Tuesday, November 20, 2012

குமரியின் மூக்குத்தி – கி.வா.ஜ
கி.வா.ஜ என்னும் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் தமிழ்த் தாத்தாவின் தலை மாணாக்கன். பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக திகழ்ந்து  பல தலைமுறைகளுக்கும் பயன்தரக்கூடிய தமிழ் பொக்கிஷத்தை வழங்கிச் சென்றவர். அவரது பேச்சிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வாக்கியத்திலும் சிலேடை இருக்குமாம். அவரது நூற்றாண்டு வெளியீடான ”குமரியின் மூக்குத்தி” எனற தலைப்பிட்ட இப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. 13 சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையுமே அருமையாக இருந்தது.

புத்தகத்தின் தலைப்பும் முதல் கதையுமான குமரியின் மூக்குத்தி வரலாற்று சிறப்பான கன்னியாகுமரி அன்னையிடமுள்ள மூக்குத்தியை பற்றியது.

”தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையை கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான். அர்ச்சகர் லலிதா சகஸ்ரநாமத்தை தொடங்கினார். தேவியின் மூக்குத்தி விளக்கொளியில் சுடர்விட்டு ஒளிர்ந்தது. மன்னனின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அப்போது தேவி கன்னியாகுமரிக்கு முன் எரிந்து கொண்டிருந்த விளக்கைப் பிடிக்கும் பதுமை, பராக்கிரம பாண்டியனிடம் பேசத் தொடங்கியது….”

மூக்குத்தி அன்னையிடம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்தது, கலிங்கப் போருக்கே இந்த மூக்குத்தி தான் காரணமென்றும் படித்ததும் சுவாரசியமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

மற்ற கதைகளாவன…… தாயும் கன்றும், கீரைத் தண்டு, குழலின் குரல், உள்ளும் புறமும், அவள் குறை, கொள்ளையோ கொள்ளை, உள்ளத்தில் முள், குளிர்ச்சி, ஜடை பில்லை, பெண் உரிமை, திருட்டுக் கை, புதிய வீடு.

குழலின் குரலில் அழகான காதல் ஜோடிகளான முருகனும், மெல்லியலும் மலையிலும், காடுகளிலும் உலத்தையே மறந்து சுற்றித் திரிகின்றனர். கிடைக்கின்ற பழங்களையும், காய்களையும் உண்டு வாழ்ந்து வருகின்றனர். போதாத நேரம் மெல்லியல் இந்த உலகத்தை விட்டு மறைகிறாள். படிக்கும் நமக்கே அந்த காதல் ஜோடியில் ஒன்று பிரிந்தது கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. அப்படியானால் முருகன் எப்படி இருந்திருப்பான். இந்த சூழ்நிலையில் மெல்லியலை புதைத்த இடத்திலிருந்து முளைத்த மூங்கிலில் இருந்து அவளுடைய சத்தம் வருவதை கண்டு அந்த மூங்கிலை ஒடித்து அங்கங்கே துளைகள் செய்து ஊதுகிறான். இது தான் முதன் முதலில் கண்டுபிடித்த புல்லாங்குழலாம்.

ஜடை பில்லை என்ற கதையில் பொழுது போகாமல் ஒரு பெட்டியை எடுத்து தேடியதில் பழங்காலத்தைய தலைமுறை தலைமுறையாக வந்த ஜடை பில்லை ஒன்று கிடைக்க அதை பற்றிய கதைகளை நினைத்துக் கொண்டிருக்கையில், பக்கத்து வீட்டு பெண்மணி வந்து விடுகிறார். அவர் இந்த ஜடை பில்லையை பார்த்து விட்டு தன் மகளின் பெண் பார்க்கும் படலத்தின் போது பெண்ணுக்கு வைக்க கேட்கிறார். கவலைப்பட்டுக் கொண்டே தான் கொடுக்கிறார். அதற்கு காரணமும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து விட திரும்ப ஜடை பில்லை வந்து விடுகிறது. திருமணத்தின் போது அதே போல் வேறு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் மாப்பிள்ளை இந்த ஜடை பில்லையை தான் கேட்கிறார். உரிமைபட்டவர்களும் தன் பெண்ணுக்கு செய்வதாக நினைத்து கடவுளை வேண்டிக் கொண்டு கொடுக்கிறார்கள். ஏன் மாப்பிள்ளை அடம் பிடித்து கேட்டார்? என்ன காரணம்? என்பதை சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார்.

நானே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் எப்படி! ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித சுவாரசியம். இந்த புத்தகத்தை நீங்களும் வாங்கிப் படித்து அதன் உண்மையான சுவையை உணருங்கள்.

புத்தகத்தை வாங்க அணுக வேண்டிய முகவரி:

கலா நிலையம்
244, (ப.எண்) ராமகிருஷ்ணா மடம் சாலை
மயிலாப்பூர்
சென்னை – 600004
புத்தகத்தின் விலை – ரூ.60.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

32 comments:

 1. ரசனையுடன் சொல்லி இருக்கீங்க!!!!

  உங்கூரில் இருந்து நானும் ஜடைபில்லை வாங்கி வந்துருக்கேன்:-))))

  ReplyDelete
 2. வரலாற்று சிறப்பான கன்னியாகுமரி அன்னையிடமுள்ள மூக்குத்தியைப்ற்றியும் , ஜடைபில்லை கதை முன்னோட்டமும் படிக்கத்தூண்டுகிறது..

  ReplyDelete
 3. // ஏன் மாப்பிள்ளை அடம் பிடித்து கேட்டார்? என்ன காரணம்? என்பதை சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார்.//

  அடடா, சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்திட்டீக்களே!

  ”ஜடை பில்லை” ஐ மாப்பிள்ளை விரும்பிய்தன் காரணம் எனக்கு என் கற்பனையில் ஆயிரம் ஆயிரமாகத் தோன்றி மறைந்தாலும், உண்மைக்காரணம் தெரியாமல் என் தலையே வெடிச்சுடும் போல ஆகிவிடதே / ஆக்கி விட்டீர்களே ! ;)))))

  ReplyDelete
 4. வாங்கிப்படித்துவிட்டால் போகிறது..

  ReplyDelete
 5. சுவாரஸ்யமாக சொல்லி படிக்கத்தூண்டி விட்டீர்கள்.

  ReplyDelete
 6. நல்ல விமர்சனம்.

  ஜடை பில்லை.. சுவாரஸ்யம் கூடிக்கொண்டு போகும்போது சட்டுன்னு நிறுத்திட்டீங்களே.

  ReplyDelete
 7. வாங்க டீச்சர்,

  நீங்களும் ஜடை பில்லை வாங்கியிருக்கீங்களா.....கோவில் கடையிலா?

  உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி டீச்சர்.

  ReplyDelete
 8. வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்,

  புத்தகத்தை வாங்கி படித்து பாருங்கள். அனைத்துமே சுவாரசியம் தான்.

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 9. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  எனக்கும் அந்த காரணத்தை எழுதாமல் தலை வெடிச்சிடும் போல் தான் இருந்தது. ஆனால் புத்தகத்தை படிக்கும் சுவாரசியம் குறைந்து விடக்கூடும் என்று நினைத்தேன். அதனால் தான் நிறுத்தி விட்டேன்.

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 10. சுருக்கமாக சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்...

  நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...
  tm3

  ReplyDelete
 11. வாங்க மதுமதி சார்,

  கட்டாயம் வாங்கி படித்துப் பாருங்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. வாங்க மாதேவி,

  புத்தகத்தை படித்தால் உங்களுக்கே அதன் சுவை தெரியும். அருமையான புத்தகம்.

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க அமைதிச்சாரல்,

  மேலே வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கு எழுதின பதிலில் பாருங்க. எனக்கே கஷ்டமா தான் இருக்கு....:)

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 14. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 15. நல்லதொரு பகிர்வு. பழைய புத்தகங்கள்தான் இப்படிக் குறைந்த விலைக்குக் கிடைக்கும்! இப்போது புத்தகங்களின் விலை 60 க்கெல்லாம் கிடைக்குமா என்ன! :))

  ReplyDelete
 16. நல்ல ரசனையோட சொல்லியிருக்கிங்க. அவசியம் வாங்கி படிக்கிறேன்.

  ReplyDelete
 17. படிப்பு ஆர்வம் உள்ளவங்க எல்லாருக்குமே பிடிக்கும் புத்தகம் . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 18. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 19. வாங்க ஸ்ரீராம்,

  ஆமாம். இப்போ புத்தகங்களின் விலையெல்லாம் கூடிப் போய் விட்டதே.... இது நான் நூலகத்திலிருந்து எடுத்து படித்தது.

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. வாங்க Vijiskitchencreations,

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க லஷ்மிம்மா,

  ஆமாம். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 22. வாங்க தமிழ் காமெடி உலகம்,

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 23. புத்தகத்தைத் தேடிப் படிக்கும் அளவுக்குச் சஸ்பென்ஸ். பாராட்டுகள்

  [புத்தகத்திலிருந்து கி.வா.ஜ-வின் ஒன்றிரண்டு சிலேடைகளையும் கொடுத்திருக்கலாமோ?]

  ReplyDelete
 24. திரு கிவாஜ அவர்களின் எழுத்து நடைக்குச் சொல்ல வேண்டுமா.
  மூக்குத்திக் கதை, பிஉல்லாங்குழல் பிறந்த கதை என்று வந்தவர் பில்லைக் கதையையும் சொல்லி முடித்திருக்கலாமே,. வெகு ஆவலாக இருக்கிறது. நன்றி ஆதிலக்ஷ்மி.

  ReplyDelete
 25. மெல்லியல்... பெயரை ரசித்தது போல் உங்க கச்சிதமான அறிமுக உரையையும் ரசித்தேன்.

  ReplyDelete
 26. ஆஹா! கணவனும் மனைவியுமாக நல்ல நல்ல நூல்களை அறிமுகம் செய்கிறீர்கள். அருமை ஆதி!

  மெல்லியல் பெயர் எத்தனை நன்றாக இருக்கிறது - புல்லாங்குழலில் இருந்து வரும் நாதம் போல இனிமையாக!

  ஜடை பில்லை சஸ்பென்ஸ்-க்காகவாவது புத்தகத்தைப் படிக்கணும்.

  ReplyDelete
 27. கதையை அழகாய் சொல்கிறீர்கள். சடைபில்லை கதை படிக்க ஆவல்.

  ReplyDelete
 28. வாங்க சீனு அண்ணா,

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 29. வாங்க வல்லிம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 30. வாங்க நிலாமகள்,

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. வாங்க ரஞ்சனிம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. வாங்க கோமதிம்மா,

  தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…