Saturday, December 1, 2012

ஆலு சிம்லாமிர்ச்!


தலைப்பை பார்த்து என்னவென்று புரியவில்லை என்பவர்களுக்கு….. உருளைக்கிழங்கைத் தான் வட இந்தியாவில் ஆலு என்பார்கள். சிம்லா மிர்ச் என்பது குடமிளகாயை…. இப்போது என்னவென்று தெரிந்திருக்குமே… இந்த இரண்டையும் சேர்த்து செய்யப்படும் ஒரு சப்ஜியைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம். இது சப்பாத்திக்கு மட்டுமல்ல சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.


வட இந்தியாவில் ஆலுவுடன் எந்த காயை வேண்டுமானாலும் சேர்த்து சப்ஜி செய்வார்கள். என் கணவரின் பெங்காலி நண்பர் தினமும் ஆலுவுடன் ஏதேனும் ஒரு காய் சேர்த்து தான் சப்ஜி கொண்டு வருவாராம். அங்கு வாரத்திற்கே 5 கிலோ ஆலு வாங்குபவர்களும் உண்டு.

தேவையான பொருட்கள் :-

உருளைக்கிழங்கு – பெரிதாக 4
குடமிளகாய் – 2
சாம்பார்பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – ½ தேக்கரண்டி



செய்முறை :-

உருளைக்கிழங்கை தோல் சீவி சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயையும் பாதியாக நறுக்கி விதைகளை எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து குடமிளகாயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு உருளைக்கிழங்கையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி உப்பு, சாம்பார்பொடி, மஞ்சள்பொடி சேர்க்கவும். தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறி விடவும். வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டியது தான். சுவையான ஆலு சிம்லாமிர்ச் சப்ஜி தயார். இந்த சப்ஜியை பேச்சிலர்கள் செய்து மதியத்துக்கு எடுத்துச் செல்லவும் சுலபமாக இருக்கும். இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் இந்த ஈவன்ட்டிற்கு அனுப்பி வைக்கிறேன்.



என்ன உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே….

டிஸ்கி :-

சாம்பார்பொடிக்கு பதிலாக மிளகாய்தூள், தனியாத்தூள் இவைகளும் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலா விருப்பமுள்ளவர்கள் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


16 comments:

  1. மிக நன்றாக செய்வதற்கு எளிதாக இருக்கிறது.
    நன்றி ஆதி.

    ReplyDelete
  2. கேக்கவே சுவையா இருக்கே மா. சிம்லா மிர்ச்சி சொல்லவே அழகு.குளு குளுன்னு.வண்ணமாய் அழகா இருக்கு. மாமியார் செய்வார்.நல்லா இருக்கும். சப்பாத்திக்குத் தொட்டுக்க சூப்பர்.

    ReplyDelete
  3. வெகு எளிதாக இருக்கிறதே இந்த குறிப்பு.
    ஆலு, எங்க ஊரு கொடைமிளகாய் இரண்டும் கை வசம் இருக்கிறது. நாளை பண்ணிப் பார்த்து விட வேண்டியதுதான்!

    நன்றி ஆதி!

    ReplyDelete

  4. நானும் செய்வதுண்டு .ருசியானது.

    //வாரத்திற்கே 5 கிலோ ஆலு வாங்குபவர்களும் உண்டு.//

    உண்மை

    ReplyDelete
  5. நல்ல சைட் டிஷ்தான் நம்ம வீட்டிலும் அடிக்கடி இடம் பெரும்

    ReplyDelete
  6. http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

    கோவை2தில்லி நான் உங்களுக்கு நினைவு படுத்தாலுமுனு வந்தேன் அதற்குள் நீங்களே போட்டு விட்டீர்கள்

    மிக்க நன்றி

    5 கிலோ ஆலுவா?
    ஒருவாரத்துக்கு 1 கிலோ தான் நான் வாங்குகிறேன்

    ReplyDelete
  7. நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  8. எளிதாக இருக்கிறதே..... செய்து டேஸ்ட் / டெஸ்ட் பார்த்துட வேண்டியதுதான்!

    ReplyDelete
  9. சூப்பர்...

    செய்முறை குறிப்பிற்கு நன்றி...
    tm6

    ReplyDelete
  10. செய் முறை விளக்கம் தெளிவாக இருந்தது.
    பாராட்டுக்கள்.

    ராஜி

    ReplyDelete
  11. கருத்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  12. சரியான ’ஆளு’ தந்த ருசியான ’ஆலு’ சிம்லாமிர்ச்!.

    வாழ்த்துகள் !

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…