் நடுவில் கோவில். மாலை ஆறு மணிக்கு மேல் யாருக்கும் அனுமதியில்லை. தனியாக செல்வதையும் தவிர்ப்பது நல்லதாம். காரணம் காட்டு யானைகளின் நடமாட்டம் எப்போதும் உண்டு.

கோவிலின் அடிவாரத்தில் லலிதாம்பிகை கோவிலும், அகத்தியர் ஆசிரமமும் உள்ளது. சுப்ரமணியன் கோவிலுக்கு செல்ல படிகள் ஒன்று தான் வழி. போகும் வழியிலேயே யானைகளின் நடமாட்டம் குறித்து படமும், அறிவுரைகளும் உள்ளன. அப்படியே வழியில் வந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. த்ரில்லான அனுபவம் தான். வெயிலின் காரணத்தால் செருப்புகளை போட்டுக் கொண்டு, மேலேயே விட்டுக் கொள்ளலாம் என்று மலை ஏற ஆரம்பித்தோம். அமைதியான சூழல். சுற்றிலும் காடு நடுவில் படிகள். அங்கங்கே அசுத்தம் செய்யாதீர்கள் என்று எழுதப்பட்ட வாசகங்கள் காணப்பட்டன. ஒரு சில இடத்தில் காதலர்கள் தென்பட்டனர். கந்தா, முருகா என அழைத்த படியும், அங்கங்கே சற்று நேரம் அமர்ந்தும் என கோவிலுக்குப் போய் சேர்ந்தோம்.குருக்களை காணவில்லை. அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்த போது, அவர் சாப்பிட்டு கொண்டிருப்பதாக சொல்ல, வள்ளி, தேவசேனா சமேத முருகனை தரிசனம் செய்து விட்டு வந்தோம். குருக்கள் சாப்பிடுவதாக சொன்னவர், அங்கேயே மேலே செல்லும் பாதையை காட்டி இங்கு முதலில் ஒரு இடத்தில் மாலை போட்டிருப்பார்கள், அங்கு தான் முதலில் முருகனும், சிவனும் இருந்தாங்க என்றும், ஒருமுறை வெள்ளம் வந்த காரணத்தால், அதன் பிறகு இங்கு முருகனையும், சிவனை இன்னும் மேலே ஏறிப் பாருங்க அங்கே பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூற நாங்களும் மேலே ஏறிச் சென்று சிவனையும் தரிசனம் செய்தோம். வழியில் ஒரு சுனை உள்ளது. ஒரு பிரதட்சணமும் வந்தோம். அங்கிருந்த குழாயில் வந்த தண்ணீர் சிலீரென்று அந்த வெயிலுக்கு இதமாக இருக்கவே, முகம் கழுவி கொஞ்சம் ஃப்ரெஷ்ஷானேன். சில்லென்ற காற்று. அங்கிருந்து இயற்கைக் காட்சிகளை படமெடுத்தார் என்னவர். வழியில் தென்பட்ட செங்கல் சூளைகள். இங்கிருந்து பார்க்கும் போதே வித்தியாசமாக இருந்தது. சற்று நேரத்திற்கு பிறகு மலையிலிருந்து மெல்ல இறங்க ஆரம்பித்தோம்.அப்போது தான் குருக்கள் தென்பட்டார். அவரிடம் இந்த கோவிலின் ஸ்தல வரலாறு என்னவென்றும் புத்தகம் கிடைக்குமா என்று கேட்கப் போய், அவர் தங்கள் நிலையை பற்றி ஏதேதோ பேசிக் கொண்டே போனார். என் கணவர் அவருக்கு பணம் கொடுத்தார். பிரசாதமாக வெண் பொங்கல் மூவருக்கும் கிடைத்தது. அதை சாப்பிட்டு விட்டு நாங்கள் மூவரும் ரொம்ப சுவாரஸ்யமாக பேசிக் கொண்டே கீழே இறங்கி வந்து விட்டோம். அப்போது தான் எங்கள் மகள் அப்பா நம்ப செருப்பை அங்கேயே விட்டு விட்டோம்என்று சொல்ல, அடடா! பேச்சு சுவாரஸ்யத்தில் மறந்து விட்டோமே….

எங்கள் இருவரையும் அங்கேயே அமரச் சொல்லி விட்டு அவர் பாவம் மீண்டும் மேலே ஏறிச் சென்று அவைகளை எடுத்து வந்தார். சுப்ரமணியனுக்கு என்ன வேண்டுதலோ! மீண்டும் ஏறி வரச் சொல்லி விட்டார். காரில் ஏறியதும் டிரைவருக்கு நன்றி சொன்னோம். அவர் சொல்லா விட்டால் நிச்சயம் இங்கு வந்திருக்க மாட்டோம். நீங்களும் முடியும் போது இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து முருகனின் அருளைப் பெறுங்கள்.

பக்கத்தில் உள்ள லலிதாம்பிகை கோயிலுக்கு செல்லலாம் என்று பார்த்தால் சன்னிதி மூடியிருந்தது. இந்த கோவிலைப் பற்றி நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் அவங்க பதிவில எழுதியிருக்காங்க பாருங்க.

அடுத்து நம்ம பிரபல பதிவரை சந்திக்க தாங்க போகப் போறோம். யார்னு இப்ப எல்லாருக்குமே தெரிந்திருக்கும்! ஆமாங்க நம்ப தங்கமணியக்காவே தான். அவங்களுக்கு தொலைபேசி, வீட்டுக்கு வரும் வழியை சொல்லச் சொன்னேன். அவங்க சொல்லச் சொல்ல தலை சுற்றவே டிரைவரிடமே கொடுத்து பேசச் சொல்லிவிட்டேன். அவங்க வீட்டுக்கு ஒருவழியா போய் சேர்ந்தோம். ரோஷ்ணி தூங்கிப் போயிருந்தாள். அவளை எழுப்பி அழைத்துச் சென்றோம். வீட்டு நபர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

ரகளையான எழுத்துக்கு சொந்தக்காரரான நம்ம தங்கமணி நிஜமாகவே அப்பாவியாக தென்பட்டார். பின்பு தேநீர் போட்டுத் தருகிறேன் என்று சொல்லவே, வேண்டாம் என்று அலறி விட்டேன். இட்லி மாதிரி இருக்குமோன்னு பயந்து இல்லைங்க….. :) எனக்கு வீடு போய் சேரும் வரை பிரட்டாமல் இருக்க…. கணவர் தேநீர் குடிக்கவே, எங்கள் இருவருக்கும் எலுமிச்சை சாறு பிழிந்து தந்தார். வீட்டில் செய்த இனிப்பு மற்றும் கரகர அயிட்டங்களை எடுத்துக் கொண்டோம். ரோஷ்ணியிடம் எங்க இருவரின் பேரும், ஊரும் ஒன்று தான் என்று சொல்லிக் கொண்டேன். தங்கமணியின் ரங்கமணியைப் பார்க்க நேரமாகுமென்பதால் கிளம்பி விட்டோம்.

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
அடுத்து நாங்க சென்ற இடம், இருபத்திரெண்டு வருடங்கள் கழித்து நடக்கும் ஒரு சந்திப்புக்காக…. யார் அந்த நபர்? சஸ்பென்ஸ் வைக்கிறேன் என்று கோபப்பட்டு அடிக்க வராதீங்க. கொஞ்சம் காத்திருங்க. அதுவரை நீங்களும் சென்று தேநீர் குடித்து விட்டு வாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதிவெங்கட். 


26 comments:

 1. நீங்க மலை ஏறி கோவிலுக்கு சென்றதை சுவாரசியமாக சொல்லியிருக்கீங்க. சஸ்பென்ஸொட முடிச்சிருக்கீங்க. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.


  ReplyDelete
 2. பூங்கொத்துக்கு நன்றிங்க! :) நீங்க போன இடமெல்லாம் எங்க ஏரியா! ;) அனுவாவியில் சுனைத் தண்ணீர் எப்பொழுதுமே சில்லுன்னு அருமையா இருக்கும். அதுவும் புஸூபுஸூன்னு மூச்சு வாங்க மலையேறி அந்த தண்ணிய குடிச்சா...ஆஹா! அமிர்தம்!

  அப்பாவியப் பாத்துட்டீங்களா? அபாரம்! :) அக்டோபர்ல நான் கிளம்பும்போது அம்முணி ஏர்போர்ட் வந்து டாட்டா சொல்றேன்னு சொல்லுச்சுங்க, நாங்க சந்திச்சா பூலோகம் தாங்காதுன்னு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தடை பண்ணிருச்சு! ஹஹஹா! :)

  அடுத்து யாரைப் பார்க்கப் போறீங்க? உங்க ஸ்கூல் டீச்சரா?! ;)

  ReplyDelete
 3. எனக்கு வீடு போய் சேரும் வரை பிரட்டாமல் இருக்க….//

  எப்போது பயணம் புறப்பட்டாலும் வாந்திவ்ரும் உனர்வுவந்தால் அவோமின் என்னும் மாத்திரையில் பாதி எடுத்துக்கொண்டால் பிரட்டல் நிற்கும் ..

  தலை வலி , வயிற்றுவலி ,உடல் வலிகளுக்கு
  நோவால்ஜின் , இருமல் மருந்து , செல்லும் இடத்தில் உணவக உணவு ஒப்புக்கொள்ளாமல் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு குளோரோ மெர்சிடின் போன்றவற்றை குடும்ப டாக்டரைச்சந்தித்து வாங்கிச்செல்வோம் ..

  எங்களை விட சுற்றுலாவில் உடன் பயணிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் ...

  ReplyDelete
 4. கோவிலைப் பற்றி நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் அவங்க பதிவில எழுதியிருக்காங்க பாருங்க.//

  லலிதாம்பிகை கோவில் அருமையாக இருக்கும் ..லலிதா சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை லயிக்கவைக்கும் ..

  பகிர்ந்துகொண்ட அருமையான விஷயங்களுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. //அவங்க சொல்லச் சொல்ல தலை சுற்றவே டிரைவரிடமே கொடுத்து பேசச் சொல்லிவிட்டேன்.//

  ஹா..ஹா..ஹா

  நல்லா தரிசனம் செஞ்சுருக்கீங்க. அடப்பாவியைச் சந்திச்சதும் சந்தோஷமான விஷயம்.

  ReplyDelete
 6. அநுவாவி பத்தி தெரியலை. தெரிஞ்சிருந்தா போயிட்டு வந்திருப்பேன். சரிவிடுங்க அடுத்தவாட்டி போனாப்போகுது. :)

  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

  ReplyDelete
 7. http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_18.html

  மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

  ReplyDelete
 8. //பிரபல பதிவரை சந்திக்க//

  எனக்கு பூங்கொத்து எங்கே? நாந்தானே அ(ட)ப்பாவின்னு முதல்ல கண்டுபிடிச்சுச் சொன்னேன்? :-)))

  ReplyDelete
 9. இந்த முருகன் கோயில் இப்ப தான் கேள்வி படுகிறேன்.அடுத்த முறை கோவை போகும் போது போகணும்.

  ReplyDelete
 10. //எனக்கு பூங்கொத்து எங்கே? நாந்தானே அ(ட)ப்பாவின்னு முதல்ல கண்டுபிடிச்சுச் சொன்னேன்? :-)))//

  @ ஹுசைனம்மா.. அஸ்கு புஸ்கு. அதுக்கு முன்னாடியே அப்பாவியக்கா நலமான்னு நான் பொடி வெச்சுக்கேட்டிருந்தேன். அதனால உங்களுக்குக் கிடைக்கும் பூங்கொத்துலேர்ந்து ஒரு ரோஜாப்பூவை உருவி எனக்கு அனுப்புங்க. ஓகேயா :-)))))))))

  ReplyDelete
 11. ஆதி,ரொம்ப இண்ட்ரெஸ்டாக போகுது..தொடருங்க,நானும் உங்களுடன்.

  ReplyDelete
 12. சுவாரஸ்யமா கொண்டு போறீங்க.

  ReplyDelete
 13. ராம்வி - நன்றிங்க.

  மஹி - மிக்க நன்றிங்க. காத்திருங்க...:)

  இராஜராஜேஸ்வரி மேடம் - குறிப்புகளுக்கு நன்றி. அவாமின் எப்போதுமே எடுத்துக் கொள்வதுண்டு.

  அமைதிச்சாரல் - நன்றிங்க.

  புதுகைத் தென்றல் - அடுத்த முறை கண்டிப்பா போயிட்டு வாங்க...

  இராஜராஜேஸ்வரி மேடம் - இணைப்புக்கும் இன்றைய பதிவுக்கும் நன்றி.

  ஹூசைனம்மா - அமைதிச்சாரல் தான் முதல்ல சொன்னாங்க... பாருங்க.:) ஆளுக்கொரு பூங்கொத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

  அமுதா கிருஷ்ணா - போயிட்டு வாங்க...

  அமைதிச்சாரல் - ஒரு ரோஜா என்னங்க...ஆளுக்கொரு பூங்கொத்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஓகேயா...:))

  ஆசியா உமர் - நன்றிங்க.

  நிலாமகள் - நன்றிங்க.

  ReplyDelete
 14. நல்ல பகிர்வு.

  நீங்க கோவையில் எந்தபதிவரைச் சந்திக்கப்போறீங்கன்னு, ஏற்கனவே நம் ‘கற்றலும் கேட்டலும் திருமதி ராஜி’ கரெக்டா சொல்லிட்டாங்களே! ;)))))

  >>>>>

  ReplyDelete
 15. இராஜராஜேஸ்வரி said...

  //எப்போது பயணம் புறப்பட்டாலும் வாந்திவ்ரும் உணர்வுவந்தால் அவோமின் என்னும் மாத்திரையில் பாதி எடுத்துக்கொண்டால் பிரட்டல் நிற்கும் .//

  பயனுள்ள தகவல்.

  ‘பாதி’ எடுத்துக்கொண்டாலே பிரட்டல் ’முழுவதும்’ நிற்குமோ? ;)))))

  [அப்போ முழுவதும் எடுத்துக்கொண்டால் பாதிதான் நிற்குமோ? என நான் கேட்க மாட்டேன்]

  //தலை வலி , வயிற்றுவலி ,உடல் வலிகளுக்கு
  நோவால்ஜின் , இருமல் மருந்து , செல்லும் இடத்தில் உணவக உணவு ஒப்புக்கொள்ளாமல் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு குளோரோ மெர்சிடின் போன்றவற்றை குடும்ப டாக்டரைச்சந்தித்து வாங்கிச்செல்வோம் ..//

  மிகவும் அவசியம் தான். அழகாகச்சொல்லியுள்ளீர்கள்.

  //எங்களை விட சுற்றுலாவில் உடன் பயணிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் ...//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! இந்த இடத்தில் தான் நீங்க நகைச்சுவை நாயகியாக நிற்கிறீங்கோ. எனக்கும் உடன் பயணிக்கணும் போலத்தோன்றுகிறது. ;)))))

  ReplyDelete
 16. //அவங்க சொல்லச் சொல்ல தலை சுற்றவே டிரைவரிடமே கொடுத்து பேசச் சொல்லிவிட்டேன். அவங்க வீட்டுக்கு ஒருவழியா போய் சேர்ந்தோம். //

  எனக்கு பல இடங்களில் இந்த அனுபவம் உண்டு. நானும் அதுபோலத்தான் டிரைவரிடம் செல் போனைக்கொடுத்து பேசிக்கொள்ளச் சொல்வதுண்டு. ;)))))

  ReplyDelete
 17. //பக்கத்தில் உள்ள லலிதாம்பிகை கோயிலுக்கு செல்லலாம் என்று பார்த்தால் சன்னிதி மூடியிருந்தது. இந்த கோவிலைப் பற்றி நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் அவங்க பதிவில எழுதியிருக்காங்க பாருங்க.//

  அவங்க எழுதாத கோயிலா குளமா?

  ஆமாம் ..... அவங்க 26/01/2013 அன்று தன்னுடைய 800 ஆவது பதிவையும் மிகச்சிறப்பாக வெளியிட்டிருக்காங்க! அதுபற்றி உங்களுக்குத் தெரியுமோ?

  தெரியாவிட்டால் உடனே அதையும் போய்ப்பாருங்கோ!
  http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_26.html

  எவ்ளோ பேர் வந்து என்னவெல்லாம் சொல்லிப் பாராட்டியிருக்காங்கன்னும் பாருங்கோ!!

  அதைப்பார்த்து முழுவதும் படித்த பிறகு மீண்டும் உங்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல. ;)))))

  ReplyDelete
 18. இப்பத்தான் மகியின் பதிவு படித்தேன். இரண்டுபேருமாக இந்த அனுவாவியைப் பற்றி சொல்லி அதை பார்க்க வேண்டுமென்ற ஆசையை தூண்டி விட்டுவிட்டீர்கள். அதற்காகவே ஒருமுறை கோவை பயணம் மேற்கொள்ள வேண்டும்.

  பதிவு உலகத்தில் தொடர்ந்து வரும் நட்'பூ' ரொம்பவும் பிடித்திருக்கிறது.

  இந்த இனிய நட்'பூக்கள்' வளர எல்லோருக்கும் ஓர் பூங்கொத்து!

  பாராட்டுக்கள் ஆதி!

  ReplyDelete
 19. http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_29.html

  கோவை லலிதாம்பிகை கோவில்பற்றிய பதிவு ...

  ReplyDelete
 20. நாங்கள் சின்னத்தடாகத்தில் இருந்தபோது அடிக்கடி சென்று அனுபவித்த நாட்கள் - மீண்டும் நினைவலைகளில்!

  ReplyDelete
 21. நாங்கள் சின்னத்தடாகத்தில் இருந்தபோது அடிக்கடி சென்று அனுபவித்த நாட்கள் மீண்டும் நினைவலைகளில!!! நன்றி நன்றி!!

  ReplyDelete
 22. வை.கோபாலகிருஷ்ணன் சார் - ராஜிக்கு நான் சுற்றுலா சென்று வந்த உடனேயே தொலைபேசியில் சொல்லி விட்டேன். எந்த பதிவரை சந்தித்தேன் என்று....:)) அதனால அவங்க ஆட்டத்துக்கு இல்ல...:) அமைதிச்சாரல் முதல் இடத்திலும், ஹுசைனம்மா இரண்டாவது இடத்திலும் ஏற்கனவே இருக்காங்க... பூங்கொத்த வேற பிரிச்சு கொடுத்தாச்சு.

  பதிவை படித்து பல கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.

  ரஞ்சனிம்மா - நீங்களும் ஒருமுறை அநுவாவிக்கு போயிட்டு வாங்க... பூங்கொத்துக்கு நன்றி. இன்று தங்களின் பதிவை குறிப்பிட்டுள்ளேன்.

  இராஜராஜேஸ்வரி - லலிதாம்பிகை கோவில் பகிர்வை படித்தேன். இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி.

  AMMILAAL - வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. Aiiiii namma kadhai vandhuduchu. sorry for a very late response. Got lasic eye surgery done and refrained from computer for the past one month. Even now sendin this from my phone. Thanks for visiting us and sharing here

  By the way, correctaa guess pannina amaithi akka and huseinamma akkavukku oru plate idli parcellllllll...:)

  ReplyDelete
 24. அப்பாவி தங்கமணி - ஏன் இன்னும் படிக்கலைன்னு நினைச்சேன். உடம்பை பார்த்துக்கோங்கப்பா.... கண்களுக்கு ஓய்வு கொடுங்க... உங்களை சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி.

  அமைதிச்சாரல், ஹுசைனம்மா இருவரும் சீக்கிரம் எஸ்கேப் ஆயிடுங்க.... இட்லி பார்சல் வந்துக்கிட்டிருக்காம்....:))

  ReplyDelete
 25. அன்பின் ஆதி வெங்கட் - குடும்பத்துடன் சுற்றுலா சென்றது மட்டுமல்ல- பயணக் கட்டுரையும் அனைவரையும் கவரும்வண்ணம் இங்கு பதிவாக இட்டதும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா...

   Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…